Villagelo Vinayakudu – Telugu Film Review
சென்ற வருடம் விநாயகுடு என்று வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட்டான படம்.. நந்தி அவார்ட் கூட வாங்கியது.. மிக இயல்பான திரைக்கதையினால் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம்.. ஒரு அதி குண்டான வாலிபனுக்கும், சிக்கென்ற ஒரு ஆட் கம்பெனி பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாய் காமெடியாய் சொல்லியிருந்தார்கள். இப்போது அதே குருப் அந்த குண்டு வாலிபனை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த முறை கார்த்திக் என்ற குண்டு பையன் மட்டுமே.. கார்த்திக்கும், சரண்யா மோகனும் ஏற்கனவே காதலர்கள். கோதாவரியின் கரையில் ஒரு நல்ல பார்ம் ஹவுஸ் வைத்து கொண்டு ஸ்ட்ரிக்ட் அண்ட் டிஸிப்ளெயிண்ட் ரிட்டயர்ட் ஆபீசரான அவளுடய அப்பாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று குழப்பத்தில் இருக்க, அப்போது அவருடய சித்தப்பா பெண் திருமணம் வர, தன் அப்பாவிடம் சொல்ல பயந்து, கொஞச்ம் கொஞ்சமாய் தன் அத்தை, சித்தப்பா, பெரியப்பாவிடம் சொல்லி ஆதரவை திரட்ட, ஒரு வழியாய் எல்லோரும் சமாதானமாகும் நேரத்தில் கார்த்திக் வந்து நிற்க அவனின் குண்டு உடம்பை பார்த்து விட்டு மொத்த குடும்பமே எதிர்ப்பாக, எவ்வாறு கார்த்திக், சரண்யாவின் அப்பா, மற்றும் குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்து பிடிக்க வைக்கிறான் என்பது தான் கதை.
ஆங்கிலத்தில் வெளிவந்து பெரிய ஹிட்டான “Meet The Parents” என்கிற படத்தின் உட்டாலக்கடிதான் என்றாலும் மிகச் சரியாய் செய்திருக்கிறார்கள். படம் முழுவதும் வரும் ஒன்லைனர்கள் ஆகட்டும், சிட்சுவேஷனல் காமெடி ஆகட்டும், முதல் பாதி முழுவதும் தியேட்டரில் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.
வழக்கம் போல கார்த்திக்காக வரும் ‘கிருஷ்ணடு” ஸ்வீட் அண்ட் க்யூட். அவர் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், அவரது இன்னொசென்டான பேச்சும் அவரின் கேரக்டர் மேல் அபிப்ராயத்தை அள்ளிக் கொண்டு போகிறது.
சரண்யா மோகன் மாடர்ன் டிரஸ்ஸில் க்யூட்டாக இருக்கிறார். ஆனால் புடவையில் பார்பதற்கு பொம்பை போல இருக்கிறார். படத்திற்கு ஏற்ற குறையில்லாத நடிப்பு.
சரண்யா மோகனின் அப்பாவாக வரும் ராவ் ரமேஷும், அவரின் நண்பராக வருபவ்ரும் எழுத்தாள்ர் எண்டமூரி விரேந்திரநாத், கேரக்டரும் அசத்தல். என்னதான் மிலிட்டரி ஆபீஸர் என்றாலும் ஜீன்ஸ், சர்ட் போட்ட படியே அப்பா தூங்கி எழுவது ஓவ்ர்.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிற்ர் சாய்கிரண் அடவி, கதை களனையும், மிலிட்டரி அப்பா, கல்யாணம், என்று ஒரு சில விஷயங்களை மட்டும் ஆங்கில படத்திலிருந்து எடுத்துக் கொண்டு, உடம்பு குண்டாய் இருப்பதால் கார்த்திக்குக்கு கொழுப்பு அதிகமாய் இருக்கும் என்று செக் செய்ய சொல்லி இருந்தால் அவனின் உடல் நலம் சரியில்லை என்று குறை சொல்லலாம் என்று க்டும்ப டாக்டரை விட்டு செக் செய்ய, அவனுக்கு பதிலாய் அவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பதும், அதே போல் படகின் துடுப்புகள் ஆற்றில் விழுந்துவிட, கார்த்திக் சமயோஜிதமாய் குடையை வைத்து கரை சேர்வது. என்று சின்ன, சின்னதாய் அழகான க்யூட்டான சீன்களாய் அடுக்கி நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறார்.
மனிகாந்த் கத்ரியின் பாடல்கள் சுகம். அதே போல் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் நன்றாக இருந்தாலும், பல காட்சிகளில் அவுட்டாப் போகஸில் இருக்கிறது. மார்தாண்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங் கச்சிதம்.
பல வருடங்களுக்கு முன் இந்த ஆங்கில படத்தை என் நண்பர்களிடம் சொல்லி தமிழில் செய்தால் நிச்சயம் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, காமெடி படம் என்பதால் யாரும் சட்டை செய்யவில்லை. ஆனால் அப்போதே தெலுங்கில் அரை குறையாய் எடுத்து ஒரு சுமார் ஹிட் படத்தை எடுத்தார்கள். தமிழில் வி.ஏ.இசட். துரை. அப்படியே காமெடி படத்தை சீரியஸாக்கி காதல் சடு குடுவென எடுத்து தோல்வியடைந்தார். இப்போது இந்த படத்தின் வெற்றி என் கணிப்பை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
Villagelo Vinayakudu – A Feel Good Entertainer.. சினிமா பாகுந்தி.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
"நீங்களாவது கவித எல்லாம் எழுதி மைனஸ் ஓட்டு விழுது...நான் சும்மா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைன்னு எழுதி போட்ட கூட ஏழெட்டு மைனஸ் போட்டு போடுறாங்க" சூப்பர்....உங்க புகழ் எங்கயோ போய்க்கிட்டு இருக்கு. இத்தன மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னா எத்தன தூரம் நீங்க பாப்புளர் பாருங்க. கலக்குங்க தல.
விம்ர்சனம் நன்றாக இருந்தது,ஷங்கர்.
விநயக்கூடு தெலுங்குப்படம் டவுன்லோடு செஞ்சு வச்சிருக்கேன். இன்னும் பார்க்கல. தெலுங்கு படம் பார்க்க தனி தைரியம் வேணும் போலருக்குது. மொழிப்பிரச்சினைதான் பெரிய பிரச்சினையா இருக்குது :( //
எல்லாத்துலயும் ஒரு 'லு' சேர்த்திருப்பாங்க அவ்ளோ தான். துணிஞ்சு பாருங்க :D.
உ.தா: ஒரு முழம் பூ வாங்கிட்டு வா :)))
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. :)
அல்ரெடி கொஞ்சம் கஷ்டப்பட்டு பொம்மரில்’லு பார்த்திருக்கேன். புதுசா பார்த்தது மகதீரா... அதுவுமில்லாம பாலைய்யா நடிச்ச தெலுங்கு படக்காட்சிகளை யு-டியுப்ல பார்த்துட்டு பேதலிச்சு போனவன் நான். இதுல கண்ட இடத்துல ’லு’ சேர்த்தா அம்புட்டுத்தேன்.. :)
எப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சை!
மீட் தி பறேன்ட்ஸ் கதைனு சொன்னாங்க??
Kick padam pathi ezhuthungalen... :)
என்னது காந்தி செத்துட்டாறா..? கனகு.. அதெல்லாம் எழுதி எவ்வளவு காலம் ஆச்சு.. பழைய விமர்சனங்களை தேடிப்பாருங்க..:(
எந்த மொழியாயினும் நேர்த்தியான திரைக்கதை சோடை போகாது என்று திரும்ப,திரும்ப நிரூபிக்கப்பட்டலும்....
நம்ம ஆளுக திரும்ப,திரும்ப ”நொண்டிக்குதிரையில” போயி,போயி பல்ல ஒடச்சுக்குறாங்களே!!!
இது சுயவிமர்சனம் போலயிருக்கே!!!
feel good movie?
*/
konja naala than follow panrathu naala vandha vilaivu anna idhu... inimel pazhaya idukaikala theditu poduven :)
ipa than vimarsanam padichen.. nalla irundhudu anna..
athu ennamo Ravi Teja-va ennala hero ethuka mudiyala... sila scenes than pathu irukken.. romba mokkaya iruppar... indha padathula Gopichand nadichi irundar-nu neachen..
hmmm :(
so 'Jayan' Ravi nadichu vara thillalangadi-ya paakuren...
**********
ஆனால் அப்போதே தெலுங்கில் அரை குறையாய் எடுத்து ஒரு சுமார் ஹிட் படத்தை எடுத்தார்கள். தமிழில் வி.ஏ.இசட். துரை. அப்படியே காமெடி படத்தை சீரியஸாக்கி காதல் சடு குடுவென எடுத்து தோல்வியடைந்தார்.
*********
@ ஏதாவதொரு படத்தை தமிழில் மூலம் கெடாதவாறு மொழிபெயர்த்திருக்கிருறார்களா கேபிள்?...
*********
பல வருடங்களுக்கு முன் இந்த ஆங்கில படத்தை என் நண்பர்களிடம் சொல்லி தமிழில் செய்தால் நிச்சயம் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, காமெடி படம் என்பதால் யாரும் சட்டை செய்யவில்லை.
*********
வருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்படியெல்லாம் பெரிய ஆள் இல்ல தலைவரே
@ஷண்முகப்பிரியன்
ஆமாம் சார்.. படம் நல்லா இருக்கு
@சென்ஷி
இல்ல தலைவரே.. தெலுங்கு படம் எல்லாம் நல்லாவே இருக்கு
@பித்தன்
அது சரிதான்
நன்றி
@ ரமேஷ்
சத்யம்ல மட்டும்தான் ஓடுது
@காவேரி கணேஷ்
ஏன்ணே.?
அலோவ்.. அப்படி யெல்லாம் லு சேர்த்துடாதீங்க.. பிரச்ச்னையாயிருது..
ஒரு சைடுல அது பாட்டுக்கு நடந்துகிட்டுதான் இருகுது.
@குறும்பன்
ஆமாம்..
@ஸ்ரீகிருஷ்ணா
நன்றி
@ஜெட்லி
கண்ணாமூச்சி ஏனடா படம் பாதி படத்துக்குஅப்புறாம் சொதப்பியிருப்பாங்க
@ஜனா
நான் சான்ஸ் கிடைச்சா எடுப்பேன்
@
நன்றி
@எவனோஒருவன்
தமிழ்ல தானே எழுதியிருக்கேன்..
@முரளிகண்ணன்
பார்த்துட்டு சொல்லுங்க
@ரவிகுமார் திருப்பூர்
நிச்சயமாய் ஒரு படத்துக்கு திரைக்கதை தான் முக்கியம்
டவுன்லோட்டாய நமஹ
@அசோக்
நான் அவன் இல்லை
@அசோக்
அமொண்ட் ரெடியா.?
நீ பேசுறது இந்தியா..?
அக்னிபார்வை
அது செகண்ட் பார்ட்
சத்யமில ஓடுது..
முடிஞ்சா அனுப்பறேன்.
@கனகு
படிச்சிட்டீங்களா..?
@வனிலா
ஆமா
ஒரு சில படங்களை ஒரிஜினலை விட நல்லாவே எடுத்திருக்காஙக்.. என்னை பொருத்த வரை கஜினி
@நன்றி