சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம்.
ஜனவரி
பொங்கலுக்கு ரீலீசான விஜய்யின் வில்லு, சன்பிக்சர்ஸின் படிக்காதவன், ராஜ்டிவியின் செமி டப் படமான காதல்னா சும்மா இல்லை, ஏவிஎம்மின் அ..ஆ..இ..ஈ.., அதே போல தமிழ் தெலுங்கு இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட என்னை தெரியுமா?, வெண்ணிலா கபடிக்குழு என்று படங்கள் ரிலீஸானதில் விஜயின் வில்லுவை பற்றி நானேதும் சொல்லத் தேவையில்லை.ஏவிஎம்மின் அ..ஆ.. இ… படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தும் பெரிய தோல்வியை அடைந்தது. ராஜ்டிவியின் காதல்னா சும்மா இல்லை படம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், படம் நந்தி விருது பெற்றது. தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த கேரக்டரில் ரவிகிருஷ்ணாவை போட்டு அவர் சம்மந்தபட்ட காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி, வடை போச்சே கதையாகிவிட்டது. தனுஷின் பொங்கல் ரிலீஸான படிக்காதவன் படத்தின் ரிப்போர்ட் படு கேவலமாய் இருந்தாலும், சன் பிக்சர்சின் தயவால் நல்ல ஓப்பனிங். அதனால் தப்பிவிட்டது என்றே சொல்ல வேண்டும். மாதக் கடைசியில் வந்த வெண்ணிலா கபடிக்குழு. சின்ன பட்ஜெட் படமென்றாலும் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். எதிர்பார்ப்பை திருப்தி செய்ததால் ஹிட்.
தோல்வி படங்கள் : வில்லு, காதல்னா சும்மா இல்லை, அ.. ஆ..இ..ஈ,
அவரேஜ் ஹிட் : படிக்காதவன்
ஹிட் ; வெண்ணிலா கபடி குழு
பிப்ரவரி
இந்த மாதத்தில் வெளியான முக்கிய படங்கள் பாலாவின் “நான் கடவுள்” விகடன் டாக்கீஸின் “சிவா மனசுல சக்தி” பிரபு சாலமனின் “ லாடம்” த.நா.07.அல.4777. சுமார் மூன்று ஆண்டுகள் உட்கார்ந்து மெனக்கெட்டு எடுக்கப்பட்ட, சுமார் 14 கோடி செலவு செய்யப்பட்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பாலாவின் நான் கடவுள். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்காக இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் அந்த பெருமை பாலாவை சேரும். படம் பல விதமான சர்சைகளையும், சண்டைகளையும், பாராட்டுகளையும் பெற்றாலும், வசூல் ரீதியில் வெற்றியில்லை என்றே சொல்ல வேண்டும். காதலர் தினத்தன்று வெளியான சிவா மனசுல சக்தி ஜீவாவுக்கு ஒரு மறுவாழ்வை அளித்தது என்றால் அது மிகையில்லை. விகடனின் தயாரிப்பில், அவர்களின் தரத்துக்கு இந்த படம் கீழாக இருந்தாலும், வசூல் ரீதியில் பல முக்கிய ஏ செண்டர் நகர்களில் வெற்றி பெற்று சுமார் நாலு கோடியில் தயாரிக்கப்பட்டு எட்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்த படம். லக்கி நம்பர் செவனையும், கிம்.கி.டுக்கின் கதாநாயகி கேரக்டரையும் சேர்த்து செய்த லாடம் சத்தமேயில்லாமல் போக, அடுத்து வந்த த.நா.07.அல.4777 படம் ஆங்கில ஹிட்டான சேஞ்சிங் லேன்ஸை , ஹிந்தியில் டாக்ஸி நம்பர் என்று நானாபடேகருக்காகவே ஓடிய படம் தமிழில் ஏனோ வெற்றி பெறவில்லை.
தோல்வி : லாடம், த.ந.07.அல.4777
ஆவரேஜ் : நான் கடவுள்
ஹிட் : சிவா மனசுல சக்தி
மார்ச்
முதல் படம் ஓடி நாலாவது வாரம் கழித்து ஒரு படத்தை வெளியிடும் சன் பிக்சர்ஸின் தீ, ரிலையன்ஸின் தயாரிப்பில் மாதவன் நடிக்க யாவரும் நலம், சரத்தின் 1977, லிங்குசாமியின் தயாரிப்பில் நதியா ஆண்டி நடித்த பட்டாளம், ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம், அப்புறம் தமிழ் அருந்ததி. சன் பிக்சர்ஸ் மாங்கு மாங்கு என்று ரிலீஸ் டேட் அன்று காலையே சூப்பர் ஹிட் என்று விளம்பரப்படுத்தி நியூஸ் எல்லாம் போட்டாலும் ஆப்பு வாங்கிய படம். அதனாலென்ன சேனலுக்கு ஒரு படமாச்சு. ரிலையன்ஸின் தயாரிப்பில் சுமார் 6 கோடி தயாரிப்பில் தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் 27 கோடி ரூபாய் சம்பதித்த படம். சரத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஆசையில் எடுக்கப்பட்ட 1977, சரத் என்னதான் பாடி காட்டினாலும் நம்ம தலைவில் நமீதாவின் பாடிக்கு ஈடாகாமல் திரைமுழுவது தங்கத்தலைவியே ஆக்கிரமிக்க, ஒன்றும் புரியாததால் ரிசல்ட்.. விஜய் டிவியில் ஹிட்டான ஒரு சீரியலை மையமாய் கொண்டு அதே இயக்குனரை வைத்து, நதியாவை முன்வைத்து தயாரிக்கப்பட்டபடம். இந்த படங்களையெல்லாம் விட ராமநாராயண் டப் செய்து ரீலீஸ் செய்த தெலுங்கு அருந்ததி.. தமிழ்நாட்டில் ஒருரவுண்டு கட்டி அடித்தது என்றால் அது மிகையில்லை. வழக்கம் போல நல்ல சினிமா ஓடாது என்பதற்கேற்ப காஞ்சிவரத்தை யாரும் சீந்தக்கூட இல்லை.
தோல்வி படங்கள் : தீ, பட்டாளம்
ஆவரேஜ் : அப்படி சொல்ல ஏதுமில்லை
ஹிட் : டைரக்ட் படம் “யாவரும்நலம்” டப்பிங்கில் “ அருந்ததி”
ஏப்ரல்
ஏவிஎம் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அயன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ஆனந்த தாண்டவம், மிகவும் எதிர்பார்க்கப் ப்ட்ட குங்குமபூவூம் கொஞ்சு புறாவும், ராஜ் டிவியின் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த விஜய்காந்தின் மரியாதை, வினயனின் நாளை நமதே, கார்த்திக் அனிதா போன்ற படங்கள் வெளியாகின.. வெளியான நாள் முதலே சூப்பர் ஹிட் என்று தெரிந்த படம் அயன், சன் பிக்ஸர்சின் நிஜமான வெற்றிப்படம் என்றால் அது அயன் தான். தமிழில் பின்னியெடுத்த இந்த படம் தெலுங்கில் ஏவிஎம்மே டப் செய்து வெளியிட்டு தோல்வியடைந்தது வேறு விஷயம். சுஜாதாவின் பிரபல நாவலான “பிரிவோம் சந்திபோமை” அப்படியே எடுகிறேன் என்று சுஜாதாவுக்கு நல்லது செய்வதாய் நினைத்து திரைக்கதையில் தனக்கு தானே வெட்டி கொண்டார் குழி இயக்குனர் காந்தி கிருஷ்ணா. படம் வெளிவருவதற்கு முன்பே யுவனின் பாடல்கள் ஹிட்டாகியிருக்க, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவுக்கான எதிர்பார்ப்பு எகிறியிக்க,எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஈடு கட்டாததால் வேலைக்காகவில்லை. அதற்கு அப்புறம் வந்த கார்த்திக் அனிதா போன்ற படங்கள் வெளியாயின.
தோல்வி படங்கள் : கார்த்திக் அனிதா, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும், ஆனந்த தாண்டவம், மரியாதை, நாளை நமதே
ஆவரேஜ் : சென்ற மாதம் ரிலீஸான அருந்ததி,
ஹிட் : அயன்
மே
பாண்டியராஜின் பசங்க, தாய் தமிழ் செல்வனின் இயக்கத்தில். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியான நீயூட்டனின் மூன்றாவது விதி, விஷ்ணுவர்தனின் சர்வம், சக்தி சிதம்பரத்தின் ராஜாதி ராஜா, விஷாலின் தோரணையை தவிர பல சின்ன படங்களான, மெய்ப்பொருள்,பிரம்ம தேவா போன்ற படங்களும் வெளியாகின. பாண்டியராஜின் பசங்க விமர்சகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, சூர்யாவின் நீயூட்டனின் மூன்றாவது விதி வேறு யாரும் நடித்திருந்தால் கொஞ்சமாவது ஓடியிருக்க வாய்ப்பிருக்கிறது. சூர்யாவால் ஓடாத படம் என்றுதான் சொல்லவேண்டும். விஷ்ணுவர்தனின் சர்வம் மிகவும் எதிர்பார்க்க பட்ட ஒரு படம், 21 கிராம்ஸ் என்கிறா ஆங்கில படத்தின் தழுவல். சரியான திரைக்கதையில்லாமல் போனதால….., விஷாலில் தோரணை தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டு இரண்டிலும் தோல்வி அடைந்தபடம். ராஜாதிராஜாவும் அஃதே
தோல்வி படம் : நியூடனின் மூன்றாவது விதி, சர்வம், ராஜாதிராஜா, தோரணை, மெய்பொருள், பிரம்மதேவா,
ஆவரேஜ்; பசங்க
ஹிட் : அநேகமாய் ப்சங்க..
ஜூன்
மாயாண்டி குடும்பத்தார், குளிர் 100, சன்னின் மாசிலாமணி, ராகவன், முத்திரை, நாடோடிகள், வால்மிகி. மாயாண்டி குடும்பத்தார் மிகச் சிறிய பட்ஜெட்டில் சூப்பர்16ல் தயாரிக்கப்பட்டு, பத்து டைரக்டர்கள் நடித்த படம், சென்னை, போன்ற பெரு நகரங்களில் பெரிதாக ஓடவில்லை. ஆனால் பி,சி செண்டர்களில் நல்ல வசூலை பெற்று தந்த படம், பழுதில்லை. மாயாஜால் ஓனரின் பெண் அனிதா உதிப் இயக்கிய படம் குளிர்100. வழக்கம் போல சன் பிக்சர்சின் தொடர் இம்சையால் சுமாராய் கலக்ட் செய்த படம், ராகவன், முத்திரை பற்றியெல்லாம் ஏதும் சொல்வதர்கில்லை, சிவா மனசுல சக்திக்கு பிறகு வால்மிகியில் இறங்கிய விகடன் அதன் தோல்வியால் தயாரிப்பையே நிறுத்தும் அளவுக்கு அடியை கொடுத்த படம். நாடோடிகள் சசிகுமார் நடித்த படம் இவ்வாண்டின் சிறப்பாய் ஓடிய படங்களில் இரண்டு படங்களில் இவரின் பங்கு இருக்கிறது.
தோல்விபடம் : ராகவன், முத்திரை, வால்மிகி, குளீர்100
ஆவரேஜ் ; மாயாண்டி குடும்பத்தார், மாசிலாமணி
ஹிட் : நாடோடிகள்
ஜூலை
ஞாபகங்கள், இந்திரவிழா, வாமனன், வைகை, வெடிகுண்டு முருகேசன், அச்சமுண்டு அச்சமுண்டு, மோதி விளையாடு, மலையன் ஆகிய படங்கள் வெளியாகின. வித்தக கவிஞர் விஜய் நடிகராக ஆசைப்பட்டு ரெயின் கோட் என்கிறா ஹிந்தி படத்தை தழுவி எழுக்கப்பட்ட படம் ஞாபகத்தில் வைக்க முடியாத படம் நமக்கும் அவருக்கும். இந்திரவிழா நமிதாவுக்காக பார்த்த படம். சுப்ரமணியபுரம் ஜெய் தான் நடிக்கும் படத்திலே இது தான் சிறந்த படம் என்று சிலாகித்த படம். முடியல. வைகை, வெடிகுண்டு முருகேசன், அச்சமுண்டு, அச்சமுண்டு எல்லாம் பற்றி விவரிக்க தேவையில்லை. சரணின் மோதி விளையாடு வந்து சுவடே தெரியாமல் போனது. அதே போல் கரணின் மலையனும்.
தோல்வி : ஞாபகங்கள், இந்திரவிழா, வாமனன், வெடிகுண்டு முருகேசன்,அச்சமுண்டு அச்சமுண்டு, மோதி விளையாடு, மலையன், வைகை
ஆகஸ்ட்
சிந்தனை செய், ஈசா, மலை மலை, பொக்கிஷம், கந்தசாமி ஆகியவை வெளியாகின. சிந்தனை செய் ஹிந்தி ஜானி கத்தாரை தழுவி எடுக்கப்பட்ட படம் ஒரளவுக்கு சுமாரான படம் . ஆனால் சரியான விளம்பரம் இல்லாததால் ரேஸில் ஓடவில்லை, ரொம்ப நாள் கழித்து விக்னேஷ் நடிப்பில் பாலாவின் சீடரின் இயக்கத்தில் வெளியான ஈசாவை பற்றி பெரிதாய் சொல்ல எதுவுமில்லை, கதாநாயகியை தவிர, ஒரு வழியாய் அருண் விஜயின் மலை மலை ஓரளவுக்கு மக்களிடையே சென்ற்டைந்தது. படத்தின் தயாரிப்பை விட விளம்பரங்களுக்கு செலவு செய்தது தான் சிறப்பு. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சேரனின் பொக்கிஷம் படு தோல்வியடைந்தது. அதே போல் விக்ரமின் கந்தசாமி. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி புஸ்ஸானாலும் மசாலா படமாததால் நல்ல ஓப்பனிங்க பெற்ற படம்.
தோல்வி : சிந்தனை செய், ஈசா, பொக்கிஷம்,
ஆவரேஜ் : மலைமலை, கந்தசாமி
செப்டம்பர்
நினைத்தாலே இனிக்கும், மதுரை சம்பவம், ஈரம், சொல்ல சொல்ல இனிக்கும், உன்னைப் போல் ஒருவன், கண்ணுக்குள்ளே, மதுரை டூ தேனி, திரு..திரு.. துறு.துறு.. ஆகிய படங்கள் வெளியாகின. வழக்கம் போல சன் இம்சையினாலும், இரண்டு பாடல் ஹிட்டினாலும் வெகு சுமாராய் வசூல் செய்த படம், ராமநாராயணன் சன்னுக்கு ஈடாய் கலைஞரில் தொடர் விளம்பரபடுத்தியும் பெரிதாய் செல்ப் எடுக்காத படம், ஹீரோ ஹரிகுமாருக்கு பதிலாய் யார் நடித்திருந்தாலும் இதை விட பெரிதாய் ஓடியிருக்கும். சங்கரின் உதவியாளர் அறிவழகனின் ஈரம் வழக்கமான ஒரு காதல் கதையை கொடுக்காமல் கொலை, பேய் என்று வித்யாசமாய் யோசித்து டெக்னிகலாகவும், இயக்குனராகவும் நின்ற படம். மதுரை டூதேனி மிக குறைந்த செலவில் சுமார் 45-50 லட்சங்களில் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலில் வெளியான படம், சாடிலைட் ரைட்சிலேயே சுமார் 25 லட்சத்துக்கு மேல் வசூல் செய்துவிட்டது. படம் படு சுமார் என்றாலும் ஏதோ தேத்தி விட்டார்கள் என்றேன் சொலல் வேண்டும். அதே போல பெரிய படங்களுக்கு நடுவில் வெளியான சொலல் சொல்ல இனிக்கும், விளம்பரம் பெரிதாய் இல்லாததாலும், சரியான தியேட்டர்களில் வெளியாகாகதாலும் படம் நல்லாருக்கா இல்லையா என்று யோசிப்பதற்குள் ஓடிவிட்டது தியேட்டரை விட்டு. கமலில் உன்னை போல் ஒருவன் ஒரே சமயத்தில் சுமார் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 50துக்கும் மேற்பட தியேட்டர்களில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம். கமலின் ஹாட்ரிக். சத்யம் சினிமாஸின் திரு.திரு..துறு..துறு ஒராளவுக்கு நலல் பேர் பெற்றாலும் இவர்களுக்கு அதே பிரச்சனை குறைந்த தியேட்டரக்ளில் வெளியீடு, கமலுடன் வெளியானதால் கவனிக்க படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
தோல்வி: மதுரை சம்பவம், சொல்ல சொலல் இனிக்கும், கண்ணுக்குள்ளே,
ஆவரேஜ்: நினைத்தாலே இனிக்கும், மதுரை டூ தேனி, திரு திரு துறு துறு
ஹிட் : ஈரம், உன்னைப் போல் ஒருவன்
அக்டோபர்
மூணார், பேராண்மை, ஆதவன், கண்டேன் காதலை வெளியான மாதம். மூணார் அதை பற்றி பெரிதாய் பேசத் தேவையிலலை. பேராண்மை வெகு நாட்களுக்கு பிறகு ஐங்கரனுக்கு லேசான ஆக்சிஜனை கொடுத்த படம். ஆதவன் சூர்யாவின் கிரேஸ், கே.எஸ்.ஆர். கலைஞர் டிவியின் தொடர் விளம்பரம், ஹரிஸின் ஹிட் பாடல்கள், வடிவேலுவின் காமெடி என்று வெளிவந்த சிறந்த மொக்கை படம். சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுத்த படம். ஆனால் படம் ஓடியது வடிவேலினால். சிறந்த மார்கெட்டிங்கில்னாலும் வேறு ஏதும் பெரிய படம் இல்லாததாலும் பெரும்பாலான இடங்களில் நல்ல வசூல் ஒரு சில ஏரியாக்கள் தவிர. வழக்கம் போல் சன், கண்டேன் காதலை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. சந்தானம் இப்ப்டத்தின் கதாநாயகன்.
தோல்வி : மூணார்
ஆவரேஜ் : பேராண்மை, கண்டேன் காதலை
ஹிட் : ஆதவன்
நவம்பர
சா..பூ..த்ரி.. அதே நேரம் அதே இடம், நான் அவன் இல்லை 2 இப்படங்களை பற்றி சொல்வதற்கு ஏதுமிலலை
தோல்வி : மூன்றுமே
டிசம்பர்
ரேணி குண்டா, வேட்டைக்காரன். ரேனி குண்டா மிக சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியான படம். ஒரு சிறிய படத்திற்கு எவ்வாறு அக்ரசிவ் மார்கெட்டிங் செய்ய வேண்டும் என்று இப்படத்தை பார்த்தால் தெரியும். படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 4-5 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஓப்பனிங்கை கொடுத்த படம் அடுத்த அடுத்த வாரங்களில் வயலன்ஸ் அதிகமான காட்சிகளால் பெரிதாய் வெகு ஜனங்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் ஹிட்தான். வழக்கம் போல சன்னின் தொடர் இம்சை வேட்டைக்காரன். முதல் மூன்று நாட்கள் சூப்பார்ர்ர்ர் ஓப்பனிங். அடுத்த நாட்களில் தொபக்கடீர் என்று விழுந்து, அவர்களும் என்னன்னவோ விளம்பரம் எல்லாம் கொடுத்து பார்த்து கொண்டுதானிருக்கிறார்கள். மொக்கை கதை திரைக்கதையால் தூக்கி நிறுத்த முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தோல்வி : >>>??
ஆவரேஜ்: வசூலில் வேட்டைக்காரன்.
ஹிட் : ரேனி குண்டா (நிஜ ஹிட்)
சுமார் 125க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளீயாகி இருந்தாலும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் 2012லும், அவதாரும் தான் என்பது நிஜம். அந்த அந்த மாதங்களீல் வெளியான படங்களில் ஹிட் லிஸ்ட் இருந்தாலும் மொத்தமாய் இந்த வருடத்திய ஹிட் என்று கணக்கிட்டால் படத்தின் தயாரிப்பு செலவு, மற்றும் வசூலை வைத்து பார்த்தால்,
சூப்பர் ஹிட்
வெண்ணிலா கபடி குழு
அயன்
நாடோடிகள்
உன்னைப் போல் ஒருவன்
ஆதவன்
ஆவரேஜ்
சிவா மனசுல சக்தி
மாயாண்டி குடும்பத்தார்
பசங்க
கந்தசாமி
ஈரம்
பேராண்மை
வேட்டைக்காரன்
ரேனிகுண்டா
ஒரு சில படங்களை பற்றி நான் எழுதவில்லை. ஒரே வாரத்தில் ஏழு படங்கள் எல்லாம் ரிலிஸாகி தமிழ் சினிமாவையே திரும்ப வைக்க முயற்சி செய்தார்கள். :) அதை பற்றி எல்லாம் சொல்வதற்கு ஏதுமில்லை.
வாசகர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
டிஸ்கி:
லக்கியின் கூற்றுபடி இன்று மாலை காட்சி புல் என்று சொல்லியிருக்கிறார் இதோ இன்று
மாலை இப்போது எடுத்த ஸ்கீரீன் ஷாட் கமலாவுடையது.
இது சங்கம் தியேட்டர் நிலவரம். 5.50 மணீக்கு