Thottal Thodarum

Dec 3, 2009

சூத்திரங்கள் - உரையாடல் கவிதை போட்டிக்காக...

ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

சூத்திரங்கள்
m&wbike
அலையும் கூந்தல் முகத்தை மறைக்க

ரகசிய உதடுகள் காது கடிக்க

உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க

மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக

கால்கள் அகற்றி தொடைகள் உரச

கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த

இந்த இறுக்கம்

காதலா?

காமமா?

நம்பிக்கையின்மையா?

அறிந்து கொள்ள ஆசை

மனம் பிறழ்ந்து போகும் முன்


Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

35 comments:

யாத்ரா said...

முன் பதிவிலேயே சொல்லிவிட்டேன், நல்ல கவிதை,வாழ்த்துகள் தலைவரே 5 லட்சம் hits மற்றும் 500 followers, தொடருங்கள்

இராகவன் நைஜிரியா said...

புரிஞ்சபிறகு எனக்கு தனிமடலில் சொல்லுங்க

Unknown said...

நீங்களும் கவிஞர் ஆகிடிங்களா?
வாழ்த்துகள்..

Guru said...

anbin cable anne,

501kkum, 5.5 latchathukkum vaazthukkal.

apram kavithai superr..

amaam me the firstaa??

பா.ராஜாராம் said...

சரி,நடத்துங்க.எதிரியை நான் வீட்டுக்குள்ளயே வச்சிருக்கேன். :-)

வாழ்துக்கள்ஜி

பெசொவி said...

//ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி//
followers 501 - சோப்பு போடறவங்க எண்ணிக்கை ...ஹிஹி..
(அதெல்லாம் சரி, போட்டிக்கு அனுப்பலாமா கூடாதான்னு நேரடியா கேக்காம என்ன இது பிள்ளை விளையாட்டு? சாரி, யூத்து விளையாட்டு)

மணிஜி said...

காம சூத்ரா...

புலவன் புலிகேசி said...

கவிதை அருமை...வாழ்த்துக்கள் 500000 மற்றும் 500 க்கும்

sathishsangkavi.blogspot.com said...

கேபிள் ஜீ............

இது அனுபவக்கவிதைன்னு நினைக்கிறேன்? சரியா ஜீ?

Unknown said...

கவிதை அருமை.., 5.5 எல்க்கும் 500 க்கும் வாழ்த்துக்கள்

செந்தில் நாதன் Senthil Nathan said...

500-க்கு வாழ்த்துகள்!! கவிதை சூப்பர்..

Ashok D said...

கவிஞர்கள்கிட்ட சேராதிங்கன்னு எவ்வளவோ சொன்னேன் நீங்க கேக்கல. இப்போ நீங்களும் கவிஞர் ஆகிட்டீங்க.. வாழ்த்துகள்.

பூங்குன்றன்.வே said...

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தல !!

நிலாரசிகன் said...

கவிதை அருமை :)

செ.சரவணக்குமார் said...

ஓகோ நீங்க டைரக்ட் பண்ணப்போற படத்துல நீங்களே பாட்டு எழுதுவீங்களோ? நம்ம உலக இயக்குநர் பேரரசு மாதிரி!!

நேசமித்ரன் said...

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

/மனம் பிறழ்ந்து போகும் முன்/

முதல் ஆறு வரிகளிலேயே மனம் பிறழ்ந்து , கடைசி வரியை படிக்கும் போது பக்கத்திலிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறது மனது .;-)

நல்லக் கவிதை , வெற்றிக்கு வாழ்த்துக்கள் கேபிள் ஜி !

கமலேஷ் said...

கவிதை
ரொம்ப நல்லா இருக்கு...
வெற்றி பெற வாழ்த்துக்கள்....

Cable சங்கர் said...

@யாத்ரா
நன்றிண்ணே.. நீங்கள்லாம் ஒத்துகிட்டதுல ரொம்ப சந்தோஷம்

@இராகவன் நைஜீரியா
உங்களுக்கு சொல்லாமயா..

@பட்டிக்காட்டான்
நீங்களும்னா.. அப்ப நீங்க கவிஞரா..?:)

@குரு்
இல்லேண்ணே.. கவிதைக்கு நன்றி

@பா.ராஜாராம்
அட நான் நிஜமாவே கவிதை எழுதிட்டனா..????

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
ஹி...ஹி.. சும்மாத்தான் விளையாடினேன்

@

Cable சங்கர் said...

@தண்டோரா

:)
@புலவன் புலிகேசி
நன்றி புலவரே

@சங்கவி
முதல்ல இதுகவிதையான்னே ஒரு சந்தேகம் இருந்து, இப்பத்தான் ஒத்துட்டு இருக்காங்க

@பேநாமூடி
நன்றி தலைவர்ர்

@செந்தில்நாதன்
நன்றி

@டி.ஆர்.அசோக்
உங்ககூட சேர்ததை சொன்னீங்களா..?அதை கணக்குல சேர்த்துக்காதீங்க:)

@பூங்குன்றன்
வெற்றியெல்லாம் இல்ல சும்மா ஒரு பார்ட்டிசிபேஷந்தான்

Cable சங்கர் said...

@நிலாரசிகன்
அடப்போங்கப்பா எனக்கு சந்தோஷம் தாங்கமுடியல..

@செ.சரவணக்குமார்
அது ஒண்ணுதான் பாக்கி அதையும் பண்ணிரலாம்

@நேசமித்ரன்
அண்ணே நீங்களெல்லாம் எழுதற எடத்துல வெற்றியாவது ஒண்ணாவது.. சும்ம்மா லுல்லுலாயி

@ஜெனோவா
இது கூட கவிதையாத்தானிருக்கு

@கமலேஷ்
நன்றி

குசும்பன் said...

//காதலா?

காமமா?

நம்பிக்கையின்மையா?
//

கேபிளாரே கவிதை எழுத சொன்னா ஸ்கூல் வாத்தியாராட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு! போய் ஒழுங்கா கவிதை எழுதுவது எப்படின்னு சைதாப்பேட்டை ஆபிஸில் ஒருவர் கத்து கொடுக்கிறார், அவரிடம் ஸ்பெசல் கிளாஸ் போங்க!

Unknown said...

காதல் கவிதையை காமத்துடன் சொல்லியுள்ளீர்கள்

Karthick Chidambaram said...

அண்பு நண்பரே -

உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

Thenammai Lakshmanan said...

கேபிள் சங்கர் மனம் பிறழ்ந்து போகுமுன் பதில் கிடைத்ததா

நல்லா இருக்கு

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thamira said...

உங்கள் கேள்விகளுக்கும், உங்கள் மனம் பிறழ்வதற்கும் என்ன தொடர்பு? என சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

ஹிஹி.. இப்படிச் சிந்திக்கச்செய்வத்துதான் சிறந்த கவிதைன்னு கவுஞர்கள் சொன்னாங்க.. அப்ப இது சிறந்த கவிதையா? அவ்வ்..

Vidhoosh said...

ம்ம். நடக்கட்டும். அசந்தர்ப்பமாய் வந்துட்டேன் போலருக்கு. :))
-வித்யா

vanila said...

உண்மையை சொல்லனும்னா.. வார்த்தைய மடக்கக்கூட இல்லை.. ம்ஹூம்..

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு கேபிள்ஜி.. வாழ்த்துக்கள்!
ஆக்சிடெண்ட் ஆகாம இருந்தா சரி :-)

Cable சங்கர் said...

@kusumban

அவரு கிட்ட கேட்டுத்தான் எழுதினேன்..:)


@ஸ்ரீதர்
ஹி..ஹி..ஹில்

2இமயவரம்பன்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. நிச்சய்ம் வந்து படிக்கிறேன்.

Cable சங்கர் said...

@எஸ்.ஏ.நவாசுதீன்
நன்றி

@தேனம்லக்மணன்
நன்றி

Cable சங்கர் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
அப்ப கவிதை தானா இது..

@விதூஷ்
ஏன் ஏதாவது தப்பா ஆயிருச்சா..

@வனிலா
இப்ப என்னனு சொல்றீங்க..

@உழவன்
நன்றி

@சக்தி த வேல்
நன்றி..

Paleo God said...

ரைட்டு... கண்டிப்பா உங்களுக்குத்தான்...:-))) வாழ்த்துக்கள்..

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

Radhakrishnan said...

தெரிந்து கொள்ளாமலே இருந்துவிடுவது மிகவும் நல்லது.

அருமையான கவிதை.