அதே ஜீவன், அதே இயக்குனர் செல்வா, அதே கதை, அதே தயாரிப்பாளர், வேறு ஒரு செட் ஹீரோயின்கள் என்று மீண்டும் அதே படத்தை கொடுத்திருக்கிறார்கள்
முதல் பாகத்தில் ஏற்கனவே ஏதோ வெளிநாட்டில் தப்பித்து இருப்பதாகவும், மீண்டும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் காட்சியுடன் முடிந்த இடத்திலிருந்து, ஆர்ம்பிக்கிறது படம். சுவிசர்லாந்தோ என்னவோ ஒரு ஊரில் ஒரு பெரிய திருடி சாமியாரிணியாக மாறி தன்னுடய கடவுள் என்று ஜீவனின் போட்டோ பேப்பரில் வெளிவர, அதை பார்த்த ஒரு தெலுங்கு காரப் பெண், ஒரு அல்ட்ரா மார்டன் திருடி, நடிகை லஷ்மிராய் என்று எல்லோரும் அதை பார்த்து அவனை தேடி சாமியாரிணியை அணுக,
இன்னொரு பக்கம் மொட்டை அடித்த ஜீவன் சங்கீதாவின் பின்னால் அலைய, காலை இழுத்து, இழுத்து, நடக்கும், திக்கி, திக்கி பேசும் சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்க, அவருக்கு ஒரு ப்ளாஷ் பேக், அவருக்காக உதவ நினைக்கும் ஜீவன்,
ஏற்கனவே முதல் பாகத்தில் வந்தது போலவே டெம்ப்ளேட் திரைக்கதையில் நடு, நடுவே சங்கீதாவின் கதை ஓடுவதை தவிர பெரிசசாய் ஒன்றுமில்லை.
அல்ட்ரா மார்டன் பெண் ஏற்கனவே கல்யாணமான இந்திய கணவர்களை வலையில் விழ வைத்து, அவனிடமிருந்து பணம், வைரங்களை பெற்றபின், அவனது மனைவிகளூக்கு போன் செய்து அவனிடமிருந்து பணம் பறிப்பதை வாடிகையாக கொண்டவளிடம் ஜீவன் ஏமாற்றி கொள்ளையடிப்பது, எல்லாம் படு செயற்கை.
லஷ்மிராயிடம் டபுள் ஆக்ஷன் அண்ணன் தம்பி கேரக்டராய் வலம் வந்து, 28 கோடி ஏமாற்றுவது எல்லாம் ரொம்பவே அமெச்சூர்தனம். ஏமாற்றும் வித்தையில் இண்ட்ரஸ்டாய் இருப்பது லோக்கல் தாதாவாக இருக்கும் பெண்ணிடம் தான் தான் கவிஞ்சர் வாலி என்று சொல்லி வாலி எழுதிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரின் நெஞ்சில் கை வைத்து சொல்வதும் அதை கேட்டு, அவர் ஜீவனை தன் குருவாய் ஏற்றுக் கொண்டு, எலல பணத்தையும் கொடுத்து விட்டு சாமியாரிணியாவதும் இண்ட்ரஸ்டிங்க்.
ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார். முகத்திலோ, அல்லது டயலாக் மாடுலேஷனிலோ கொஞ்சம் கூட எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் கடனே என்று வந்து போகிறார். கொஞ்சமாவது நடிக்க சாமி. அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.
நான்கு கதாநாயகிகளும் முடிந்தவரை எவ்வளவு குறைவாய் உடை போட முடியுமோ.. அவ்வளவு குறைவாய் போட்டு அலைகிறார்கள். சங்கீதா கேரக்டர் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
மயில்சாமி படம் முழுவதும் ஜீவனின் அஸிஸ்டெண்டாக வருகிறார். பெரியதாய் ஏதும் செய்ய வாய்ப்பில்லாமல், கிடைத்த் இடத்தில் எல்லாம் கோல் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் இன்னும் கொஞ்சம் இவரை யூஸ் செய்திருக்கலாம்.
பாலமுருகனின் கேமரா சுவிச்சர்லேந்து அழகை பற்றி கவலை படாமல் ஏதோ மன்னார்குடி தெருவில் எடுத்ததை போல கடமையே என்று எடுத்டிருக்கிறார்.
வசனம் பட்டுகோட்டைபிரபாகர்.. நத்திங் டு சே. டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் தேறும். மரியா பாடல் இண்ட்ரஸ்டிங்
கதை, திரைகதை, வசனம், இயக்கம், செல்வா. க்ளைமாக்ஸ் காட்சியில் சர்ச்சில் போப் போல உடை மாட்டிக் கொண்டு ஜீவன் பேசும் காட்சிகள் எல்லாம் படு காமெடி. எல்லோருடைய ஏமாற்றத்துக்கும் காரணம் இது என்று அவர் ஏமாற்றியதை ஜஸ்டிபை செய்வதை போன்ற காட்சிகள் எல்லாம் படிப்பதற்கு ஒத்துவரலாம் படம் பார்க்கும்போது முடியலடா சாமி. படம் முழுவதும்,விறுவிருப்பாய் சொல்வதாய், கட் டூ கட்டில் ஓடுகிறது.
நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
29 comments:
Good review.
what do you mean by அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.
appuram
பார்ட் 3 வந்திருமோ.??? nach.
/அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.
//
நல்லா நடிக்கிறதுக்கு வாய்ப்பு உள்ள கேரக்டர்.. யூஸ் பண்ணவில்லை என்கிற அங்கலாய்ப்புதான்.
சார்.. அது இருக்கட்டும்... நேத்து kalainjar டிவி'யில் "இது காதல் செய்யும் பருவம்" படத்துல நடிச்சது நீங்க தானே???
அருமையான விமர்சனம் தல ... தெரியும் படம் மொக்கையாத்தான் இருக்கும்னு .. உஷாரா எஸ்கேப் ஆயிட்டோம்ல ;-)
வாழ்த்துக்கள்
எழுத்து சற்று பெரிய வடிவில் இருந்தால் படிக்க இன்னும் எளிதாக இருக்கும் . .
room pottu yosippangalo.., part3 kku
//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???
//
புரியுது தல..உங்க மனகஷ்டம்...கிளுகிளுப்பா எடுத்துட்டா படம் ஓடிரும்னு நெனைப்போ?
நான் "அவன்" இல்லப்பா, இந்த படத்த பார்க்க..
நன்றி கேபிள்...
நான் அவன் இல்லை-2 பார்த்து தமிழ்நாட்டில் 100 இளைஞர்கள் திருந்தியதாகவும்,உங்கள் விமர்சனம் படித்து படம் பார்க்காமல் விட்ட பல நூறு இளைஞர்கள் திருந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் இப்பதான் நம்பர் ஒன் தமிழ் செய்திதாளில் படித்தேன் தல.
//வசனம் பட்டுகோட்டைபிரபாகர்.. நத்திங் டு சே//
அட "சே"ன்னு இருக்கா தல
//ஏமாற்றியதை ஜஸ்டிபை செய்வதை போன்ற காட்சிகள் எல்லாம் படிப்பதற்கு ஒத்துவரலாம் படம் பார்க்கும்போது முடியலடா சாமி//
தல இப்படியே எல்லா படத்துக்கும் சொன்னா நாங்க எந்த படந்தான் பார்க்கிறது ..(ஆதியோட குறும்படம் மட்டும் தான் பார்க்க முடியும் போல..)
:)
no comments.. BE CAREFUL... நான் என்ன சொன்னேன்...
நான் நாளைக்குதான் போறேன் தலைவரே.,,,
பதிவு ரொம்ப சின்னதா இருக்கே உடம்புக்கு எதும் முடியலையோ???
sorry உ.த பதிவுன்னு நினைச்சி மேல இருக்க கமெண்ட் போட்டிட்டேன்
:)
ஒரெ கான்சப்ட் ஒரு முறை தான் ஒரு நடிகருக்கு வர்க் அவுட் ஆகும் என்று தான் ஏன்தான் இந்த படாதிபதிகளுக்கும், தன்னை டாப் ஹீரோ என்று கூறி கொள்ளும் நடிகர்களுக்கும் தெரிவிதில்லை என்று புரிய மாட்டேன் என்கிறது.
இந்த படம் ஜீவனுடைய ஆசைகளை இன்னொரு பெண் கூட்டத்துடன் கொட்டம் அடிப்பதற்காக மட்டும் என்று தோண்றுகிறது. இப்படிபட்ட படங்கள் வென்றால், 3 என்ன, 10 பாகங்கள் கூட வரலாம்.
நான் எஸ்கேப். :)
வந்ததே இரண்டு படம் இரண்டுமே அவுட்டா.
காசு மிச்சம்.
நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???
//ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார்..
போன பதிவுல சொன்னீங்க விஜய்க்கு நடிக்கத் தெரியாதுன்னு..
விஜய் என்னங்க.. அப்பாஸ் அளவுக்குக் கூட ஜீவனுக்கு நடிக்கத் தெரியாது..
just escape thanks
//மயில்சாமி படம் முழுவதும் ஜீவனின் அஸிஸ்டெண்டாக வருகிறார். பெரியதாய் ஏதும் செய்ய வாய்ப்பில்லாமல், கிடைத்த் இடத்தில் எல்லாம் கோல் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் இன்னும் கொஞ்சம் இவரை யூஸ் செய்திருக்கலாம்.//
"iam appreciate"
பார்ட் - 3 வரக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. அப்படியே தப்பித் தவறி வந்துட்டாலும், உங்களோட இந்த வரியை மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் அப்படியே போடலாம்..
// ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார். முகத்திலோ, அல்லது டயலாக் மாடுலேஷனிலோ கொஞ்சம் கூட எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் கடனே என்று வந்து போகிறார். கொஞ்சமாவது நடிக்க சாமி. அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.//
நன்றி.
நல்லா மொக்க பண்ணிட்டாங்கள்-லா... நல்ல சீக்வெல்லாக வர வேண்டியது... எனக்கு தெரிந்து இயக்குநர் செல்வா அவுட்-ஆப்-ஃபார்மில் தான் இருக்கிறார்...
இருப்பதிலேயே பெரிய காமெடி அந்த ஈழத்தமிழர் பிளாஸ்பேக். அடப்பாவிகளா, எதை எதைத்தான் வியாபாரம் செய்வீர்கள்? ஈழத்தமிழர் படுகொலை குறித்த சி.டியை அந்த ஈழ இளைஞர் கொண்டுவந்து கொடுக்க, சங்கீதா குடும்பம் புதுப்பட ரிலீஸ் போல பார்க்கிறது. இடையில் அவர்கள் காட்டுகிற ரியாக்ஷன்கள்... ஆகா!. சங்கீதா ஈழத்தமிழராம், ஆனால் போர் நடப்பதே தெரியாதாம். அவர் செயற்கையாய்ப் பேசுகிற ஈழத்தமிழ்... முடியல்ல்லை!
//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???
ரைட்டு.. தெளிவா புரியுது! :))
இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலப்பா ...
ஈழத்தமிழர்கள் இப்படிப் பிச்சைக் காசுக்குத் தான் அழுகிறார்களாக்கும். இனி நீலப் பட்ம் எடுத்து தான் அவர்களுக்கு சோறு போட வேண்டும்.
Post a Comment