Thottal Thodarum

Nov 25, 2009

என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்


“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார்.

“உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?”

“எனக்கு கமல், ஸ்ரீதேவி  பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன்.

“உனக்கு பிடிச்சது மாதிரி பெரியவங்களுக்கு பிடிக்கணுமில்ல.. சினிமா உனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் அதனால தான் அந்த டான்ஸ்” என்று ஜெயமாலினியின் டான்ஸுக்கு விளக்கம் கொடுத்தபடி எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார்  அப்பா.

வேகமாய் நடந்தோம் வீட்டிற்கு. அம்மா ஆபீஸிலிருந்து வருவதற்குள் போக வேண்டும். பத்தாவது பைனல் பரீட்சையின் கடைசி பரிட்சைக்கு இடையே இரண்டும்  நாள் விடுமுறை இருக்க, ரொம்ப நாளாய் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த குரு திரைப்படம் அருகில் உள்ள தியேட்டரில் ஓட, ஒரு வாரம் மட்டுமே என்று போஸ்டரில் போட்டது வேறு என்னுள் உளப்பி கொண்டேயிருக்க, என் உளப்பல் தாங்காமல் என்னை தியேட்டருக்கு அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போய் விட்டு வரும் போதுதான் இந்த டிஸ்கஷன். இந்த மாதிரியான டிஸ்கஷன் வழக்கம் தான்.

சத்தமில்லாமல் வீட்டின் வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு, உள்ளே நுழைந்த போது வாசலில் அம்மாவின் செருப்பு இருந்தது.

“எங்க போயிட்டு வர்றீங்க ரெண்டு பேரும்?”

அப்பா திரும்பி என்னை பார்த்து சொல்லிடட்டுமா என்பதை போல முகத்தை வைத்து கொண்டு “ படத்துக்கு போயிட்டு வந்தோம்.” என்று சொன்னதும் அம்மா முகம் முழுவதும் கோபமாய் “ உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா..? பைனல்  எக்ஸாம், படிக்கிறதுக்கு லீவு விட்டா,  பிள்ளைக்கு புத்தி சொல்லி, படிக்க சொல்லாம, சினிமாவுக்கு கூட்டி போயிட்டு வர்றீங்களே? அந்த புள்ள எப்படி உருப்படும்?” என்று மளமளவென்று கோபத்தில் பேசிக்கொண்டே போக, சிரித்தபடி அப்பா என்னை பார்த்து கொண்டிருக்க , அது அம்மாவுக்கு இன்னும் கோபத்தை ஏற்ற, அப்பாவின் மீதுள்ள கோபத்தை என் தலையில் நெக்கென ஒரு குட்டை குட்டி “அப்படி என்ன சினிமா வேண்டியிருக்கு, ராஸ்கல்?”

அப்பா அம்மாவிடமிருந்து என்னை விலக்கி ”ஒரு வருஷமா படிக்காததையா இந்த மூணு மணி நேரத்தில படிச்சிரப் போறான்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து “படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.

Technorati Tags:



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

73 comments:

sriram said...

என்ன சொல்றதுன்னு தெரியல யூத்து, கொடுத்து வைத்தவர் நீங்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஒரு வருஷமா படிக்காததையா இந்த மூணு மணி நேரத்தில படிச்சிரப் போறான்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து “படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.

true and timing word to save u anna

குடுகுடுப்பை said...

உண்மையிலேயே வித்தியாசமான அப்பாதான்.

Kabi said...

jayamalini dancukavdhu, guru padam parkanum...enna appa parthadha gnabham illa...hehehe....

Kabi said...

cable sir, how to setup my machine to type in tamil?

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

எங்க அப்பாவும் என்னை படத்துக்கு கூட்டிட்டு போவாரு அண்ணா...
இங்க்லீஷ் படம் மட்டும்தான் கூட்டிட்டு போவாரு.
அதுவும் அவரு மப்புல இருக்கும் போதுதான் பாசம் பொங்கி வந்துரும். :)
அது ஒரு சுகமான அனுபவம்தான். எனக்கும் ஞாபக படுத்தியதற்கு நன்றி. :)

இராகவன் நைஜிரியா said...

Really you are a blessed man my dear

vasu balaji said...

படிக்கவே ஆசையா இருக்கு. அவர் படம் போடுங்க சார்.

பாலா said...

எனக்கும் நடந்திருக்குங்க சங்கர். நிறைய கூட்டிட்டு போயிருக்கார். சில சமயம்.. பாக்கட்ல இருந்து பணத்தை மட்டும் எடுத்து கொடுத்து என்னை போகச் சொல்லிடுவார்.

நிறைய ஹிந்தி-இங்லீஸ் படங்கள்தான் போவோம். ரெண்டும் ரெண்டு பேருக்கும் புரியாது. ஆனாலும் பார்த்துட்டு வருவோம்.

நீங்க சொன்ன விதம்... ரொம்ப டச்சிங். :(

Muthusamy Palaniappan said...

பாடத்திற்கும் படத்திற்கும் நடுவில் பாசம். அப்பா அப்பாதான்

பா.ராஜாராம் said...

அப்பாக்களே இப்படித்தானா கேபில்ஜி?

எவ்வளவு சுளுவாய் வாழ்வை எதிர் கொள்கிறார்கள்...ப்ரியம் கெடாமல்.

//“படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.//

படியுங்கள் சங்கர்..அப்பா விரும்பிய படிப்பை.

Kabi said...

Cable sir...you made me to cherish my fond memories, even though its a small incident, you put it in an interesting way.

super sir...

seethag said...

அப்பாவை இழந்த்ததற்க்கு என் வருத்தங்கள்.உங்களுடய பதிவைப்படித்ததும் என் அப்பா அனக்கு சொல்வது தான் ஞாபகம் வந்தது."நீ ஏன் 13 வது ரன்க் வாங்கினதுக்கு என்னை திட்டல்லை "என்று கேட்டால்,"திட்டினால் உடனே அது மாறவா போவுது? "என்றார். என்க்கு அவரிடம் உள்ள கோவத்தை தூக்கிபோட்டுவிட்டு போன் செய்சொன்னது உங்கள் பதிவு.

ஜிகர்தண்டா Karthik said...
This comment has been removed by the author.
ஜிகர்தண்டா Karthik said...

மனதை நெகிழ வைக்கும் பதிவு.
எதையெல்லாமோ கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள்
இந்த டைம் மெஷீனை சீக்கரம் கண்டுபிடிக்க மாட்டேன்கறாங்க...
நிலால தண்ணி இருந்து நமக்கு என்ன பிரயோசனம்... இத கண்டுபிடிங்கப்பா முதல்ல...
கேபிள் மறுபடியும் குரு படத்துக்கு போகட்டும். அவர் அப்பாவுடன்

பீர் | Peer said...

மறக்கவே முடியாத நினைவுகள்.. :(

இது போல நினைத்துப்பார்க்க கூட அப்பா பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லை.

Romeoboy said...

துயரங்கள் நம்மை வாட்டும் போதுதான் பழைய நினைவுகள் நம்மை ஆசுவாசம் படுத்தும். ஆனால் அதுவே நம்மை முடம் ஆகி விடாமல் பார்த்துகொள்வது தான் நமது சாமர்த்தியம்.

ஷண்முகப்ரியன் said...

அப்பாவின் மறைவுக்கு முன்னால் எழுதி இருந்தீர்களானால் மகிழ்வாக இருந்திருக்கும்.இப்போது நெகிழ்வாக இருக்கிறது,ஷங்கர்.

மேவி... said...

ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்கு கேபிள்ஜி ..... இந்த மாதிரி அப்பா கிடைக்க கூடுது வைத்திருக்க வேண்டும்....

எனக்கும் என் அப்பாவுக்கும் என்றுமே நெருக்கமான உறவு இருந்ததில்லை (சண்டை எல்லாம் இல்லை. அப்பாவிடம் எனக்காக நேரம் இருந்தது இல்லை) ... அது குறித்து நான் பெரிதும் வருந்தியது இல்லை ....

ஆனால் இந்த பதிவை படித்த பின் சில விஷயங்களை அனுபவிக்காமல் போய் விட்டோம்மோ என்று இப்பொழுது யோசனையாக இருக்கிறது

பாலா said...

பின்னூட்டம் போட்ட நிறைய பேருக்கு... பதிவை விட.. அவங்க அப்பாவின் நினைவு வந்ததுதான்... இதன் நிஜ வெற்றி.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நெகிழ்ச்சியான பதிவு.. ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி பல பேருக்கு அவங்க அப்பா ஞாபகம் வந்திருக்கும்!!

எனக்கு இல்ல சாமி..நமக்கும் அப்பாவுக்கும் ரெம்ப தூரம்.

நல்ல பதிவு!!

Sridharan said...

நெகிழ்ச்சியான பதிவு.. ....

VISA said...

நெகிழ்ச்சி

அன்பேசிவம் said...

தல, டச்சிங் தல.....

அன்பேசிவம் said...

ஹாலிவுட் பாலா said... //நிறைய ஹிந்தி-இங்லீஸ் படங்கள்தான் போவோம். ரெண்டும் ரெண்டு பேருக்கும் புரியாது. ஆனாலும் பார்த்துட்டு வருவோம்.//

அப்பவும் தமிழ்படம் கிடையாதா? அவ்வ்வ்....

சரவணகுமரன் said...

:-)

புலவன் புலிகேசி said...

பிள்ளைகளை புரிந்து கொண்ட அப்பாக்களின் வரிசையில் உங்கள் அப்பாவும்...எங்கள் அப்பாவும் அப்படித்தான் சங்கர்.

பித்தன் said...

தோளுக்கு மிஞ்சினால் தோழன்னு சொல்லுறா maathiri oru thanthai koduththu vaiththavar neengal.

Ashok D said...

Basica கிடைக்க வேண்டியது எனக்கு கிடைக்கலன்னு சொன்னேன் இல்ல பதிவர் சந்திப்லருந்து வரும்போது. அதுல ஒன்னு(தலையாய) இது. இப்பொ சொல்லுங்க நீங்க gifteda? இல்ல நானா..?

சிவகுமார் said...

Yes , Nanumthan ...

sathishsangkavi.blogspot.com said...

கேபிள் ஜீ நீங்க கொடுத்து வைத்த மகன்......

I think உங்க அப்பா தான் உங்களின் மிகச்சிறந்த நண்பன்...... என்ன ஜீ சரியா?

பாபு said...

கொடுத்து வைத்தவர் நீங்கள்

ஊடகன் said...

பாசம் = பேச ஒன்றும் இல்லை

நையாண்டி நைனா said...

Nice post.

நானும் என்னோட அப்பாவும் கடைசியா பார்த்த படம். ஒளி ஓவியர் தங்கரின் "சொல்ல மறந்த கதை".

butterfly Surya said...

நெகிழ்வா இருக்கு தலை.. His blessing will be forever.. Must be a great interesting person.

CS. Mohan Kumar said...

The narration is like a shorty story. Good remembrance.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே..
அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களாக மட்டுமே இருப்பதில்லை. நண்பனாக, சகோதரனாக, சில நேரங்களில் அம்மாவாகக்கூட இருக்கிறார்கள்.

தர்ஷன் said...

எனக்கும் அப்பா என்றால் அதிகம் ஞாபகம் வருவது சிகரெட் வாசனையும் அவர் மடியிலமர்ந்து பார்த்த பல ரஜினி,கமல் படங்களும்தான்

நானும் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவன் ரொம்பவே உணர வைத்திருக்கீர்கள் பிரிவினை

thatscoolsuresh said...

என்ன சொல்றதுன்னு தெரியல யூத்து, கொடுத்து வைத்தவர் நீங்கள்
repeataeeeeeee

enakku andha bakkiyam kidaikkala

enga grandpa kooda thaan padam paarkka poven
adhuvum thiruvilayadal, kandhan karunai type.....!

பின்னோக்கி said...

உங்கள் அப்பா பையனின் சைக்காலஜி தெரிந்தவர். அருமை

Bala said...

மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது கேபிள். கவலை பட வேண்டாம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் நீங்கள் எடுக்க இருக்கும் திரை படம் மிக பெரிய வெற்றி அடையும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நெகிழ்ச்சியான பதிவு.. ....

Unknown said...

GOOD FATHER

நர்சிம் said...

மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் சங்கர்

Anonymous said...

sankerji ungal pathivu anai nalla appavaka eruka sollukerathu thx nanpa

மணிஜி said...

சீக்கிரம் குருவை ரீமேக் பண்ணுங்க

Unknown said...

touching...

அன்புடன் அருணா said...

அப்பாக்கள் இப்படித்தான் சமயத்தில் காப்பாற்றி விடுவார்கள்!..அப்பாவின் மறைவிற்கு வருத்தங்கள்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நினைவுகளை தூண்டிவிடும் பதிவு.
தங்கள் அப்பாவின் மறைவிற்கு என் வருத்தங்கள்

indian said...

ததையில் இருந்துதான் மகன் ,சிலர் தன் எண்ணத்தாலும் தன் மகனில் வாழ்ந்து வெல்வார்கள் , சில தந்தைக்கு மரணம் இல்லை

வினோத் கெளதம் said...

தல அருமையான பகிர்வு..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அப்பா என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

SUPER.

kanagu said...

neenga koduthu vachavanga na....

பிரசன்னா கண்ணன் said...

இதே போல் தந்தைக்கும் மகனுக்கும் ஒரு சம்பவம் நடைபெறுவதாக சிறுகதை ஒன்றை ஒரு வார இதழில் படித்ததாக ஞாபகம்..
நீங்கள் எழுதியதுதானா அது ?

அப்படி இல்லையெனில், உங்கள் உணர்வுகளோடு விளையாடுவதாக தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்.. நினைவில் வந்ததை சொன்னேன்..

அகநாழிகை said...

நெகிழ்ச்சியான பகிர்வு கேபிள்ஜி.

- பொன்.வாசுதேவன்

Cable சங்கர் said...

@ஸ்ரீராம்
நன்றி

@ஸ்ரீ கிருஷ்ணா
ஆமா கிருஷ்ணா

@குடுகுடுப்பை
:)

@கபி
ஹா..ஹா

@கபி
மெயில் அனுப்புகிறேன்
@பேரு ஸ்டான்லிங்க்
ஒவ்வொருக்குமொரு வாசனை , ஒரு அனுபவ்ம்

Cable சங்கர் said...

@இராகவன் நைஜீரியா
ஆமாம்ண்ணே

@வானம்பாடிகள்
போடுகிறேன்

@ஹாலிவுட் பாலா
நன்றி

@முத்துசாமி பழனியப்பன்
:)

@பா.ராஜாராம்

ஆமாம் பா.ரா. அதை உணர்ந்தவர்களுக்கு தான் புரியும்

@

Cable சங்கர் said...

@கபி
நல்ல நினைவுகளை உங்களுக்குள் எழுப்பினால் சந்தோஷமே..
@சீதா
சில சமயம் நம்ம கோபம் செம காமெடியாய் போயிரும்.. சீதா.. முதல் வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி

Thamira said...

கிரேட்.!

ஏற்கனவே இதுபோல குட்டிக்கதைகள் படித்திருந்தாலும் இது உண்மையாக இருப்பதால் உயிரோட்டமாக இருக்கிறது.

Tech Shankar said...

உங்களுக்கும், தந்தைக்குமிடையேயுள்ள நட்பை இந்தப்பதிவு நன்றாகக் கூறுகிறது.

Cable சங்கர் said...

@கார்த்திக் விஸ்வநாதன்
நன்றி

@பீர்
ஏன்..?

@ரோமிபாய்
நிச்ச்யமாய் ரோமி

@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.

@டம்பி மேவி
நிச்சயம் முடிந்தால் உங்கள் அப்பாவோடு கொஞ்சம் உட்கார்ந்து பேசிப் பாருங்கள் ஒரு நண்பனாய்.

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
ஆமாம பாலா

@செந்தில்நாதன்
ஏன்?

@ஸ்ரீதரன்
நன்றி.. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@விசா
நன்றி தலைவரே

@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி

@சரவணகுமாரன்
நன்றி

@புலவன் புலிகேசி
ஆமாம் புலி

@பித்தன்
ஆமம் பித்தன்

Cable சங்கர் said...

@அசோக்
:(

@சிவகுமார்
நன்றி

@சங்கவி
ஆமாம்

@பாபு
நன்றி

Cable சங்கர் said...

@ஊடகன்
:0


@நையாண்டி நைனா
நன்றி

@பட்டர்ப்ளை சூர்யா
நிச்சய்ம அந்த நம்பிக்கை எனக்குண்டு

@மோகன் குமார்
நன்றி

@செ.சரவணக்குமார்
நிச்சயம்

@

Cable சங்கர் said...

@தர்ஷன்
நிரம்பவே இழந்திருப்பீர்கள்

@சுரேஷ்
:(
@பின்னோக்கி

ஆமாம்

@பாலா
நன்றி

Cable சங்கர் said...

@ஸ்டார்ஜான்
நன்றி

@ஜெயே
நன்றி.. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@சிதம்பரராஜன்
நனறி

@தண்டோரா
பண்ணிருவோம்

@

Cable சங்கர் said...

@கே.வி.ஆர்
நன்றி

@அன்புடன் அருணா
:)

@ஜெ.ஜெயமார்த்தாண்டன்
நன்றி.. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@இந்தியன்
நிச்ச்யம்

@வினோத் கெளதம்
நன்றி

@கிறுக்கல் கிறுக்கன்
:)

@ஸ்ரீ
நன்றி

@கனகு
ஆமாம்
@பிரசன்னா
வாழ்க்கையில் நடப்பதுதான் கதையாகவோ, சினிமாவாகவோ நடக்கிறது.. பிரசன்னா.. அது நான் எழுதியது இல்லை

@அகநாழிகை
நன்றி

@

Cable சங்கர் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி

@தமிழ்நெஞ்சம்
நன்றி

சில்க் சதிஷ் said...

அப்பாக்களே இப்படித்தானா யூத்து

எவ்வளவு சுளுவாய் வாழ்வை எதிர் கொள்கிறார்கள்...ப்ரியம் கெடாமல்.

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான பதிவு.

இப்பல்லாம் யாரு அவங்க அப்பாவ பத்தி எழுதுனாலும் என் அப்பா ஞாபகம் வருது. ரொம்ப மிஸ் பண்றேன் அவர.

Wanderer said...

dear sankar,

a touching post! Think i missed having such moments with my appa. he was not friendly those days, due to his work. Now he is cmpensating that by playing with our children

Jawahar said...

சாதாரணமாக அப்பா-மகள் உறவுதான் இத்தனை இன்டிமேட்டாக இருக்கும். இது ஒரு ஆச்சரியமான வித்யாசம். இப்படிப்பட்ட அப்பாவின் இழப்பு கொடுத்திருக்கும் தாக்கம் வீரியம் இழக்க நெடுங்காலமாகும்....


http://kgjawarlal.wordpress.com