Thottal Thodarum

Dec 17, 2009

Avatar -2009

Avatar-Teaser-Poster ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் படம். avatar1உலகிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்க பட்ட படம். 3டியில் எடுப்பதற்காக புதிய கேமராவை வடிவமைத்து தயாரித்திருக்கும் படம், அது இது என்று ஏகமாய் பிரஸ்தாபிக்கப்பட்ட அவதார் சென்னையில் நேற்று இரவு பீரிமியர் செய்யப்பட்டது. உலகளவில் 178 ஐமாக்ஸ் தியேட்டர்களில் 18 ஆம் தேதியும், 83 ஐமாக்ஸ் தியேட்டரில் 3டியிலும், மொத்தம் 261 ஐமாக்ஸ் தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் ஒரே படம்.

சரி படத்திற்கு வருவோம் 2154வருடத்தில் பூமியில் ஒரு போரில் இடுப்புக்கு கீழ் செயலிழந்த ஜாக் என்பவனை அவதார் என்னும் ஒரு ப்ராஜெக்டுக்காக செலக்ட் செய்யப்பட, இந்த ப்ராஜெக்டின் மூலமாய் அவனால் நடக்க முடியும் என்று சொல்லப்பட, அதற்காக ஆவலுடன் பண்டோராவுக்கு வருகிறான்.
avatar

avatar11 பண்டோரா எனும் ஒரு இடம் பல விசித்திரங்களையும், ஆபத்துகளையும் தன்னுள்ளே அடக்கி கொண்டுள்ள, சாட்டிலைட்டுகளால் கூட தேடி பிடிக்க முடியாத ஒரு அடர்ந்த காடாகும் அந்த காட்டில் நவி எனும் ஒரு விதமான மனிதர்களை விட திறமையான, உயரமான சுமார் பத்து அடி என்று வைத்துக் கொள்ளுங்கள், வித்யாசமான முகம், காது, மற்றும் வாலுடன், நீல நிற உடலோடு, ஒரு சிறந்த அத்தெலெட்டின் உடலமைப்போடு அந்த காட்டையே உயிராக கொண்டு வாழ்கிறவர்கள். இவர்களை பற்றி, இவர்களின் ஆசா பாசங்களை பற்றி தெரிந்து avatar9கொள்வதற்காக்வும், அங்கே கிடைக்கும் உலகின் சிறந்த மினரல்களுக்காகவும் தான் அவதார் ப்ராஜெக்ட். சாதாரண மனிதர்கள் பண்டோரா காட்டில் சுவாசிக்க முடியாது. அதற்காக ஸ்பெஷால் உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜன் மாஸ்குகளுடன், ரோபோக்களால் ஆன ஒரு போர் படையை உருவாக்கி வைத்திருக்கிறது அவதார் ப்ரஜெக்ட் குழுவினர்.

avatar6 நவி மக்களின் ஒருவனின் உடலை கொண்டு, ஜாக்கின் எண்ணங்களை அதனுள் செலுத்தி அவர்களின் ஆசா பாசங்களையும் அங்குள்ள விபரங்களை அறிய அனுப்பப்படும் ஜாக்கை, நவி கும்பலின் இளவரசி நேத்ரி காப்பாற்றி அவனை தங்கள் குழுவுடன் சேர்த்து கொள்ள அவனுக்கு பயிற்சி கொடுத்து, அவ்னும் ஒரு ந்வி குழுவினன் தான் என்று நிருபிக்க உதவுகிறாள். இதனிடையில் அவனுடன் காதல் கொள்ள, அவர்கள் இனத்தையே அழிக்க நினைத்து, ரோபோ, ஹெலிகாப்டர்கள், கன்கள் என்று ச்கல ரத கஜ துரத பாதாதைகளுடன் அவதார் குழுவினர் பண்டோராவில் இறங்க, அதை எதிர்க்கும் ஜாக்கின் சுவிட்சை அவதார் ப்ராஜெக்டில் ஆப் செய்து விட இங்கே பண்டோராவில் வெறும் பிண்டமாய் விழுந்து கிடக்கிறான் நவி ஜாக், அவதார் குழுவினர் பண்டோராவின் மீது படையெடுப்பதை விரும்பாத டாக்டரும், இன்னும் சில நண்பர்களும் தனியே கிளம்பி, நவி ஜாக்குக்கு எவ்வாறு உயிர் கொடுக்கின்றனர்? பண்டோராவை ஜாக் நவி கும்பலை கொண்டு எப்படி காப்பாற்றுகிறான்? கடைசியில் உயிர் வேறு உடல் வேறாக இருக்கும் ஜாக்கின் நிலை என்ன? என்பதை வெள்ளித்திரையில் காண்க.
avatar2
கதை என்று பார்த்தால் ஹாலிவுட் அம்புலிமாமா கதைதான். வில்லன் கும்பல் கதாநாயகனே, வில்லன்களுக்கு வில்லனாகி, ஏழை எளியவர்களை காப்பாற்றும் ஹிரோயிஸ எம்ஜிஆர் கதை தான் என்றாலும், அதை கொடுப்பதற்காக, பிண்ணனியில் உள்ள கற்பனையும், உழைப்பும் சும்மா சொல்லக் கூடாது பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். பண்டோராவுக்கு ஜாக் நவிவாசியாய் பயணப்படும் காட்சியிலிருந்தே பார்வையாளர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றால் மிகையில்லை. வண்ணங்கள் கொஞ்சும் ப்ளோரசண்ட் காடுகள், அந்தரத்தில் தொங்கும் மலைகள், எங்கிருந்தோ…. கொட்டும் அருவி, வண்ணத்து பூச்சியின் வண்ணக்கலவையை மிஞ்சும் பறக்கும் டிராகன்கள், நம்ம ஊரு தாத்தா பூச்சி போல நம் கண் முன்னே மிதக்கும் பஞ்சு பூச்சிகள், ஆறு கால் சிங்கம் போன்ற உடலமைப்பில் உலாவும் மிருகங்கள், யானையையும், காண்டாமிருகத்தையும் சேர்ந்தார் போல அதகல படுத்தும் மிருகங்கள், டிசைன் டிசைனாக, ஹெலிகாப்டர்களும், விமானங்களும், வார்தைகளால் வர்ணிக்க முடியாத காண கண் கொள்ளா காட்சிகள்.
avatar8

நடிப்பென்று பெரிதாய் ஏதும் சொல்ல முடியாவிட்டாலும் ஜாக்காக நடிக்கும் சாம் வொர்திங்டனின் நடிப்பு நன்று. நேத்ரியாக வரும் ஸ்சோ சல்டானாவின் பங்களிப்பும் அஃதே. பழைய ஏலியன்ஸ் சிங்கரோனிவீவரும் படத்தில் இருக்கிறார். படம் பூராவும் டெக்னீஷியன்களின் உழைப்பு மலை, மலையாய் தெரிகிறது. படத்தில் எது சிஜி, எது நிஜம் என்று இனம் பிரிக்க முடியாத அளவிற்கான ஒளிப்பதிவு, மிக அற்புதமான எடிட்டிங்க, ஆர்ட் ஒர்க், என்று எங்கெங்கும் காணினும் வாய் பிளக்க வைக்கும் பிரம்மாண்டஙக்ள்.
avatar5

நெடுகிலும் காடுகளை காப்பதை பற்றியும், நவி குலத்தாருக்கும், அவர்களுடய, கூந்தலுக்கும், செடி கொடிகளுக்கும், உள்ள நெட்வொர்களை உணர்வுபூர்வமாய் மாற்றி அதை உணர வைப்ப்தாகட்டும், ஈடன் கார்டன் போன்ற ஒரு ப்ளோரசண்ட் தொங்கும் தோட்டதில் ஜாக்கும், நேத்ரியும் காதல் கொள்ளும் காட்சியிலாகட்டும், மிதக்கும் மலைகளூடே தாவித்தாவி எகிறி குதித்து, அருவியின் மேல் நின்று அங்கிருக்கும் புதிய டிராகன்களில் ஒன்றை தன்னுடய வாகனமாய் தேற்தெடுக்க, போராடும் அந்தர காட்சியாகட்டும் விஷுவல் ட்ரீட். 2டியில் பார்த்தாலே மிரட்டலாய் இருக்கும் இந்த காட்சிகள், 3டியில் அள்ளிக் கொண்டு போகிறது.

ஜேம்ஸ் ஹார்னரின் இசையை படம் முழுக்க எபக்டுகளுடன் விரவி இன்னும் மெருகூட்டுகிறது. மரோ பிரேவின் ஒளிப்பதிவு அசத்தல். எடிட்டிங்க் டீமில் கேமரூனும் உள்ளார். முக்கியமா பாராட்ட பட வேண்டியவர்கள் சிஜி டீமும், அனிமேட்ரானிக்ஸ் ஆட்களும், தான் முழுக்க முழுக்க இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இவ்வளவு கச்சிதமாய் விஷூவல்ஸ் வந்திருக்காது.
avatar4 ஆல்மோஸ்ட் அந்த நவி குழுவினருடன் நாமும் ஓடுவதும், தாவுவதுமாய் ஒரு விர்சுவல் ஷோவையே நமக்கு உணர வைத்திருக்கிறார் இயக்குனர். அதிலும் பல காட்சிகளில் அவர்கள் குதிக்கும் போது நம் காலில் குறுகுறுக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் கொஞ்சம் ஸ்டெரெயினாக கூட இருக்கிறது.

அவதார் – நிச்சயமா தியேட்டரில் மட்டுமே பார்த்து பிரம்மிக்க கூடிய படைப்பு.

டிஸ்கி:
சாந்தம் தியேட்டரில் டிக்கெட்டுடன் தனியாய் இருபது ரூபாய் வாங்குகிறார்கள் டிக்கெட் விலையில்லாமல் 3டி கண்ணாடிக்கு. நவி ஆட்களுக்கான முக அமைப்பை பார்த்தால் ரஜினியின் பாபாஜி படம் போல இருக்கிறது. படம் நெடுகிலும் நவ்விகாரர்கள் பெயரில், படத்தின் பெயரில் இந்தியத்தனம் நிறைய..



தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

71 comments:

வெற்றி said...

விமர்சனம் அருமை....எல்லாவற்றிலும் பாஸ்ட் ஆக இருக்கிறீர்கள்......மீ தி first....

அண்ணாமலையான் said...

கண்டிப்பா பாத்துடறேன் தலைவா. ஸ்பீடா, சூப்பரா எழுதிட்டீங்க..

க.பாலாசி said...

விமர்சனமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது...

Paleo God said...

GREAT POST... THANKS CABLEJI :))

kanagu said...

yen na inga 16th-eh release pannitanga?? atha pathi edavathu theriyuma???

itha poi paakanum.. seekram paathutu solren :) :)

vimarsanam nalla irunduthu na... :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அப்ப அவசியம் தியேட்டரில் பார்த்துடுவோம் !

Prabhu said...

ஐ, பாலாக்கு முன்னாடி போட்டுட்டீங்க!
அவருக்கு இருக்கு!

சங்கர் said...

அண்ணே, விமர்சனம் சூப்பர்,

சுட்டி விகடன் 3D கண்ணாடி கொண்டுபோய் படம் பார்க்கலாமா? (20 ரூபா மிச்சம் பண்ணலாம்னு தான்)

கணேஷ் said...

Super Review!

Ganesan said...

தலைவரே,,

அவதார், ஹாலிவுட் படம் என்றதும் நீங்களும் ஹாலிவுட் ஸ்டைல்ல எழுதுறீங்க.

2 தடவ படிச்சா தான் விமர்சனம் புரியுது.

தமிழ் படம் எல்லாம் ரீலிசான அன்றைக்கு.

ஹாலிவுட் படம் முதல் நாளைக்கே.

பதிவர்களூக்கு நீங்கள் ஆற்றும் பணி மெச்சதக்கது.

பாலா said...

//////
ஐ, பாலாக்கு முன்னாடி போட்டுட்டீங்க!
அவருக்கு இருக்கு!//////


அண்ணே.. இங்க இன்னும் படம் ரிலீஸே ஆகலை. அதுக்குள்ள எங்க எழுதறது???

இன்னைக்கு நைட்தான்.. படம். இன்னும் 15-16 மணி நேரம் ஆகும்.

========

ஷங்கர்..... பின்னுறீங்களே....??! :) :) எல்லாத்தையும் பிரிச்சிட்டீங்களே? கொஞ்சம் விட்டு வச்சிருக்கலாமில்ல?

இனிமே.. நான் என்னத்தை எழுதறது?

=====

ஷண்முகப்ரியன் said...

Excellant,Shankar.Thank you on behalf of the Great creator James Cameron.

geethappriyan said...

தல முந்திக்கொண்டு விமர்சித்தமைக்கு நன்றி ஓட்டுக்கள் போட்டாச்சு

Ashok D said...

ஆவலா இருக்கு :)

பெயரிலும் இந்தியதன்மையிருக்கு

ஜெட்லி... said...

அதுக்குள்ள பார்த்தாச்சா....நான் திங்ககிழமை தான் போவேன்...

Kabi said...

கேபிள்ஜி சூப்பர், friday IMAXல ticket book பண்ணியாச்சு, நல்ல இல்லாட்டியும் குடுத்த காசுக்கு படம் பாத்துதான் ஆகணும்...

hollywoodbala உங்கல கேபிள்ஜி முந்திடாரு...இருந்தாலும் நிங்களும் கட்டாயம் பதிவு போடணும்.

Unknown said...

விக்கிபீடியா படிக்கிற மாதிரி இருக்கிறது உங்கள் விமர்சனம். தமிழ் ,தெலுகு படங்களுக்கு எழுதுற மாதிரி இல்லை.

பிரபாகர் said...

இந்த வாரம் பார்த்துவிடுகிறேன்... பார்த்து உங்களை அழைக்கிறேன் அண்ணா!

பிரபாகர்.

Thamira said...

எதிர்பார்த்த ரிஸல்ட்தான். இன்னும் அடக்கமுடியாத ஆவல் எழுகிறது. இந்த வாரம் ஊருக்குச்செல்வதால் அடுத்த வாரம்தான் பார்க்கமுடியும்னு நினைக்கிறேன். :-((

(அப்புறம் இந்தப்பதிவில் குறைந்த பட்சம் ஒரு நூறு எழுத்து, இலக்கணப்பிழைகள் இருக்காது? எண்ணிச்சொல்லவா? காவேரிகணேஷ் பின்னூட்டம் பார்த்தீங்கதானே..)

Chitra said...

very nice review.........

Mugilan said...

அட்டகாசமான விமர்சனம் கேபிள்'ஜி!

சரவணன். ச said...

எப்போ எப்போ என்று எதிர்பார்த்த இரண்டு படம் 1.2012 அடுத்து அவதார். விமர்சனம் வேற இன்னும் ஆவல தூண்டுது. நாளைக்கு இரவு காட்சி போகபோறேன்.காசு கொடுத்தாலும் அனுபவிக்க முடியாத ஊர் எங்க ஊர் 3Dய சொன்னேன். நல்ல வேலை இத பாத்துட்டு நம்ம சர்தார் விஜய் வேட்டைக்காரன 3Dயில எடுக்கல வேற வேற வேற(trailorல வற்ற மாதிரியே படிக்கவும்) 6Dயில சுறாவ எடுத்தரபோரார்.

butterfly Surya said...

Most expected film. Xlent Review.

கேபிள்.. ஒரு போன் போட கூடாதா..??

உங்க பேச்சு “கா”

Truth said...

கேபில்,
இன்னும் படமும் பார்க்கவில்லை, உங்க விமர்சன்மும் படிக்கவில்லை. ஆனா அடிச்சு சொல்றேன், இந்த படம் கண்டிப்பா ஒரு பிரமாண்டமான மொக்கை படமாக இருக்கும். இவனுங்களுக்கு புதுசா யோசிக்கவே தெரியாது. ஒரே பலகாரத்தை வேற வேற தட்டுல வெச்சி கொடுப்பானுங்க.

மத்தத பாத்துட்டு வந்து சொல்றேன். ஒரு வேலை, படம் நல்லா இருந்தா, நான் அவ்வ்வ்வ்வ்... :)

Raghu said...
This comment has been removed by the author.
Raghu said...

ச‌னிக்கிழ‌மை இந்த‌ ப‌ட‌ விம‌ர்ச‌ன‌ம் எழுதுவீங்க‌, ப‌டிக்க‌லாம்னு நென‌ச்சேன், ஆனா அதுக்குள்ள‌........க‌ல‌க்குறீங்க‌‌!

என‌க்கென்ன‌வோ Truth சொன்ன‌துபோல‌தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா War of the Worldsக்கும் 2012க்கும் குமுத‌த்துல‌ வ‌ர்ற‌ மாதிரி 6 வித்தியாச‌ம்தான் இருந்த‌து

வேட்டைக்கார‌னை வேட்டையாட‌ தயாராயிட்டிரூப்பிங்க‌ளே?

Anonymous said...

I am very much disappointed to see my comment been deleted :( any ways thank you for your reception :)

புலவன் புலிகேசி said...

தல அவதார் நாளைக்கு மதியம் புக் பன்னிட்டோம்..உங்க விமர்சனம் பாத்ததும் படத்துக்கு புக் பன்னியாச்சு...நன்றி தல

சே.ராஜப்ரியன் said...

நல்ல விமர்சனம் ............. தலைவரே

நையாண்டி நைனா said...

I have to see in 3D.

Dinesh said...

hay put the vettaikaran review before today evening... unga review pathuttudan padam pakka poganum..

எறும்பு said...

ஆஹா நான் இந்த வாரம் ஊருக்கு வேற போறேன்.... அடுத்த வாரம்தான் பாக்க முடியும்....
நிச்சயம்மா 3Dlathaan பாக்கணும்

தராசு said...

ஆமா, அதென்ன புரியாத வார்த்தைகள் நிறைய இருக்கு விமர்சனத்துல.

வரதராஜலு .பூ said...

செம ஃபாஸ்ட் விமர்சனம்.

Keddavan said...

சூப்பராயிருக்குது விமர்சனம் ..படம்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினை அதிகரிக்கவைத்திருக்கின்றது..காதல்காடச்சிகள் பிரதானமாக இருக்கும் என்று சொன்னார்கள்..அதைப்பற்றி பெரிதாக நீங்கள் ஒன்னும் சொல்லவில்லையே..

மகா said...

அட்டகாசமான விமர்சனம்....

Unknown said...

தல் இங்க இன்னிக்கு ரிலீஸ்... பார்க்க ஆவலை தூண்டும் விமர்சனம்....
அப்படியே.... இன்னோருவிமர்சனத்திற்கு வெய்டிங்...

ஆனா... அதன் ரிசல்ட்,,என்னவோ.....?

Cable சங்கர் said...

/I am very much disappointed to see my comment been deleted :( any ways thank you for your reception :)//

பாலாவின்.. எப்ப பின்னூட்டம் போட்டீங்க. எப்ப டெலிட் பண்ணேன்.. என்னோடதுல கமெண்ட் மாடரேஷனே கிடையாது.. தலைவரே.. நீங்க எது எழுதினாலும் அது வரும்.. சோ.. என் வேலை கிடையாது.. வேனுமின்னா திரும்பவும் நீங்க எதை சொல்ல நினைச்சீங்களோ அதையே சொல்லுங்க

vanila said...

impulsive vimarsanam.
நாளைக்கு போறோம்ஜி ..

shortfilmindia.com said...

/impulsive vimarsanam.//

vimarsanam avvalava nalla illaiya..

cablesankar

Cable சங்கர் said...

என்னோட தமிழ் மண ஓட்டெல்லாம் என்னாச்சு..?

நேத்து ராத்திரி ஏற்கனவே 4/4 இருந்திச்சு.. அடக்கடவுளே..

கேபிள் சஙக்ர்

மேவி... said...

thala...tamil la 3d yil vanthu irukkaaa???


kadhai class nnu newspaper pottu irukke????

sariyana visual treat nnu sollunga

வெங்கட் நாகராஜ் said...

அன்புள்ள Cable Shankarji, மிகவும் நல்ல விமர்சனம். உங்களது வலைப்பூவிற்கு இது எனது முதல் வருகை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிற படம் .வேட்டைக்காரன் விமர்சனம் எப்போ போடுவீங்க?

SUBBU said...

//ஸ்ரீ said...
நான் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிற படம் .வேட்டைக்காரன் விமர்சனம் எப்போ போடுவீங்க?
//

அந்த படத்துக்கு விமர்சனம் வேர வேனுமா???

வஜ்ரா said...

விஜய்யின் வேட்டைக்காரன் ஊத்திக்கப்போவது உறுதி..என்கிறீர்கள்...சரி சரி...

Unknown said...

Namba Avatar "Vettaikaran" Enna anar? atha sollunga boss

Anonymous said...

உங்கள் வேகம் அபாரம் கேபிள்
நேற்று முன்தினம் இங்கு யு.கேவில் படம் வெளியானது. பார்த்தேன் வியந்தேன், வியந்தேன், வியந்தேன்.

முதல் நிமிடம் அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.. ஆஹா மீண்டும் பாட்டி சுட்ட வடையே தானா என்று எண்ணிக்கொண்டு இருந்த என்னை நேராக கொண்டுபோய் சிறு குழந்தை ஆக்கி பண்டுராவில் இறக்கி விட்டு விட்டார் காமெரோன். (பிறகென்ன
அடுத்த இரண்டரை மணி நேரம் நம் கண்கள் இமைக்க மறுக்கும்).
பின்னணி இசையில் ஜேம்ஸ் பின்னி பெடல் எடுத்து விட்டார். OST தரவிறக்கம் செய்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

கொபேன் ஹேகனில் விவகாரம் சூடாக இருக்கும் இந்த வேலையில் மிக சரியான செய்தியோடு (PLEASE SAVE THE ENVIRONMENT) இந்த படம் வந்திருப்பது மேலும் சிறப்பு.
மிகச்சிறந்த காண்பனுபவமாக இருக்கும் இந்த படம் மீண்டும் மக்களை திரைஅரங்குகளுக்கு அழைத்து வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

-பாலா

BALA said...

தவறுக்கு மன்னிக்கவும் கேபிள்! எனக்கு நேற்று மாலை தெரிந்த பின்னூட்டம் இரவு காணமல் போனதில் எழுதி விட்டேன். கண்டிப்பாக பிழை உங்கள் மேல் இருக்காது... மீண்டும் மன்னிக்க :)

ஸாரா said...

One correction.....Pandora is a distant planet millions of miles away from earth....as u said Avatar is a great entertainment....

COVAIGURU said...

super sir

COVAIGURU said...

veetaikaran eppo sir?

Romeoboy said...

இன்னைக்கு காலைல படம் பார்க்கலாம்ன்னு அரங்கத்துக்கு போன எனக்கு முன்னாடி 300 பேருக்குமேல வரிசைகட்டி நிக்கிறாங்க.. ஹ்ம்ம் இது வேளைக்கு ஆகாது அப்பறம் பார்த்துக்கலாம்ன்னு வந்துட்டேன். உங்க பதிவ படிச்சா உடன் நாளைக்கே போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்

துபாய் ராஜா said...

விமர்சனமும், படங்களும் அருமை.

Cable சங்கர் said...

@vetri

நன்றி

@அண்ணாமலையான்
மிக்க நன்றி நிச்சயம் தியேட்டரில் பார்க்கவும்

@க.பாலாசி
நன்றி

@பலாபட்டறை
மிக்க நன்றி

Cable சங்கர் said...

@கனகு
ஒரு நாள் முன்னாடி பெயிட் ப்ரிவுயூ

@அருப்புக்கோட்டை பாஸ்கர்
நிச்சயம்


@பப்பு
இந்த பாத்தையாவது அவருக்கு முன்னாடி பாக்க முடிஞ்சிதே..

Cable சங்கர் said...

@கனகு
ஒரு நாள் முன்னாடி பெயிட் ப்ரிவுயூ

@அருப்புக்கோட்டை பாஸ்கர்
நிச்சயம்


@பப்பு
இந்த பாத்தையாவது அவருக்கு முன்னாடி பாக்க முடிஞ்சிதே..

Cable சங்கர் said...

@சங்கர்
நன்றி.. சத்யமில் வேறு மாதிரி கண்ணாடி தலைவரே

@கணேஷ்
நன்றி

Cable சங்கர் said...

@காவேரி கணேஷ்
மிக்க நன்றி.. அவ்வளவு குழப்பமாவாஇருக்கு

@ஹாலிவுட் பாலா
உனக்கா சொல்லில்த்தரணும்..

@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்

Cable சங்கர் said...

@கார்த்திகேயனும், அறிவுத்தேடலும்
நன்றி

@அசோக்
என்னவோ உடனே போய் தியேட்டர்ல பார்த்துடறமாதிரிதான்

@ஜெட்லி
நிச்சயம் 3டில பாருங்க

@கபி
நிச்சயம் பாருங்க

@அம்மாகண்ணு
என்னது விக்கிபிடியால படிக்கிற மாதிரியா.. கொஞ்சம் தமிழ்ல எழுதினா இப்படி பாராட்டுறீங்களே..:)

@பிரபாகர்
நிச்சயம் சொல்லுங்கள்

@

Cable சங்கர் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
அப்படியா சொல்றீங்க.. பாத்துடறேன்

@சித்ரா
நன்றி

@முகிலன்
நன்றி

@சரவணன்.ச
ஒரு டியிலயே பாக்க முடியாது வேட்டைக்காரனை இது 6டிய..?:)))

@பட்டர்ப்ளை சூர்யா
திடீர்புரோக்ராம் தலைவரே

@

Cable சங்கர் said...

@ட்ரூத்
ஒரே பலகாரமா இருந்தாலும் டிபரண்டா சர்வ் பண்னியிருக்காங்க

@குறும்பன்
முடிஞ்சிருச்சு வேட்டை

@புலவன் புலிகேசி
நன்றி

@எஸ்.ராஜா
நன்றி

Cable சங்கர் said...

@நையாண்டி நைனா
நிச்சயமா

@தினேஷ்
ஓடிருங்க.. வேகமா ஓடுங்க.. வேட்டைக்காரன் வர்ராரு..

@ராஜகோபால்
ஆமாம்

@தராசு
கொஞ்ச்ம் தமிழ்ல் எழுதலாம்னு ட்ரை பண்ணினேன்

@

Cable சங்கர் said...

@வரதராஜுலு.பூ
நன்றி

@ராஜீபன்
காதல் காட்சிகள் பிரதானமா..? அப்படி ஒன்றும் இல்லையே தலைவரே..

@மகா
நன்றி

@பேரரசன்
தெரிந்தே தான் போக வேண்டியிருக்கு

Cable சங்கர் said...

@டம்பிமேவி
ஆமாம் தமிழிலும் 3டியில் வந்திருக்கு

@வி.நா.வெங்கடராமன்
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல..வெங்கட் நாகரான்

@ஸ்ரீ
போட்டாச்சு

@சுப்பு
ஹி..ஹி

@வஜ்ரா
எவ்வளவு நம்பிக்கை

@டிவா
பார்த்துட்டு சொல்றேன்

@பாலாவின்
நிச்சயம் மக்களை தியேட்டருக்குள் 21/2 மணிநேரம் கட்டி போட்டு வைத்துள்ளார்கள்

@பாலா
எதுக்குங்க மன்னிப்பு போன்ற வார்த்தையெல்லாம். நிச்சயம் உங்களூக்கு உங்களுடய பின்னூட்டம் வரலைன்னா கோபம் வரத்தான் செய்யும் அதற்கான காரணத்தை சொன்னதும் புரிஞ்சிட்டீங்களே அதுக்கு நான் தான் நன்றி சொல்லணும்

@ஸாரா
சரி ஓகே. ரைட்ட்

@கோதயம் குரு
நன்றி

@ரோமிபாய்
நிச்சயம் 3டியில்

@துபாய் ராஜா
நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் சூபெருன்கன்னா

Arun said...

Excelllent review sir. I always wait for ur review after the film release..

- செகு - said...

நல்ல விமர்சனம்.

அவதாரைப் பற்றிய என் விமர்சனத்தை இங்கு சென்றும் பார்க்கலாம்

http://blogsenthil.blogspot.com/2009/12/blog-post.html

அஹோரி said...

என்னமோ போங்க.
அந்த படத்த பாத்துட்டு வந்ததிலிருந்து ஒரே 'தலைவலி' .

என்னன்னு ... கூகிள் ல விசாரிச்சா ...

http://3dmoviedude.com/?p=234

இப்படி சொல்றாங்க .
எது எப்படி இருந்தாலும் , படம் அட்டகாசம்.

Anbu said...

இன்னிக்கு அவதார் பாக்கலாம்னு இணையத்துல சீட்டு வாங்கலாம்னு பார்த்தா எல்லாமே ஒரு வாரத்துக்கு "ஹவுஸ் புல்" சரி அப்படியே நம்ம எலி வேட்டைக்கு போகலாம்னு பாத்தா எல்லா அரங்கத்துலயும் சீட்டு இருக்கு!

இதுதான் கலிகாலமா , தமிழ் படங்களுக்கு வந்த சோதனை!

அன்புடன்,
அன்பு

muthu said...

I want to see this avatar flim.. Is it possible to see this movie in 3D effect with tamil in chennai.. If yes means plz give d theatre name....