காக்கை
இம்மாதிரி விஷயங்களை யாராவது சொல்லும் போது பெரிசாய் முக்யத்துவம் கொடுத்ததில்லை. மிகைப்படுத்தி சொல்வதாய்தான் தோன்றும் இறந்தவர்களின் மேல் உள்ள பாசத்தின் காரணமாக, அவர்கள் உணர்ச்சி பெருக்கில் சொல்வது என்றுதான் நினைத்திருந்தேன் இரண்டு நாள் முன்பு வரை. அப்பா இறந்து மூன்றாவது நாள் காலையில் காலையில் டிபன் சாப்பிட உட்காரும் முன் என் மனைவி என் அப்பாவுக்காக ஏற்றி வைத்திருந்த விளக்கின் முன் காப்பியும், ஒரு ப்ளேட்டில் தோசையும் வைத்துவிட்டு எனக்கு தோசை வைத்தாள்.
அப்போது வீட்டின் வாசல் கதவை தடாலென திறந்து கொண்டு, பக்கத்து வீட்டு குழந்தை சுமார் ஒன்னறை வயதிருக்கும், ஓடி வர பின்னாலேயே, அவனுடய அம்மா ஓடிவர, ஓடிவந்த குழந்தை என்னை பார்த்து மழலையாய் தோசை என்று கை நீட்டி கேட்டது. நான் என் ப்ளேட்டை எடுத்து அப்படியே கொடுத்தேன், அவனின் அம்மா, “அய்யோ வேணாங்க இப்பத்தான் பாலைக் குடிச்சிட்டு கீழே வச்சான்.. என்ன ஆச்சோ தெரியல குடுகுடுன்னு ஓடி வந்திட்டான்” என்றாள்.
என் மனைவிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”பரவாயில்லைங்க அவன் சாப்பிடாட்டி கூட பரவாயில்லை விட்டுட்டு போங்க நான் கொண்டு விடறேன்” என்றதும் மறுப்பேதும் பேசாமல் அவர் போய்விட, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, கடந்த ஒரு வருடத்தில் அந்த குழந்தை இதுவரை என் வீட்டினுள் வந்ததேயில்லை.
என் ப்ளேட்டை அவனிடமிருந்து வாங்கி விட்டு இன்னொரு புது ப்ளேட்டில் ஒரு தோசையை போட்டு என் பக்கத்தில் உட்கார சொல்ல, அவன் சைகையால் மாத்தேன் என்றான். சரி என்று அவனுக்கு ஒரு குட்டி சேரும், டேபிளும் வைத்து அதில் உட்காரச் சொன்னால் அதையும் மாட்டேன் என்று சொல்ல, சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு, ப்ளேட்டை கேட்க, மெல்ல ஒவ்வொரு குட்டி, குட்டி துண்டாய் தோசையை ஆக்கி, சர்கரையில் தோசையை விட சர்கரையாய் சாப்பிட ஆரம்பிக்க, என் மனைவி என் தோளை தொட்டு “உங்க அப்பா சாப்பிட வந்திருக்காரு” என்றாள். நான் அவனை உற்று பார்த்தேன் அவன் மெல்ல தட்டிலிருந்து பார்வையை விலக்கி, நேராய் என்னை பார்த்து சிரித்தான் அழுத்தமான சிரிப்பு, சத்தமில்லாமல், நிச்சயம் இலக்கில்லாத குழந்தை சிரிப்பில்லை. நடுவில் சாப்பிட முடியாமல் ஏப்பம் விட, மனைவி ப்ளேட்டை வாங்க போன போது தண்ணி கேட்க, கொடுத்தவுடன் தண்ணி ஒரு வாயும், தோசை ஒரு வாயுமாய் சாப்பிட ஆரம்பித்தான்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி விர்ரென கரண்ட் போல ஓடியது, திடீரென அங்கிருந்து ஓடி வீட்டின் பால்கனியில் போட்டிருந்த சேரில் போய் உட்கார்ந்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, திரும்பவும் அதே போல ஒரு அழுத்தமான பார்வையையும், சிரிப்பையும் சிரித்தான், சிரித்துவிட்டு, ஒன்னறை வயது குழந்தை, கையை சொடக்கு போடுவது போல் கைநீட்டி சொடக்கு போட்டு, என்னை பார்த்து கூப்பிட எனக்கு ஒன்றும் புரியாமல் மெல்ல அவனருகில் சென்று உட்கார்ந்து “என்னடா. என்றேன்.. முகத்தை என் அருகில் வைத்து, வாயை திறந்து, ஏதோ வார்த்தைகளை பேசுவது போல் பேசினான், ஆனால் அது வெறும் அசைவாய் இருந்ததே ஒழிய, சத்தமில்லை, நான் குழப்பமாய் அவனை பார்க்க, திடீரென குழந்தையாய் சிரித்து, வெளிப்பக்கம் கைநீட்டி ‘காக்கா” என்று சொல்ல, அவன் காட்டிய பக்க பார்த்தேன் ஒரு காக்கா மரத்தின் கிளையில் உட்கார்ந்திருக்க, நான் என் மனைவியை பார்த்தேன் மிகவும் எமோஷனலாய் இருந்தாள், மெல்ல சேரிலிருந்து இறங்கியவன் அவள் கையை பிடித்து பாத்ரூமுக்குள் அழைத்து சென்று கையை கழுவிக் கொண்டு வெளியே போனான்.
அவனை கொண்டு விட்டு வந்த என் மனைவி, அழ ஆரம்பிக்க, எனக்குள் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது. பால்கனியில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் தினமும் காலையில் பேப்பர் படித்து கொண்டே என்னுடன் பேசுவார். அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் அவனும் என்னை அழைத்து ஏதோ சொன்னான். இறப்பதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன் கூட நான் படம் பண்ண வேண்டும் என்று சில ஆட்களிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் பெங்களூர் போகவேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தார்.
அப்பா என்ன சொல்ல விழைந்தாய் அந்த குழந்தையின் மூலம்? நானிருக்கிறேன். உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன் என்பதை காக்கையின் மூலம் காட்டினாயா.? நீ என்னுடன் பேசியது, சிரித்தது எல்லாம் ஏதோ ஒரு குறியீடோ..? அந்த குழந்தை அதற்கு பிறகு இன்று வரை மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை. அவன் உட்கார்ந்த சோபாவில் தான் என் அப்பா கடைசியாய் உட்கார்ந்து உயிர் விட்ட இடம்.
Comments
கவலை கொள்ள வேண்டாம்..
இந்த மாதிரி விஷயங்களெல்லாம் உண்மை என்றே தோன்றுகிறது ...
விரைவில் மீண்டு ... கண்டிப்பாய் மீண்டு சாதிக்க வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள்
ஃபோன்ல பேசறேன்... எழுத முடியல.
பிரபாகர்.
வாழ்த்துக்கள்.
அதனால் அதிகம் கலங்க வேண்டாம். நான் போனில் கூறியது போல உங்கள் தந்தையின் மறைவு, அவரைப் பொறுத்த வரை வலியில்லா மரணம். இந்த பூவுலகில் எத்தனைப் பேரால் இப்படி அமைதியாக உயிரைத்துறக்க முடியும்???
அதனால் அவர் கூறியபடி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பாருங்கள். நல்ல படம் எடுக்க முயற்சி செய்யுங்கள். அவரின் ஆசிர்வாதம் உங்களுக்கு மேல் உலகத்திலிருந்து எப்போதும் இருக்கும்.
மீண்டு வாருங்கள்.
இதுவும் கடந்து போகும்.
தைரியமா இருங்க சார்.
உயிருக்கு அழிவில்லை.
தந்தையார் உங்களுடன் இருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அவர் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டலும் என்றும் இருக்கும்.
அவரை நினைத்து நினைத்து நீங்கள் துயர் உறுவதைத் திண்ணமாக அவர் விரும்பமாட்டார்.
எனக்கு கூட இது போல் சமயங்களில் நிகழ்வதுண்டு.....உதாரணம்
சில விரும்பதகாத சங்கடமளிக்கும் சம்பவங்கள் , அவமானங்கள் நேரும் போது
“நம் அம்மையும் அப்பனும் இப்போது இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ”
என்கிற மாதிரியானா எண்ணங்கள் டிப்ரஸ் செய்யும் .(உள்ளுணர்வாக ) வெளியில் நமக்கே தெரியாது .
அது போன்ற தருணங்களில் ராஜாவின் " சின்னதாயவள்" ம் ,கற்பூர பொம்மை ஒன்று ம் "
எங்காவது ஒலிக்க கேட்கும் …………..
அது ராஜாவே தந்தையும் தாயும் ஆனவராக வந்து ஆறுதல் அளிப்பதாய் நெகிழ செய்யும்.
வாழ்த்துக்கள் !!
இழப்பு மிகவும் சுமையானதுதான், சோகமானதுதான் என்றாலும், இங்கேயே தேக்கம் அடைவதில்லையே வாழ்க்கை.
இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தந்தையை நீங்கள் அறிந்த ஆத்மா அமைதியாக அடுத்த பயணத்திற்குத் தயாராக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது தான். தந்தையோடு நீங்கள் அனுபவித்த நல்ல தருணங்களை ஒவ்வொன்றாக நினைவில் வைத்து நன்றி சொல்லுங்கள். மறுபிறப்பு என்று ஒன்று விதிக்கப்பட்டிருந்தால், அது நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
இது மட்டுமே உங்களால் செய்ய முடியும். இதுவும் ஒரு நாள் கடந்து போகும்!
கவலை கொள்ள வேண்டாம்
ur Father's Blessings always upon
you
ஹஸன் ராஜா.
அப்பா ... பல குடும்பங்களில் இன்னும் உணர்ந்து கொள்ள படாதவராக தான் இருக்கிறார்....
வாழ்க்கை முழுவதும் நம்மை மனதில் சுமப்பவர் அவர்
உங்கள் அப்பா என்றும் உங்களுடன் தான் இருப்பார் நண்பரே! மீண்டு வாருங்கள்.
உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் மரணம் என்பது முக்கியச் செய்தி.
மரணித்தவர்களின் கடைசிப் பரிசு,அவர்கள் உங்களிடம் விட்டுச் செல்லும் நினைவுகளும் அதனால் உங்கள் வாழ்க்கையில் நிகழப் போகும் விளைவுகளுமே.
நீங்கள் உங்களது தந்தை கடைசியாக விரும்பியதைப் போல இயக்குநர், ஆவதற்கான சகல சாத்தியக் கூறுகளையுமே உங்கள் நினைவுகளில் காண்கிறேன்.
வாழ்க,செழிக்க.
கவலைப்படாதீங்க ...
உங்கப்பாவின் ஆசிவாதம் என்றும் உங்களுக்கு இருக்கு
கவலைப்படாதீங்க ....
அரங்கேற்றம் ஆவதற்குள்
அவசரமாய் புறப்பட்டாய்
அணைந்துவிட்ட மேழுகனோம்
அப்பா நீயோ!!அமரன் ஆனாய் ..
சிரித்து கொண்டும்
சிரிக்க வைத்தும் -நீர்
வாழ்ந்த நாட்கள் எங்கள்
சிந்தை எங்கிலும்
வாழ்வதால் இன்று
தந்தையே நீ தெய்வமானாய்.
என் அப்பாவை நினைத்து எழுதியது.. எப்போதும் இவரும் உடனிருப்பார் தல..
ungal appa eppothum ungaludane irukkirar...
அட போப்பா...
மயிலாடுதுறை சிவா...
என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை என்பதே உண்மை.
ஆறுதல் கூறுவது எளிது. அனுபவிப்பது கடிது.
மீண்டு வாருங்கள் விரைவாக, மரணத்தை வெல்ல வழியில்லை. நேற்று இருந்தார். இன்று இல்லை. இதுவே படைப்பின் ரகசியம்.
உடம்பிற்கு தான் அழிவு, உயிருக்கு இல்லை. மீண்டும் வருவார் பிறர் உருவில். மீண்டு வாருங்கள் நீங்கள். கடமை உள்ளது அருகில்.
அப்பா வழி நடத்துவார். துயர் துடையுங்கள்.
பாலா,
நைஜீரியா.
sbala2k1@yahoo.com
உங்களிடம் இருக்கும் தெளிவு உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும்.
அப்பா உங்கள் கூடத்தான் இருப்பார். சீக்கிரம் ஆறுதல் பெற வேண்டுகிறேன்.
Unmayileye 'Mei Silirthadhu'
I always feel my Dad is with me all the time and I am sure you will feel exactly the same way!
Thanks for sharing this. Best wishes.
உங்களுக்கு என்னுடைய சமாதானங்கள்...
கவலை கொள்ள வேண்டாம் அண்ணா.
அப்பா உ(ந)ம்முடன் இருக்கின்றார்.
காலம் தான் ஆறுதல் தரும்.
kavalap padaatheenga...
neega paarkkum ovvoru nigazhvilum appa theriyuraanganna..,avunga unga koodave irukkaangannuthaane arththam.so,thairiyamaayirunga!!
எனக்குக் இது போல நிகழ்ந்தது என் அப்பா இறந்த சமயத்தில்....
அவருடைய ஆசிர் என்றும் உங்களுக்கு உண்டு.
ஹூம்.............
மனசு கலக்கமா இருந்தது.
Be Cheerful that your Dad is always there for you !