தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர்.
சரி வேட்டைக்காரன் படத்திற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா..? நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒரு மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது? விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள்? உலக சினிமாவையா? அல்லது லாஜிக்கான திரைக்கதையையா..? என்று கேட்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விஜயின் எவர்கீரின் ஹிட்டுகளான கில்லியாகட்டும், போக்கிரியாகட்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும், லாஜிக் மீறல்களையும் தாண்டி ஒரு அருமையான பரபரப்பான பார்வையாளர்களை கட்டி போட்டு உட்கார வைக்கும் திரைக்கதை இருந்தது என்பதை நிச்சய்ம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
+2 நான்கு வருடம் ஃபைல் ஆன ஒரு விஜய்க்கு ரோல் மாடல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஸ்ரீஹரி, அவரை போல ஐ.பி.எஸ்ஸாகி ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று போராடி படித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு சுபயோக சுபதினத்தில் பாஸாகி ஏஸி ஸ்ரீஹரி படித்த காலேஜிலேயே போய் ஜாய்ன் செய்கிறார். சந்தர்ப்ப வசத்தால் தன் நண்பி ஒருவருக்காக ஊரில் யாருமே எதிர்க்க பயப்படும் சாய் குமாரிடம் நேருக்கு நேராய் மோதி பகையை வாங்கிக் கொள்ள, விஜய்யை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸும் அலைய, பவர் இல்லாமல் தனியனாய் இருக்கும் ஸ்ரீஹரி விஜயை அதிலிருந்து காப்பாற்றி உதவுகிறார். விஜய்யை வில்லன் கோஷ்டியினர் என்ன செய்தார்கள்? எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..
போலீஸ் ர்வியாக விஜய, பெரிதாய் ஏதும் செய்யவில்லை அவர் இந்த படத்தில் வழக்கம் போல ஆடுகிறார், பாடுகிறார், காமெடியாய் நடிக்கிறேன் பேர்விழி என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கண்களை சிமிட்டி, காமெடி செய்கிறார். எடிட்டர், ஒளிப்பதிவாளர் உதவியால் பரபாப்பான சண்டை காட்சியில் பங்கு கொள்கிறார். அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார் வேறொன்றும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை.
அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை. அனுஷ்காவுடன் பார்க்கும்போது தமிபியாய் தெரிகிறார். வழக்கமான பெரிய பட்ஜெட் ஹீரோயினுக்கான எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் அவரின் ஓவர் மேக்கப் இன்னும் கெடுத்து விடுகிறது. இம்மாதிரியான ஸ்கிரிப்ட்களீல் வழக்கமாய் பார்த்த இரண்டாவது நிமிடம் காத்ல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்.
காமெடி என்கிற பெயரில், ஸ்ரீநாத், சத்யன், ஷாயாஜி ஷிண்டே, சுகுமாரி என்று ஒரே அறுவை பட்டாளம். முடியலைடா சாமி.
படத்தில் ஒரளவேணும் பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் கோபிநாத். விஜய் ஆண்டணியின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது ஹிட் ரகமாய் இருந்தாலும் படத்தில் ராங் பிளேஸ்மெண்ட். முதல் நான்கு வரிகளில் இருக்கும் பெப் அடுத்தடுத்த வரிகளில் சுருதி இறங்கி விடுகிறது.
சமீப காலத்தில் இவ்வளவு மொக்கை வில்லனை பார்க்கவில்லை. அவ்வப்போது காரில் வந்திருந்து ஹைஸ்பீடில் நிற்பதும் நுணலும் தன் வாயால் கெடும் அல்ப சப்பையாக சலிம் கவுஸ். நாலு சீனுக்கு ஒரு முறை ஒரு மாசத்தில அவன் எங்கயோ போயிட்டான், மூணு மாசத்தில பெரிய ஆள் ஆயிட்டான் என்று சொல்லிக் கொண்டிருப்பதை தவிர, வேறொன்றும் பெரிதாய் செயய்வில்லை.
இவரின் மகனாய் சாய்குமார், இவரின் ஹேர்ஸ்டைலும் பாடிலேங்குவேஜும் ஓகே. ஆனால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவுக்கு மெனக்கெடுகிர்றார். படம் முழுக்க இவர் ஏதோ வெறி பிடிதார் போல கத்துகிறார்.
அவ்வளவு பெரிய கோடீஸ்வர வில்லன் படு மொக்கையாய் சாராயம் கடத்துவதும், சிட்பண்ட் கம்பெனி நடத்துவதும், போன்ற ஏப்ப சாப்பை வேலைகளாய்தான் செய்கிறாரே தவிர புதிதாய் ஏது யோசிக்க முடியவில்லையா இயக்குனரே. ? ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ.? பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..? வழக்கமாய் என்னதான் ரவுடியானாலும், ஏழைப்பங்காளனாகவும், வில்லனை பழிவாஙக் அவனது சொத்துகளை அழிப்பதும், லாலிபாப் குழந்தை கூட அடுத்த காட்சி என்னவென்று சொல்லிவிடும்.
நல்லா ஒரு விஷயமும் இல்லையா என்றால் ஆங்காங்கே பாடல்களில் விஜ்யின் நடனமும், சின்ன சின்ன ரியாக்ஷன்களும், விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பெரியதாய் ஜோடி சேரவில்லை என்றாலும் சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச். அதே போல் என்னடா எல்லா விஷயத்திலும் மொக்கையாகிவிட்டானே வில்லன் என்ன செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அமைச்சராகப் ஆயத்தமாகும் காட்சி.. அடநல்ல மூவாக இருக்கிறதே என்று லேசாய் புருவம் உயர்த்த வைக்கும் கட்சிகள்
வேட்டைக்காரன் – எலி வேட்டை
டிஸ்கி: சின்ன தாமரை பாட்டில் பூச்சாண்டியாக வரும் விஜயின் கெட்டப் படு பயங்கரம்
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment
122 comments:
அப்ப இந்தவாட்டியும் அவுட்டா...இது ஆவறதில்ல...அப்ப சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சுடுவாரு :-)
தல..படம் பாக்கலாமா வேண்டாமா? எனக்கு US (dallas) la ப்ரீ டிக்கெட் கெடைச்சுருக்கு..இருந்தாலும் ரிஸ்க் எடுக்கணுமான்னு நெனைக்கறேன்
//சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச்.//அதானே.. யூத்து ஹாப்பி ஆகிட்டாரே இந்த ஒரு விஷயத்திலாவது!!
//வேட்டைக்காரன் – எலி வேட்டை//
Ha ha !!
சன் டிவி விளம்பரத்திலேயே ஹிட் மாறி காட்டிடுடுவாங்க பாருங்க
பாராட்ட வேண்டியதை பாராட்டி, தவறுகளையும் சுட்டிக்காட்டும் அழகான விமர்சனம் அருமை.
நீங்க தான் சொல்லிக்கிறனும் படம் சுமாரென்று !!
சன் டிவி லொப்பை படத்தைய்யே ஹிட்டாக்கும் போது இதெல்லாம் அவங்களுக்கு ஜூஜூபி !!!
:-)))
அருமையான விமர்சனம்
minus ஓட்டுக்கு நன்றி..
வேட்டைக்காரன் – எலி வேட்டை
ne kalakku chithappu...
nellai la ராம் முத்துராம் காம்ப்ளெக்ஸ் pone cut out paarthathum escape
sari .. vettaikaaran vimarsanam enga thala ..
ithu sura story pola irukku ..
வேட்டைக்காரன் – எலி வேட்டை
ne kalakku chithappu...
nellai la ராம் முத்துராம் காம்ப்ளெக்ஸ் pone cut out paarthathum escape
sari .. vettaikaaran vimarsanam enga thala ..
ithu sura story pola irukku ..
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நீங்க தான் சொல்லிக்கிறனும் படம் சுமாரென்று !!//
palani valluvar theatre & ramesh la pakkalaya...
padam sumar illa mokka
Starjan ( ஸ்டார்ஜன் ) sir ...
பேசாம அவதார்ல நடிச்சிருக்கலாம்
குருவி, வில்லுவையெல்லாம் மனசுல வெச்சுட்டு பார்த்ததுனால எனக்கு ஓரளவு பிடிச்சுப் போச்சுங்க.
வேற வழி?
தலைவிக்கு மேக்க அப் ஒவரோ? இருந்தாலும் பரவாயில்லை , எல்லா பாலிவூட் நடிகைகளும் 40இல் தான் ஹாட்டாக இருக்கிறார்கள் தலைவிக்கு இருபத்தி ஏழு தானாம் . ரஜினி ஷ்ரியா கூட ஆடினால் ஓகே , அனுஷ்கா விஜய் கூட ஆடினா அக்காவா ?
தானதோக்க போறபடத்திற்க்கு வீணா எதிர்ப்பு நடவடிக்கையெல்லாம் ஈடுபட்டு எனர்ஜிய வேஸ்ட் பண்ணீட்டாங்களே...
எலிய குட வேட்டை அட முடியாது தலைவா இந்த வெட்டைகாரணல
his movie he used a sinhala singer. why?
vijay showing his congress colors?
wish this is also a flop
his movie he used a sinhala singer. why?
vijay showing his congress colors?
wish this is also a flop
எப்படிண்ணா உண்மைய பளிச்சுன்னு சொல்ல முடியுது?
ஹாட்ரிக் அடிச்சிடும் போலிருக்கு!
அப்பா, சாமி! இதுக்கப்புறாமாவாவது கொஞ்சம் திருந்த முயற்சி பண்ணுங்க!
பிரபாகர்.
// வேட்டைக்காரன் – எலி வேட்டை //
:-))
vimarsanam super.
Oru changukku padam nalla irunthirumonnu ninaichen..
Telugu padathai copy-adichu copy-adichu padam nadichu hit-aanathala, inimel vijay padam ellam (pazhaya) telugu padam polathan irukkum, fight, song with color dress, villain is herione's dad and doing sumggling...etc.
பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ.? பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..? ..................... ha,ha, ha,ha,..padaththai vida ungal vimarsanam nallaa irukku.
மயிலைப் பார்த்து வான்கோழி ஆடியதாம்..
விஜய்யே ஒரு வான்கோழி+ கோமாளி!!... உங்கள் விமர்சனம் நகைச்சுவையாகவும் அருமையாகவும் உள்ளது... தொடரட்டும் தங்கள் பணி!!
என்னது எலி வேட்டையா? ஆமாம் நீங்க யாரு எலின்னு சொல்லவே இல்ல....அவ்வ்வ்வ்வ்வ்
தல நீங்க என்னதான் வேட்டைக்காரன் – எலி வேட்டைன்னு டிஸ்க் போட்டாலும் சவுத் சைடுல நல்ல ஒபெனிங். சிட்டி குள்ள கூட ஜகஜோரா பட்டைய கிளபிடிச்சு, நான் உங்க பதிவ படிச்ச பிறகுதான் படத்துக்கு போகணும்ன்னு இருந்தேன். படிச்சிட்டேன் தியேட்டர்ல காத்து வாங்கும் போது பார்த்துக்குறேன்.
என்ன தல 4 மைனஸ் ஓட்டு அதுக்குள்ள .. ஹா ஹா ஹா
எப்படி கேபில்ஜி, இந்த மொக்கைய முழுசா பாத்தீங்க...
// Kabi said...
எப்படி கேபில்ஜி, இந்த மொக்கைய முழுசா பாத்தீங்க.//
அதுதான் தல......நாம கஷ்டப் படக் கூடாதுன்னு அவர் தியாகம் செஞ்சுருக்கார்.
கேபிள் அண்ணே, உங்க தயவுல, நாங்க தப்பிச்சுட்டோம். அது சரி, "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" ஒளிபரப்பும்போது இந்தப் படத்தை பார்ப்பதில் தவறில்லையே?
பூவே உனக்காக படம் வந்தப்ப அந்த தியேட்டர்ல வேலை பார்த்தேன். ஐம்பது நாளும் நாலு காட்சியும் அலுக்கவே இல்லை. நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் அப்படின்னு பல படங்களை பலதடவை (காசு கொடுக்காமதான்) பார்த்திருக்கேன். கடைசியா நான் தியேட்டர்ல பார்த்த படம் கில்லி. அதுக்கப்புறம் ஒரு படமும் பார்க்கலை. எங்க விமர்சனத்தை நாலு வரி படிச்சாலே பேதியாயிடுதேதியாயிடுதே... அப்புறம் தியேட்டருக்குப் போக உடம்புல தெம்பு எங்க இருக்கும்?
"எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..
சின்ன தாமரை பாட்டில்
பூச்சாண்டியாக வரும் விஜயின் கெட்டப் படு பயங்கரம்"
கலக்கிடிங்க்னா ஹய்யோ... ஹய்யோ...
//வேட்டைக்காரன் – எலி வேட்டை
எலி வடைய வேட்டையாடறத தான் சொல்றீங்க? சரியா சொல்லியிருக்கீங்க.
இந்த விஜய்லாம் திருந்தவே மாட்டார் தல...
//அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை.//
நானும் அனுஷ்காவும் நடிச்சிருந்தா அந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜில்லாம் சரியா இருந்துருக்கும்.
கேபிள் சார் ..விஜய்ய உங்களுக்கு ஏற்கனவே பிடிக்காது.. அப்புறம் அவரு படத்த மட்டும் எப்படி நல்லா இருக்குனு சொல்லுவிங்க?
படம் நல்லா இல்லன்னு நாங்க தான் சொல்லணும் நீங்க சொல்ல கூடாது..:):)
கேபிளாரே உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். விஜய் ரசிகர்களுக்கே படம் சுமார் தான். இந்தப் படத்தை ராகுல் காந்திக்கு போட்டுக்காட்டுவார்களா?
இன்னும் எத்தனை காலம் விஜய் கொலை செய்வார்.. யாராவது சொல்லுங்க..,
ஐ லவ் இட். பேசாம காங்கிரஸ்ல சேந்து வட்ட செயலாளர் ஆகியிருக்கலாம். ரஜினிக்கு கதை யோசிச்சே நம்ம இயக்குனர்களுக்கு கற்பனை வற்றி போச்சு. இப்ப அதே மாதிரி பார்முலாவுல வளர ஒரு ஆளுக்கு கிட்ட தட்ட் நூறு திரைப்படங்களுக்கு கதை யோசிக்கிற அளவுக்கு நம்ம சுற்றி சுழலும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஹை பை பேட்டி கொடுக்கும் இயக்குனர்களுக்கும் கதை திரைக்கதை வசனம் என எல்லா ஈவன்டிலும் தன் பெயர் தான் வரவேண்டும் என நினைக்கும் இக்கால இயக்குனர்களுக்கும் திறமை இல்லை என்பதை ஒப்புக்கொண்டு பழைய ரஜினி திரைப்படங்களை அப்படியே எடுத்தாவது ஓட்டலாம். அதை விட்டு விட்டு இன்னொரு வாட்டி வேட்டைக்காரன் அயன் அப்படின்னு சொல்லி எவனாச்சும் சன் பன் டி.வி.ல வாங்கடா என் டி.வி. உடஞ்சாலும் பறவாயில்ல அடி நிச்சயம்.
சாரி அயன் இல்ல ஆதவன். தப்பா டைப் பண்ணிட்டேன்.
விஜய் திருந்தவேண்டிய அவசியம் இல்ல. அவர மாதிரி பார்முலாவுல இருக்குற ஒரு ஹீரோ வணிக ரீதியா தேவ தான். ஆனா அவருக்கு தீனி போட தான் நம்ம அறிவு ஜீவி இயக்குனர்களுக்கு முடியல. இந்த கேடுக்கு கதை கிடைக்கலைன்ன உடனே நடிக்க வேற ஆரம்பிச்சுடுறானுவ இயக்குனர் நடிகர் திலகங்கள். வாழ்க தமிழ் சினிமா இயக்குனர் பேரவை.
வேட்டைக்காரன நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஏமாத்திட்டானுவ. இனி மேல் தமிழ் சினிமாவ காசு கொடுத்து பாத்தா கேளுங்கடா....
மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக.." போறதுக்கு முன்னே மாரியம்மன் கோவில்ல மந்திரிச்சுக்கிட்டு..(எங்கூர்ல தியேட்டர் கொஞ்சம் முன்னாடி இந்தக்கோவில் இருக்கு)
எனக்கு விசா கமெண்ட் புடிச்சுருந்தது.
அப்பறம், நீங்க எழுதியிருக்கதப் பார்த்தா, அந்த "சஞ்சய் ராமசாமி"யோட சேர்ந்தா படம் பார்த்தீங்க..?
:-)
சரி, சரி,
எப்படியோ படம் பார்க்கபோயி, படத்தை பார்த்ததுக்கு அப்புறமும் நல்லபடியா வீடு போய் சேர்ந்தீங்களே, அதுவே போதும்.
/ ரஜினி ஷ்ரியா கூட ஆடினால் ஓகே , அனுஷ்கா விஜய் கூட ஆடினா அக்காவா ?
//
பிரகாஷ்.. நீங்க எழுதினதை நீங்களே படிங்க.. உங்களுக்கு புரியும்.. :))) நான் ஏன் அப்படி சொன்னேன்னு :)))))
கேபிள் சங்கர்
அய்யய்யோ இந்த தடவையும் வடை போச்சே!
எப்போ தான் இந்த கொசுத் தொல்லை தீருமோ!! சன் டிவியை பொறுத்தவரை இது வசூல் சாதனையாம்....கஷ்ட காலம்!!
தல இந்த எலிவேட்டை கலக்கல் கமெண்ட்... :-)..
கார்க்கியின் விமர்சனத்திற்க்காக காத்திருக்கிறேன்.
/கார்க்கியின் விமர்சனத்திற்க்காக காத்திருக்கிறேன்//
அவனே நொந்து போயி குப்புற படுத்துட்டு இருக்கான் ..
ஹஹஹ அண்ணே டாப்பு விமர்சனம்... இப்ப எப்படிண்ணே இருக்கீங்க... உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே...உங்களை நினைச்சுததான் கவலைப்பட்டேன்..
ஆண்டவா அண்ணனுக்கு ஒண்ணும் ஆகப்புடாதுன்னு...
இதுக்கு நான் திருப்பாச்சி விமர்சனமே படிச்சிருப்பேனே... விஜய்க்கு இன்னாரு பிளாப்...
மஹாபிரபு என்றொரு படம்.. same blood..
விஜய் - சரத்குமார்
ஸ்ரீஹரி - சரத்பாபு
அனுஷ்கா - வினிதா
விஜய் தோழி - சுகன்யா
வில்லன் & வில்லன் மகன்
சுகன்யாவை அடைய துடிக்கும் வில்லன் மகன், சரத்குமாரால் கொல்லப்படுவான், அப்பா வில்லன் சரத்தை வதைப்பார், சரத்பாபு துணையுடன் பழிவாங்கல்..
வெங்கடேஷின் முதல் படம், நல்ல படம்.. Time கிடைத்தால் பாருங்கள்..
கலக்கல் விமர்சனம் கேபிள் அண்ணா, படம் பார்ப்பதில்லை என்றே முடிவு!
அப்படியே இருக்கு...
அப்பாடா..? இப்பதான் தல நிம்மதி...
ஏதொ பாரம் குறைந்த மாதிரி இருக்கு...
Excellant review, shankar.
இதுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்,கலக்கிடீங்க சங்கர்..
Muthukumar said...
தல..படம் பாக்கலாமா வேண்டாமா? எனக்கு US (dallas) la ப்ரீ டிக்கெட் கெடைச்சுருக்கு..இருந்தாலும் ரிஸ்க் எடுக்கணுமான்னு நெனைக்கறேன்
tiket free. Then what is US Doller or Indonesia Ruppia all same.
Muthukumar said...
தல..படம் பாக்கலாமா வேண்டாமா? எனக்கு US (dallas) la ப்ரீ டிக்கெட் கெடைச்சுருக்கு..இருந்தாலும் ரிஸ்க் எடுக்கணுமான்னு நெனைக்கறேன்
tiket free. Then what is US Doller or Indonesia Ruppia all same.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
நல்ல விமர்சனம் தல
வில்லு.. டார்கெட் இல்லாதது.
வேட்டைக்காரன் – எலி வேட்டை
சுறா - ???
we cant wait up to release
//வேட்டைக்காரன் – எலி வேட்டை
//
:))
அண்ணே யாரோ விஜய் ரசிகர் காண்டுல மைனஸ் ஒட்டு குத்துறாங்க போல
வெகு விரைவில் theatre விட்டு ஓடுவார் இந்த வேட்டைக்காரன்
//பிரபாகர் said...
எப்படிண்ணா உண்மைய பளிச்சுன்னு சொல்ல முடியுது?
ஹாட்ரிக் அடிச்சிடும் போலிருக்கு!
அப்பா, சாமி! இதுக்கப்புறாமாவாவது கொஞ்சம் திருந்த முயற்சி பண்ணுங்க!
பிரபாகர்.//
******
பிரபாகர் ஏற்கனவே விஜய் ஹாட்ரிக் அடிச்சவர்தான் (அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு). இது 4 இன் ய ரோ...
ரொம்ப ரேர்... அதையும் பண்ணிட்டார்... போற போக்குல, விஜயகாந்த் மாதிரி ஆயிடுவார் போல இருக்கே...
சரி... அப்போ இதுவும் மொக்கையா?!! அய்யோ அய்யோ...
:-)))
இந்தப் பதிவு அவசியம் தேவையா?
//வெளிச்சத்தில் said...
இந்தப் பதிவு அவசியம் தேவையா?//
சில விசயங்கள் வெளிச்சத்தில் வர கண்டிப்பாகத் தேவை.
விடுங்க விடுங்க..., எவ்வளோவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா..,
ஆளாளுக்கு வேட்டைக்காரன வேட்டை ஆடுறீங்களே... =))...
//Cable Sankar said...
minus ஓட்டுக்கு நன்றி..//
உங்களையும் விடலையா.... =))
தமிழ்மணம் - 12/18
அண்ணே,
எதிர்பாத்தத விட கம்மியா இருக்கே! இன்னைக்கு லீவுங்குறதுனால அப்படி இருக்கோ?
இப்படிதான் ஆதவன சொன்னாங்க..அது ஓடலையா..நம்ம மக்களை புரிஞ்சுக்கவே முடியாது பாஸ்...
விஜய் மட்டும் என்றாலே மொக்கையாகத்தான் இருக்கும்னு தெரியும். கோடவே, சினிமாவைக் கெடுக்க வந்த சன் பிக்சர்ஸ் கொலைநிதி மாறனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அநேகமாக நீங்கள் சரியாக விமர்சனம் செய்யவில்லை என நினைக்கிறேன். ஒரு கெட்ட வார்த்தைக் கூட இல்லை விமர்சனத்தில். இது செல்லாது செல்லாது.
///minus ஓட்டுக்கு நன்றி.///
விஜையின் ரசிகர் ப்ளாக் எழுத கூடாத என்ன? நன்றி சொன்ன உங்கள் மனதை பாராட்டுகிறேன்..
:)))))))))))
தலைவரே விஜயோட கால்ஷீட் உங்களுக்கு கிடைக்க.. வேண்டிக்கிறேன் :).. ஒரே நேரத்தில விஜய்க்கும் ஹிட் கொடுத்தறலாம், நாமளும் வெயிட் ஆகிடலாம்...
விமர்சனம் நச்
தல நீங்க வழக்கம் போல விமர்சனம் கொடுகிறது நல்லாஇருக்கு அதே போல் வேட்டைகரன் விமர்சனமும் ஓகே ... உங்கள் விமர்சினதிற்கு நன்றி வாழ்க வளமுடன் ..... பாய்
Sankar, As usual you stood up and delivered the best review...Does vijay read any reviews?????? Poor chap....
Sankar, As usual you stood up and delivered the best review...Does vijay read any reviews?????? Poor chap....
மிகமிக அருமையான விமர்சனம் கேபிள் ஜி.
"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.
வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை
ஆனா நாங்க மாறி விட்டோம்.
டப்பா படம்.
நல்ல விமர்சனம்.கேபிள் ஜி க்கு நன்றி.
தலைவரே ,உங்க ஒருத்தரால எனக்கு எவ்வளவு காசு மிச்சம் தெரியுமா?
http://www.youtube.com/watch?v=JKDIcAR9ark&feature=channel
போங்க கேபிள் நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன் ;) தளபதியின் வளர்ச்சி புடிக்காம நீங்க செய்யற சதி இது :) ஆன்றோர்கள் கொண்டாடும் ஒரு மக்கள் தலைவனின் ஒரு காவியமாகவே நான் இதை எண்ணுகிறேன் :)
அனுஷ்கா, ஸ்ரீஹரி, அந்த மதுரை வில்லன் - தெலுங்கு வாடை தூக்கல்.. படம் தெலுங்கில் டப் ஆகுமோ?? விஜய் தன் மார்க்கெட் எல்லையை விரிக்கிறார்... ??????????!!!!!!!!!!!!
Better than previous Movies.. but Something missing... Sun will help to manage gaps..
திரைக்கதை மூலம் தான் எந்த படத்தையும் தூக்கி நிறுத்த முடியும் என்று சொல்லி, அதற்கு ஒரு அழகான முன்னுரையும் கொடுத்திருக்கும் கேபிளார்க்கு சபாஷ்!
enda dei..
padathukku vimarsanam panra, sari...
adha post panradhukku munnadi, check panna maata?
ega patta spelling mistakes.
hmm.. neeyum un vimarsanamum...
podang....
Aaga mothathula kasu kuduthu theatre'le poi padam pakka vendam'nu sollreenga...right vidu....
கேபிள் நண்பர்களே அவரை பற்றி கலாய்த்ததை பார்க்க நம்ம blog-க்கு ஒரு முறை வாங்க
இன்னும் விஜய் படத்தை தியேட்டரில் பார்த்த அண்ணன் கேபிளின் மன தைரியத்தை பாராட்டுகிறேன்
//அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் //
Sir small doubt-u
கொஞ்ச நாள் முன்ன famous- ஆன silence.. வீடியோக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கறமாதிரி இல்ல ?
சாக்கடை refers to பத்திரிக்கை நிருபர்களா அல்லது ரசிகர்களா ? ;)
அன்புடன்
சிங்கை நாதன்
very goood .i expected some more harsh words
cable anna
vettaikkaaran film review super.
I was going to book the ticket last week then I have changed my mind thinking that I should wait until you review this film.Anyway you have saved me 50 dollars.You deserve a treat anna.catch you later. Rajappa william
Avathar parthuttu, unga vimarsanam vanthavudan vettaikaaran paarkalaam endru irunthen. intha pathivukku neenga vaangina vote la irunthe theriyuthu,
Shankar anna marupadi kaapatheteenga.
Avathar padam unga vimarsanam polave amarkalamaa irunthathu :)
"ஸ்ரீ said...
தலைவரே ,உங்க ஒருத்தரால எனக்கு எவ்வளவு காசு மிச்சம் தெரியுமா?"
athe athe
சூப்பர் விமர்சனம் தல...நான் விஜய் படத்த தியேட்டர்ல பாத்து ரொம்ப நாளாச்சு..இனி இந்த ஜென்மத்துல இவன் படத்த பாக்கமாட்டேன்..
சார் இந்தமாதிரி காமெடி பீஸ் ஒருத்தன் அவசியம் வேணும்.
ஆமா விஜய் அவதார் படம் பர்த்திருப்பாரா?
விஜய்க்கு படம் பன்ற டைரக்டர்கள் எல்லாம் ஒரு மார்க்கமான ஆளுகளாவே இருக்கானுவளே.விஜய் ஒரு படத்துல ஊமையா நடித்தால்?!!! எப்படி இருக்கும்
வெளிநாட்டில ஒரு பட்டிக்காட்டுல இருக்குறதுல இது ஒரு நன்மை. படம் வந்து ஒரு ரெண்டு வாரம் கழிச்சிதான் இங்க ஸ்க்ரீன் பண்ணுவாங்க. அதுக்குள்ள கேபிள்ஜி விமர்சனம் வந்துடும் நாமளும் தப்பிச்சிடலாம். அந்த வரிசைல இது மூணாவது படம்.
;nadunilaiana vimarsanam. vaazhthuhal.
Hi Mr.vijay..
you are really a talented artist you gotta choose nice story... or its bad to say stay in home..
:-)))
சங்கரே, அருமையான எந்தவித தடையும் இல்லாத விமர்சனம். பொதுவாக சினிமா சார்ந்த துறையில் உள்ளவர்கள், மொக்கை படம் என்றாலும் அதை ஒப்பேற்றி விமர்சனம் பதியவோ கருத்து கூறவோ எத்தனிக்கையில், மனதில் பட்டதை எந்தவித பாகுபாடும் இல்லாமல் பட்டென்று போட்டு உடைக்கும் தங்கள் பாணி அலாதி.
வேட்டைக்காரன் பற்றிய ஒரு உண்மையான பதிவை படித்த திருப்தி. விஜய் திருந்துவது போல் தெரியவில்லை. மக்கள் அவரை வெறுத்து ஒதுக்கும் நிலை வரும் வரை, அவரின் மாஸ் கூட்டத்தை நம்பி காலம் தள்ளுவார் போலிருக்கிறது... நடக்கட்டும், ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கலாம்.
நமக்கு தான் இருக்கிறதே உலக சினிமா... :)
Meeee the 50th...
Enna ivan 96 la vanthu 50 nu soldraan nu parkareengalaa..
50 thavathu vote potta perumai adiyenaiye serum..
அண்ணே, இதெல்லாம் வேணாம், நீங்க கவிதை எழுதுங்க
அண்ணே, இதெல்லாம் வேணாம், நீங்க கவிதை எழுதுங்க
அடப்பாவிகளா எல்லாருக்கும் இனி சாப்பாடு உள்ள இறங்கிருக்குமே...
ஒருமனுசன போட்டு தாக்குறதுல இம்பூட்டு சந்தோசமா ?
அது ஏஞ்சாமி விஜய்னாலே இம்பூட்டு பேர் கடுப்பாகுறீங்க?
இதுல எம்பூட்டு பேர் நல்ல படம் வந்தா தியேட்டர்ல போய் பாக்குறீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? நல்ல படம் எடுத்ததுல முக்கால்வாசிபேர் பிச்சைதான் எடுத்துட்டு இருக்கான்...
தோ இருக்காரே நம்ம கேபிள் அண்ணாச்சி அவர் போடுற அந்த கிக் படத்துக்கு, A ஜோக்ஸ் பார்க்க வர்றீங்கல்ல அது உங்களுக்கு பிடிச்சுருக்குன்றதுக்கு வர்றீங்க பிடிக்காதவங்க வர்றதில்லைல இதுக்கு போயிட்டு அவர நீங்க அந்த மாதிரி படம் போடாதீங்க ஜோக்க் போடாதீங்கன்னு சொல்ல முடியுமா அது அவரோட இஷ்டம் அப்டித்தான் இதுவும் பார்க்கறவங்க பார்க்கத்தான் போறாங்க பார்க்காதவங்க பார்த்துட்டு பார்க்காத மாதிரி போனாலும் பாத்தாங்க தான இது கமர்ஷியல் அது போல அது போல அது அவர் ரூட் பிடிச்சா படத்துக்கு போங்க இல்லாட்டினா வீட்ல இருந்து திருட்டு வீடியோல பாருங்க இல்ல பாக்க கூட வேணாஞ்சாமி...
சன் டிவிக்காரன் எல்லா விளம்பரமும் தான் போடுறான் எல்லாத்தையும் வாங்கிடுறீங்களா என்ன அப்படி வாங்கிடத்தான் முடியுமா இல்லைல பின்ன?
காசி படம் எடுத்த தயாரிப்பாளர் என்ன செய்துட்டு இருக்கார்ன்னு யார்க்குன்னாலும் தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா?
கமர்ஷியல்தான கேக்குறீங்க...
போங்க இந்த போஸ்ட்ட ஆளாளுக்கு ஒரு 10 பேருக்கு மெயில் அனுப்பி மனசாத்திக்கங்க சரியா?
அதனால விஜய் பிச்சையெடுக்க போயிடுவார் சினிமாவ விட்டே ஓடிப்போய்டுவார் அப்டியெல்லாம் நினைச்சீங்கன்னா அதுவும் சரிதான் ஏன்னா உங்க தொழிலுக்கோ சாப்பாட்டுல மண்ணையோ அள்ளி போட்ட்ருவார்ல போட்டிக்கு வந்துடுவார்ல...
அப்புறம் எஸ் எம் எஸ்ல ஜோக்குன்னு போட்டு நாறடிக்க மறந்துடாதீங்க...
(ஆ வந்துட்டார்யா விஜயோட கைக்கூலின்னோ இல்லை என்ன கெட்ட வார்த்தை சொல்லி திட்டணும்ன்னு திட்டி கமெண்ட் பண்ணனும்ன்றவங்க ரெடி ஸ்டார்ட்)
ரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்
விஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.
அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.
ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.
கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?
சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்
சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.
போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க.
ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?
"his movie he used a sinhala singer. why?"
so what, please do not try to dictate what you want.
// சின்ன தாமரை பாட்டில் பூச்சாண்டியாக வரும் விஜயின் கெட்டப் படு பயங்கரம் //
Super mamu
வேட்டைக்காரன் firsthalf கூட ஓகே ஆனா secondhalf பார்க்குறதுக்கு மூளைய வீட்டுலேயே கழட்டி வச்சுட்டுதான் போகணும். கிளைமாக்ஸ் சீன்ல என் பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க சிரிக்க அரம்பிசிட்டங்க. என்னத்த சொல்ல 70 ரூபாய சாக்கடைல போட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் . இன்னொரு கொடும என்னன்னா விஜய் பண்றது மட்டும் இல்லாம இவன பார்த்து "சின்ன தளபதி", புரட்சி தளபதி, அப்புறம் நேத்து வந்த நகுல் கூட நம்மள சாவடிக்குரணுக
Nice Review.
But one correction - It is not Saikumar who has acted as one of the villians. It is Ravishankar ( Saikumar's blood brother);-)
//பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..?//
மிகச் சரியாக சொன்னீர்கள் . ஒரு காலத்தில் நம்மவர்கள் தெலுங்கு படத்தை கிண்டல் செய்வார்கள் . அவர்கள் இப்போது எவ்வளவோ திருந்தி விட்டார்கள் . அருமையான பல முயற்சிகள் தெலுங்கில் வந்து கொண்டு இருக்கின்றன(சேகர் கம்முலா போன்ற இயக்குனர்கள் , மகேஷ் பாபு போன்ற நடிகர்களின் புண்ணியத்தில் ) .மசாலா படங்களை கொடுத்தாலும் கொஞ்சம் நல்ல கதையுடன் ரசிக்கும் படியாக கொடுக்கின்றனர் பூரி ஜகன்நாத் , ராஜமௌலி போன்றவர்கள் . எனக்கு தெலுங்கு தெரியாது . ஆனால் சில நல்ல தெலுங்கு படங்களை பார்த்து தான் தெலுங்கு கற்று கொண்டேன் . ஆனால் விஜய் போன்றவர்கள் பெயர் பெற்ற நம் தமிழ் சினிமாவின் பெயரை கெடுத்து வருகின்றனர்.
@muthukumar
அது உங்க இஷ்டம்.. முத்து
@மோகன் குமார்
அது அவஙக் பாயிண்ட் ஆப் வியூ..
@துபாய் ராஜா
நன்றி
@ஸ்டார்ஜான்
அது வியாபார தந்திரம்.. நான் படத்த்தை பற்றிய விசயத்தைதான் சொன்னேனே தவிர அதனுடய வியாபாரத்தை பற்றியல்ல
@வாசுதேவன்
ஹா..ஹா
@rajanராதாமணாளன்
அஹா...ஹா..
@பரிசல்காரன்
அது சரி..?
@ராஜூபன்
எப்படிப்பட்ட படமானாலும் மார்கெட்டிங் பண்ணுவது தவறே இல்லை..
@சுட்டுர்மைகன்
:)
@வெண்காட்டான்
எனக்கு அந்த விஷயம் எல்லாம் ஏறவேயில்லை.. என்னால் சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க முடியும்
@
@பிரபாகர்
எதோ என்னால முடிஞ்சிது
@இரகவன் நைஜீரியா
:)
@காலி ஜே
நன்றி
@சித்ரா
நன்றி
@தயா எக்ஸ்
நன்றி
@அரசூரான்
இதுவும் நல்ல கேள்விதான்
@ரோமிபாய்
நிச்சயம் மிக அருமையான ஓப்பனிங் ரோமி.. அதை மறுக்க முடியாது.. திரும்பவும் சொல்கிறேன். குருவி வில்லு போன்ற படஙக்ளே ஒரளவுக்கு தான் கையை கடித்ததே தவிர முதலுக்கு பெரிதாய் மோசமாக்வில்லை. அதனால் வியாபாரம் வேறு , படத்தை பற்றிய விமர்சனம் வேறு
@ரோமிபாய்
நான் வளர்கிறேனே மம்மி
@கபி
நாங்கெல்லாம் யாரு...??
@பெயர் சொல்ல விருப்பமில்லை
சன் படம் வாங்குறதே அதுக்காகத்தானே.
@சரண்
அவ்வளவு வீக்கான ஆளாயிருந்தால் வேணாம்...:)
@சைவகொத்துபரோட்ட
நன்றி
@ட்ரூத்
நன்றி
@புலவன் புலிகேசி
அது சரி
@கிஷோர்
அப்படின்னு யாரு சொன்னது.. எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும். படத்தை பொருத்தவரை நான் யார் சார்பும் இல்லாமல் தான் சொல்வேன்
@வந்தியத்தேவன்
ஏன் அவருக்கு ஏதாவது ஆவரதுக்கா..?
@நான் கடவுள்
இந்த மாதிரி ஓப்பனிங் இருக்கிற வரைக்கும்
@விசா
நல்ல கருத்து
@விசா
நிச்சயமாய் நான் எதிர்பார்ப்பதும்.. ஒரு நல்ல இண்ட்ரஸ்டான திரைக்கதையைத்தான். நிச்சயம் விஜய் மாதிரியான நடிகர்களுக்கான ஸ்கிரிப்டை தயார் செய்வதற்கான ஆட்களை நாம் வளர்ப்பதில்லை என்றே தோன்றுகிறது..
@அண்ணாமலையான்
ஆமா..
@ராஜு
ஆமா:((((
@தராசு
எல்லாம் உங்க மாதிரியான ஆட்களோட ஆசீர்வாதம்தான்
@
@வலையேறி மூக்கன்
:(((
@முரளிகுமார் பத்மநாபன்
கார்க்கிக்கு பிடிக்கவில்லை
@நாஞ்சில் பிரதாய்
:)
@பிரியன்
பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்
@சுபான்கன்
நன்றி
@அதிபிரதாபன்
எது..?
@பேரரசன்
சந்தோஷம்
@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.. நீங்க்ளூம் பார்த்தாச்சா..?
@பொன்.பாரதிராஜா
நன்றி
@ஹாட்வி
ஓசில பினாயில் குடிக்க பழகியிருந்தா ..??அதுக்கு மேல நான்சொல்ல மாட்டேம்பா..:)))
@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
அதுசரி..
@முத்துபாலகிருஷ்ணன்
தலைவரே.. அடுத்ததாவது நலல வரட்டுமே..
@ஜெட்லி
குத்து..குத்து.. நல்ல்லா குத்து..
@ஸ்ரீநி
அதுக்குதானே ஊர்ல இருக்கிற தியேட்டர் எல்லாத்தையும் போட்டிருக்காங்க..
@கோபி.ஆர்
ஆமாம் கோபி நீங்க சொன்னது கரெக்ட்
//சைவகொத்துபரோட்ட//
கொத்துபுரோட்டா என்பதே சைவம் தானே. எதற்கு தனியாக சைவக்கொத்துபரோட்டா என்று பெயர்.
@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி சார்
@வெளிச்சத்தில்
எந்த பதிவு..?
@அதிபிரதாபன்
:)
@பேநாமூடி
அதானே
@கலகலப்பிரியா
:((
நானெல்லாம் வாங்க ஆரம்பிச்சு நிறைய நாளாச்சு
@அதிபிரதாபன்
நான் இன்னும் எதிர்பாக்கிறேன்
@சஞ்செய்காந்தி
இதுவே சாஸ்தின்னு சொல்றாங்க தலைவரே
@வெற்றி
பாஸ் திரும்பவும் சொல்றேன். ஓடுறது வேற படத்தோட விமர்சனம் வேற் அதனால்தான் பெரிய நடிகர்களீன் படஙக்ள பெரிய விலை போவுது..
@அக்னிபார்வை
அது சரி..
@அசோக்
சீக்கிரம் கிடைச்சா நல்லாருக்கும்.. நன்றி
@சாய் ஆனந்த்
நன்றி
@சுபா
நன்றி..
@செந்தில்ஸ்
நன்றி
@ஸ்ரீ
நம்ம பங்கை கொடுத்திருங்க
@பாலாவின்
பார்க்கிறேன்
அஹா.. வடை போச்சே
@பிள்ளையாண்டான்
நன்றி
@ஸ்ரீகாந்த்
ரொம்ப நன்றிங்கண்ணா.. விஜயோட படஙக்ளையெல்லாம் பார்த்து பார்த்து மறத்து போயி.. எதுவும் தெரியமாட்டேங்குதுண்ணா..
@லஷ்மி
அது உங்க இஷ்டம்
@மோகன் குமார்
அட இது வேறயா..?
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
இதெல்லாம் ஜுஜுபி
@சிங்கைநாதன்
தலைவரே புதுசா யோசிக்கிறீங்களே..:))
@
@சரவணன்
ஏன்..?
@ராஜப்பா
நம்ம பங்கு எங்க..?
@சிம்பா
நன்றி
@டம்பிமேவி
நீ ஒரு தில்லாலங்கடிய்யா.. என்கிட்ட இப்படி பேசிட்டு.. அங்க் கார்க்கி கிட்ட வேற மாதிரி பின்னூட்டம் போடுற..
@மயில்ராவணன்
:))
@ரவிகுமார் திருப்பூர்
ஏன். இந்த கொலைவெறி..
2முகிலன்
:{{{
@ஆர்த்தி கல்யாண்
நன்றி
@சக்தி த வேல்
:((((
@கடையம் ஆனந்த
:))))
@ரபீக் ராஜா
அப்படியெல்லாம் விட முடியாது.. உலக் சினிமாவெல்லாம் நலல் ப்டமென்று அர்த்தமில்லை. ஏன் விஜயின் மாஸுக்கு ஒரு ப்டம் கவனித்து எடுக்கக்கூடாது என்கிற ஆதங்கம் தான் தலைவரே..?
@சிம்பா..
நன்றிங்கண்ணா
@சங்கர்
சரிங்க
@ஸ்வீட்
நல்ல கற்பனை.. ஏனென்றால் தெனாவெட்டு, சன்ன்னின் தோல்வி படம்
@பி+
தெரியலையே..
@மனோ
:))
@ராஜா
:)))
@மேக்ஸோ
நன்றி
தகவலுக்கு மிக்க நன்றிங்க
@ரோபோட்
:))
/அடப்பாவிகளா எல்லாருக்கும் இனி சாப்பாடு உள்ள இறங்கிருக்குமே..
ஒருமனுசன போட்டு தாக்குறதுல இம்பூட்டு சந்தோசமா ?//
நோ பர்செனல் பீலீங்ஸ்
//அது ஏஞ்சாமி விஜய்னாலே இம்பூட்டு பேர் கடுப்பாகுறீங்க?
இதுல எம்பூட்டு பேர் நல்ல படம் வந்தா தியேட்டர்ல போய் பாக்குறீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? நல்ல படம் எடுத்ததுல முக்கால்வாசிபேர் பிச்சைதான் எடுத்துட்டு இருக்கான்...//
அதுவும் சரிதான்..
//தோ இருக்காரே நம்ம கேபிள் அண்ணாச்சி அவர் போடுற அந்த கிக் படத்துக்கு, A ஜோக்ஸ் பார்க்க வர்றீங்கல்ல அது உங்களுக்கு பிடிச்சுருக்குன்றதுக்கு வர்றீங்க பிடிக்காதவங்க வர்றதில்லைல இதுக்கு போயிட்டு அவர நீங்க அந்த மாதிரி படம் போடாதீங்க ஜோக்க் போடாதீங்கன்னு சொல்ல முடியுமா அது அவரோட இஷ்டம் அப்டித்தான் இதுவும் பார்க்கறவங்க பார்க்கத்தான் போறாங்க பார்க்காதவங்க பார்த்துட்டு பார்க்காத மாதிரி போனாலும் பாத்தாங்க தான இது கமர்ஷியல் அது போல அது போல அது அவர் ரூட் பிடிச்சா படத்துக்கு போங்க இல்லாட்டினா வீட்ல இருந்து திருட்டு வீடியோல பாருங்க இல்ல பாக்க கூட வேணாஞ்சாமி...//
பாருங்க.. நம்ம பிரியமுடன் வசந்த ஒரு விஷயம்.. நீங்க சொலறது சரி.. யாரும் பிடிக்காம போய் பாக்க போறதில்லை. என் பதிவுக்கு கூட நீங்க வழக்கமா பின்னூட்டம்போட்டு வராட்டாலும் தனியா வந்து படிச்சிட்டு போகலையா அது போல யாராக இருந்தாலும் அவர் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் சரக்கு இருந்தால் எதுவும் விலை போகும்.. :))
//சன் டிவிக்காரன் எல்லா விளம்பரமும் தான் போடுறான் எல்லாத்தையும் வாங்கிடுறீங்களா என்ன அப்படி வாங்கிடத்தான் முடியுமா இல்லைல பின்ன?//
என்னா ஒரு ஸ்ட்ராசிடி.. தலைவரே எனக்கு போன் பண்ணுங்க.. விஷ்யத்தை சொல்றேன்..
//காசி படம் எடுத்த தயாரிப்பாளர் என்ன செய்துட்டு இருக்கார்ன்னு யார்க்குன்னாலும் தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா?//
ஒரு விச்யம் தெரியுமா ஆரோமா மணின்னு நினைக்கிறேன் அவருக்கு அந்த படம் ஹிட்.. விநியோகஸ்தர்களுக்கும் ஹிட்.. இல்லைன்னு புரூப் பண்ணனுமின்னா.. எங்கிட்ட நேர வரலாம்..
கமர்ஷியல்தான கேக்குறீங்க...
//போங்க இந்த போஸ்ட்ட ஆளாளுக்கு ஒரு 10 பேருக்கு மெயில் அனுப்பி மனசாத்திக்கங்க சரியா?//
அட அவ்வளவு பிரப்லமாயிடுச்சா நம்ம பதிவு..
///அதனால விஜய் பிச்சையெடுக்க போயிடுவார் சினிமாவ விட்டே ஓடிப்போய்டுவார் அப்டியெல்லாம் நினைச்சீங்கன்னா அதுவும் சரிதான் ஏன்னா உங்க தொழிலுக்கோ சாப்பாட்டுல மண்ணையோ அள்ளி போட்ட்ருவார்ல போட்டிக்கு வந்துடுவார்ல...
அப்புறம் எஸ் எம் எஸ்ல ஜோக்குன்னு போட்டு நாறடிக்க மறந்துடாதீங்க...
(ஆ வந்துட்டார்யா விஜயோட கைக்கூலின்னோ இல்லை என்ன கெட்ட வார்த்தை சொல்லி திட்டணும்ன்னு திட்டி கமெண்ட் பண்ணனும்ன்றவங்க ரெடி ஸ்டார்ட்)
//
இப்படியெல்லாம் வேற ஆசையிருக்கா.. தலைவரே. முன்னமே சொல்லியிருந்தா.. ஏற்பாடு செய்திருக்கலாமில்லை..:)))
மொக்கைக்காரன்.!
அவதார் பாக்க சத்யம் போய் இருந்தேன். படம் படுசுப்பர் ..3d படம்... அப்படியே படம் உள்ள போய்டேன்.
சரி சரி அவதாருக்கும் ஒட்டைக்காரனுக்கும் (வேட்டைக்காரனுக்கும்) என்ன சம்பந்தம்.
சத்யம் தீயேட்டர்ல அவதார் படம் டிக்கெட் கிடைக்காதவர்கள் வெர வழி இல்லாமல் ஒட்டைக்காரன் படதுக்கு டிக்கெட் எடுகிறார்கள். avanghala பாக்க பாவமா இருந்துச்சு....
அவதார் படம் இன்னும் ஒரு வாரத்துக்கு housefull.......
அவதார் படம் தயவால ஒட்டைக்காரன் படம் ஒடுது. அவதார் படதால ஒட்டைக்காரனுக்கு கொண்டாட்டம்.
Post a Comment