நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.
மேலுள்ள விதிகளை சில இடங்களில் மீறியிருக்கேன். விதின்னாலே மீறுவதுதானே விதி..!!!!!
1.அரசியல்வாதி
பிடித்தவர் : யாருமில்லை.. எல்லாருமே திருட்டு …..பசங்க
பிடிக்காதவர்: முக்கியமா ராமதாஸ்
2. நடிகர்
பிடித்தவர் : கமல்ஹாசன், kamal Haasan மற்றும் நடிக்க தெரிந்த எல்லா நடிகர்கள்
பிடிக்காதவர் : விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்.
3. நடிகை
பிடித்தவர் : இளமை துள்ளும் எல்லோரும்(ஹி..ஹி..)
பிடிக்காதவர் : த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
இந்த லிஸ்டுல மட்டும் நடிகைங்கிற வார்தைக்கு அர்த்தம் தெரிஞ்சவங்களான்னு கேட்டீங்கன்னா சாரி.. நோ. கமெண்ட்ஸ்
4. இயக்குனர்:
பிடித்தவர் : மணிரத்னம், சேகர் கம்மூலா, குவாண்டின், குஸுபி டெரண்டினோ, ஸ்பீல்பெர்க், என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
பிடிக்காதவர் : நிறைய பேர்.
5. தொழிலதிபர்
பிடித்தவர் : கருணாநிதி ( வேற யாரோ கூட சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்) சரவணபவன் அண்ணாச்சி
பிடிக்காதவர் : இதுவும் அவங்களே தான்.. ரெண்டு பேருககும் பிரச்சனை ஒண்ணே.. என்ன அந்த பிரச்சனையோட வீரியம் தான் வேற.வேற.. (என்னனு புரிஞ்சவங்க உடனடியாய் பின்னூட்டமிடுங்கள்)
6. எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா, சுஜாதா, தி.ஜா.(யார் சொன்னாங்க அவங்க இறந்துவிட்டார்கள் என்று) பாலகுமாரன் (பழைய),
பிடிக்காதவர் : இப்போதைய பாலகுமாரன், சாரு.(லூசுத்தனாமாய் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. பெரும்பாலும் இவர் செய்யும், பேசும் விஷயங்கள் டிராயிங் அட்டென்ஷன் ரகம்) * இரண்டு மைனஸ் ஓட்டு நிச்சயம்டா கேபிளு…
7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,
பிடிக்காதவர்: சமீபகால இளையராஜா, ஹாரிஸ் (பெரும்பாலும் ஒரே டுயூனை வைத்து கொண்டு உட்டாலக்கடி அடிப்பதால்)
8. ஓளிப்பதிவாளர்:
பிடித்தவர் : இது மாறிக் கொண்டேயிருக்கும். ஸ்ரீராம், லேட்டஸ்டாய் பேராண்மை சதீஷ்குமார்
பிடிக்காதவர் : மொக்கையாய் ஒளிப்பதிவு செய்யும் எல்லோரும்
9. காமெடியன்:
பிடித்தவர் : எவர்க்ரீன் கவுண்டமணி, வடிவேலு, விவேக் (பழைய)
பிடிக்காதவர் : இப்போதைய விவேக், கருணாஸ் வையாபுரி (இவரையெல்லாம் காமெடி நடிகர்னு யார் சொன்னது?)
10. பதிவர்
பிடித்தவர் : கேபிள் சங்கர் (நம்மள நமக்கே பிடிக்கலைன்னா வேற யாருக்குத்தான் பிடிக்கும்)
பிடிக்காதவர் : கேபிள் சங்கர் (இது மேல சொன்ன பதிலுக்கு எப்படியும் பெரிய எதிர்ப்பை காட்டுறவங்களுக்கு..)
ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..
1. பெயர் சொல்ல விருப்பமில்லை
2. கனகு
3. D.R.அசோக்
4. மோகன் குமார்
5. முத்துசாமி பழனியப்பன்
Technorati Tags: பி.பி-10,தொடர் பதிவு
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
52 comments:
/*விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்.*/
Nalla Punch sir
/*த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :) */
Hahahah...Correct sir...
:-)
//பிடிக்காதவர்: சமீபகால இளையராஜா, //
தல சரியா சொன்னீங்க. இந்த தொடர் பதிவை நான் எழுதுனப்ப சொன்ன பதிலும் இது தான்.
//பிடிக்காதவர் : விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்.//
உண்மையான விசயம் தல..நல்ல பதில்கள்.
//பிடித்தவர் : கேபிள் சங்கர் (நம்மள நமக்கே பிடிக்கலைன்னா வேற யாருக்குத்தான் பிடிக்கும்)//
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே ஜி :)
//பிடிக்காதவர் : த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
//
தேடி? எதுக்கு தேடனும்? சரி இதுக்கு மேல எதாவது சொன்ன தங்கமணிகள் அடிக்க வந்துருவாங்க..
//என்னனு புரிஞ்சவங்க உடனடியாய் பின்னூட்டமிடுங்கள்)//
புரிஞ்சுது..ஆனா நோ கமெண்ட்ஸ்..
//இப்போதைய பாலகுமாரன்
சமீபகால இளையராஜா, ஹாரிஸ்
இப்போதைய விவேக்//
சரக்கு தீர்ந்து போச்சோ? இல்ல ரிடையர் ஆக வேண்டிய ஆளுங்களா?
கேபிள் அண்ணா ..... உங்களை பதிவுலக சினிமா சுப்புடு என்று அழைக்கலாமா ???
பதில்கள் எல்லாம் செம நச்சு ...
நல்ல வேளை அஜித்தை விட்டுடிங்க ....
பதிவுலக விஜய் ரசிகர்கள் உங்களை தேடி ஆட்டோ அனுப்ப போறாங்க ... பார்த்து கோங்க
As per rules Director list i know manirathanm. others????????????
கேபிள்ஜீ.. 1,2 5 6 & 9 SAME PINCH..
பிடித்தவர் : எவர்க்ரீன் கவுண்டமணி, வடிவேலு, விவேக் (பழைய)
மயில்சாமி எப்படி விடுபட்டு போனார்ன்னு தெரியலையே.. :)
//
பிடிக்காதவர் : இப்போதைய பாலகுமாரன், சாரு.(லூசுத்தனாமாய் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. பெரும்பாலும் இவர் செய்யும், பேசும் விஷயங்கள் டிராயிங் அட்டென்ஷன் ரகம்) * இரண்டு மைனஸ் ஓட்டு நிச்சயம்டா கேபிளு…//
ஒன்னு லவுல ஆரம்பிச்சி கில முடியுற மூனெழுத்து பதிவர், இன்னொரு ஓட்டு யாருண்ணே?
க்கும்.... சாருக்கு 2 மைனஸ் அதிகம்
சாரு பத்தி போட்டுட்டு பக்கத்திலேயே மைனஸ் ஓட்டு idea கொடுத்தற்கு நன்றி.
கடசில என்னையும் மாட்டிவிட்டீங்களே!
//விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்//
neenga irukkum fieldla intha maathi pathilellaam konjam ungalaiye patham paarkira eettigal. becoz u belog to ciny field.
Unga bathil sariyaanathunnunaalum ithu ungalukku emanaaga koodiyathu
// த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :) //
என்ன சார் இல்ல...
தலைவரே பிடித்த எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் நம்ம ரெண்டும் பேருக்கும் ஒரே ஆட்கள் தான் !!
த்ரிஷா பிடிக்காதா? நரசிம் மற்றும் என்னோட அப்பா (வயது 79 ) ரெண்டு பேருக்கும் பிடிச்சது த்ரிஷா தான் !! Tastes always differ.
நம்மளை யாரும் எந்த தொடர் பதிவுக்கும் கூப்பிடலயேன்னு நினைச்சிட்டிருந்தேன். கூப்பிட்டதுக்கு தேங்க்ஸ் வாத்யாரே
இரண்டு மைனஸ் ஓட்டு நிச்சயம்டா கேபிளு…
அந்த 2 ஓட்ட யாரு போருவாங்க சொல்ல வேண்டியதுதானே
பிடித்தவர் : கேபிள் சங்கர் (நம்மள நமக்கே பிடிக்கலைன்னா வேற யாருக்குத்தான் பிடிக்கும்)
பிடிக்காதவர் : கேபிள் சங்கர் (இது மேல சொன்ன பதிலுக்கு எப்படியும் பெரிய எதிர்ப்பை காட்டுறவங்களுக்கு..)
ரொம்ப நியாயமானவார்த்தை
கேபிள் நானுமா?
தொழிலதிபர்
பிடித்தவர் : கருணாநிதி
எங்கே செல்லும் இந்த பாதை?
//த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
நீங்க சரியா தேடலனு நினைக்கறேன்
More then Wife/Life...,
Businessman
விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்
idhai tharpodhu aamodhithaalum ondai mattum unargiren
த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
sariya thedunga thala
ippo conform aayiduchu
hey gavaningappa ivaru verum palaya uncle, youth nahiiiiii!!!!!!!!!
பிடித்தவர் : சுஜாதா, சுஜாதா
thanks thala
im an ardent fan of him
பிடிக்காதவர்: சமீபகால இளையராஜா
urrrrrrrrrrrrrrrrrrrrrrrr
innum pazhassi raja paattu kekkalaya thala
ariyamayil pesa koodadhu...
mmmmmmmmm
azhudhuruvom
நன்றி...(எதுக்கு?) அதுக்குத்தான்..
டம்பி மேவீ said...
கேபிள் அண்ணா ..... உங்களை பதிவுலக சினிமா சுப்புடு என்று அழைக்கலாமா ???
பதில்கள் எல்லாம் செம நச்சு ...
நல்ல வேளை அஜித்தை விட்டுடிங்க ....
பதிவுலக விஜய் ரசிகர்கள் உங்களை தேடி ஆட்டோ அனுப்ப போறாங்க ... பார்த்து கோங்க//
அதென்ன பதிவுலக விஜய் ரசிகர்...
கார்க்கின்னு சொல்லிட்டு போங்களேன்.
Vijay at least dance well what does Ajith do other than saying Athu?
Note: I'm no one's fan.
//த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
//
போட்டோவை ஜூம் பண்ணி பாருங்க எதுனா தேறும்...!!
நல்லா சொல்லியிருக்கீங்க...
இருந்தாலும் என் அளவுக்கு பொத்தம் பொதுவா சொல்ல வரவில்லைங்க உங்களுக்கு..
லிட்ஸ் நல்லாருக்கு தலைவரே....
தல நீங்க கூப்பிட்ட படி எழுதிட்டேன். பாருங்க.
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
நல்லா எல்லாத்தையும் போட்டு கலாய்ச்சிட்டீங்க ...
மொதல்ல என்னடான்னா யாரு கூப்பிட்டாங்கன்னு தெரியலன்னு சொன்னீங்க. இப்ப என்னடான்னா நேர்ல கூப்பிட்ட என் பேரப் போடல...
என்னா நடக்குது ஜி?
எனக்கு பிடித்த 2 பேரை நீங்கள் எப்படி பிடிக்காது என சொல்லலாம்.
த்ரிஷாவும் கேபிள் சங்கரும் எனக்கு பிடித்தவர்கள்..
தல ரொம்ப நாளா ட்ராஃப்டுல தூங்கினதுலா ஃபாண்டெல்லாம் துறு புடிச்சிருக்கு பாருங்க. :-)
//ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..
1. பெயர் சொல்ல விருப்பமில்லை
2. கனகு
3. D.R.அசோக்
4. மோகன் குமார்
5. முத்துசாமி பழனியப்பன்
//
தொடர் பதிவுக்கு என்னை முதலில் அழைத்ததற்கு, என் நன்றிகள்,
முயற்சி பண்றேன், தலைவரே!
Cable strikes back..
பிடித்த இயக்குனர் லிஸ்ட்டில் உங்கள் பெயரைப் போடுவது எப்போ
க்ரிஷ்ணார்ஜுனன் நாவலின் பெயர் என நினைக்கிறேன்
பாலா எழுதியிருப்பார் " முதல் அம்பு தைக்கும் போதுதான் வலிக்கும் அடுத்தடுத்த அம்புகள் தைக்கையில் அதை எதிர்த்து போரிடும் வெறிதான் ஏற்படும்" என்று அது பிடித்த எனக்கு ஏனோ அவரைப் பிடிப்பதில்லை செய்வதெல்லாம் செய்துவிட்டு தன்னை புனிதர் எனக்காட்டுவதாலா
//5. தொழிலதிபர்
பிடித்தவர் : கருணாநிதி//
தவுறு, இதை நான் வன்மையா கண்டிக்றேன், மற்ற அரசியல்வாதிகள் என்ன சேவை செய்பவர்களா? அவர்களும் தொழிலதிபர்கள் தான்....
அப்பாட!!! தமிழா பின்னுடம் போட்டுட்டேன்...நன்றி நண்பர் செந்தில் நாதன்
/*//த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
நீங்க சரியா தேடலனு நினைக்கறேன்*/
ha ha ha.. athe than en padhilum ;)
/*5. தொழிலதிபர்
பிடித்தவர் : கருணாநிதி
*/
nachu... :)
pala padhilgal ungaloda othu poguthu na...
azhaithathaykku nandri.. seekrame panidren :) :)
1. பெயர் சொல்ல விருப்பமில்லை
//
பெயர் சொல்ல விருப்பமில்லைன்னா யாருன்னு எப்படித்தெரியும்.? ஹிஹி..
போட்டாச்சு போட்டாச்சு
http://muthusamyp.blogspot.com/2009/11/blog-post_26.html
அடடா நான் நினைப்பதெல்லாம் கேபிள் நினைக்கிறாரே ....எப்படி
@விஜய் ஆனந்த்
நன்றி
2அது ஒரு கனாக்காலம்
நன்றி
@புலவன் புலிகேசி
நன்றி
@நிலா ரசிகன்
அப்புறம் தான் போய் பார்த்தேன்.. அட ஆமா.. சேம் பின்ஞ்
@செந்தில் நாதன்
புரிஞ்சிட்டு சொல்லாம போறீங்களே
@டம்பி மேவி
ஏன் இந்த் கொலைவெறி
வரட்டுமே ஆட்டோ.. அப்ப நான்பிரபல பதிவர் ஆயிடுவேனில்ல..:)
@மின்சாரகண்ணன்
:(
@பட்டர்ப்ளை சூர்யா
:0)
@பிரசன்னா
அட ஆமாமில்ல விட்டு போச்சே
@சுப.தமிழினியன்
:(???
@ஈரோடு கதிர்
இப்ப மூணாயிருச்சு கதிர்
@அசோக்
நீங்க பிரபல பதிவர் இல்லையா..?
@பித்தன்
உண்மைய சொல்றதுக்கு என்ன பயம்?
@பேநாமூடி
அதான் கேட்கிறேன்
@மோகன் குமார்
எழுதிடுங்க
@காவேரி கணேஷ்
இன்னிக்குமூணு
@முத்துசாமி பழனியப்பன்
:)
@என்.விநாயகமுருகன்
இப்ப தெரியுதா.. இல்லேண்ணெ இதோ இருக்குன்னு சொல்ல முடியல உங்களால.. சரியா தேடலைன்னுதான் சொல்றீங்க. ?
@சிவகுமார்
கிட்டத்தட்ட பிடிச்சிட்டீங்க
@சுரேஷ்
திரிஷாவெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போது நடிக்க ஆரம்பிச்சிது.. என்னை போய் யூத் இல்லைன்னு சொன்னா உலகம் நம்பிருமா..?
அதே போல் என்னை போல ஒரு இளையராஜாவின் வெறியனை பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை.ஆனால் எல்லோருக்கும் ஒரு க்ட்டத்தில் அடுத்த ஒரு ஆள் வந்து கோலோச்சிவிட்டுத்தன் போவார்கள்.. அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்
@தண்டோரா
சந்தியமா புரியலை தலைவரே
@கார்த்திக் விச்வநாதன்
அப்படி தனியா ஒரு ஆளை தனிநபர் தாக்குதல் பண்ணக்கூடாது இல்லை..
@முத்துசாமி பழனியப்பன்
தலைவரே டான்ஸ் நல்லா ஆடுறவக்களூக்கு பேர் டான்ஸர், நடிகர் இல்லை
@ஜெட்லி
:)
@இராகவன் நைஜீரியா
நன்றி.. அது என்னவோ சரிதான் தலைவரே
@க.பாலாசி
நன்றி
@மோகன்குமார்
படிச்சிட்டேன்
@ஸ்டார்ஜான்
நன்றி
@அதிபிரதாபன்
யோவ்.. நல்லா யோசிச்சி சொல்லு எதுக்கு நீ நேர்ல கூப்ட..?
@யோ
:)
@முரளிகுமார் பத்மநாபன்
:) ஹா..அஹா
@பெயர் சொல்ல விருப்பமில்ல
நன்றி
@வனிலா
நன்றி
@தர்ஷன்
அதை ஒரு நாள் எல்லோரும்போடும்படியான வாய்ப்பு வரும் என்ரு காத்திருகிறேன்
@கபி
அட தமிழ்ல உங்களுக்கு மெயில் அனுப்பனும்னு நினைச்சிட்டு இருந்தேன்/ எல்லோருமே பிஸினெஸ்மேந்தான். ஆனா அதுல இவரு தான் பெஸ்ட்
@கனகு
எதை தேடச் சொல்றீங்க.?
@ஆதிமூலகிருஷ்ணன்
அதானே
@முத்துசாமி பழனியப்பன்
பார்த்துடறேன்
@பச்ச மிளகா
சேம் பிஞ்ச்..:)
என்னோட ஃபேவரைட் த்ரிஷா தான். அப்படியே சாப்பிடலாம் :) :)
சாமி மாமியின் லெக் பீஸ். தாவணி தனலட்சுமியிடம் இருக்கும் குறும்பு :) "மனசெல்லாம்" மஹா மாதிரி ஒரு காதலி :)
"போகலாமேமேமே" என முதல் படத்தில் சூர்யாவிடம் சொல்லும் இடத்தில் இருந்து, இன்று வரை என்னைக் கவர்கிறார் :)
ஆனா, லூஸூ மாதிரி நடிக்கும் சில படங்களில் தான் கடுப்பாக இருக்கிறது :(
திருப்பாச்சி, ஜி, பீமா, அலை, Kuruvi.......
விஜய பிடிக்கலைனு சொல்றது ஒரு பேசனா போச்சு.......நீங்களுமா
உங்கள் அழைப்பை ஏற்று, பதிவிட்டு விட்டேன். பார்க்கவும். http://ulagamahauthamar.blogspot.com/
/பிடித்தவர் : இது மாறிக் கொண்டேயிருக்கும். ஸ்ரீராம், லேட்டஸ்டாய் பேராண்மை சதீஷ்குமார்/
enga BALU MAHENDRA sir cinematography ungaluku pudikkadha sir?
Post a Comment