என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்

“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார்.
“உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?”
“எனக்கு கமல், ஸ்ரீதேவி பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன்.
“உனக்கு பிடிச்சது மாதிரி பெரியவங்களுக்கு பிடிக்கணுமில்ல.. சினிமா உனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் அதனால தான் அந்த டான்ஸ்” என்று ஜெயமாலினியின் டான்ஸுக்கு விளக்கம் கொடுத்தபடி எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார் அப்பா.
வேகமாய் நடந்தோம் வீட்டிற்கு. அம்மா ஆபீஸிலிருந்து வருவதற்குள் போக வேண்டும். பத்தாவது பைனல் பரீட்சையின் கடைசி பரிட்சைக்கு இடையே இரண்டும் நாள் விடுமுறை இருக்க, ரொம்ப நாளாய் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த குரு திரைப்படம் அருகில் உள்ள தியேட்டரில் ஓட, ஒரு வாரம் மட்டுமே என்று போஸ்டரில் போட்டது வேறு என்னுள் உளப்பி கொண்டேயிருக்க, என் உளப்பல் தாங்காமல் என்னை தியேட்டருக்கு அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போய் விட்டு வரும் போதுதான் இந்த டிஸ்கஷன். இந்த மாதிரியான டிஸ்கஷன் வழக்கம் தான்.
சத்தமில்லாமல் வீட்டின் வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு, உள்ளே நுழைந்த போது வாசலில் அம்மாவின் செருப்பு இருந்தது.
“எங்க போயிட்டு வர்றீங்க ரெண்டு பேரும்?”
அப்பா திரும்பி என்னை பார்த்து சொல்லிடட்டுமா என்பதை போல முகத்தை வைத்து கொண்டு “ படத்துக்கு போயிட்டு வந்தோம்.” என்று சொன்னதும் அம்மா முகம் முழுவதும் கோபமாய் “ உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா..? பைனல் எக்ஸாம், படிக்கிறதுக்கு லீவு விட்டா, பிள்ளைக்கு புத்தி சொல்லி, படிக்க சொல்லாம, சினிமாவுக்கு கூட்டி போயிட்டு வர்றீங்களே? அந்த புள்ள எப்படி உருப்படும்?” என்று மளமளவென்று கோபத்தில் பேசிக்கொண்டே போக, சிரித்தபடி அப்பா என்னை பார்த்து கொண்டிருக்க , அது அம்மாவுக்கு இன்னும் கோபத்தை ஏற்ற, அப்பாவின் மீதுள்ள கோபத்தை என் தலையில் நெக்கென ஒரு குட்டை குட்டி “அப்படி என்ன சினிமா வேண்டியிருக்கு, ராஸ்கல்?”
அப்பா அம்மாவிடமிருந்து என்னை விலக்கி ”ஒரு வருஷமா படிக்காததையா இந்த மூணு மணி நேரத்தில படிச்சிரப் போறான்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து “படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
true and timing word to save u anna
இங்க்லீஷ் படம் மட்டும்தான் கூட்டிட்டு போவாரு.
அதுவும் அவரு மப்புல இருக்கும் போதுதான் பாசம் பொங்கி வந்துரும். :)
அது ஒரு சுகமான அனுபவம்தான். எனக்கும் ஞாபக படுத்தியதற்கு நன்றி. :)
நிறைய ஹிந்தி-இங்லீஸ் படங்கள்தான் போவோம். ரெண்டும் ரெண்டு பேருக்கும் புரியாது. ஆனாலும் பார்த்துட்டு வருவோம்.
நீங்க சொன்ன விதம்... ரொம்ப டச்சிங். :(
எவ்வளவு சுளுவாய் வாழ்வை எதிர் கொள்கிறார்கள்...ப்ரியம் கெடாமல்.
//“படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.//
படியுங்கள் சங்கர்..அப்பா விரும்பிய படிப்பை.
super sir...
எதையெல்லாமோ கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள்
இந்த டைம் மெஷீனை சீக்கரம் கண்டுபிடிக்க மாட்டேன்கறாங்க...
நிலால தண்ணி இருந்து நமக்கு என்ன பிரயோசனம்... இத கண்டுபிடிங்கப்பா முதல்ல...
கேபிள் மறுபடியும் குரு படத்துக்கு போகட்டும். அவர் அப்பாவுடன்
இது போல நினைத்துப்பார்க்க கூட அப்பா பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லை.
எனக்கும் என் அப்பாவுக்கும் என்றுமே நெருக்கமான உறவு இருந்ததில்லை (சண்டை எல்லாம் இல்லை. அப்பாவிடம் எனக்காக நேரம் இருந்தது இல்லை) ... அது குறித்து நான் பெரிதும் வருந்தியது இல்லை ....
ஆனால் இந்த பதிவை படித்த பின் சில விஷயங்களை அனுபவிக்காமல் போய் விட்டோம்மோ என்று இப்பொழுது யோசனையாக இருக்கிறது
எனக்கு இல்ல சாமி..நமக்கும் அப்பாவுக்கும் ரெம்ப தூரம்.
நல்ல பதிவு!!
அப்பவும் தமிழ்படம் கிடையாதா? அவ்வ்வ்....
I think உங்க அப்பா தான் உங்களின் மிகச்சிறந்த நண்பன்...... என்ன ஜீ சரியா?
நானும் என்னோட அப்பாவும் கடைசியா பார்த்த படம். ஒளி ஓவியர் தங்கரின் "சொல்ல மறந்த கதை".
அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களாக மட்டுமே இருப்பதில்லை. நண்பனாக, சகோதரனாக, சில நேரங்களில் அம்மாவாகக்கூட இருக்கிறார்கள்.
நானும் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவன் ரொம்பவே உணர வைத்திருக்கீர்கள் பிரிவினை
repeataeeeeeee
enakku andha bakkiyam kidaikkala
enga grandpa kooda thaan padam paarkka poven
adhuvum thiruvilayadal, kandhan karunai type.....!
தங்கள் அப்பாவின் மறைவிற்கு என் வருத்தங்கள்
நீங்கள் எழுதியதுதானா அது ?
அப்படி இல்லையெனில், உங்கள் உணர்வுகளோடு விளையாடுவதாக தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்.. நினைவில் வந்ததை சொன்னேன்..
- பொன்.வாசுதேவன்
நன்றி
@ஸ்ரீ கிருஷ்ணா
ஆமா கிருஷ்ணா
@குடுகுடுப்பை
:)
@கபி
ஹா..ஹா
@கபி
மெயில் அனுப்புகிறேன்
@பேரு ஸ்டான்லிங்க்
ஒவ்வொருக்குமொரு வாசனை , ஒரு அனுபவ்ம்
ஆமாம்ண்ணே
@வானம்பாடிகள்
போடுகிறேன்
@ஹாலிவுட் பாலா
நன்றி
@முத்துசாமி பழனியப்பன்
:)
@பா.ராஜாராம்
ஆமாம் பா.ரா. அதை உணர்ந்தவர்களுக்கு தான் புரியும்
@
நல்ல நினைவுகளை உங்களுக்குள் எழுப்பினால் சந்தோஷமே..
@சீதா
சில சமயம் நம்ம கோபம் செம காமெடியாய் போயிரும்.. சீதா.. முதல் வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி
ஏற்கனவே இதுபோல குட்டிக்கதைகள் படித்திருந்தாலும் இது உண்மையாக இருப்பதால் உயிரோட்டமாக இருக்கிறது.
நன்றி
@பீர்
ஏன்..?
@ரோமிபாய்
நிச்ச்யமாய் ரோமி
@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.
@டம்பி மேவி
நிச்சயம் முடிந்தால் உங்கள் அப்பாவோடு கொஞ்சம் உட்கார்ந்து பேசிப் பாருங்கள் ஒரு நண்பனாய்.
ஆமாம பாலா
@செந்தில்நாதன்
ஏன்?
@ஸ்ரீதரன்
நன்றி.. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
@விசா
நன்றி தலைவரே
@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி
@சரவணகுமாரன்
நன்றி
@புலவன் புலிகேசி
ஆமாம் புலி
@பித்தன்
ஆமம் பித்தன்
:(
@சிவகுமார்
நன்றி
@சங்கவி
ஆமாம்
@பாபு
நன்றி
:0
@நையாண்டி நைனா
நன்றி
@பட்டர்ப்ளை சூர்யா
நிச்சய்ம அந்த நம்பிக்கை எனக்குண்டு
@மோகன் குமார்
நன்றி
@செ.சரவணக்குமார்
நிச்சயம்
@
நிரம்பவே இழந்திருப்பீர்கள்
@சுரேஷ்
:(
@பின்னோக்கி
ஆமாம்
@பாலா
நன்றி
நன்றி
@ஜெயே
நன்றி.. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
@சிதம்பரராஜன்
நனறி
@தண்டோரா
பண்ணிருவோம்
@
நன்றி
@அன்புடன் அருணா
:)
@ஜெ.ஜெயமார்த்தாண்டன்
நன்றி.. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
@இந்தியன்
நிச்ச்யம்
@வினோத் கெளதம்
நன்றி
@கிறுக்கல் கிறுக்கன்
:)
@ஸ்ரீ
நன்றி
@கனகு
ஆமாம்
@பிரசன்னா
வாழ்க்கையில் நடப்பதுதான் கதையாகவோ, சினிமாவாகவோ நடக்கிறது.. பிரசன்னா.. அது நான் எழுதியது இல்லை
@அகநாழிகை
நன்றி
@
நன்றி
@தமிழ்நெஞ்சம்
நன்றி
எவ்வளவு சுளுவாய் வாழ்வை எதிர் கொள்கிறார்கள்...ப்ரியம் கெடாமல்.
இப்பல்லாம் யாரு அவங்க அப்பாவ பத்தி எழுதுனாலும் என் அப்பா ஞாபகம் வருது. ரொம்ப மிஸ் பண்றேன் அவர.
a touching post! Think i missed having such moments with my appa. he was not friendly those days, due to his work. Now he is cmpensating that by playing with our children
http://kgjawarlal.wordpress.com