Thottal Thodarum

Dec 29, 2009

3 IDIOTS –Hindi Film Review

3idiots

காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. போமன் ஈரானி நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, அமீர், மாதவன்,ஷர்மான். அமீர் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், மாதவன் ஒரு மிடில்க்ளாஸ், ஷர்மான் வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் இவ்வளவு சுவைபட சொல்ல முடியுமா..? முடியும் என்றிருக்கிறது இந்த குழு.
3-Idiots_200x20nov09 ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். மாதவனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஷர்மானின் வழக்கமான பரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கை, உடல்நலமில்லாத அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படும் காட்சி, பொமன் இரானி தங்களுடய மாணவர்களுக்கு டெரராய் ஒரு ஸ்பீச் கொடுக்கும் காட்சியில் அங்கேயிருக்கும் ஹாஸ்டல் சிறுவன் அவர் பேசுவதை வரி மாறாமல் மைமிங் செய்வதாகட்டும், பல லட்ச ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்த அஸ்ட்ரோனாட் பென்னை பற்றி சொல்லும் போது அதை மிக அலட்சியமாய் ஏன் அவர்கள் பென்சில் உபயோகிக்க கூடாது? என்று கேட்டு மூக்குடைபடுவதாகட்டும். ஒவ்வொரு காட்சியும் நச்சென்று உட்காருகிறது.kareena-n-aamir-in-3-idiots-wallpaper

அமீரின் வயது எல்லோருக்கும் தெரியும், படத்தில் பாருங்கள் அவரின் பாடிலேங்கு வேஜும், முக பாவனைகளூம் நிச்சயம் இருபதுகளில் திரியும் இளைஞனை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார். மிகவும் சப்டூயூட்டான நடிப்பு என்றால் அது மிகையாகாது. அதே போல் மாதவன் கேரக்டரும். வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆக வேண்டிய கனவை, தன் தந்தையின் ஆசைக்காக இஞினியரிங்கில் சேர்ந்து பார்டரில் பாஸி கொண்டிருக்கும் ஒரு இளைஞனை வெளிபடுத்தியிருக்கிறார்
three-idiots-wallpaper (1)

ஷர்மானின் நடிப்பும் அஃதே. தன் வாழ்க்கையா இல்லை நண்பனை காட்டி கொடுப்பதா என்கிற ஒரு குழப்பமான மனநிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் மூன்றாவது மாடியில் இருந்து விழும் காட்சியிலும், இண்டர்வியூவில் பதில் சொல்லும் காட்சியிலும் மனுஷன் நிற்கிறார்.

அமீர் காதலிக்கும் போமன் இரானியின் மகள் கரினா.. மிக குறைந்த காட்சிகளே  வந்தாலும் இம்ப்ரசிவ். அமீர் தன் காதலை சொல்ல குடித்துவிட்டு கரினாவின் வீட்டிற்கு போக, அங்கே அவளின் அக்காவின் கையை பிடித்து காதலை சொல்ல, அதற்கு தோதாய் ஷர்மான் கிடார் வாசித்து கொண்டு ரொமாண்டிக் பாடல்கலை பாட,  அமீர் கரினாவிடம் உன்னை முத்தம் கொடுக்க ஆசையாயிருக்கிறது ஆனால் மூக்கு தான் வந்து நடுவில் தடையாய் இருக்கிறது என்று சொல்லும் காட்சியில் திடீரென கரினாவின் அக்கா எழுந்து தன்ன வெளிப்படுத்திவிட, அதன் பிறகு நடக்கும் களேபரங்கள் சூப்பர்.
three-idiots-wallpaperமிகவும் பாராட்ட படவேண்டியவர் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும், வசனகர்த்தாவும் தான் படம் நெடுக சலிக்காத டயலாக்குள. முக்கியமாய் அந்த சமத்கார், பலாத்கார் காட்சி நிஜமாய் ரகிக்க வைக்கும். வழக்கமாய் ஹிரானியின் படங்களில் வரும் பீ பாஸிடிவ் கதை வகை தான் என்றாலும் கேரக்டரைஷெஷனில் மனுஷன் நின்னுடறார். முன்னாபாய் கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி இதில் ALL IS WELL ஸ்லோகன். ஆரம்ப காட்சிகளில் அது கொஞ்சம் நாடகதனமாய் இருந்தாலும் க்ளாமாக்ஸ் காட்சியில் வீடியோ கன்பரென்சிங்கில் கரினாவின் சகோதரிக்கு பிரசவம் பார்த்து குழந்தை பிறக்கும் காட்சியில் அந்த ஸ்லோகன் எவ்வளவு எமோஷனை கொடுக்கக்கூடியது என்று தியேட்டரில் பாருங்கள்.

ஷாந்தனு மொய்த்ராவின் இசையில் ஆல் இஸ் வெல் ஒரு இனிமையான ஹிட். மற்றபடி பெரிதாய் முணுமுணுக்க வைக்கும் பாடல்களாக இல்லவிட்டாலும், தொந்தராவாக இல்லாத பாடலகள். முரளிதரனின் ஓளீப்பதிவு நச். அநாவசிய அட்டகாசங்கள் இல்லாத அமைதியான ஒளிப்பதிவு. க்ளைமாக்ஸ் பிரசவ காட்சியில் ஒளிப்பதிவாளவும், எடிட்டரின் திறமையும் அந்த காட்சிககான டெம்போவை இன்னும் ஏற்றுகிறது.

படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்களான பர்ஸ்ட் களாஸ் எடுக்கும் மாணவன், ஹாஸ்டல்பையன், இரானியின் அஸிஸ்டெண்ட் என்று எல்லா கேரக்டர்களும் மனதில் நிற்கிறார்கள்.படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. இருக்கு.. ஆரம்ப காட்சியிலிருந்து இடைவேளை அதிர்ச்சி வரை நன்றாக போய் கொண்டிருந்த படம் இடைவேளைக்க்கு பிறகு கொஞ்சம் தொய்யத்தான் செய்கிறது. ஆங்காஙே சில காலேஜ் காட்சிகள் +2 காட்சிகள் போல இருக்கிறது. மலையாள கிளாஸ்மேட் காட்சிகள் சில இடஙக்ளில் பளிச்சிடுவது. என்று எதை எதையோ சொல்ல நிஅனிதாலும் படம் பார்த்துவிட்டு வெளீவரும் போது. ALL IS WELL

3IDIOTS – ALL IS WELL

Technorati Tags: ,



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

43 comments:

Harish Kumar said...

Good Review Cable Ji !! Thanks for providing a nice review about nice movie. - Harish
http://harisram.blogspot.com

Punnakku Moottai said...

Cable,

Review is very interesting. I hope to watch this movie soon.

I am sorry, I was unable to meet you in Dec because of other prior commitments. In fact I planned to visit you on 2nd Dec. But my car gave some unexpected problems and had to change tyres which took all my time in finding correct size tyres.

I will definitely meet you in the First week of Feb 2010.

Regards,

Bala

Unknown said...

அப்ப பாக்கலாங்கிறீங்க...

பிரபாகர் said...

அண்ணா,

இந்த வரிசையில வந்த எல்லா படங்களும் ரொம்ப பிடிச்சிருந்தது. நிறையா முறை பாத்திருக்கேன். இதுவும் ஒரு மாஸ்டர் பீஸ்னு தோனுது. இந்த வாரக் கடைசியில பாத்துடறேன். இங்க சப்-டைட்டிலோட வரும். ரொம்ப வசதி.

கலக்கல் விமர்சனம் அண்ணா!

பிரபாகர்.

Elam said...

Very nice review

சைவகொத்துப்பரோட்டா said...

//பரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கை, உடல்நலமில்லாத அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படும் காட்சி,//

படம் பார்க்கும் ஆவலை இது தூண்டுகிறது.

மேவி... said...
This comment has been removed by the author.
மேவி... said...

ama sir...... padathai polave 5 POINT SOMEONE novelum super ah irukkum..... neenga solvathai parthal character galai konjam mathi irupathu pol irukku...


kattayam novel la irunthu vithyasamaga irukkum entru therigirathu..... time kidaichal parkkiren

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் விமர்சனம்

புலவன் புலிகேசி said...

அமீர்கானுக்கு மட்டும் வயசாக மாட்டேங்குதுன்னு எங்க யூத் கேபிள் வருத்தப் படுவது தெரிகிறது. யாராவது அவருக்கு ஆறுதல் சொல்லுங்களேன்...ஹா ஹா ஹா...

Madan said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... நம்ம விஜய் இந்த மாதிரி படம் எதுவும் பாக்க மாட்டாரா? ஆமிர் கூட ஒரு மாஸ் ஹீரோ தான், ஆனா what a performance.!

SurveySan said...

good one.

அன்பேசிவம் said...

மூணாவது முன்னாபாய்ன்னு சொல்லுங்க, ரைட்டு தல லிஸ்ட்ல இன்னொன்னையும் ஏத்தியாச்சு...

Paleo God said...

All is well... ::))

Prabhu said...

அமீர்கானுக்கு மட்டும் வயசாக மாட்டேங்குதுன்னு எங்க யூத் கேபிள் வருத்தப் படுவது தெரிகிறது. யாராவது அவருக்கு ஆறுதல் சொல்லுங்களேன்...ஹா ஹா ஹா...
///

ஹி.. ஹி... என்ன சொல்லுறீங்க?

இராஜ ப்ரியன் said...

எல்லாம் நன்மைக்கே ............... :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு. யூத் அவர்களுக்கு ...

Nat Sriram said...

nandru..

ஷண்முகப்ரியன் said...

வழக்கம் போலத் தெளிவான,அருமையான விமர்சனம் ஷங்கர்.

Unknown said...

வழக்கம் போல் அருமை...

Bhuvanesh said...

பொமன் இரானியின் அருமையான நடிப்பை பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல்லியே

//சின்ன சின்ன கேரக்டர்களான பர்ஸ்ட் களாஸ் எடுக்கும் மாணவன்//

அண்ணே இது படம் புல்லா வந்த கேரக்டர்.. கொஞ்சம் மெயின் கேரக்டர் இல்ல ? அந்த 'பலாத்கார்' காட்சில பையன் ரியாக்சன் அருமை!!

CS. Mohan Kumar said...

Review is well...

மரா said...

நல்லா சொல்லியிருக்கீங்க..படம் ஏற்கனவே 4 நாளில் 100 கோடி வசூலாம்..விது விநோத் சோப்ராக்கு மச்சம் தல..அவசியம் பாக்கோணும்.

butterfly Surya said...

வழக்கப்படி கலக்கல் தான். நல்ல திரைப்படமாக இருந்தால் அதனை சரியாக பாராட்டுவதும் மொக்கையாக இருந்தால் (டிச 18) அதை போட்டு தாக்குவதும் ..

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

கலக்கல் தலை.

vanila said...

Nice review.. Planned to watch this thursday.

Cable சங்கர் said...

/பொமன் இரானியின் அருமையான நடிப்பை பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல்லியே //

இந்த படத்தில் போமன் இரானி கேரக்டர் ஒரு கேரிகேச்சர் கேரக்டர் போல் இருந்ததால் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க அந்த பர்ஸ்ட் களாஸ் பையன் வந்தாலும் அது ஒரு சப்போர்ட்டிங் கேரக்டர் தான். அதனால்தான் அப்படி சொன்னேன்

ஆரூரன் விசுவநாதன் said...

உங்கள நம்பித்தான் படம் பார்க்கப் போறேன்.......பார்த்துக்குங்க சாமி....

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கணும் .... நைஸ் விமர்சனம்...

Ashok D said...

//அவரின் பாடிலேங்கு வேஜும், முக பாவனைகளூம் நிச்சயம் இருபதுகளில் திரியும் இளைஞனை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்//
என் நியாபகம் வந்துயிருக்குமே உங்களுக்கு :))

Rajathi Raja said...

This films good direction and good acting everything is good. Also your review is fanstastic, Hindi theriyatha engalukku super review.

why tamil film industry dont take this type films ?

Thamira said...

Both are well.! ஹிஹி.. படமும் விமர்சனமும்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சூப்பர் விமர்சனம் அண்ணாத்தே..!

பிராட்வே பையன் said...

நன்று.

மேவி... said...

youth sankar sir ennoda puthu blog kku vanga ....

பித்தன் said...

i normally like this kind of melo comedy drama. As you suggested ill surely watch this movie.

பனித்துளி சங்கர் said...

(((((( ஷர்மான் வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் இவ்வளவு சுவைபட சொல்ல முடியுமா..? முடியும் என்றிருக்கிறது இந்த குழு. ))))))


உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பார்த்து விடுகிறேன்.

குகன் said...

விமர்சனம் நன்றாக உள்ளது.

Chetan Bhagat யின் 'Five point someone' நாவலை மையமாக வந்த படம் நினைக்கிறேன்.

விளம்பரத்தில் அவர் பெயர் இல்லை. நீங்களும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே !

க.பாலாசி said...

நல்ல விமர்சனம் தலைவரே...

shiva said...

தல நல்ல விமர்சனம். பலம் என்று ஒரு படம் ரீலிஸ் ஆயிருக்கு. பார்த்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க.

செ.சரவணக்குமார் said...

வழக்கம்போல அருமையான விமர்சனம்.

Muthukumar said...

நான் நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்...சான்ஸ் ஏ இல்ல. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அருமையான நகைச்சுவை.
தமிழில் இந்த படம் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கா சங்கர்?

வஜ்ரா said...

சில காட்சிகள் ஓவர் டிரமாடிக்காக இருந்தன.
பிரசவ காட்சி.
எஞ்சினியர் ஹீரோ பிரசவம் பார்ப்பது ஓவர். அப்புறம் ஆல் இஸ் வெல் என்றவுடன் குழந்தை அழுவதும் ஓவரோ ஓவர்.

Cinema Virumbi said...

கேபிள் சார் ,

நாவலாசிரியர் சேத்தன் பகத் மற்றும் படத் தயாரிப்பாளர்களிடையே காண்ட்ராக்ட் எப்படிப் போடப் பட்டதோ தெரியாது. ஆனால் '5 Point Someone' புத்தகத்தை ஒவ்வொரு வரியும் அனுபவித்த பின் படம் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். சேத்தனுக்கு எதோ பொத்தாம் பொதுவாக படக் கடைசியில் துளியூண்டு கிரெடிட் கொடுத்தது சரியல்ல ; படம் தொடங்கும் போதே டைட்டில்களில் பிரதானமாக மூலக் கதாசிரியர் பெயர் வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

நன்றி !

சினிமா விரும்பி