நெகிழ்வின் உச்சத்திலிருந்து….
போன ஜென்மத்தில் நான் கடும் தவமோ, அல்லது ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியமோ செய்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியொரு நட்புகள் கிடைத்திருக்குமா.? உன் சந்தோஷம், என் சந்தோஷம் என்பது மட்டுமில்லாமல் உன் துக்கம், என் துக்கம் என இரண்டு நாட்கள், எடுப்பதிலிருந்து, கரைப்பது வரை கூடவே இருந்து, என் தந்தையை நல்லபடியாய் வழியனுப்பி வைத்த பதிவுலக நண்பர்களுக்கு நான் எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. அப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடுகிற விஷயமா அவர்கள் காட்டிய ஆறுதலும், அரவணைப்பும்.?
உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய் ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார், நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை தனியாய் விட்டு போகவில்லை என்ற திருப்தியுடன். என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில், நெகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து… கண்ணீருடன்..
கேபிள் சங்கர்
Comments
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.
engalblog
எல்லாம் அன்பிற்கே..!
துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...
///
மன உறுதி பெற வேண்டுகிறேன்!!
மிக அழாகாக சொன்ன பைத்தியக்கதரன் வரிகளை அப்படியே சொல்கின்றேன்... வேறு என்ன சொல்ல...???
அன்புடன்
சீமாச்சு...
//நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார், நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார்//
நிச்சயம்.
அண்ணன் கேபிலாருக்கு உற்ற நண்பனாய் இருந்த அவரின் தந்தையின் பிரிவு மிகவும் துயரமானது,
அண்ணன் மீண்டு வரவேண்டும்.. வருவார்...
துக்கம் மறையாமல் அவ்வப்போது பொங்கவே செய்யும். அந்த நேரத்தில் நீங்கள் சாய்ந்துக் கொள்ளவும், அழவும் எங்கள் அனைவரது தோள்களும் இருக்கின்றன...//
அண்ணன் பைத்தியகாரன் வார்த்தைகளை அப்படியே திரும்ப சொல்கிறேன்.
தல நல்லா இருங்க. இருப்பிங்க....
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.
:)
- ஊடகன்
எங்கள் வலை தளத்திலிருந்து உங்கள் வலைத்தளம் எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? நீங்கள் உங்கள் எழுத்தை மட்டும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. எங்களோடு உங்கள் நட்பை பகிர்ந்துகொள்கிறீர்கள். எங்களை அழைத்து பேசவும் உற்சாகப்படுத்தவும் உங்களால் மட்டுமே முடிகிறது. உங்கள் பின்னூட்டங்களில் கூட நட்புக்கான ஒரு அழைப்பு இருக்கிறது. உங்களிடம் கர்வமோ ஆணவமோ உங்கள் எழுத்தில் யாரையும் தூஷிக்கும் வன்மமோ இருந்ததே இல்லை. நட்புக்கரம் நீட்டும் உங்களுக்கு இத்தனை பேர் திரும்ப அன்புக்கரம் நீட்டியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தனை பேர் உங்களை விடாமல் துரத்த காரணம் உங்கள் தீவிர எழுத்து மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு ஸ்நேகம். விரைவில் மீண்டு வாருங்கள்.
எங்கள் வலை தளத்திலிருந்து உங்கள் வலைத்தளம் எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? நீங்கள் உங்கள் எழுத்தை மட்டும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை. எங்களோடு உங்கள் நட்பை பகிர்ந்துகொள்கிறீர்கள். எங்களை அழைத்து பேசவும் உற்சாகப்படுத்தவும் உங்களால் மட்டுமே முடிகிறது. உங்கள் பின்னூட்டங்களில் கூட நட்புக்கான ஒரு அழைப்பு இருக்கிறது. உங்களிடம் கர்வமோ ஆணவமோ உங்கள் எழுத்தில் யாரையும் தூஷிக்கும் வன்மமோ இருந்ததே இல்லை. நட்புக்கரம் நீட்டும் உங்களுக்கு இத்தனை பேர் திரும்ப அன்புக்கரம் நீட்டியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தனை பேர் உங்களை விடாமல் துரத்த காரணம் உங்கள் தீவிர எழுத்து மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு ஸ்நேகம். விரைவில் மீண்டு வாருங்கள். //
Well said....
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.
அதானே...நடிப்பை பிழிய காத்துகிட்டிருக்கேன்
பிளீஸ்... நானும்.. நானும்..!
உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
என்னோற்றான் கொல் எனும் சொல்
அவர் மனம் நிறைந்திருக்கும்.
அப்பா எஙுகும் சென்று மறைய வில்லை.கண்ணாடி முன் நின்று பாருங்கள். உங்கள் அவயங்களில் எல்லாம் அப்பாவின் பிம்பம் பிரதிபலிக்க வில்லையா.?
ஒவ்வொரு நல்ல தகப்பனைப் பற்றி பேச ஏராளமான விசயம் இருக்கும். உங்களிடம் ஓராயிரம் விசயம் இருக்கும். அவரை பற்றியும் மழைக்கால பச்சையாய் உங்கள் மனதில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்றிரண்டை எழுதுங்களேன்..
என்னோற்றான் கொல் எனும் சொல்
அவர் மனம் நிறைந்திருக்கும்.
அப்பா எஙுகும் சென்று மறைய வில்லை.கண்ணாடி முன் நின்று பாருங்கள். உங்கள் அவயங்களில் எல்லாம் அப்பாவின் பிம்பம் பிரதிபலிக்க வில்லையா.?
ஒவ்வொரு நல்ல தகப்பனைப் பற்றி பேச ஏராளமான விசயம் இருக்கும். உங்களிடம் ஓராயிரம் விசயம் இருக்கும். அவரை பற்றியும் மழைக்கால பச்சையாய் உங்கள் மனதில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்றிரண்டை எழுதுங்களேன்..
வெறும் இரண்டு முறை தொலைபேசிப்பேச்சிலேயே (அதுவும் அதிகபட்சம் முக்கால் அல்லது ஒரு நிமிடம்) உங்கள் அன்பின் ஈரத்தை உணர்ந்தேன். ஒவ்வொருவனுக்கும் அவன் தந்தைதான் முதல் ஆசான் என்பார்கள். அப்படியெனில் அவர் எவ்வளவு அன்புசொரூபியாக இருந்திருப்பார்!
உங்கள் இழப்பின் வலி... மௌனமாய்... மானசீகமாய் உங்கள் கரங்களைக் கோர்த்துக் கொள்வதைத் தவிர இந்த எளியேனால் செய்யக்கூடியதென்ன?
Come back , plz ...,
May he rest in peace.
மீண்டும் சந்திப்போம்.
மீண்டு வருவீர்கள்.
அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தி பெறும்.Dhaya-singapore
-வித்யா
-வித்யா
அண்ணே என் பிரார்த்தனை எப்பவும் உண்டு
உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும், குடும்பத்தார் அனைவரும் மன அமைதி அடையவும் எங்கள் பிரார்த்தனைகள்.
தந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். தாங்களும், குடும்பத்தினரும் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
"அவர் கனவுகுளை பறிப்பது"
வரவேண்டும்..
அன்புடன்,
மறத்தமிழன்.
You'll be there in my prayers... Take care...
"அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை" என்ற சுஜாதா வரிகள் நினைவுக்கு வருகிறது.
காலமே மருந்து காயங்களுக்கு எல்லாம்
இப்போதான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது:(((((((((((((
சீக்கிரம் மீண்டு வாங்க
வேற என்ன சொல்றதுன்னு தெரியல :(
அப்புறமா பேசுறேன்
-கமல்
பிரபாகர்.
பழைய நிலைக்கு திரும்பியதும் பதிவு எழுத வாங்க. ஒன்னும் அவசரம் இல்ல.
Divert your mind to your normal works. work hard to achieve your father's dreams. take care.
தந்தையின் இடத்தை அவ்வள்வு சீக்கிரம் யாராலும் நிரப்ப முடியாது..
விரைவில் இந்த சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள்.
இனிமேல் உங்கள் சகோதரிக்கு நீங்கள்தான் தந்தை ஸ்தானத்திலிருந்து வழி நடத்த வேண்டும்.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
தங்களின் துயரத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.
விரைவில் இந்த சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள்.
அபுல்பசர்
மன உறுதியுடனும் உங்கள் தந்தையின் அன்பான ஆசிகளுடனும் நிச்சயம் மீண்டு வருவீர்கள்.
அதிர்ச்சியை இப்படித்தான்,இங்கேதான் என்னால் பகிர முடிகிற்து,ஷங்கர்.
ஆழ்ந்த அரவணைப்புக்கள்.
மரணம் ஒன்று மட்டுமே உண்மை.அதைப் பற்றிப் பேசும் அனைத்து வார்த்தைகளுமே பொய்.
உங்கள் தந்தை வழங்கிச் சென்றிருக்கும் உண்மை உங்கள் வாழ்க்கையை மேலும்,மேலும் உயர்வடையச் செய்யட்டும்.
நான் நாளை உங்களை நேரில் காண்கிறேன்,ஷங்கர்.
ஆம்.. நிச்சயமாக..
மீண்டு வாருங்கள்..
Take your time to recover.. மெதுவா மீண்டு வாருங்கள்..நீங்க எப்ப திரும்பி வந்தாலும் துரத்தி துரத்தி உங்கள படிக்க நாங்க எல்லாரும் காத்திருப்போம்...
I know it'll take time for you to recover, but please come back and keep blogging...
-Kabilan
Florajeeva.
http://jeevaflorajeeva.blogspot.com
ஊருக்கு வந்த பிறகு பதிவுலகு மக்களின் பதிவை படித்து தான் தெரிந்து கொண்டேன்.
உங்களின் இந்த இழப்பு பெரியதுதான், சீக்கிரம் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
உங்கள் தந்தையார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
கொஞ்ச நாள் தங்களுடைய blog பக்கம் வர இயலவில்லை ....மன்னிக்கவும் .....
உஙளுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்ல். விரைவில் மன அமைதி பெற இறையயை வேண்டுகிறேன்.
-மோகன்பாலு
உங்கள் வீட்டாரின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.
அமைதியுடன் மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி
உங்கள் தகப்பனாரின் ஆன்மா சாந்தியடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நினைவுகளில் உங்களிடையே அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உங்கள் பதிவுகளிலேயே தெரிகிறது.
உங்கள் ஜொலிப்பான பதிவுகளை நீங்கள் திரும்பவும் ஆரம்பித்திருப்பதிலேயே, நீங்கள் உங்கள் தந்தையின் பிரிவை கௌரவபடுத்தி விட்டீர்கள்.. தொடர்ந்த கலைப்பணியில் ஈடுபடுங்கள், தோழரே.