Thottal Thodarum

Nov 21, 2009

அதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்

சென்னையில் தீடீர் பதிவர் சந்திப்பு

தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்

சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :

யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

athe-naal-athe-idam

பல படங்களின் கதை ரொம்பவே சிம்பிளாய் இருக்கும் ஆனால் அதை சொல்லும் விதத்தில்தான் படத்தின் வெற்றி தோல்வி அமையும், அதே போல் இந்த படத்தின் கதையும், தன்னை காதலித்துவிட்டு, வேறு ஒருவனை வசதி வாய்ப்புக்காக திருமணம் செய்த ஒருத்தியை என்ன செய்கிறான் காதலன் என்பதுதான் கதை. ஆனால் அதை சொன்ன விதம் கொடுமைடா சாமி..

அரத பழசான குட்டிச் சுவர் இளைஞர்கள், மொக்கை ஜோக்குகள், வேலையில்லாத ஹீரோ, அதே ரோடில் இருக்கும் கதாநாயகி, பார்த்த ரெண்டாவது சீன்லேயே காதல். என்று வழக்கமாய் போகிறது. சமீப காலங்களில் இவ்வளவு கற்பனை வறட்சி உள்ள காதல் காட்சிகளை சமீபத்தில் பார்த்ததில்லை. அதன் பிறகு ஹீரோவுக்கு பொறுப்பு வந்து, ஆஸ்திரேலியா போகிறார். ஏன் எதற்கு என்று இல்லாமலே ஒரு மொக்கை காரணம் சொல்லி இருவரும் பேசாமல், மெயில் என்று எதுவுமில்லாமல் இருக்கிறார்கள். திடீரென ஒரு பணக்கார வாலிபனை தனக்கு மாப்பிள்ளையாய் பார்த்தவுடன் காதலனை மறந்து அவனை மணக்கிறாள் கதாநாயகி.
athey-neram-athey-idam-vijayalakshmi-prabhu-movies

கதையில் மிகப் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோவும், நாயகியின் கணவனும் நெருங்கிய நண்பர்களாக ஆக, அவனை ஏமாற்றிய காதலியை, சும்மா விடாதே அவளை நிம்மதியாய் வாழவிடாதே என்று அவனே தனக்கு தெரியாமல் சூனியம் வைத்துக் கொள்கிறான். முடிவு என்ன என்பதை வெள்ளி திரையில் பார்க்க (தைரியமிருந்தால்)

ஜெய், விஜய் மாதிரியே சிரிக்கிறார், நடக்கிறார், குதிக்கிறார், எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது. இவர் சீரியஸாய் காதலை பற்றி பேசும் போதெல்லாம் படு காமெடியாய் இருக்கிறது. ஏதோ குழந்தைகள் அடிச்சு துவட்டிடோமில்ல என்று பெருமையாய் சொல்லுமே அது போன்ற மாடுலேஷனில் பேசுகிறார். க்ளைமாக்சில் அவரின் நடிப்பு இருக்கிறதே சூப்பரப்பு..
athe-naal-athe-idam (15)

அதே போல் விஜயலட்சிமியின் பாத்திரமும் ஒரே குழப்பம். கொஞ்சம் கவர்சியாய் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி பெரிதாய் சொல்வதற்கு இல்லை.

லொல்லு சபா ஜீவா சமயங்களில் ஜெய்யை விட ஸ்மார்டாக இருக்கிறார். சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், இன்னும் கொஞச்ம் மெனக்கெட வேண்டும்.

படத்தின் ஸேவிங் கிரேஸே பிரேம்ஜி அமரனின் பாடல்கள், மூன்று பாடல்கள் இதம். சபேஷ் முரளியின் பிண்ணனி இசையும் ஓகே.

திரைகதையால் கட்டி போட வைத்திருக்க வேண்டிய படம். தியேட்டரை விட்டு ஓட வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு.

அதே நேரம் அதே இடம் – சரி டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?


டிஸ்கி: போன வாரம் போடுவதற்காக எழுதியது.. கொஞ்சம் லேட்.. :(

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

52 comments:

பாலா said...

ரெண்டு பதிவா. நான் தான் ஃபர்ஸ்ட்

பாலா said...

இப்பல்லாம் தமிழ் படம் பார்க்கறதே இல்லைங்க சங்கர்.

வர்ற ஒன்னு ரெண்டையும்.. நீங்க கிழிச்சி தொங்கப் போட்டுடுறீங்க.

பார்க்கலாம்னு சொல்லுற ஒன்னு ரெண்டும் எனக்கு பிடிக்க மாட்டேங்குது.

இப்படியே போனா.. நான் அமெரிக்கனாய்ட போறேன். :(
===

யப்பா.. நல்ல படமா எடுங்கப்பா..!

தராசு said...

//எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ..//

பட விமர்சனத்தை விட, இந்த விமர்சனம் சூப்பரப்பு......

Prabhu said...

வெல்கம் பேக் தலைவா! இப்படியே நாலு படத்த கிழிச்சு தொங்கப் போடுங்க. நல்ல டைம் பாஸ் :)
------------------------
அலோ பாலா,

அங்க போயும் ஈகிள் ஐ, வார் கேம்ஸ்னு நாலு விஜய் ரகப் படங்கள் பார்க்கத்தான செய்யுறீங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

//அதன் பிறகு ஹீரோவுக்கு பொறுப்பு வந்து, ஆஸ்திரேலியா போகிறார். ஏன் எதற்கு //

அப்புறம் எப்படிய்யா டைரக்ட்டர்,ஹீரோ,ஹீரோயின் எல்லாம் அந்த நாட்டை சுத்திப்பாக்குறது???

எம்.எம்.அப்துல்லா said...

//அலோ பாலா,

அங்க போயும் ஈகிள் ஐ, வார் கேம்ஸ்னு நாலு விஜய் ரகப் படங்கள் பார்க்கத்தான செய்யுறீங்க :)

//

:)))

புலவன் புலிகேசி said...

இந்த படம் ஊத்திக்கும்னு ஜெய்யே சொல்லிருதார்..தல எதோ படம் எடுக்கனும்னு எடுத்துருக்காரு பிரபு. இவரு தொலைக்காட்சி தொடர் எடுக்க வேண்டியவர்.

கா.கி said...

ஹீரோ ஜெய்யே இந்தப் படம் ஓடாதுன்னு பேட்டி கொடுத்து மாட்டிகிட்டாரு. அதையும் மீறி நீங்க பாத்திருக்கீங்கன்னா, உங்க மன தைரியத்தை நான் பாராட்டியே ஆகணும்... ஆனா இந்தப் படத்துக்கு மூணு பத்தி விமர்சனம் தேவையா???

ஷண்முகப்ரியன் said...

பாவம்,ஷங்கர் நீங்கள்.

Romeoboy said...

கொஞ்ச நாளா மழை இல்லாம இருக்கு அது உங்களுக்கு புடிக்கலையா தல ??

தமிழினியன் said...

//ஜெய், விஜய் மாதிரியே சிரிக்கிறார், நடக்கிறார், குதிக்கிறார், எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது.//

சூப்பரப்பு

செந்தில் நாதன் Senthil Nathan said...

அதே நேரம் அதே இடம்....படத்த விட உங்களோட பதிவர் சந்திப்புக்கு இந்த டைட்டில் அழகா பொருந்துது...

அதே மழை வராம இருக்கணும்....

படம் பார்க்க மாட்டேன்னு சத்தியம் செய்யுறேன் ஷங்கர்... :)

thatscoolsuresh said...

avvalavuuuuuuuuuuu
mosamavaaaaaaaaaa irukkudhuuuuuuuu!!!!!!!!!

Muthusamy Palaniappan said...

@suresh...ungalukku mattum zoom poirukaanga zoom..

ippo varra entha padam nalla irukku?

Unknown said...

வெல்கம் பேக் தல.. போன வாரமே பாத்துட்டு அழுதுட்டேன் தல...

யோ வொய்ஸ் (யோகா) said...

welcome back sir,

பித்தன் said...

அண்ணே நேத்துதான் இந்த படத்த பாத்து நொந்தேன்...... ஜஸ்ட் மிஸ்ஸாயிடிச்சி...... கொஞ்சம் முன்னாடி வந்திருந்தாள் நான் பிழைத்திருப்பேன்......

Ganesan said...

அதே நேர‌ம் அதே இட‌ம்‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍__ அதே வ‌லி (ப‌ட‌ம் பார்த்தா)

vasu balaji said...

தகவலுக்கும் விமரிசனத்துக்கும் நன்றி.

பித்தன் said...

கதையில ஒரு அந்நியத்தன்மை தொடர்ந்துகொண்டே இருந்தது. காட்சியை தேடித் தேடி பிடித்திருக்கிறார்கள் கற்பனை வறட்சி கண்கூடா தெரிந்தது.

Ashok D said...

//கொஞ்சம் கவர்சியாய் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்//
இங்க தான் படம் பாக்கற இண்ட்ரஸ்ட தூண்டுறீங்க.
//மற்றபடி பெரிதாய் சொல்வதற்கு இல்லை.// இங்க அப்படியே டவுன் பண்ணிட்டீங்க :(

Nat Sriram said...

படம் ட்ரைலர், பாடல்கள் பார்க்கையில் காட்சிகள் ஒரு மாதிரி க்ளேர் அடித்து வெளிறிப்போய் தெரிகிறதே..ஒளிப்பதிவு பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்..

kanagu said...

naan vimarsanathula vandha rendu moonu kaatchi paathe tired aayiten... :)

ரவி said...

rain rain go away

Subha said...

sankar, how come you went and saw the movie, when the hero of the movie agreed that the movie will be a great flop???? Your sincerity is too much!!!!!!!!!!!!!!

செ.சரவணக்குமார் said...

தகவலுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி தலைவரே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் நல்லாருக்கா ... பாக்கலாமா .. பாக்ககூடாதா ..

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

அதே நேரம்
அதே இடம்
அதே கதை
அதே கண்றாவி
அதே விமர்சனம்
அதே பின்னூட்டம்

பெசொவி said...

//அதே நேரம் அதே இடம் – சரி டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? //

இந்த மாதிரி படமெல்லாம் பார்த்துட்டு வந்தா, ஒண்ணுமே பண்ணத் தோணாம, அதே இடத்தில, உக்காந்துடுவாங்கன்னு அர்த்தம். அதே நேரத்தில, பிரமை பிடித்தாற்போல், இதல்லாம் படம்ன்றாங்களே, அவங்களை நம்மால் ஒன்னும் பண்ண முடியலியேன்னு விரக்தியா இருப்பாங்கன்னு அர்த்தம்.
எப்ப்ப்பப்ப்ப்ப்.......புடீ?

R.Gopi said...

//ஜெய், விஜய் மாதிரியே சிரிக்கிறார், நடக்கிறார், குதிக்கிறார், எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது.//

************

இதுதான் அக்மார்க் கேபிளார் ஸ்டைலில் கிழித்து, காய போடுதல்...

கலகலப்ரியா said...

//அதே நேரம் அதே இடம் – சரி டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?//

அதே நேரம்: "உங்க நேரம்"

அதே இடம்: //குட்டிச் சுவர்//

//இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்//

நர்சிம் பதிவில் வழக்கமாகச் சந்திக்கும் இடம் என்று போட்டிருந்தது..! பட டைட்டிலுக்கும் இடுகைக்கும் டைமிங் மிஸ் ஆகாம தொடுப்புக் கொடுத்தது அருமை..!

Cable சங்கர் said...

நன்றி பாலா..

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
கொடுத்துட்டா போச்சு

!@தராசு
நன்றிண்ணே

@பப்பு
அதானே

@எம்.எம்.அப்துல்லா
அது சரி..

Cable சங்கர் said...

@புலவன் புலிகேசி
அவரு சொல்லிட்டா.. அவரு சூப்பருன்னு சொன்ன வாமனன் கூடத்தான் சரி மொக்கை

@கார்த்திக் கிருஷ்ணா
மேற்படி பதிலேதான் உங்களுக்கும்

@ஷண்முகப்பிரியன்
சில சமயம் தெரிஞ்சே மாட்டிக்கிறேன் சார்.

@ரோமிபாய்
ஏதோ ந்ம்மாளான புண்ணியம்

@சுப.தமிழினியன்
நன்றி

@செந்தில் நாதன்
இதுக்குஅப்புறமும் போவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை

@சுரேஷ்
போய் தான் பாருங்களேன்

Cable சங்கர் said...

@முத்துசாமி பழனியப்பன்
பேராண்மைதவிர ஏதும் பெரிசா இல்லை

@பேநா மூடி
அடப்பாவமே

@யோ
நன்றி

@பித்தன்
ஜஸ்ட் மிஸ்

@காவேரி கணேஷ்
அது சரி

@வானம்பாடிகள்
நன்றி

@பித்தன்
ஆமாம்

@அசோக்
ரொம்பத்தான் காஞ்சி கிடக்கிறீங்களோ..?
:)

@கனகு
அதுக்கேவா..

@நடராஜ்
மொத்தமாவே சரியில்லை.. இதுல தனியா வேற இதை சொல்லணுமா..?

@சுபா
அது சரி விதி வலியது..

@சரவணக்குமார்
நன்றி

@ஸ்டார் ஜான்
இதுக்கு மேல சொல்லனுமா..?

@தமிழ் உதயம்
நல்லா
இருக்கு

@சூரியன்
:)
@பெயர் சொல்ல விருப்பமில்லை
:(((((

@கோபி
நன்றி

@கலகல்ப்பிரியா
உங்கள் கவனிப்பு நல்லாருக்கு

@

மங்களூர் சிவா said...

/
முடிவு என்ன என்பதை வெள்ளி திரையில் பார்க்க (தைரியமிருந்தால்)
/

ஐய்யோ ஆத்தா
:))))


/

ஜெய், விஜய் மாதிரியே சிரிக்கிறார், நடக்கிறார், குதிக்கிறார், எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது.
/

ஹா ஹா

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா இந்த படம் எல்லா தியேட்டர் ளையும் எடுத்துட்டாங்க. இப்ப விமர்சனம் எழுதியிருக்கீங்க. ஏன் இவ்வளவு வேகம்?

Cable சங்கர் said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அதான் டிஸ்கி போட்டிருக்கேனே.. பாக்கலையா..?

Cable சங்கர் said...

ஆரம்பசிட்டாய்ங்கய்யா.. மைனஸ் ஓட்டு போடறதுக்கு

masiad said...

hi shankar! =) welcome back

sathishsangkavi.blogspot.com said...

ஹாய் சங்கர்......

விமர்ச்சனத்திற்கு நன்றி........

இன்னிக்கு போகலாம்னு நினைச்சேன்! உங்களாள தப்பிச்சேன்..........

Kabi said...

thank god(cable sankar) am saved...

கடவுள் பாதி மிருகம் பாதி.. said...

Remember.. Jai already said only vamanan will be a hit on all his movies he is acting.. Paravala ippolam namma cinema heroes unmayave pesarainga..

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

ஏற்கனவே தல பாலாவிடம் சொன்னதுதான்.
// எங்களுக்கு சினிமா வடிகட்டியாக(வழிகாட்டி எழுத்து பிழை அல்ல) இருந்து, கோலிவுட்டிடம் இருந்து காப்பாற்றும் கேபிள்அண்ணனும், ஹாலிவுடிடம் இருந்து காப்பாற்றும் பாலாஅண்ணனும்,
ரொம்ப நல்ல இருக்கணும். :) //

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

பூங்குன்றன்.வே said...

அண்ணே..இந்த படத்தை பார்க்கும் அளவுக்கு ரொம்ப தெரியும் உங்களுக்கு !!! படம் வேஸ்ட்;உங்க விமர்சனம் டேஸ்ட்!!!

பூங்குன்றன்.வே said...

ஸாரி அண்ணா.அது 'தெரியும்' அல்ல..'தைரியம்'

Thamira said...

எம்.எம்.அப்துல்லா said...
//அதன் பிறகு ஹீரோவுக்கு பொறுப்பு வந்து, ஆஸ்திரேலியா போகிறார். ஏன் எதற்கு //

அப்புறம் எப்படிய்யா டைரக்ட்டர்,ஹீரோ,ஹீரோயின் எல்லாம் அந்த நாட்டை சுத்திப்பாக்குறது???

:-)))))

geethappriyan said...

வெல்கம் பேக் சங்கர் சார்
சென்னையில் தான் இருக்கிறேன்.
விரைவில் சந்திக்கிறேன்.

நல்ல விமர்சனம்.
இதை சிடியில் கூட பார்க்க கூடாதா?
எஸ்கேப்

வஜ்ரா said...

அதே நேரம் அதே இடம் = அதே மொக்கை அதே பிளேடு.

அறிவு GV said...

நல்லவேளை சங்கர்ஜி, காப்பாத்திட்டீங்க..! அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கஜி..!

http://arivugv.blogspot.com

hayyram said...

////எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது//// I like this comment very much.