Thottal Thodarum

Nov 7, 2009

சா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்

sa bu tree1

காதல் திருமணம் செய்து, இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு அதனால் வெறுமையின் உச்சத்தில் இருக்கும் தம்பதிகள், ஒரு பெண்ணை காதலிப்பதுதான் முக்கிய விஷயமாய் நினைத்து அலைந்து, தனக்கு எது வேண்டும், அல்லது வேண்டாம் என்று முடிவெடுக்க முடியாத ஒரு இளைஞன், பிகர்களைவிட ஆண்டிகளிடம் மனதை பறிகொடுக்கும், காலேஜ் பையன் பால் இப்படி ஒரே காலனியில் வேறு வேறு ப்ளாட்டுகளில் வசிக்கும் மூவரை பற்றிய படம்.

படத்தில் இண்ட்ரஸ்டாய் சொல்ல முயற்சி செய்து வெற்றி பெற்ற கேரக்டர், பால் எனும் பழனியப்பன் என்கிற ஆண்டிகளை சைட் அடிக்கும் கேரக்டர். நல்லா ரீச் ஆகியிருக்கு. மிக இயல்பான நடித்திருக்கிறார். ரியாக்‌ஷன்களை உடனக்குடன் கொடுத்து சிரிப்பை வரவழைக்கிறார்.sa bu tree2

அதே போல் பிரஜன் ஜோடிக்கான பிரச்சனை. இருவ்ருக்குமிடையே ஆன வெறுமையை இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம். ரொம்பவும் ஆங்கில பட தாக்கத்தினால் பட்டும் படாமல் காட்சியமைத்திருந்ததால் பெரிதாய் பாதிப்பு ஏற்படுத்த தவறிவிட்டார். இயக்குனர்.

பிண்ண்னி பாடகி உஜ்ஜெயினி பால் காதலிக்கும் ஆண்டியாய் வருகிறார். நல்லா…… இருக்கிறார்.

படத்தின் முக்கிய கதையான கதாநாயகனின் காதல் கதை ரொம்ப குழப்பமாகிவிட்டது. ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துவிட்டு, தேவையில்லாமல் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, அவளை நண்பியாய் ஏற்று கொள்வது கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கதையில் இந்த பெண்ணை அவன் காதலிக்க வேண்டியிருப்பதால் கதையும் அதற்காக வளைத்து இலக்கில்லாத காட்சியமைப்புகளால் சொதப்பி விட்டார்கள்.

sa bu tree3 படம் நெடுக, டபுள் மீனிங் இல்லை ஸ்ட்ரெயிட் மீனீங்கிலேயே வசனங்களும், காட்சிக்ளூம் வருகிறது. பட் ஒன்றும் தப்பாக படவில்லை. அதிலும் பால் வீட்டில் பழைய ஜெயமாலினி பாடலை பார்த்தபடி, திரும்பிக் கொண்டு ஷூக்கு பாலீஷ் போட்டுக் கொண்டுடிருக்க, பின்னாலிருந்து பார்க்கும் ஒரு பெண் அவன் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதாய் நினைத்து பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதும், உச்சயினியை கரெக்ட் செய்ய, பிரியா வீட்டிற்கு வந்து மொட்டை மாடியிலிருந்து, எட்டிப் பார்க்கும் போது, ப்ரியா அவன் தன்னுடன் தனியாய் இருக்கத்தான் மாடிக்கு வந்தான் என்று நினைத்து கொண்டு, லொட, லொடவென பேசுவதும்.. என்று இவரின் காட்சிகள் இண்ட்ரஸ்டாக போகிறது. படத்தின் இயக்குனரே இந்த கேரக்டரை எடுத்திருப்பதினால் எக்ஸ்ட்ரா கவனத்துடன் இருக்கிறது.

கதாநாயகிகள் அபப்டி ஒன்றும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை.. மற்ற நடிகர்களும்./

டிஜிட்டல் கேமராவில் படம் பிடிக்கபட்ட இந்த படத்தில் எல்.சஞ்செயின் ஒளிப்பதிவு கச்சிதம். பாடல்கள் பெரிசாய் இம்பாக்ட் ஆகவில்லை. இம்மாதிரியான படங்களில் வசனங்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும், அது இதில் மிஸ்ஸிங். அதனாலேயே பல இடங்களில் தொய்வு ஏற்படுத்துகிறது.
sa bu tree4 பதினெட்டு வயது பையன், முப்பது வயது பெண்ணை காதலிக்கிறான், இருபத்தியைந்து பாலாவுக்கு காதலியுடன் பிரச்சனை, பிரஜனுக்கும் ஜோவுக்கு மணவாழ்க்கை விரிசல்.. இப்படி மூன்று பக்கமும் போகிற திரைக்கதை. ரொம்ப இண்ட்ரஸ்டாய் சொல்லியிருக்க வேண்டிய படம். கொஞ்சம் அமெச்சூர் தனமான திரைக்கதையாலும், நடிப்பாலும் இறங்கிவிட்டது. என்றே சொலல் வேண்டும்.

சா… பூ.. த்ரீ…- என்ன்னனு சொல்லலாம்..????



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

43 comments:

பாலா said...

இந்த தலைப்புக்கு.. வரிவிலக்கு உண்டா சங்கர்?

பாலா said...

என்ன ஆச்சரியம்! 12.40-க்கு பின்னூட்டம் போட்டு.. போட்டிக்கு வர.. இந்தியாவில் ஆள் இல்லையா???

ஹே.. மீ.. த.. ஃபர்ஸ்ட்ட்டு...

Cable சங்கர் said...

இருக்குன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா டைட்டில் ல சா.. பூ.. த்ரி. என்று தமிழில்தான் போட்டிருக்கிறார்கள்.

Cable சங்கர் said...

நாளைக்கு சனிக்கிழமை,, அத்தோட, நல்ல மழை வேற ஒரு வேளை மட்டையாயிட்டாங்களோ..

வண்டிக்காரன் said...

ரொம்ப கொடுமையா இருக்கும்போல இந்தப்படம் .. பாவங்க நீங்க

Prabhu said...

ரெண்டுகட்டானா இருக்கேங்க உங்க விமர்சனம்.

ஆமான்னா இப்படி ஆட்டு, இல்லன்னா இப்படி ஆட்டு, ஏதாவது ஒண்ணு ஆட்டு
:)

பா.ராஜாராம் said...

ஆஜர் பாஸ்!

ரோஸ்விக் said...

நாங்களும் ஆட்டைக்கு வருவோம்ல....:-))

என்ன யூத்து கதாநாயகிகள் கூட நல்லா இல்லைன்னு சொல்லீடிங்க....அதாவது உருப்படியா இருந்திருந்தா பாக்கலாம். அதுவும் போச்சே....ம்ம்ம்ம்

பாலா said...

////
ஆமான்னா இப்படி ஆட்டு, இல்லன்னா இப்படி ஆட்டு, ஏதாவது ஒண்ணு ஆட்டு
:)///

தூங்கப் போகாம... பதிவு பதிவா போய்.. சினிமா டயலாகை சொல்லிகிட்டு இருக்கீங்களா?

பாலா said...

////இருக்குன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா டைட்டில் ல சா.. பூ.. த்ரி. என்று தமிழில்தான் போட்டிருக்கிறார்கள்.////

சன் டிவி.. படமா இருந்தா... உடனே தலீவரு...

பெயெரெச்சம்.. வினையெச்சம்னு சொல்லி... வரிவிலக்கு கொடுத்திருப்பாரு! :)

அத்திரி said...

அண்ணே நேத்து பெய்த மழைக்கு பேய் கூட மூடிட்டு தூங்கிடும் போல.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடப்பாவிகளா? பதிவு போட வேற நேரமே கிடைக்கலியா????.................

இந்த மாதிரி படத்தை உங்களால் மட்டும்தான் பார்க்க முடியும்..............

ஜெட்லி... said...

ஹோ... நீங்க இந்த படம் போயிட்டிங்களா??..
இந்தவாரம் வந்த ஆறு படமும் உப்புமா தான் நினைக்கிறேன்..

மணிஜி said...

கேபிள்..உனக்கும் ஆண்டி செண்டிமெண்ட் உண்டு இல்லை?

குப்பன்.யாஹூ said...

படத்தின் இயக்குனர் பொதிகை தொலைக்கட்சியில் கொடுத்த விளக்கம்:

சா= சாவு,

பூ= பிறப்பு

திரி= பெண்

தராசு said...

படத்தோட பேரே விவகாரமாயிருக்கே தல,

அப்புறம் அந்த ஷூ பாலீஷ் மேட்டரு ஒரு ஆங்கில குறும்பத்தோட காப்பி.

Anbu said...

அண்ணே அதே நேரம் அதே இடம் பார்க்கலையா..

Ashok D said...

பதிவர் சந்திப்பு கேன்ஸலா.. அப்ப மழை மாலையே நின்னுடும்ன்னு நினைக்கறேன்

Ashok D said...

ஆனாலும் படத்தோட ‘கதை’ interesinga தான் இருக்கு தலைவரே..

அன்பேசிவம் said...

தல மட்டையெல்லாம் ஒண்ணுமில்ல, ஹேங் ஓவர் அவ்ளோதான் :-)
அதான் வந்துட்டம்ல...........

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல ஆய்வு சங்கர்

Unknown said...

எங்க ஊர்ல படம் release ஆகல...

உண்மைத்தமிழன் said...

அடாது மழை பெய்தாலும் விடாது பணியைத் தொடரும் அண்ணன் கேபிளுக்கு தம்பியின் நன்றிகள்..!

எப்படியோ இதுக்குப் போக வேண்டிய காசும் மிச்சம்..!

Ganesh said...

கலைஞ்சரின் விளக்கம்: ஆஹா... என்ன அழகான தமிழ் பெயர் இது. சா-வி-த்ரி தமிழ் பேருன்னா சா-பூ-த்ரி யும் தமிழ் பேருதான். ரெண்டுத்துக்கும் ஒரு எழுத்துதானே வித்தியாசம். அம்மையார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றல் அவரை நான் திருமதி என்றுதான் அழைப்பேன். அது..

உண்மைத்தமிழன் said...

[[[அதிலும் பால் வீட்டில் பழைய ஜெயமாலினி பாடலை பார்த்தபடி, திரும்பிக் கொண்டு ஷூக்கு பாலீஷ் போட்டுக் கொண்டுடிருக்க, பின்னாலிருந்து பார்க்கும் ஒரு பெண் அவன் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதாய் நினைத்து பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதும்]]]

பழைய தெலுங்கு படமொன்றில் இந்தக் காட்சியை காய்கறி நறுக்குவதைப் போல் வைத்திருந்தார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[படத்தின் இயக்குனரே இந்த கேரக்டரை எடுத்திருப்பதினால் எக்ஸ்ட்ரா கவனத்துடன் இருக்கிறது.]]]

வாட் மீனிங்..?

ஷண்முகப்ரியன் said...

so,படம் சுமார்தான் .இல்லையா,ஷங்கர்?

பித்தன் said...

nalla padamaa illaiyaa.....

Beski said...

நன்றி.

செம மழை, இவ்ளோ நேரம் கரண்டு இல்ல ஜி.

எம்.எம்.அப்துல்லா said...

//தண்டோரா ...... said...
கேபிள்..உனக்கும் ஆண்டி செண்டிமெண்ட் உண்டு இல்லை?

//

அப்படியா அங்கிள் :)

Cable சங்கர் said...

//அப்படியா அங்கிள் :)//

அண்ணே நீங்க தண்டோராவை தானே அங்கிள்னு சொன்னீங்க.. :)

Naandanta Nee... said...

அண்ணே நீங்க ஒரு இரும்பு மனிதர் அண்ணே. இந்த படத்த பாக்கனும்முன்னு எப்படி தோணிச்சு உங்களுக்கு.

அதுக்கு முன்னாடி.
எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப நாளா cable சார் பக்கங்களை(first preference) படித்து வருகிறேன். முதல் முறையாக அக்கௌன்ட் create பண்ணி comments எழுகிறேன் . உங்களால impress ஆகி நானும் இன்று ஆரம்பிக்கிறேன். சனிகிழமை மழை வீட்டுலயே புல் லாக் ஆகிட்டேன். வாங்கி வச்ச புல்லும் காலி ஆகிருச்சு. இன்னிக்குத்தான் எழுத தோணிச்சு.

ramtirupur said...

sir, padam parkalama.. vendama..?

Ravikumar Tirupur said...

அண்ணா படம் ஒவர் டபுள் சாரி ஸ்ட்ரெயிட் மீனிங்ல இருக்காமா. படம் பார்த்த நண்பன் சொன்னான். லோங்கறது பட்ஜெட்ல இருந்தா ஓகே. படத்துலயே இருந்தா!!!

Ravikumar Tirupur said...
This comment has been removed by the author.
Thamira said...

இவ்ளோ செலவு பண்ணி படம் எடுக்குறாங்களே.. ஒரு நல்ல பேரு வைக்க துப்பில்லையா.. லூசுப்பசங்க.! பேருக்காகவே பார்க்காத பல படங்களில் இதுவும் ஒண்ணு.!

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

Cable சங்கர் said...

@வண்டிக்காரன்
அவ்வளவு மோசமில்லைங்க..

@பப்பு
படமும் அப்படி இருப்பதால் தானே..

@பா.ராஜாராம்
நன்றி
@ரோஸ்விக்
வாங்கா.. நல்லா வாங்க

@ஹாலிவுட்பாலா
இப்பவே இதுக்கு வரிவிலக்கு உண்டுங்கோ..

Cable சங்கர் said...

@அத்திரி
பாத்தாச்சு எழுதிற வேண்டியதுதானே

@ஜெட்லி
வேற எதையும் பாக்கிறதா ஐடியா இல்லை

@தண்டோரா..

தலைவரே அது Anti செண்டிமெண்டு

@

Cable சங்கர் said...

@குப்பன்.யாஹூ
நல்லாருக்கே

@தராசு
நிறைய படஙக்ளில் பார்த்த விஷயம் தானென்றாலும்.. நலல்ருக்கு

@அன்பு
இல்லை

@அசோக்
கேன்சல் கேன்சல்தன்

@அசோக்
ஆமா
@முரளிகுமார் பத்மநாபன்
ஓகே..ஓகே

@வெண்ணிற இரவுகள்
நன்றி

Cable சங்கர் said...

@பேநாமூடி
எஸ்கேப்

@உண்மைதமிழன்
இதுக்கு எல்லாம் பிரதியுபகாரம் செய்யணும்ணே

@கணெஷ்
ஹா..ஹா

@உண்மைதமிழன்
உங்களுக்குதானே இதெல்லாம் தெரியும்..

@உண்மைதமிழன்
கொஞ்சம் கேர் எடுத்து சீன் எடுத்திருக்கிறார்கள்

Cable சங்கர் said...

@ஷண்முகப்பிரியன்
ஆமாம் சார்

@பித்தன்
தெரியலையே

@எவனோ ஒருவன்
ஓகே

Cable சங்கர் said...

@நாந்தாண்டா நி
பேரே டெரரா இருக்கே.

@ராம்திருப்பூர்
டிரை பண்ணி பாருங்க

@ரவிகுமார் திருப்பூர்
இருந்தா என்ன அதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க இல்ல. பிறகு சரிதானே

@ஆதிமூலகிருஷ்ணன்
அது சரி

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

இந்த மாதிரி திரைப்படம் எல்லாம் டிவியில் போட்டால் கூட பார்க்க தோன்றாது - நீங்கள் சுவரஸ்யமாக பதிவு போட்டு பார்க்க வைத்து விடுவீர்கள் போல இருக்கு.