Paa – Hindi Film Review
அபிஷேக், அமிதாப், வித்யாபாலன், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பால்கி என்ற் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அபிஷேக்கும், வித்யாபாலனும் படிக்கிற காலத்தில் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் கசமுசா ஆகிவிட அதில் அவர் கர்பமாகி விடுகிறார். அபிஷேக் தன் எதிர்கால பொலிட்டிகல் வாழ்க்கையை நினைத்து கலைக்க சொல்ல, அவரை விட்டு பிரிந்து அந்த குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். அப்படி பிறந்த குழந்தைதான் ஆரோ என்கிற அமிதாப். உலகில் மிக் அரிதான ஒரு பிரஜோரியா என்று துரித மூப்படையும் வியாதியுடம் பிறக்க, அதையும் சமாளித்து தனியாய் வாழும் விதயா, ஆரோவிற்கு அவனின் தந்தை யார் என்று சொல்லாமலே வளர்க்க, அபிசேக்குக்கும் இப்படி ஒரு குழந்தை தனக்கு இருப்பது தெரியாமலேயே, அரசியலில் எம்.பியாகி பரபரப்பாக இருக்க, ஒரு பள்ளியின் பொன்விழாவுக்கு வந்து கலந்து கொண்டு பரிசு தரும்போது ஆரோவை பார்க்க, அபிஷேக்குக்கு த்ன் மகன் தான் என்று புரிந்து கொண்டாரா? ஆரோவுக்கு என்ன ஆயிற்று? அவன் தந்தையுடன் சேர்ந்தானா? வித்யாபாலனுடன் அபிஷேக் சேர்ந்தாரா ? என்று கதை போகிறது.
படத்தில் நம் மனதை ஒட்டு மொத்தமாய் அள்ளிக் கொண்டு போகிறவன் சாரி போகிறவர் அமிதாப். படம் முழுவதும் ஆரோவாகத்தான் தெரிகிறாரே தவிர எங்கேயும், அமிதாப்பை தெரியவில்லை. முதல் காட்சியில் அறிமுகமாகும் போதே நாம் சரண்டர். அந்த கந்தர்வ குரல் இல்லாமல், குழந்தையும் இல்லாமல் , சின்ன பையனும் இல்லாமல் ஒரு குரலில் போகப்படுகிறார், சிரிக்கிறார், சோகமாகிறார். ப்டத்தில் அமிதாப் குரலிலேயே நடித்து இருக்கிறார் என்றால் மிகையில்லை. ஸ்பெலெண்டிட் பெர்பாமன்ஸ்.
அபிஷேக்குக்கு பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் நச் பெர்பாமன்ஸ். ஆரோ தான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்று குற்றம் சாட்டிவிட, அதை தெரிந்து கொள்ள, ஒரு உள்ளுர ஆவலுடன், செக்யூரிட்டி இல்லாமல் ரயிலில் தனியே ஆரோவுடன் பிரயாண்ம் செய்யும் காட்சியில் செம கூல்.
வித்யா பாலனிடம் இவ்வளவு அழகான அண்டர்ப்ளே செய்து நடிக்ககூடிய திறமை இருப்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. கர்பமாகி தன் அம்மாவிடம் என்ன செய்வது என்று புரியாமல் அழும் போது அவரின் அம்மா, திரும்ப திரும்ப ‘இந்த குழந்தை உனக்கு வேணுமா? வேண்டாமா?என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் வேண்டும் என்று எப்படி சொல்வது என்று தெரியாமல் கடைசியாய் கண்களில் கண்ணீருடன் தலையாட்டுவார் பாருங்கள். சூப்பர்ப். படம் நெடுகிலும் ஒரு மன உறுதியுள்ள பெண்ணை நம் கண் முன்னே வளையவிடுகிறார். வித்யா பாலன். படம் முழுக்க இண்டெலிஜெண்டான வசனங்கள், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய், பி.சி.ஸ்ரீஇராமின் ஒளிப்பதிவு சூப்பர் என்று சொன்னால் சூரியனுக்கே டார்ச் அடித்தது போன்றதாகிவிடும். என்பதால் மேலே சொல்ல ஏதுமில்லை.
எவ்வளவு தான் வேண்டாம் அடக்கி கொண்டாலும், ஸ்ரீராமுக்கு சொன்னதுபோல் சொல்லிவிட்டு போக முடியவில்லை. இளையராஜாவை பற்றி படம் நெடுக இவரின் ராஜ்ஜியம் தான். பாடல்களாகட்டும், பிண்ணனி இசையாகட்டும் ராஜா பட்டையை கிளப்புகிறார். ஆரோவுக்கான தீம் மீயூசிக் ஹாண்டிங். தமிழில் ஏற்கனவே வெளிவந்த இசை தான் என்றாலும், புதுசாய் இருக்கிறது இவரின் ஆர்கெஸ்ட்ரேஷன். அதிலும் கும்சும், பாடலிலும் ஹல்கேசி போலே பாடல்களில் எல்லாம் ராஜாவின் இசை மேதமையை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம், எழுதி கொண்டேயிருக்கலாம் ஆனால் நான் இசையை கேட்டு ரசிப்பவன், உணர்ந்து உருகுபவன். அதனால் உணர்பவர்களூக்கும், ரசிப்பவர்களுக்கு மீண்டும் ராஜ வெள்ளம
கதை என்று பெரிதாய் ஏதும் இல்லாவிட்டாலும், திரைக்கதையில் படத்தை நகர்த்தியிருக்கிறார். இயக்குனர் பால்கி. காட்சியமைப்புகளிலும், வசனங்களிலும் புத்திசாலித்தனமும், ஷார்பும் நம்மை ஈர்க்கிறது. சின்ன சின்ன காட்சிகளில் நம்மை கவர்கிறார். பரேஷ் ராவல் கேரக்டர் க்ளைமாக்ஸ் டயலாக் நன்றாக இருந்தாலும் ஒட்டவில்லை. அபிசேக்கின் அரசியல் வாழ்கை பற்றிய காட்சிகள் கதைக்கு எந்த விதத்திலும் ஒட்டவில்லை என்றாலும் ஓகே.
ஆரோவை படத்தின் ஆரம்பத்திலிருந்து துறத்தும் ஒரு சின்னப் பெண். அவளை பார்த்து பயந்து ஓடியபடி இருக்கும் ஆரோ. இவர்களுக்கான கதையை க்ளைமாக்ஸில் குட்டி ப்ளாஷ்பேகில் மனதை நெகிழ வைக்கிறார். அமிதாப்பச்சனை அறிமுகம் என்று போட்டதற்கு நிஜமாகவே ஆரோவாக அமிதாப்பச்சனை அறிமுகபடுத்தி அதில் ஜெயித்தும் இருக்கிறார். ஆனால் பல இடங்களில் படத்தில் தொய்வு விழத்தான் செய்கிறது. பெரிதான டுவிஸ்ட் டர்ன் இல்லாவிட்டாலும் கூட பல இடங்களில் உணர்வுகளை நெகிழ வைக்கும் இடத்தில் எல்லாம் ப்ளாட்டாக இருப்பது ஒரு மைனஸே..
Paa.. Engrossing Movie By Auro
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Comments
nalla vimarsanam :) :)
ஆமா, தாரே சமீன் பர் ஞாபகம் வருகிறதா நெகிழ வைக்கும் காட்சிகள் விதத்தில்?
கும் கும் பாடலின் மூலப்பாடல் என்ன? ராஜா அதை ம்யுசிகாக தான் ஒரிஜினலாக போட்டாரா இல்லை பாட்டாகவா ?
இது பெஞ்சமின் பட்டனா என்று கேட்பவர்களுக்கு , அது பின்னோக்கி வயதாகும் (அதாவது கிழவனாக பிறந்து இளமையாகும்) ஒரு fantasy கான்செப்ட்.
பா அப்படியில்லை என்று அறிகிறேன்.
ஒரு பாட்டு டிவி ல பார்த்தேன். செமையா இருந்துச்சு .... பிசி ஸ்ரீராம் பிசி ஸ்ரீராம் தான்
யாருக்கோ சேதி சொல்றா மாதிரி இருக்கே தல..ஆப்பிள் சாறு சாப்பிடீங்களா?
//பெரிதான டுவிஸ்ட் டர்ன் இல்லாவிட்டாலும் கூட பல இடங்களில் உணர்வுகளை நெகிழ வைக்கும் இடத்தில் எல்லாம் ப்ளாட்டாக இருப்பது ஒரு மைனஸே..//
நல்ல படங்களில் ஒரு சில மைனஸ் இருப்பது சகஜம் தான்,எப்படி நம்ம தமிழ் மசாலா படங்களில் ஒரு சில பிளஸ் மட்டும் இருப்பது போல :)
Sir, idu "curious case of benjamin button" thane ?//
மேக் அப் மட்டும் தான் அது.. கதை வேறு..,
//நான் இசையை கேட்டு ரசிப்பவன், உணர்ந்து உருகுபவன். அதனால் உணர்பவர்களூக்கும், ரசிப்பவர்களுக்கு மீண்டும் ராஜ வெள்ளம //
ஆமா ..., எல்லோருக்குமே அப்டி தான்..,
நன்றி ஸ்ரீ
@நிசார்
நிச்சய்மாக இல்லை
@கனகு
நிச்சயமாய் தியேட்டரில் போய் பார்க்கவும்
@ராதாகிருஷ்ணன்
இல்லை சார். அதுக்கு இதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லை
அதுக்கெல்லாம் நேரமாகும்ண்னே
@நடராஜ்
இல்லை தலைவரே தாரே ஜமீன்பர் வேறு கதை களம் நிச்சயமாய் இது பெஞ்சமின் பட்ட்ன் இல்லை என்பது ஆணித்தரமாய் சொல்லிக் கொள்ள் விரும்புகிறென்
@ரோமிபாய்
நன்றி .. பார்த்து விட்டு சொல்லுங்க
@டம்ப்மேவி
தியேட்டரில் பாருங்க
@பூங்குன்ற்ன்.வே
ஆருக்கோ இல்ல சாருக்கு.
அதுசரி
நன்றி சார்.
@மயில்ராவனன்
நன்றி..
@பப்பு
ஹிட்டு
@ஷென்
மிக்க நன்றி
@அசோக்
நன்றி வழக்கம் போல
@பேநாமுடி
நீங்களும் ரவுடிதானா..
2வெற்றி
அது பத்தி சொல்றதுக்கு ஏதுவுமே இல்லை இந்த் படத்தில்
@நர்சிம்
நிச்சயம்
@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி
@க.பாலாசி
நன்றி
@அன்புடன் - மணிகண்டன்
மிக்க நன்றி..
good intelectual write up
congrats
கும் கும் பாடலின் மூலப்பாடல், 1982ல் வெளிவந்த ஓலங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற தும்பி வா...என்ற பாடல்.இதே பாடலை இசைஞானி தமிழில், 1982ல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த ஆட்டோராஜா படத்தில் சங்கத்தில் பாடாது...என்ற பாடலாகவும் ஒலிக்க வைத்திருக்கிறார். youtube ல் இப்பாடல்களை நீங்கள் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4&feature=related - இது தமிழ்ப்பாடலுக்கான லின்க்.
நான் கொஞ்சம் இதைப் பற்றியே பிதற்றி இருக்கிறேன்
முடிந்தால் கொஞ்சம் விமர்சனம் செய்யுங்கள்