Kurbaan – Hindi Film Review
முழுக்க, முழுக்க ஹாலிவுட் பாணி பாதிப்பில் எடுத்திருகிறார்கள். நடிகர்கள் மட்டும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாயிப் ஒரு பி.எச்டி. லெக்சரர், அவரும் கரீனாவும் ஒரே காலேஜில் ப்ரொபஸராய் வேலையில் இருக்க, காதல் வசப்படுகிறார்கள். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அந்த சமயத்தில் கரினாவுக்கு நியூயார்க்கின் ஒரு யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு வர, அவருக்காக தன் வேலையை துறந்து கரினாவுடன் அமெரிக்காவுக்கு போகிறார் சாயிப். வேலைக்கு போய் சேர்ந்ததும், அங்கேயே இந்தியர்கள் வசிக்கும் ஏரியாவில் போய் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக, பக்கத்திலிருக்கும் ஓம்பூரியின் குடும்பத்திலிருந்து, கரினாவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.
ஓம்பூரியின் வீட்டில் இருக்கும் மருமகள் ஒருத்தி தன்னை காப்பாற்றும் படி சொல்ல, அவளின் கணவன் அடிப்பதை பார்த்த கரீனா அவள் கொடுத்த ஒரு இந்திய முஸ்லீம் இளைஞன் வேலை செய்யும் நியூஸ் சேனலுக்கு போகிறாள். அடுத்த நாளிலிருந்து அவளை காணாமல் இருக்க, அவளை தேடி வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைய, அங்கே அவள் காணும் காட்சி, அதிர்ச்சியின் உச்சம், அவளின் கணவனே ஒரு தீவிரவாதி என்பதுதான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
ஆரம்பத்தில் சாயிப், கரீனாவின் காதல் காட்சிகள் படு காமெடி, அவ்வளவு மெச்சூர்டான ஆட்களிடையே ஏற்படும் காதலை ஏன் இவ்வளவு சிறுபிள்ளைதனமான காட்சிகள் என்றே புரியவில்லை. ஆரம்ப காட்சியிலேயே அவர்கள் இருவரும் காதலர்கள் என்று சொல்லியிருக்கலாமே. ஏன் என்றால் அவர்களீடையே உள்ள காதல் தான் பட்த்தின் உயிர்நாடி என்று இயக்குனர் நினைத்து அந்த காட்சிகளை வைத்திருந்தால். .. சாரி இயக்குனரே.
பக்கத்து வீட்டில் உள்ள முஸ்லீம் குடும்பம் மொத்தமுமே, தீவிரவாதிகளாய் இருப்பதும், அதற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாத சாதாரண குடும்பமாய் அலைவதும், ப்ளைட்டுக்கு சூசைட் பாமரை அனுப்பி ப்ளாஸ்ட் செய்ததும், உடனடியாய் அடுத்த விஷயத்துக்கு ரெடியாவதும், சொல்வதற்கும், படிப்பதற்கும் இண்ட்ரஸ்டாய் இருப்பதை போல் இருந்தாலும், படம் ஆமை ஸ்லோ. அவர்கள் மிகப்பெரிய த்ரில்லிங் தருணம் என்று நினைத்தது எடுத்தது எல்லாம் புஸ்ஸாகி போய் விடுகிறது. ஒரு பக்கம் கணவனே தீவிரவாதியாய் ரயில்வே ஸ்டேஷனில் பாம் வைக்க அலைவதும், இன்னொரு பக்கம் பத்திரிக்கையாளரான விவோக் ஓபராய் அமெரிக்க முஸ்லிமாய் அதை முறியடிக்க அவர்களுடனே பழகி ஒரு தீவிரவாதியாக மாறி, கரினாவை காப்பாற்ற முயல்வதும், போலீஸுக்கு தகவல் சொல்லி ப்ளாஸ்டை தடுக்க முயலும் நலல் முஸ்லிமாக் வருகிறார். பாவம் சும்மா அங்கும் இங்கும் ஓடுவதை தவிர வேறு ஏது வேலையில்லை.
முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்த ஹிந்துப் பெண்ணான கரீனாவாவது ஏதாவது செய்து அங்கிருந்து தப்பித்து விடுவார் என்றால் அதுவும் இல்லை. சாயிப்பால் கர்பமாகி, ஆவூவென்றால் அழுகிறார். கடைசி காட்சியில் அழுகிறார். படு சொதப்பலான கேரக்டர்.
அதே போல சாயிப்பின் கேரக்டரும், ஒன்று நல்வனாக காட்டவேண்டும், அல்லது கெட்டவனாக காட்ட வேண்டும், தன் மனைவி கர்பமாய் இருப்பதால், அவளின் மேல் காதல் கொண்டிருக்கும் நல்ல கணவனாகவும், இன்னொரு பக்கம் சதக், சதக், டுமீல்,டுமில் என்று குத்தியும், சுட்டும் கொல்லும் வில்லனாகவும் அவரை பார்க்க, ஒரு எமோஷன் எழவும் எழ மாட்டேன் என்கிறது. படத்தில் சர்சைக்குண்டான விஷயங்கள் நிறைய இருக்க, கரினாவின் வெறும் முதுகை போட்டு பிரட்டி எடுத்த அரசியல்வாதிகளே, நீங்கள் செய்த கலாட்டாவை பார்த்துவிட்டு படத்துக்கு போன ஆட்கள் நொந்து போய் தியேட்டரில் கரீனாவின் முன் பக்கத்தை சாயிப் மட்டுமே பாக்கிறத்துக்கு நாங் எதுக்குடா தியேட்டருக்கு வரணும் என்ற கூச்சல் உங்களுக்கு கேட்கலியா.?
படம் பூராவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாய் அலைவதற்கான காரணங்களை, இந்தியா பற்றி சொல்லாமல் ஆப்கானிஸ்தான், ஈரான் , ஈராக் என்று உட்டாலக்கடி அடிப்பது போல் கிரோன் கர் வசனம் பேசுவதும், அதை எதிர்பதாக விவேக், மற்றும் கரினா பேசும் வசனங்கள் டெம்ப்ளேட் டயலாக்குகள். வசனம் அனுராக் காஷ்யப். அவன் ஆறு வயது குழந்தையை கொன்னான், அதனால நான் அமெரிக்கா காரன் நாட்டை அழிக்கணும்னு அல்லாவின் ஆணை என்று அடிக்கடி சொல்லும், கிரோன், அதை எதிர்க்கும் மருமகளை கொலை செய்ததை பெரிஅய் விஷயமாய் எடுத்துக் கொள்ளாத கிரோன் கேரக்டரும், சொதப்பல். என்ன ஒரு வித்யாசமான விஷயம் என்னவென்றால் பெண்களையும் தீவிரவாதிகளாய் காட்டியிருப்பதுதான்.
அதே போல் சும்மாவாச்சும் நானும் அமெரிக்க நடவடிககைகளை எதிர்க்கிறவன் என்று சொன்னதாலேயே விவேக்கை வா வீட்டிற்கு சாப்பிட போகலாம் என்பதுபோல் பாம் வைக்க சேர்த்து கொள்வதும், தீவிரவாதிகளை விடுதலை புலிகள் போல சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்பதும், ஓடுகிறா ரயிலில் ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வதும், ரோட்டில் சேஸிங்கில் மிக ஈஸியாய் அமெரிக்க போலீஸ் இடமிருந்து தப்பிப்பதும் படு காமெடி.
படத்தின் விளம்பரத்தில் எல்லாம் ஒரு வயலண்ட் லவ் ஸ்டோரியாய் பில்டப் செய்துவிட்டு, மிக தீவிரமாய் தீவிரவாதிகளை பற்றி எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் தீவிரவாதத்தை ஞாயப்படுத்தியிருக்கிறார்கள். குரானில் எங்கேயும் தீவிரவாதத்தை ஆதரித்து, சொன்னதில்லை என்று விவேக் ஓபராய் மூலமாய் சொன்னாலும், திவிர பண்டமெண்டலிஸ்டான ஓம்பூரி. அல்லாவின் ஆணைப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றே சொகிறார். அதையே அவரது மனைவியும் வழிமொழிகிறார். என்.ஆர்.ஐ மார்கெட்டை மட்டுமே இலக்காய் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட படமாய்தான் தோன்றுகிறது.
அருமையான எடிட்டிங், ஒளிப்பதிவு, தரமான மேக்கிங் எல்லாம் இருந்தும், காதல் கதையாகவும் இல்லாமல், த்ரில்லராகவும் இல்லாமல், தீவிரவாதிகளை பற்றியும் இல்லாமல், இலக்கில்லாத, ரெண்டும் கெட்டான் திரைக்கதையாலும், தெளிவான கேரக்டரைஷேசன் இல்லாததாலும், ஒரு நல்ல நாட்டை வேஸ்ட் செய்து விட்டார்கள்.
Kurbaan - Aimless
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ரொம்ப சீன் போட்டானுங்க... ஊத்தனும்ன்றதுதான் என் எதிர்பார்ப்பு.
உங்களுக்கு 4 வதாக பின்னூட்டம் போடா இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
Cable sir, please continue... "isaiyenum raaja vellam"
nandri nanbargalae..
பிரபாகர்.
அது ஒர் அளவுக்கு நன்றாக செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்.. http://cablesankar.blogspot.com/2009/07/newyork-hindi-film-review.html
சலிப் க்கு ஓசி ல ஒரு ஹனி மூன் flim shooting என்ற பெயரில் போயிட்டு வந்து இருக்கிறார் என்று தெரிகிறது......
எல்லாம் மணிரத்தினம் பண்ணின வேளை..... இப்ப அவன் அவன் கதை இல்லாமல் கிளம்பிட்டாங்க
//
நான் வளர்கிறேனே.. ராஜு..
தமிழ்ல வந்திருந்தா, சிறுபான்மையினரின் அவமதிப்பு, இந்துத்துவாவின் அகங்காரம், திரையுலகத்தினரின் வக்கிர பார்வை, கதாசிரியர்களின் மனப் பிறழ்வு, மத வெறியர்களின் வெறியாட்டம்னு உன்னைப் போல் ஒருவன் மாதிரி கொஞ்ச நாள் கும்மி அடிச்சிருக்கலாம்.
இதையே கமல் தமிழில் ரீமேக் பண்ணினால் பிச்சுக்கிட்டு போகும் என நம்பலாமா?
மீ த வெயிட்டிங் ஃபார் “பா” :))
தப்பிச்சுது.... நல்ல விமர்சனம் தலைவரே...
நிஜமாவே விளம்பரம் பார்த்திட்டு நான் படத்துக்குப் போகணும்னு நினைச்சேன். காப்பாத்திட்டீங்க கேபிள் சார்.
அட ஆமாங்க.. நன்றி
@ரோமிபாய்
ஆமாம்
@பேரு ஸ்டான்லிங்க
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
@கபி
நிச்சயம்.. கொஞச்ம் வேலை இருக்கு அதனாலதான் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
@மோ
:(
@ஸ்டார்ஜான்
நன்றி
வேற என்ன சொல்றதுன்னே தெரியல.. அதுனால்தான்
2பிரபாகர்
நன்றி
@
அட ஆமாங்க அந்த காண்டு வேற..
எதுக்கு மணிரத்னத்தை வம்புக்கு இழுக்கிறீங்க..?
@முரளிகுமார் பத்மநாபன்
வருத்தபடாதீங்க.. ஊசி போன வடை
@புலவன்புலிகேசி
ஆமாம்
ஆமாம்
@தண்டோரா
நன்றி
@தராசு
இதிலேர்ந்து தெரிஞ்சிக்கங்க.. நம்ம ஆட்களுடய காழ்புணர்ச்சியும், ஒன்சைட் பேச்சுககளூம்
@புதுகை தென்ற்ல
ஆமாம்
@அதி பிரதாபன்
:)
நன்றி
@ராம்திருப்பூர்
நன்றி
2பேநா மூடி
:(
@அனுப்பனடி பையன்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை
@பித்தன்
உள்ளே போயாச்சு வேற வழி
@செ.சரவணக்குமார்
நன்றி
@ஜெட்லி
நன்றி
@பின்னோக்கி
ஆமாம் தலைவரே.. கொஞ்சம் அப்படித்தான் இருக்கு.
@விக்னேஷ்வரி
போயிராதீங்க
@சிவகுஅமர்
நன்றி
@ஊடகன்
நன்றி
என்கிற முறையிலும் எனக்கு உங்களின் ஆதரவு தாருங்கள்.. நன்றியுடன், உங்கள் அன்பு தம்பி, பூங்குன்றன்.
http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html
பிச்சைக்காரனுக்கு லாட்டரி அடிச்சா தங்கத்துல திருவோடு செய்வான். அது மாதிரி தான் தீவிராவாதிகள் கிட்ட பணம் வாங்கி படம் பண்ணுனா தீவிரவாதி தான் படத்துல ஹீரோவா வருவான்.