திடீர் பதிவர் சந்திப்பு சனிக்கிழமை மாலை ஏற்பாடாகியிருந்தது, என்னால் சரியான நேரத்தில் போக முடியவில்லை. கடைசியாய் டீகடை நேரத்தில் தான் எல்லோரையும் சந்திக்க முடிந்தது. வநத விருந்தினர் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்ததால் எல்லோரும் கவிதைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்க, எனக்கு ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்த பைத்தியக்காரனிடம், ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.
அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
ஹிந்தி சீனிகம் படத்திற்கு பிறகு இளையராஜாவின் இந்தி படம் “பா” ஏற்கனவே ஹிட் கொடுத்த டீம், பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை களன் என்று இருந்தாலும் நான் மிகவும் எதிர்பார்த்தது ராஜாவின் இசை, பழைய பாடல்களின் அணிவகுப்பு என்பது நம்க்கு வேண்டுமானால் ஏமாற்றமாய் இருக்கலாம். மனுஷன் ஆர்கெஸ்ட்ரேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார். அதிலும் கும்சும் என்றா பாட்டில் அவர் செய்திருக்கும் இம்பர்வைசேஷன் சிம்ப்ளி சூப்பர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இண்டெர்நெட் டிக்கெட் புக்கிங் ப்ளாக் டிக்கெட்டை என்கிற கான்செப்டை காணாமல் போக அடிக்கிறது. 2012 ரீலீஸ் அன்று தேவி தியேட்டரில் ஆன்லைன் புக்கிங்கில், காலை 10 மணி வரை புல் ஆகாத டிக்கெட்டுகள், சுமார் 350 டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் ஆகியிருக்கிறது. தேவியில் ஒரு வித்யாசமான விஷயம் என்ன என்றால் 10 ரூபாய் டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்ய முடியும். என்ன அதுக்கு புக்கிங் சர்வீஸ் சார்ஜ் 10 ரூபாய். 2012 தேவியில் சும்மா பின்னி பெடலெடுக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசியல்
தீவிரவாதி என்றாலே முஸ்லிம் தானா என்று கேள்வி கேட்டு, இந்துயிசம், பாஸிசம், பாயஸம், இந்துத்துவா, அவா, இவா என்று பேசியவர்கள், சமீபத்தில் ரிலீஸாகியிருக்கும் “குர்பான்” படத்தை பார்க்க வேண்டும். ஊரில் உள்ள முஸ்லிம் பாதி பேர் பெண்கள் உட்பட தீவிரவாதிகளாய் இருக்கிறார்கள். படத்தின் விமர்சனம் விரைவில். படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். ஓகே.. ஸ்டார்ட் ப்ளாகிங்….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுகடை
சென்னை தங்க சாலையில் கொஞ்சம் உள்ளே போனால் ஒரு ஹரி ஓம் பவன் என்று ஒரு ஹோட்டல் இருக்கும். ப்யூர் வெஜிட்டேரியன், அதிலும் ஜெயின் ஸ்பெஷல் கிடைக்கும். (அதாவது வெங்காயம் இல்லாமல்). போனவுடன் ஒரு மசால பப்பட் ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்தால் சுகம். அவ்வளவு டேஸ்டான பப்பட். அதன் பிறகு, சப்பாத்தி, பூரி, புல்கா, என்று சுடசுட ஆர்டர் செய்ய, செய்ய வந்து கொண்டேயிருக்கும், முக்கியமாய் ஒரு விஷயம் சைட் டிஷ்கள் யானை விலை, குதிரை விலை எல்லாம்கிடையாது. ஒருவர் சாப்பிடக்கூடிய அளவிற்கு சகாய விலையில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சைட் டிஷ் டேஸ்ட் பண்ணலாம், ஐ ரெகமெண்ட், பிந்தி மசால, மலாய் கோப்தா, மற்றும் எல்லா டிஷ்களுமே. :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விஷுவல் டேஸ்ட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
தயவு செய்து புத்தகம் படிக்கும் போது இரண்டு கைகளிலும் புத்தகத்தை பிடித்து படிக்கவும்
ஒரு மிடில் ஏஜ் தம்பதிகள் டாக்டர் ஒருவரிடம் வ்ந்து நாங்கள் உறவு கொள்ளூம் முறையை பார்த்து அதில் ஏதாவது தவறு செய்கிறேனா என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவரின் எதிரேயே மேட்டர் பண்ண, முடிந்தவுடன் டாக்டர் “ பர்பெக்ட்லி ஆல்ரைட்” என்றதும் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்த அந்த தம்பதி, அதே கோரிக்கையை வைத்து மேட்டரை பண்ண, அவர்கள் கிளம்புகையில்”அது சரி அதான் நீஙக் சரியா ப்ண்றீங்களே எதுக்கு இங்க வந்து செஞ்சு காட்டறீங்க என்று கேட்க, வந்தவர்களில் ஆண் “அவ வீட்டுக்கு போன அவ புருஷன்கிட்ட மாட்டிக்குவோம், என் வீட்டுக்கு போனா என் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்குவேன். ஹோட்டலுக்கு போனோமின்ன கொறஞ்சது ஆயிரம் ரூபா இல்லாம முடியாது. இங்கேயான உங்க பீஸ் 200 தான். சீப்பா இருக்கேனுதான் என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
71 comments:
யப்பா நாம தான் first..
நாந்தான் முதல்லயா ...
அச்சசோ வடை போச்சே
நான் 2 வதும் 3 வதும்
கொத்து பரோட்டனா இது தான். எல்லா சைடுலையும் ரவுண்டு கட்டி கொத்தி இருக்குரிங்க ..
Cable came back to the Form..
ஜோக் சூப்பர்ஜி ;-)
"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?"
'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா?
'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்
படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். ஓகே.. ஸ்டார்ட் ப்ளாகிங்….////
சும்மா இருக்குறத ஊதுறீங்க? நடத்துங்க. கொஞ்ச நாளா சண்டையே இல்லாம போர் அடிக்குது.
பா ஆர்கெஸ்ட்ரேஷனல் இம்புரூவ்மெண்ட் அப்படி அசர வைக்குது.பட் தமிழில் ஏன் இப்படி? அதுசரி, அதிலும் அவார்ட் குடுக்க கலைஞர் இருக்கிறாரே!
super thala
super thala
"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?"
ஏனோ தெரியவில்லை., ழகரத்தை சரியாக உச்சரிப்பவர்கள் கழுதையை கய்த என்கிறார்கள்...
தமிழுக்கு ழகரம் சிறப்பு/பெருமை என நன்னூலோ தொல்காப்பியமோ சொல்லி அடியேன் அறியவில்லை. பெரியவர்கள் தக்க சான்றுடன் வரவும்.
நல்ல சுவை.
குறும்படமும் ஏ-ஜோக்கும் கலக்கல்ஜி!
வெரி நைஸ் டு சீ யூ.. பேக் டு ஃபார்ம்...
அந்த டாக்டர் ஏ ஜோக்... படு சூப்பர் போங்க... (எங்கப்பா எங்க அண்ணன் உ.த...)
அண்னே உ.த. இதுக்கு நெகடிவ் தமிழ் மணம் ஓட்டு போட்டது நீங்களா?
@முத்துசாமி,
/*'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?*/
அப்படி இல்லீங்க... ‘ழ’கரம் தமிழ் மொழியின் தனி சிறப்பு என்பதால் அப்படி கூறப்படுகிறது... வேறு எல்லா மொழியிலுமே ‘ல’கரம் தான் இருக்கும்.. இது எனக்கு தெரிந்தது.. தவறு இருப்பின் தெரிவிக்கவும்..
இந்த வாட்டி கொத்து கொஞ்சம் சுவை குறைவு தான் அண்ணா...
/*ங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன்*/
இது ‘நச்’. அப்பவும் இரசித்தேன். இப்போதும் இரசிக்கிறேன் :)
குர்பான் - காண்ட்ரோவர்ஸி-னு வச்சிடலாமா????
போட்டோ சூப்பர்... அருமையா இருக்கு.. என்ன இடம்???
///படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன்///
இதெல்லாம் பிரச்சினை இல்லை கேபிள் தமிழ் ப்ளாக்கர்களுக்கு. கமல், மணிரத்னம் அல்லது சுஜாதா படத்தோடு தொடர்புபட்டிருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் அரசியல் பற்றிப் பேசப்படும். மற்றபடி முஸ்லீம்களையோ, வேறு எந்த சிறுபான்மையையோ யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம். நவீன பார்ப்பானைக் கேளுங்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வார்
கொத்து பரோட்டனா இது தான். எல்லா சைடுலையும் ரவுண்டு கட்டி கொத்தி இருக்குரிங்க
"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?"
Me Too
முத்துசாமி பழனியப்பன், உங்கள பழனி-னு கூப்பிட்டா பிடிக்குமா அல்லது பலனி-னு கூப்பிட்டா பிடிக்குமா? இங்க யாருக்கு நீங்க வக்கீல்? அய்யா, தமிழுக்கு
'ழ' அழகு... உங்கள் மழை கவிதையில் 'ழ'-விற்க்கு 'ல' போட்டு படித்து பாருங்கள்... சங்கர் குறிப்பிட்டது சரி என்பீர்கள்.
அருமையா இருக்கு
விஷுவலில் பின்னியிருக்காங்க பாஸ், 2012 -ல்.!
@ Muthusamy Palaniappan :
"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?"
'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா?
'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்"
ஐயா, தமிழ் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், ஒரே எழுத்தான "ழ" வை உச்சரிக்க கொஞ்சம் முயற்சி எடுக்கலாமே..... நீங்கள் 247 வாழ வைக்கும் போது..... இன்னும் ஒரு வார்த்தையை வாழ வைப்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே
"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?"
இதை எல்லாம் கேட்டால் பேச்சு தமிழ் அப்படி தான் இருக்கும் என்று சொல்லுவாங்க .....
இந்த இலக்கியவாதிகளே இப்படி தான் பாஸ் ......
இன்னொரு விஷயம் இப்ப எல்லாம் தமிழ் ஆர்வத்தை விட தமிழ் வெறி தான் ஜாஸ்தியா இருக்கு.....
ஒரு கன்னட மொழிக்காரன் அவனது மொழி பெருமையை பேசினால் ..... பெரும்பாலும் யாரும் ஏற்று கொள்ளவது இல்லை... அது ஏன்னு எனக்கு தெரியல..........
"படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். "
இந்தியாவில் முஸ்லிம்கள் செய்தால் அது தீவிரவாதம்... மற்றவர்கள் செய்தால் அது மத பற்று......
@ Muthusamy Palaniappan:
"தமிழுக்கு ழகரம் சிறப்பு/பெருமை என நன்னூலோ தொல்காப்பியமோ சொல்லி அடியேன் அறியவில்லை. பெரியவர்கள் தக்க சான்றுடன் வரவும்."
தமிழுக்கு அது பெருமை என்று தொல்காப்பியம் சொன்னால் தான் நம்புவிங்களா ?????
(உங்களுக்கு ஒரு தகவல் ....... அந்தக்காலத்தில் தொல்காப்பியம் வந்த பொழுதில் அதையே யாரும் ஏற்று கொள்ளவில்லை ...கால போக்கில் அதன் பெருமை உணர்ந்து ஏற்று கெள்ள பட்டது)
கேபிள் ஜி .... வழக்கம் போல் ஏ ஜோக் சூப்பர்
தலைவரே! எதிர்பார்த்திருக்கிறேன் குர்பான். சீக்கிரம்.
// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.
//
கரெக்ட், ரொம்ப கரெக்ட்! இத நம்பித்தான் என்னோட ப்ளாகில நானும் கவிதை எழுதுகிறேன்.
கேட்டுக்குங்க, கேட்டுக்குங்க, நானும் கவிஞன்தான், கவிஞன்தான்.
//அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..
//
நம்ப மோளியோட அளகு அந்த "ள" வுலதான இருக்கு, அத எப்படி எல்லாரும் பளகிக்க மாட்டேன்றாங்கன்னு தெரியலியே?
ஏ ஜோக் ஏ ஒன் தலைவரே.....
குறும்படம் கலக்கல்ணே.
கொத்து புரோட்டா வழக்கம்போல் அருமை தலைவரே.
நன்றி தோழர்களே
A ஜோக் - :))))))
@ முத்துசாமி பழனிசாமி - ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல :)
@ டம்பிமேவி - பெசல் டேங்க்யூ :)
A ஜோக் கலக்கல் தல!:-)))
இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே...
சூப்பர்
// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.//
இப்படி தான் தமிழ்நாட்டுல முக்காவாசி பேர் கவிதை எழுதுறாங்க... நா கூட தான்.. ஹி ...ஹி..
நீங்க கடைசியா தண்டோரா எழுதின கவிதையை பார்த்துட்டீங்கண்ணு நினைக்கிறேன். அதனாலாத்தான் டவுட்.
ஆமா...அரசியல்ல ஏன் படத்தப்பத்தி சொல்லியிருக்கீங்க...பிளாக்கர்ஸ் அரசியலா?
கடைசியா புத்தககடைக்காரர் என்ன சொல்ல வர்ரான்னுத்தான் தெரியல.
கொத்து......ம்ம்ம்ம்ம்.........
super taste !!!!!!
:) :) :௦ ஜோக் சூப்பர் னா
எம்.எம்.அப்துல்லா said...
@ முத்துசாமி பழனிசாமி - ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல :)
hahah no such incidence yet.,
நல்லா இருக்கு தலைவரே..
@முத்துசாமி பழனியப்பன் - டம்பியின் கருத்தே எனதும். தமிழின் பிற எழுத்துகளை வாழ வைக்கும் உங்களால் “ழ”கரத்தையும் வாழ வைக்க முடியாதா? முடியும் தலைவா.
ழ’கர உச்சரிப்பு சரியாக இல்லாமல் உங்கள் மழை கவிதையின் முதல் பத்தி வாசித்தால் எப்படி இருக்குமென்று பார்த்தேன்
மலையில் பொழிந்த
மலையைக் கண்டு
மளைத்து நிற்கிறேன்
கல்லூரியில் படிக்கும்போது பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவனும் உங்களைப் போல கவிதை & தமிழை வாழ வைப்பவன் தான். அவன் சொன்னது “இங்க மல இருக்கிறதால மல நல்லா பெய்யும்”
nice sir,
"ழ" மற்றும் "ஞ" -
இவை இரண்டும் தமிழுக்கு மட்டுமே உரித்தான வார்த்தைகள்..
எனக்கு தெரிந்த வரையில் வேறு எந்த மொழிகளிலும் இது போன்ற உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்கள் இல்லை..
நாம் பேசும்பொழுது , "ல", "ழ", "ள" உச்சரிப்புகளை வேறு படுத்திக் காட்ட தெரிந்திருக்க வேண்டும்..
இது பரவால்ல.. "ன" மற்றும் "ண" உச்சரிப்பு வேறுபாடுகள் கூடத் தெரியாமால், சேட்டு வீட்டுக் குழந்தைகள் போலத் திரிகிறார்கள் ஆங்கிலவழிக்கல்வி கற்கும் நம் தமிழ்க்குழந்தைகள்..
:) சூப்பரு
// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.//
இங்க ஏன் பேரிகை கொட்டுபவரை இழுக்கிறீர்கள் :)
வழக் கலக்
வாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எலும்பு களண்டு போச்சு
அருமை,ஷங்கர்.'A' ஜோக் சூப்பர்.
தண்டோரா ...... said...
வாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எலும்பு களண்டு போச்சு
//
ROTFL..!! தெரிந்த ஜோக்கென்றாலும் டைமிங்கில் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
இருப்பினும் இதில் ஒரு தவறு இருக்கிறது. அது இப்படி இருக்கவேண்டும்..
"வாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எளும்பு களண்டு போச்சு"
@sri
நன்றி
@ஸ்டார்ஜான்
மிக்க நன்றி
@ரோமிபாய்
மிக்க நன்றி ரோமி
@ஸ்ரீ
நன்றி
/ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா?
'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்
//
தலைவரே.. ஒரு விஷயம்.. ழகரம் தெரிந்தால் தான் தமிழை நன்றாக தெரிந்தவர்கள் என்று அர்ததம் கிடையாதுதான். ஆனால் தமிழை பற்றி நாம் பேசும் போது, தமிழுக்கே உரித்தான ழகரத்தை தவறாக பேசுவதை ஞாயபடுத்துவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை.
@பப்பு
ஏதோ நம்மாள முடிந்தது
அப்புறம் ஆர்கெஸ்ட்ரேஷனல் இம்புரூவ்மெண்ட் ஏன் தமிழில் இல்லை என்று கேட்டிருந்தீர்கள்..? அதான் இம்புரூவ்மெண்ட் என்று சொல்லியிருக்கோமே ஒரு வாட்டி செஞ்சதை மீண்டும் செய்யும் போது இன்னும் மெருகேத்திரத்துக்கு பெயர்தானே இம்ப்ரூவ்மெண்ட்
@ஸ்ரீகிருஷ்ணா
நன்றி
@முத்துசாமி பழனியப்பன்
அப்படி யாராவது ழகரம் சரியாய் பேசுபவர்கள் கழுதையை கய்த என்று சொன்னாலும் தவறுதான்.
@முத்துசாமி பழனியப்பன்
நிச்சயம் தமிழுக்கு சிறப்பு மற்றும் பெருமை சேர்ப்பது ழகரம் தான்..
இதில் காமெடி என்னவென்றால் தமிழ் வளர்த்த மதுரைக்காரர்கள் தான் இதில் முக்கியமான ழகர பிரச்சனையுள்ளவர்கள்.
@அக்பர்
நன்றி
@பா.ராஜாராம்
மிக்க நன்றி
@இராகவன் நைஜீரியா
நன்றிண்ணே..
@கனகு
எதுக்கு மன்னிப்பெல்லாம்.. சரிங்கிற விஷயத்தை சொல்றதுக்கு எதுக்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்கணும்..?
ஜஸ்ட் எ டிஸ்கஷன்.
@கனகு
அப்படியா..?
நன்றி
நிச்சயம் காண்டர்வர்ஸிதான்
போட்டோ என் செல்லில் எடுத்தது.. கொடைக்கானல் ஏரி.. காலை ஆறு மணிக்கு எடுத்தது.
/இதெல்லாம் பிரச்சினை இல்லை கேபிள் தமிழ் ப்ளாக்கர்களுக்கு. கமல், மணிரத்னம் அல்லது சுஜாதா படத்தோடு தொடர்புபட்டிருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் அரசியல் பற்றிப் பேசப்படும். மற்றபடி முஸ்லீம்களையோ, வேறு எந்த சிறுபான்மையையோ யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம்.//
கரெக்டாக சொன்னீர்கள்
@சதீஷ்குமார்
நன்றி..
மீ டூன்னா.. உங்களுக்கு ழக்ரம் ப்ராப்ளமோ..?
@அரசூரான்
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்
@ஆதிமூல கிருஷ்ணன
2012 அமெரிக்காவுல டவுன் ஆயிருச்சு.. தலைவரே..
@
@டம்பிமேவி
நல்லா சொன்னீங்க
மதப்பற்று
அதுவும் சரிதான்
@டம்பிமேவி
தொல்காப்பியம் குறித்த விஷயம் புதுசு..
@ஏ ஜோக்க்கு நன்றி
@முரளிகுமார் பத்மநாபன்
நாளை
@பெயர் சொல்ல விருப்பமில்லை
அட நானே அப்படித்தான் கவிதை ஒன்ணு எழுதினேன்.
ள், ழ, பிரயோகம் அருமை
@ஜெட்லி
நன்றி
@தராசு
நன்றிண்ணே
@சரவணக்குமார்
நன்றி
@அப்துல்லா
நன்றிண்ணே
@தஞ்சை ஜெமினி
நன்றி
@பேநா மூடி
நீங்களும் அப்படித்தானா..?
@பாலாசி
என்னது புத்தக கடைக்காரர் என்ன சொல்ல வர்றாருன்னு புரியலையா..
@குறைஒன்றும் இல்லை
நன்றி
@பேரு ஸ்டான்லீங்க
நன்றி
@நர்சிம்
நன்றி
@கே.வி.ஆர்
நீங்கள் சொன்னதும் உண்மைதான்.
@யோ
நன்றி
@பிரசன்னா
ஆமாம் பிரசன்னா.. சேட்டு வீட்டு பிள்ளைகள் போலத்தான் அலைகிறார்கள்.
@அசோக்
நன்றி
@அசோக்
நான் எங்கங்க இழுத்தேன். வம்பிழுத்துவிட்டுரூவீங்க போலருக்கே
@முரளீகண்ணன்
நன்றி
@தண்டோரா
நல்லா சொன்னீங்க.. வாள்த்துகள்
@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்
@ஆதிமூலகிருஷ்ணன்
இம்பர்வைஷேஷன் இன்னும் நலலாருக்கு
we are expecting gurpan review
@ all
மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது
the below site says this
http://wapedia.mobi/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
so guys please don't keep on hanging with the so called ழகரம் just because you are getting it right. Let's treat all the letters in the same stage.
கொத்து பரோட்டவுல ..."ழ"கரம் நல்ல கொத்து வாங்குது போல....:-))
/மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது//
பாருங்க இவ்வள்வு சிறப்பு பெற்ற ஒரு விஷயத்தை ஏன் நாம சரியா பேசாம.. கெடுக்கணும்.. கொஞ்சம் முயற்சி செஞ்சா வந்திரும்.. அப்படி வரலைன்னா.. இனிமே எழுதும் போது ழகரத்தை உபயோகிக்காம எழுதி, நம்ம எண்ணத்தை நிலை நிறுத்தலாமே..
’ழ’வை எப்படி உச்சரிச்சா என்ன உங்களுக்கு? தமிழ் தொண்டு ஆற்றினால் போதாதா? ழ அழிந்தால் அழிந்துபோகட்டுமே. தமிழ்தான் வளர்ந்துவிடுமே.
அப்றம் அந்த குர்பான் மேட்டர்... எத்தன பேரு அதப் பத்தி பேசுறாங்கன்னு பாக்கலாம். அந்த மேட்டர் ஹிட் ஆகும் பட்சத்தில் நம்ம கையிலயும் ஒரு சரக்கு இருக்கு.
சாப்பாட்டுக்கடை - எப்போ போகலாம்?
ஏ ஜோக் சூப்பர். முதல் மைனஸ் ஓட்டு அண்ணன் உ.த. அவர்களுடையதாகத்தான் இருக்கும். மற்றது தெரியல.
வர வர கொத்துல அரசியல் வாசனை அதிகமா தூவுறீங்க. நல்லாத்தான் இருக்கு.
Nice A Joke...
I heard that the couple(?) also claimed Rs.200 in their medical reimbursement. :P
காற்றில்லாமல் உயிர் வாழ்வதா?
super...super...super
please sir, continue...writing "isaiyenum raaj vellam"
//இங்கேயான உங்க பீஸ் 200 தான். சீப்பா இருக்கேனுதான் என்றான்.//
இந்த 200 ம் Medi Claim ல கம்பெனில இருந்து claim பன்னிருவேன் என முடியும்.
குறும்படம் சூப்பர்
Post a Comment