வெண்ணையாய் உருகும் மைசூர்பா பிடிக்கும்
நெருக்கக் கட்டிய ஜாதி மல்லி பிடிக்கும்
மேகமாய் விரியும் வெண்பட்டு பிடிக்கும்
சின்னச் சின்னதாய் மினுக்கும் தங்கம் பிடிக்கும்
இப்படி தேடி அலைந்து
கொடுத்தபின்
ஏதுக்கு இதெல்லாம் என்ற
சிணுங்கல் பிடிக்கும்
சிணுங்கல் முனகலாய் மாறி
முடியும் புணர்தல் பிடிக்கும்
புணர்தலுக்கு பின்
வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா?
என்ற கேள்வியில் மட்டும்
ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை
எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன்
Technorati Tags: கவிதை,எண்டர் கவிதைகள்
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment
69 comments:
கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு சங்கர். என்ன ENTER KEY - தான் நிறைய அடிச்சுட்டீங்க. வரிகளை இன்னும் கொஞ்சம் சரியா வரிசைப் படுத்தி இருக்கலாம். சின்ன suggestion அவ்ளோதான்.
கவிதை ரொம்ப சூப்பர்
நடுராத்திரில நல்லாத்தான் கவிதை போடுறீங்க...
மாத்திட்டீங்களா. ரொம்ப நன்றிங்க கமெண்ட்-கு இவ்ளோ சீக்கிரமா response குடுத்ததுக்கு
///புணர்ந்தலுக்கு பின் வெற்று மார்பில்
படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா?
என்ற கேள்வியில் மட்டும்
ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை
எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன் ////
இப்போ தான் தெரியுது ஏன் என்டர் கவிதைகள் எல்லாம் அஜால் குஜால் கவிதைகளா இருக்குனு. மார்கழி ராத்திரியில் கவிதை எழுதினால் சாதா கவிதை கூட சாவாத கவிதையா இருக்கும்னு.
உங்கள் திரைவிமர்சனம் பிடிக்கும்..
நிதர்சனமாய் வரும் கதைகள் பிடிக்கும்
உங்கள் கவிதையயே யார் எழுதியது என்று கேட்கும் போட்டி பிடிக்கும்.
கலக்கலாய் கொத்து பரோட்டா போட்ட பின்பு - காரம் எப்படி என்று கேட்கும் உங்களை -எங்களுக்கு நிஜமாகவே பிடிக்கும் என்பதை
இப்படியெல்லாம் மொக்கை பின்னூட்டம் எழுதி
நான் எங்கே போய் போடுவென்.
என்டர் கவியெனும்
எந்தன் அண்ணனின்
எல்லாக் கவிதையிலும்
அழகும் அதனொடு
அருமை பொருள்நிறை
எழுத்துக்கள் பிடிக்கும்...
அருமை அண்ணா! சொல்ல வந்தத நச்சுன்னு சொல்லியிருக்கீங்க!
பிரபாகர்.
கண்தூக்கம் கெட்டு
கதிரென்ன இரவில்?
காரணம் வேண்டும்
காலையில் முதலில்...
பிரபாகர்.
//பிரபாகர் said...
கண்தூக்கம் கெட்டு
கதிரென்ன இரவில்?
காரணம் வேண்டும்
காலையில் முதலில்...
பிரபாகர்.
//
ம்ம்ம்ம்ம்ம்.... இதுக்கும் கவிதையா...
சரி... கேபிளும்தான் இன்னும் தூங்கல... அவர கேட்கமாட்டீங்களோ...
/சரி... கேபிளும்தான் இன்னும் தூங்கல... அவர கேட்கமாட்டீங்களோ..//
அலோ.. நாங்க யூத்து.
கேள்வி கேட்டது உங்களை..
இதுல என்னைய ஏன் சேத்துக்கிறீங்க..
நள்ளிரவில் இடுகை
நாட்பட்ட பழக்கம்
தெள்ளிய தெரிதல்
தோணல கேட்க...
பிரபாகர்.
தம்பியும் உமக்கு
தகுந்த பதில்தான்
அம்பாய் சொன்னேன்
அன்பாய் சொன்னேன்...
பிரபாகர்.
மிஸ்டர். வம்பன், கம் ஹியர். ஸீ.. திஸ் எண்டர் கவித!!! :)
மிஸ்டர் ஷங்கர்.
யூ ஹாவ் ய க்ரேட் டாலண்ட் இன் ஹைகூ டூ,கீப் இட் அப் மேன்.
இட் சீம்ஸ் யு வொர்கிங் டபுள் ஷிஃப்ட் நவ் ய டேஸ்.;))
யூத்தென்றால் ராத்திரி
யோசித்து யோசித்து
சிந்தனையை செதுக்கி
செதுக்குவோம் கவி...
கதிர் காலையில்
காரிருளில் அல்ல
எதிர்கேள்வி கேட்டு
எழுப்பாதீர் எம்மை!
பிரபாகர்.
/ஈரோடு கதிர் said...
நடுராத்திரில நல்லாத்தான் கவிதை போடுறீங்க...
1:18 AM /
இப்புடி கேக்கற நேரமா இது? ஆமா உங்க கத என்னாங்கோ.
/பிரபாகர் said...
தம்பியும் உமக்கு
தகுந்த பதில்தான்
அம்பாய் சொன்னேன்
அன்பாய் சொன்னேன்...
பிரபாகர்./
ஓ. இதான் நைட்டூட்டி கவிதையோ? தல எழுத்து நாட்டாமைக்கும் சேர்த்து நாளைக்கு நான் தீர்ப்ப சொல்லணும்.
கவிதை அழகு கேபிள்சார்.
வானம்பாடி அய்யா
வணக்கமதை சொன்னேன்
நானிங்கு இனிமேல்
நன்றி சொல்லி விலகி
ஓட்டாமை போல
ஓடி ஒளிதலால்
நாட்டாமை முன்னே
நிறுத்தாதீர் நீரும்....
பிரபாகர்.
சூப்பர். யூத் தான் அப்படிங்குறத அடிக்கடி நிருபீகிங்க
ஐயையோ காப்பாத்துங்களேன்..
இந்த ஆள் இப்படி வரைமுறையில்லாத வன்முறையை வாராவாரம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் மீது கட்டவிழ்த்து விடராறே, யாராவது தமிழைக் காப்பாத்துங்களேன்...
இந்த ஆள தடா/பொடா எதிலாவது உள்ள தூக்கிப் போட்டு கவுஜ எழுதுறதுக்கு தடை வாஙகுங்களேன் பிளீஸ்
ஹாலி பாலா, ஏன் இப்படி???
இந்த மாதிரி ஏத்தி விட்டுத்தான் இவுரு கவுஜ எழுதுறது விடமாட்டேங்குறார்...
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கவிதை அழகு sankar
கவிதை ரொம்ப சூப்பர்
கெபில்ஜி கலகுங்க
ஜி... அவசரமா ஊருக்கு போறேன் அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்கணும் அப்புறமா வாறேன்..:))
///அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்கணும்/////
இன்னுமாங்க அந்தப் படம் ஓடுது????
//ஏதுக்கு இதெல்லாம் என்ற
சிணுங்கல் பிடிக்கும்
சிணுங்கல் முனகலாய் மாறி
முடியும் புணர்தல் பிடிக்கும்
புணர்தலுக்கு பின்
வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா?
//
நீர் கவிஞர்..நீரே கவிஞர்...என்னா யூத்து பின்னி பெடலெடுக்குதே...
//புணர்தலுக்கு பின்
வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா?
என்ற கேள்வியில் மட்டும்
ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை
எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன்//
மனதில் நிற்கும் வரிகள்...
தொடரட்டும் கவிப் பயணம்...
அன்புடன்
ஆரூரன்
//ஈரோடு கதிர் said...
நடுராத்திரில நல்லாத்தான் கவிதை போடுறீங்க.//
இதுல ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராவா இருக்கே
டக்ளஸ் ராஜூ, எங்கிர்ந்தாலும் மேடைக்கு வரவும்..
ஹாலிவுட் பாலா said...
///அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்கணும்/////
இன்னுமாங்க அந்தப் படம் ஓடுது????//
அமர காவியம்... (அய்யய்யோ மாட்டிக்கிட்டனே..) பாலா சார்..
ஹாலிவுட் பாஷைல சொல்லனும்னா brown girl in the ring...
நல்லாவே இருக்கு சங்கர்.
(அதாவது இது சீரியஸ் பின்னூட்டம். மொதல்ல எண்டர் கவிதைகளுக்கு இதே மாதிரி பின்னூட்டம் வந்திருந்தா அது லுலுலுலாய்க்கு. இது நெஜமாவே எனக்கு ரொம்பப் பிடிச்சது!)
ஹலோ அண்ணாத்த... இது எல்லாம் "எண்டர்" கவிதைகளா இல்ல "ஏடாகூட" கவிதைகளா??
:)
ஒரே குஜாலா இருக்குது கலக்குங்க யூத் ..............
"வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா?
என்ற கேள்வியில் மட்டும்
ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை
எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன்"
சூப்பர் டச்
தலையின் காக்கிக்கலர் தொப்பி பிடிக்கும்
கையிலிருக்கும் உருட்டு லட்டி பிடிக்கும்
ஆணிகள் பதித்த பூட்ஸ் கால்கள் பிடிக்கும்
அரசின் சின்னம் பொறித்த பெல்டு பிடிக்கும்
இவற்றோடு தேடி அலைந்து என்னை
பிடித்தபின்
”உண்மையச் சொல்றா” என்ற
மிரட்டல் பிடிக்கும்
மிரட்டல் கொலைவெறியாய் மாறி
முடியும் மரண அடி பிடிக்கும்
அந்த அடித்தலுக்கு பின்
உள்ளடையோடு நிற்க வைத்து, நீ கேட்கும்
எங்கடா வச்சுருக்க அவ்வளவு பணத்தையும்..?
என்ற கேள்வியில் மட்டும்
நான் திருடிய சூட்கேஸில் துணிகள் மட்டுமே இருந்ததென்பதை
எப்படி உன்னிடம், சொல்லி நம்ப வைப்பேன்
by
கேபிள்சங்கர் கொலைவெறிப்படை
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)
நெய்யாய் உருகும் வெண்ணை பிடிக்கும்
நெருக்கக் அடித்த பாதி மில்லி பிடிக்கும்
வேகமாய் அடித்திடும் சரக்கு பிடிக்கும்
சின்னச் சின்னதாய் உடைந்த முறுக்கு பிடிக்கும்
இப்படி தேடி சாப்பிட்ட பின்
கொடுக்க படுகிற பில்
ஏதுக்கு இதெல்லாம் என்ற
கேள்வி
அடிதடியாக மாறி
முடியும் சண்டை பிடிக்கும்
சண்டைக்கு பின்
சரக்கின் மப்பில் படுத்தபடி நீ கேட்கும்
என்னை நிஜமாவே பில் கொடுக்க சொல்லுறிய?
என்ற கேள்வியில் மட்டும்
ஊசலாடிக் கொண்டிருக்கும் நட்பை
எப்படி உன்னிடம் கடன் வாங்குவேன்
வர வர கேபிள் கவித படிக்க வரேன்னா இல்ல டக்ளஸ் கவிதைய படிக்க வர்றேன்னான்னு தெரியல.
சும்மா நச்சுன்னு கீதுபா
/////இந்த மாதிரி ஏத்தி விட்டுத்தான் இவுரு கவுஜ எழுதுறது விடமாட்டேங்குறார்...
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//////
நான் எங்கிங்க ஏத்திவிட்டேன். இந்த வம்பன்.. இன்னைக்கு கிடைக்கிற இடத்துல எல்லாம் பூந்து விளையாண்டு கிட்டு இருக்காரு.
இங்க போட்டுவிட்டா.. ஜாலியா பொழுது போவுமேன்னு பார்த்தேன். அவரு எடம் பார்த்து அடக்கி வாசிச்சிட்டாரு... அம்புட்டுதான்.
மத்தபடிக்கு நானும்.. கொலைவெறியில தான் இருக்கேன்.
எங்க இதைவேற... அகநாழிகை புத்தகமா போட்டுடுவாரோன்னு பயமா வேற இருக்கு. :) :)
@பலாபட்டறை : அஞ்சரைக்குள்ள வண்டியை பிடிச்சிட்டீங்களா???
விமர்சனம் எதுவும் கவிதையா எழுதற ஐடியா இருக்குங்களா தல???
/////வர வர கேபிள் கவித படிக்க வரேன்னா இல்ல டக்ளஸ் கவிதைய படிக்க வர்றேன்னான்னு தெரியல.////
எட்றா அருவாள..!
இங்க ஒருத்தரையே தாங்க முடியாம தள்ளாடிகிட்டு இருக்கோம். இதுல வேற...!!! :) :)
லவ்லி தல ...!
பாலா நேத்து ராத்திரி என்னோட எண்டர் கவிதையெல்லாம் மனப்பாடம ஒப்பிச்சிட்டு.. இனனைக்கு ஸ்ரீராமுக்காக பயப்படாதே நானிருக்கேன்.. தைரியமா சொல்லு.. ;0))))))))
சூப்பர் தல
டக்ளசுக்கு எவ்ள பணம் கொடுக்கிறீங்க
atually.. I have an important meeting with...ok... I will come back later... ஓடுங்கடா சாமிங்களா....
Really gud Shankar !!!
கிராமத்து நினைவலைகள்--புகைப்படங்கள்
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.html
I liked Dumbi Mevi's kavithai.
நல்லா இருக்கு அண்ணா...
@டம்பி மேவீ
படிச்சிட்டு தனிய சிரிச்சிட்டு இருக்கேன்...
டிபிக்கல் சங்கர் ஸ்டைல்..
கவிதைக்கு பின்னூட்டம் பார்த்திருக்கிறேன்..பின்னூட்டமே கவிதையாய் இங்கே மட்டும் தான்!
//atually.. I have an important meeting with...ok... I will come back later... ஓடுங்கடா சாமிங்களா....//
hallooo.. thamizhlaye oodurathu thane... ethukku english.. pinnuthatile ore pugaiya theriyuthe... seekiram thanni kudinga:))))
கேபிள் அண்ணன் யூத்-ன்னு இப்ப நம்புறோம். நல்ல எழுதி இருக்கீங்க...ஆனா, ENTER key- ஐ, ரொம்பப் பிடிக்குமோ?--செங்கோவி
கேபிள்,
எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!
கொஞ்சம் பயமாத்தானிருக்கு. என்ன செய்ய?
தாங்கித்தான் பார்போமே!!
//அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்கணும்//
////இன்னுமாங்க அந்தப் படம் ஓடுது????////
அய்யோ! பழசை எல்லாம் ஞாபக படுத்திங்களே!!
ஆப்பெரேட்டர் வாழ்கன்னு கோஷம் போட்டது இன்னும் மறக்கவேஇல்லே.
இப்படிக்கு,
புண்ணாக்கு மூட்டை
////ஈரோடு கதிர் said...
நடுராத்திரில நல்லாத்தான் கவிதை போடுறீங்க.//
இதுல ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராவா இருக்கே
//
:))
கவிதையும் சரி ,எதிர்க்கவிதையும் சரி, சூப்பர்.:-)))))))))))))))
என்டர் தட்டியே வாழ்க்கை ஓட்டிடுவிங்க போல .
என்னே... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கவுஜைகள்!!!
மார்கழி பனியில் காளை ஒன்று தறி கெட்டு ஓடுது. பிடிங்கப்பா.....
வர வர உங்க எண்டர் கவிதையை விட ராஜூவோட எதிர்கவிதை சூப்பரா இருக்கு. என்னன்னு கவனிங்க ஜி
தல நான் நினைக்கிறேன் நீங்களும் இலக்கிய(வி)வாதியாகிட்டீங்களோன்னு...பொய்த்தவ வெளியீட்டுக்கு எல்லாம் தொடர்ந்து போனா இப்பிடித்தான்.....
கவிதையை ரசித்..தேன் தலைவரே..
அதேபோல உங்களின் கொலைவெறிப்படையையும் நல்லாத்தான் தயார் செய்து வைத்திருக்கீங்க....
பதிவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பின்னூட்டங்களும் அருமை..
தூள் கிளப்புறீங்களே தலைவா!
நாந்தான் லேட்டா வந்து கமெண்ட்டுறேன்..
என்னிடம்
இருக்கும்
உங்களுக்கான
நட்பை
இன்னும்
இன்னும்
எண்டர்
அடித்துக்கொண்டே
இருப்பேன்..
அட..
வந்துருச்சே!!
இங்க போய் பாருங்க!
http://writervisa.blogspot.com/2009/12/blog-post_2772.html
//Punnakku Moottai said...
கேபிள்,
எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!
கொஞ்சம் பயமாத்தானிருக்கு. என்ன செய்ய?
தாங்கித்தான் பார்போமே!!
//அஞ்சரைக்குள்ள வண்டிய பிடிக்கணும்//
////இன்னுமாங்க அந்தப் படம் ஓடுது????////
அய்யோ! பழசை எல்லாம் ஞாபக படுத்திங்களே!!
ஆப்பெரேட்டர் வாழ்கன்னு கோஷம் போட்டது இன்னும் மறக்கவேஇல்லே.
இப்படிக்கு,
புண்ணாக்கு மூட்டை
//
::::))))))))))))நீங்கதானா அது ...??
=========================
ஹாலிவுட் பாலா said...
@பலாபட்டறை : அஞ்சரைக்குள்ள வண்டியை பிடிச்சிட்டீங்களா???
விமர்சனம் எதுவும் கவிதையா எழுதற ஐடியா இருக்குங்களா தல??//
=
சரி புடிங்க பாலா சார்..
எண்
டர்
( க)
விதை
கள்..
பாலா, அடங்க மாட்டியா..?
மினி யூத் பாலா .. வாழ்க..
எண்டர் கவிதைகளை விட கொலைவெறி படையின் கவிதை சூப்பர்
இந்தக் கவிதையை ரொம்ப ரொம்ப ரசித்தேன்
யாருப்பா என்னை அடங்கச் சொல்லுறது? :)
அங்க
பாருங்க!
பட்டறை
சும்மா
உருகி
ஊத்துது!!!
:)
:)
அர்ஜண்டாக கொலைவெறிப் படையில் இடம் தேவை.
அண்ணே உங்க கவித பிரமாதம்.
அப்படியே ஜக்குபாய் படம் இன்டர்நெட்-ல ரிலீஸ் ஆயிடுச்சு.அத பார்த்துட்டு விமர்சனமும் போட்டுடுங்கோ.
இன்ன குறை-ந re-ரெகார்டிங் இசை தான் இல்லை. .
-- தவிடு மூட்டை
in the year end, good mood to go with.
Post a Comment