சொந்த காசில சூனியம் வச்சிக்கிறதுன்னு கேள்வி பட்டுருப்பீங்க. இந்த படத்தில கதாநாயகி பண்றது அதுக்கும் மேல. இப்பத்தான் பாராநார்மல் ஆக்டிவிடீ பார்த்துட்டு கொஞ்சம் மூச்சு விட்டோம்னா., அடுத்து ஒரு அசத்தலான படம் orphan.
மேலே உள்ள படத்தில் உள்ள பெண்ணை பார்த்தால் கொஞ்சம் சீரியஸான, மெச்சூர்டான பெண்ணைப் போல் தெரிகிறதா..? அப்படி நம்பித்தான் கேட்டும் அவள் கணவனும் அனாதை இல்லத்திலிருது கூட்டி வருகிறார்கள். கேட்டுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்து விட, அதில் மன அமைதி கெட்டுப் போய், குடிகாரியாய் மாறி ஆல்கஹாலிஸ் அனானிமஸில் கவுன்ஸிலிங் எடுத்து தன்னை ஒரு நிலை படுத்த, இசை, வீடு என்று மனதை மாற்ற முயலும் நேரத்தில் தன் குழந்தை இறந்ததுதான் காரணம், அதனால் ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று ஆர்பனேஜிலிருந்து எஸ்தரை அழைத்து வருகிறார்கள்.
பார்தவுடனேயே அவளையும், அவளின் பேச்சுகளினாலும் மனம் கவர்ந்து, நெகிழ்ந்து போன கேட்டின் கணவன், அவனுக்கு பிடித்ததினால் ஒரு மனதாய் அவளை தன் வீட்டிற்கு தன் பெண்ணாய் எடுத்து வளர்க்க அழைத்து வருகிறாள். வீட்டில் கேட்டின் பெரிய மகன் எஸ்தரை தன் சகோதரியாய் ஏற்க மறுக்க, காது கேட்காமல், வாய் பேச முடியாத சின்னக்குட்டி மேக்ஸ் அவளை ஏற்றுக் கொண்டு நெருக்கமாகிறாள்.
எஸ்தர் ஒரு வழக்கமான பெண்ணாக இல்லாமல், வித்யாசபட்டே இருக்க, அது ஒரு மாதிரி உறுத்தினாலும், கொஞ்சம், கொஞ்சமாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள் கேட். அவளை தத்து கொடுக்கும் ஆர்பனேஜ் சிஸ்டர், அவளை பிடித்திருக்கிறது என்று இவர்கள் சொன்னதும், ஒரு மாதிரி திரு, திருவென பார்க்கும் போதே நமக்குள் லேசாய் பனிக் கத்தி.
கேட்டின் பெரிய பையன் ஒரு முறை பொம்மை துப்பாக்கியால் ஒரு புறாவை சுட்டு விட, அடிப்பட்டு விழுந்த பறவையை கொல்லச் சொல்கிறாள். எஸ்தர், தன்னால் முடியாது என்று சொல்லும் அவனிடம், அடிபட்டு இறை தேட முடியாமல் பட்டினி கிடந்து சாவதை விட அதை கொல்வது நல்லது என்று அரைகுறை உயிருடன் இருக்கும்புறாவை அவள் கல்லால் அடித்து கொல்லும் காட்சியில் வெளிப்படும் கொடூரத்தை பார்த்தும் மேலும் கத்தி அழுத்தமாய் இறங்குகிறது.
தன்னை பற்றி உண்மையை சொல்லி வீட்டிலிருந்து அழைத்து போக முயற்சி செய்யும், சிஸ்டரை சுத்தியலால் அடித்து கொல்லும் காட்சியில் சதக் என ஆழமாய் இறங்க ஆரம்பித்ததும், அடுத்து என்ன நடக்குமோ என்று பதை பதைக்க ஆரம்பித்துவிட்டது.
அதன் பிற்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அதகளம், அந்த குழந்தைகளை சைக்கலாஜிக்கலாக மிரட்டுவதும், கேட்டையே மனரீதியாய் குழப்பி, அவளின் பேச்சை கணவனே நம்ப மறுக்க வைப்பதும், என்று ஒவ்வொரு அடியாய் தன் ஆக்கிரமிப்பை பரவ செய்யும் எஸ்தர் செய்ய கொலைக்கான ஆதாரங்களை, கண்டுபிடித்து விட்டதற்காக அவனை உயிரோடு கொளுத்தும் முயற்சியில் தோல்வியடைந்தாலும் ஆஸ்பத்திரியிலும் அவனை கொல்லும் முயற்சியை விடாமல், செய்வதும் ஏன்./? எதற்காக ஒரு ஒன்பது வயது பெண் இப்படியெல்லாம், அதுவும் தன்னை சுவீகரித்து கொண்ட ஒரு குடும்பத்தை செய்யவேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம். பதில் வெள்ளி திரையிலோ, அல்லது டிவிடி திரையிலோ..
எஸ்தராக நடிக்கும் அந்த பெண்ணின் நடிப்பு அபாரம், ஒவ்வொரு சின்ன அசைவிலும் நம்மை கதிகலங்க வைக்கும் பாடி லேங்குவேஜ், வயதுக்கு மீறின மெச்சூரிட்டியுடன் பேசும் போது என்னடா என்று யோசிக்க வைக்கும் அவரது பேச்சுக்கான காரணம் தெரியும் போது திடுக்.
மாக்ஸாக நடிக்கும் அந்த் சின்னக் குட்டி பெண் படு க்யூட்.எஸ்த்ரின் எல்லா கொடும் செயலுக்கும் கூடவே சாட்சியாய் இருக்கும் அந்த குழந்தையின் மன வேதனையை குழந்தை வெளிக்காட்டாமல் அடக்கும் காட்சிகளாகட்டும், க்ளைமாக்ஸில் தன்னை கொல்ல வரும் எஸ்தரிடமிருது தப்பிக்கும் காட்சிகளாகட்டும், பரிதாபத்தை அள்ளிக் கொண்டு போகிறாள்..
பாட்ம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே நம்மை ஒரு திரில்லருக்கான எமோஷனுக்கு தயார் படுத்திவிடுகிறார்கள், இயக்குனர்Jaume Collet-Serraவும், ஒளிப்பதிவாளர் jeff Cutter ரும், ஆர்பனேஜில் வரும் காரிடார் காட்சிகளும், அதே போல் நிறைய இடங்களில் வரும் டாப் ஆங்கிள் ஷாட்டுகளும் அருமை. க்ளைமாக்ஸ் காட்சிகளின் பரப்ரப்பு சீன்களூக்கு, பதறாமல் எடிட்டிங் செய்திருப்பதை, பத்து செகண்டுக்கு ஒரு ஷாட் என்று எடிட் செய்யும் ஆண்டனிகள் பார்ப்பார்களாக..
Orphan – Excellent Thriller… Recommended
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
47 comments:
//சொந்த காசில சூனியம் வச்சிக்கிறதுன்னு கேள்வி பட்டுருப்பீங்க. இந்த படத்தில கதாநாயகி பண்றது அதுக்கும் மேல.//
//பத்து செகண்டுக்கு ஒரு ஷாட் என்று எடிட் செய்யும் ஆண்டனிகள் பார்ப்பார்களாக..///
என் மனைவி முதல் வரியை படித்தவுடன் குபீர் என்று சிரித்து விட்டாள். சூப்பரா எழுதுறீங்க என்று கூறினாள்.
நெக்ஸ்ட் வீகேண்ட்க்கு ஒரு படம் கெடச்சுது.
நம்ம கமெண்ட் தான் first.
நல்ல படமா .. பாக்கலாமா ...
அடுத்த படம் ரெடி..!!! இப்பவே TORRENT போட்டுட வேண்டியது தான்...
டவுன்லோட் பண்ணி வச்சி இருக்கேன்...பாக்கணும்....
அறிமுகத்திற்கு நன்றி தலை..
நானும் பாத்துட்டேன் சங்கர்,
படத்துல சின்ன இருக்க குறை என்னன்னா, எஸ்தர் ஏன் இப்படி ஆனாள் அப்படிங்குறத கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாம்.. IMDB-ல இருக்க Trivia செக்சன்-ல படிச்சு பாத்தீங்கன்னா தெரியும்..
இயக்குனர் ஏன் அதை விட்டுட்டார்னு தெரியல.. :(
/படத்துல சின்ன இருக்க குறை என்னன்னா, எஸ்தர் ஏன் இப்படி ஆனாள் அப்படிங்குறத கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாம்//
அதை பத்தி தெளீவா ஒரு டாக்டர் கேட்டுக்கு போன் பண்ணுவாறே.. மறாந்துட்டிஙக்ளா?
500,000
500,000
500,000
500,000
500,000
500,000
500,000
500,000
500,000
500,000 ஆவது ஹிட் நானா இருக்கனும்னு சொல்லி......... இதுக்குன்னே.... , 499,952-ல் இருந்து... கண்ணா பின்னான்னு.. என்னென்ன ப்ஜோ.. க்ளிக் பண்ணிட்டு இருக்கேன்!!!!
கண்ணுல ஒத்திக்கிறா மாதிரி என்னாமா ஒளிப்பதிவு பண்ணிருக்கானுவோ.? அடடா.! இது திரில்லரா.?
Please Visit
http://tvrk.blogspot.com/2009/10/orphan-movie-trailer.html
பாக்கணும் போலிருக்குண்ணா, படிச்ச உடனே.... ஓட்டுக்கள போட்டுட்டேண்ணா.
பிரபாகர்.
நானும் பார்த்துட்டேன் சார்.. சின்ன பெண் அப்பாவிடம் நடந்து கொள்ளும் முறை ஒரு மாதிரியாக தோன்றினாலும் அடுத்தது அவள் யார் என்று தெரியும் போது.. பல்ஸ் எகிறுது ..
நீங்க சொல்வது மாதிரி.. மாக்ஸ் ஆ வரும் குட்டி பொண்ணு செம கியுட் .. அதுவும் வாய் பேச முடியாமல்.. எக்ஸ்பிரஷின்ல பட்டைய கிளப்புறா . சிரிக்கும் போது ரொம்ப அழகு....
Fantastic....
பின்னிட்டீங்க. சூப்பரா எழுதியிருந்தீங்க தல....
படிக்கறப்பயே வயித்துல கத்தி இறங்கறா மாதிரி இருக்கு. ஏற்கனவே paranormal activity பென்டிங்-ல இருக்கு பாக்காமா. இந்த படமெல்லாம் இங்க ரிலீஸ் பண்ணமாட்டாங்களா?
500000 - வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் சார்
500000, இன்னும் பல சைபர்கள் கூட வாழ்த்துக்கள் அண்ணே....,
ஹாட் ஸ்பாட்ல படத்த மாத்துங்கன்னு போராட்டம், ஊர்வலம்னு நடத்துனாத்தான் மாத்துவீங்களா??
5))))) வாழ்த்துக்கள். நல்லாயிருக்கு விமர்சனம் தலைவரே.
பாக்கணும் போலிருக்குண்ணா, படிச்ச உடனே.... ஓட்டுக்கள போட்டுட்டேண்ணா.
விமர்சனம் அருமை. படத்தை உடனே பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம். நன்றி.
தல நான் நேத்து தான் இந்தப் படம் பார்த்தேன்.. படம் செம சூப்பர்... அந்தப் பொன்னு துப்பாக்கிய ஹாண்டில் பன்னின விதத்துலயே இது டேஞ்சர் பார்ட்டி டோய்னு ஒரு டவுட்டு வந்துடுச்சு. ஆனா க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒன்னு... படம் அருமை... உங்க விமர்சணம் போலவே.. :))
படம் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு, மீண்டும் ஒரு பின்னூட்டம்போடுறன். அப்புறம் ஐந்து இலட்சத்திற்கு வாழ்த்துக்கள். (ஓவ்வொரு ஹிட்டுக்கம் 1ரூபா படி தந்தாலே ஐந்து இலட்ச ரூபா வந்துடுமில்லை???)
யாருய்யா அது..? எனக்கு முன்னாடியே வந்து மைனஸ் குத்து குத்தினது..!
வடை போச்சே..!
பயந்து கொண்டே படித்தேன்..எங்கே thrill படங்களுக்கே உரித்தான suspense-ஐ உடைத்து விடுவீர்களோ என்று........நல்ல வேளை....அப்படி எதுவும் செய்யவில்லை....கலக்கல் விமர்சனம்....:-)
வாழ்த்துக்கள் 5 லட்சம் hits-க்கு...
தல நேத்துதான் இந்த படத்தை பார்த்தேன், என்னடா இன்னும் யாரும் எழுதலையேன்னு நினைச்சேன், நீங்க முந்திகிட்டிங்க... (சூர்யா இதைபத்தி ஏற்கனவே எழுதியதாகவோ, பேசியதாகவோ ஒரு நியாபகம்..... சரியா?)
அருமையான மதிப்புரை,ஷங்கர்.இரண்டு படங்களையும் பார்த்தே ஆக வேண்டும்.
excellent movie. semma thriller. thaniyaa pathuttu konjam yosanaiyodaye suthittu irunthen.
ஒரே த்ரில்லரா வருது... த்ரில்லர் கதை ஏதும் எழுதப் போறீங்களா?
5 லட்சத்திற்கு வாழ்த்துக்கள்.
ஐஞ்சு லட்சத்துக்கு ஒரு வாழ்த்து
ஐம்பதாயிரத்துக்குள்ள வர ஒரு வாழ்த்து
ஹாட்ஸ்பாட் வேற கிடைக்கலியா?
தலைவரே..ஒரு மைனஸ்தான் இருக்கு...ஆனா 5 லட்சம் பிளஸ்
அண்ணா அருமையான விமர்சனம். இதே ரேஞ்சுல போச்சுனா ஒரு தமிழ் படம் பாக்க முடியாது போல!
அருமையான விமர்சனம்.
வழக்கம் போல விமர்சனம்.. கலக்கல்..
தல,
உங்க மேல ஒரு பெரும் கும்பலே காண்டா (கோவமா) இருக்கு போல?..
நெகடிவ் குத்தா குத்தி தள்றாங்க.எதுக்கும் கொஞ்சம் கவனமாவே இருங்க..
ஆட்டோ வ அனுப்பிட போறாங்க..
நன்பர் சங்கர்க்கு
"Quarantine" என்ற படம் பார்த்தேன் நம்ம “Paranormal Activity” க்கு சற்றும் குரைவில்லாத திரில்லர் படம்.அதேபோல் ஒரு "Handy Camera" வைத்துகொண்டு கலக்கி இருக்கிறார்கள்.
விமர்சனம் பிலிஷ்.
www.cdmsaran.blogspot.com
seekram paakuren anne... ore nalla padama vandhutu irukku.. indha neram paathu enga veet la internet sathi senjiduchi...
unga kita paesi mudichaduku apram konja nerathula connection ambo.. athanaala unga kurumpadathayum paaka mudiyala anna :(
indha vaaram paakuren anna :)
@நாந்தாண்டா நீ
நன்றி.. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்..
@ஸ்டார்ஜான்
நிச்சயம் நீங்கள் ஒரு த்ரில்லர் பட விரும்பியாக இருந்தால் டபுள் ஓகே
@சிவன்
ஸ்டார் மீசிக்...நன்றி சிவன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
@sri
பாத்துருங்க.. நன்றி
@பட்டர்ப்ளை சூர்யா
ஊருக்கு போய் வந்தாசா.. லட்டு எங்க..?
@பிரசன்னா
எனக்கென்னவோ.. இன்னும் கொஞ்சம் தெளீவா சொல்லியிருந்தா படத்தோட பரபரப்பு குறைஞ்சிருக்கும்னு இயக்குனர் நினைச்சிருப்பாருன்னு தோணுது..
@ஹாலிவுட் பாலா
நன்றி..நன்றி.. பாலா முடிஞ்சா கூப்பிடுங்க..
@ஆதிமூலகிருஷ்ணன்
ஆமா ஆதி.. டோண்ட் மிஸ்
@ராதாகிருஷ்ணன்
உங்க விமர்சனமும் அருமை சார்
@பிரபாகர்
நன்றி .. நிச்சயம் பாருங்க..
@கிஷோர்
ஆமாம் கிஷோர்.. அதே போல் அந்த சின்னக்குட்டி மாக்ஸும் க்யூட்
@விசா
நன்றி
@வரதராஜுலு
நன்றி.. நிச்சயம் பாருங்க.. இல்லாட்டி டவுன்லோட்தான் இருக்கே
@தராசு
நன்றி.. மாத்திட்டேன்னே..
@அசோக்
நன்றீ
@பித்தன்
மிக்க நன்றிண்ணே
@ராம்திருப்பூர்
மிக்க நன்றி ராம்
@அக்கிலீஸ்
மிக்க நன்றி
@ஜனா
நிச்சயம்பாருங்க உங்களுக்கு பிடிக்கும்
@உண்மைதமிழன்
இதுக்குதான் எப்பவுமே வடைக்கு முந்திக்கணுமின்னு சொல்றது.
@நெஞ்சின் அடியில்
மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.. நான் எப்போதுமே அம்மாதிரி எழுத மாட்டேன்
@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி..
@ஷண்முகப்பிரியன்
நிச்ச்சய்ம் உங்களுக்கு படம் தருகிறேன் சார்.
@தோழி
நிஜம்தான் தோழி.. நன்றி உங்க்ள் முதல் பின்னூட்டத்திற்கு
@எவனோ ஒருவன்
எழுதிட்டாப் போச்சு
@முரளிகண்ணன்
நன்றி தலைவரே.. ஒவ்வொரு விஷயத்துக்கு தனியே என்னை ஊக்குவிக்கும் உங்களீன் அன்புக்கு
@தண்டோரா
அட ஆமாமில்ல
@ரவிகுமார் திருப்பூர்
நன்றி ரவி
@பிரதீப்
நன்றி
@சஞ்செய் காந்தி
மிக்க நன்றி
@திருமலை கந்தசாமி
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. நன்றி
@சரவணன்
நிச்சயம் பார்க்கிறேன் சரவணன்.
Sir,
Vallthukal.
Sir..
Ithu konjam Horroe type padam nu solli irukalam... Thaniye padam parthu rmba kastama pochi....
Post a Comment