சக்தே இந்தியா இயக்குனர் ஷமீன் அமின், பழைய ஜெய்தீப் சஹானி, யாஷ் சோப்ரா, சமீபத்திய ஹிட் பாய் ரன்பீர் கபூர், என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். ஹர்பிரீத் சிங் ஒரு பிலோ ஆவரேஜ் டிகிரி பாஸ் செய்த மாணவன். அதனால் அவன் வாழ்க்கையின் அடுத்த கட்டமாய் தான் ஒரு சேல்ஸ் மேன் ஆக போவதுதான் தன் லட்சியமாய் எடுத்துக் கொண்டு, ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் சேல்ஸ் ட்ரையினியாய் சேர, ஒரு நேர்மையான தாத்தாவால் வளர்க்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞனின் சேல்ஸ்மேன் செய்ய வேண்டிய தகடு தத்தங்கள் எதுவும் தெரியாமல் குழப்பிவிட்டுவிட, அதனால் அவனை அவனுடய் அலுவலகத்தில் அவனுடய் அதிகாரியும், எம்.டியும் கூட வேலை செய்பவர்களூம் அவனை கீழ்தரமாய் பேசி சேல்ஸுக்கு போக விடாமல் ஆபீஸிலே முடக்கி, ட்ரெயினிங் முடித்து போகச் சொல்ல.. அதே ஆபீசிலிருந்து ராக்கெட் சேல்ஸ் கார்பரேஷன் என்று ஆரம்பித்து எப்படி முன்னேறுகிறான் என்பது தான் கதை.
ராக்கெட் சிங்காக ரண்பீர்கபூர், முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ் மிக அருமையாய் இந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. ஆரம்ப இண்டர்வுயூ காட்சியில் பென்சிலை தூக்கி போட்டு அதை விற்க சொல்லி கேட்கும் சேல்ஸ் மேனேஜரிடம் முழிக்கும் காட்சிகளாகட்டும், திருட்டு தனமாய் உள்குத்தாய் ஆபீஸிலேயே தனக்கென ஒரு கம்பெனி ஆரம்பித்து தன் ஜீரோ இல்லை என்று புரூவ் செய்ய முடிவெடுத்து ராக்கெட் சேல்ஸ் கார்பரேஷனை ஆரம்பிப்பதாகட்டும், மாட்டிக்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் அவர்களை கூட பார்ட்னராக சேர்த்து கொண்டு தொழிலை பில்டப் செய்வதாகட்டும்.. நச். மனதை கொள்ளை கொள்கிறார்.
படத்தில் கதாநாயகி என்று தனியாய் ஏதும் முக்கியத்துவம் இல்லாமல் படம் வருவது இப்போதெல்லாம் ஹிந்தியில் சகஜமாகிவிட்டது. ஒரே ஒரு மாண்டேஜ் காட்சிக்கும், சில காட்சிகளில் உதவதற்கும் உதவியிருக்கிறார் கதாநாயகி
படத்தில் கம்பெனி எம்.டியாக வருபவரின் நடிப்பில் நிறைய நாடகத்தனம். டீ ச்ப்ளை செய்யும் ஆளை கம்ப்யூட்டர் அசெம்பளி செய்ய சொல்லி டெக்னிகல் பார்ட்னர் ஆக்குவதும், சர்வீஸ் இஞினியரை சர்வீச் பார்ட்னராக்குவதும், டெலிபோன் ரிஷப்ஷனிஸ்டை மேனேஜர் பார்ட்னர் என்று ஆக்குவதும், சேல்ஸ்மேனேஜரை சேல்ஸ் பார்ட்னர் என்று சேர்த்து கொண்டு மிக பெரிய கம்பெனியை டவுன் செய்வது, ஆபிஸீலிருந்தே அவர்களுடய போனின் இபிபிஎக்சை உபயோகபடுத்தி தில்லாலங்கடி செய்வது. பின்னர் அதனாலேயே மாட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போவது என்று இண்ட்ரஸ்டான காட்சிகல் இருந்தாலும் நிறைய நாடகத்தனம்.
ஜெய்தீப் சஹானியின் கதை திரைக்கதை வசனத்தில் முதல் இரண்டை விட வசனத்தில் தூள் பறத்துகிறார். “ஸ்பைடர்மேனே ரிஸ்க் எடுத்து தான் சாகசம் செய்யும் போது, நான் ஒரு சாதாரண சேல்ஸ்மேன் நான் எடுக்கக்கூடாதா? என்பது போன்ற வசனங்களில் பஞ்ச்.
கதாநாயகன் நேர்மையானவனாய் வளர்க்கப்பட்டதினாலேயே அவன் செய்யும் காரியங்களால் பிரச்சனை ஏற்பட அவனை அவமான படுத்தும் நிறுவனத்தின் தலைவர் பண்ணுவது நியாயமாகவே தெரிகிறா பட்சத்தில் ஹர்பிரீத் நேர்மையாய் போராடி தனியாய் கஷ்டப்பட்டு திறமையானவர்களை சேர்த்து கொண்டு வெற்றி பெற்றிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.
Rocket Singh- Salesman of the year – sliding Down Graph
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment
27 comments:
me the first.
அப்ப முத்த கட்சிகள் எல்லாம் இல்லையா ........
ட்ரைலர் ல வந்துச்சே ........
கம்பெனிகுள் இன்னொரு கம்பெனி ...பொதுவாக பெரிய மார்க்கெட்டிங் கம்பெனி ல நடக்க கூடியது தான்
ipp time illai..dvd release agiruchunna ...parthu kollalam
கேபிள், படம் பார்க்கிற வேலைய மிச்சம் பண்ணிடறீங்க.
நல்லாயிருக்கு விமர்சனம், அப்புறம் ஏன் கவிதையெல்லாம் எழுதிகிட்டு...
/கேபிள், படம் பார்க்கிற வேலைய மிச்சம் பண்ணிடறீங்க.
நல்லாயிருக்கு விமர்சனம், அப்புறம் ஏன் கவிதையெல்லாம் எழுதிகிட்டு..//
நான் ஏதோ நேத்து கவிதைய பாராட்டுனீங்கன்னு நினைச்சேன்.. இல்லையா..அவ்வ்வ்வ்வ்.. அதுசரி.. விடமாட்டேன்.. விடமாட்டேன்.. அகநாழிகையில கவிதை வராம விடமாட்டேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ (இப்ப அழுவது அகநாழிகை)
படம் நல்ல இல்லன்னு சொன்னங்க.
உங்க விமர்சனம் இன்னும் படிகல, படிச்சிட்டு நாளைக்கு பின்னுடம் போடுறேன் ...
கேபிள், படம் பார்க்கிற வேலைய மிச்சம் பண்ணிடறீங்க.
நல்லாயிருக்கு விமர்சனம், அப்புறம் ஏன் கவிதையெல்லாம் எழுதிகிட்டு...//
அதானே... ?? அதுவும் எண்டர்.. Exit
cable ji enaKKU unga enter kavithaigal romba pidichu irukku...thodarnthu kavithai eluthunga.....
இந்திக்கும் நமக்கும் ரொம்ப தூரம்ங்க.....அடுத்த பதிவுல மீட் பண்ணலாம்....
பல பெரிய ஆளுங்க எல்லாம் இந்த மாதிரி எண்டர் கவிதைகள் எழுதி இருக்காங்க ....
காமம் சார்ந்த கவிதைகளுக்கு இலக்கியத்தில் தனி பெரும் பங்கு உண்டு
அண்ணே,
எண்டர் கவிதை ஸ்டைல்ல ஒரு படத்து விமர்சனம் எழுதுங்கண்ணே.
ம்ம்ம் அடுத்த படம். பார்க்க வெண்இய லிஸ்ட் கூடிகிட்டே போகுது.
:-(
@தராசு
/எண்டர் கவிதை ஸ்டைல்ல ஒரு படத்து விமர்சனம் எழுதுங்கண்ணே.
//
அண்ணே பாத்தீங்களா என் டர் கவிதை உங்களூக்கு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.. சரி அவ்வளவுதானே. இந்த விமர்சனத்தை ஒரு வேர்ட்ல காப்பி பண்ணிட்டு எங்க வேணுமோ..? அங்க எண்டர் போடுங்க..அவ்வளவுதான்.
கேபிள் சங்கர்
//அப்புறம் ஏன் கவிதையெல்லாம் எழுதிகிட்டு...
//
ஆஹா.. என்ன நாசுக்கு
//அதுசரி.. விடமாட்டேன்.. விடமாட்டேன்.. அகநாழிகையில கவிதை வராம விடமாட்டேன்//
ஆனாலும் உங்க தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :P
ஜி.. விமர்சனம் not upto the mark I think. கொஞ்சம் காரம் கம்மியே.. கொஞ்சம் pepper add பண்ணியிருக்களாம்.
Wokeyyy..
நல்லது ,காசு மிச்சம் .ரொம்ப நன்றி தல.
பயங்கள்---ஹைக்கூ
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_15.html
நல்ல வேளை எங்க ஊருக்கு இந்தப்படம் இப்ப வராது.காசு மிச்சம். தேங்க் யூ கேபிள்.
இயக்குனரின் கதைக் களம் பாராட்டுதலுக்குரியது ...
அடுத்து தன்னுடைய வளர்ச்சியில் ரன்பீர் அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்
மற்றபடி திரையில் அதிகப் படியான கட்டப் படாத முனைகள் உண்டு
எடுத்துக்காட்டு .. கடையின் ஆரம்பத்தில் எதற்காக என்று கடைசி வரை கூறாமல் விட்டுப் போன
அந்த புகைப் படம் ஒன்று
மொத்தத்தில் ராக்கெட் சிங்க் - - - -பயிற்சி தேவை ( TRAINING PERIOD )
சார் விமர்சனம் நல்லாருக்கு!
தமிழ்லதான் இது புதுமுயற்ச்சிகள் கதைகளன்கள் குறைந்துகொண்டே வருகிறது. எங்க ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகாது
review nalla irukku anna..
indha varusham tamil-ah vida hindi-la nalla padangal vandhurukku pola irukke... :)
தல அருமையான விமர்சனம்
ஓட்டு போட்டாச்சு
@விசா
நன்றி
@டம்பிமேவி
இது கம்யூட்டர் கம்பெனி..
@கபி
அவ்வளவா ஒண்னும் நல்லால்ல
@பட்டர் ப்ளை சூர்யா
என்ன அதானே..?
@டம்பிமேவி
பாருங்க சூர்யா நம்ம என் டர் கவிதைகள் ரசிகர்கள் அபிமானத்தை
@வெற்றி
நன்றி
@டம்பிமேவி
அப்ப நானும் இலக்கியவியாதி..சே..வாதி ஆயிட்டேன்னு சொல்லுங்க
@முரளிகுமார் பத்மநாபன்
ஓகே
@அசோக்
அலோ.. படமே அப் டுத மார்க் இல்லை அப்புற்ம் விமர்சனம் எப்படி இருக்கும்
@வனிலா
ஓகே
@ஸ்ரீ
நன்றி
@காவேரி கணேஷ்
உங்களுக்கு பின்னூட்டம் உங்க பதிவுல
@ஸ்ரீநி
ரைட்டு
@ரவிகுமார்திருப்பூர்
இன்னும் கொஞ்சம் லேட்டாகும்
@கனகு
ஆமாம்னு சொல்லலாம்
@கார்திகேயனும் அறிவுதேடலும்
நன்றி தலைவரே
தல அப்ப கமல் தமிழ்ல ரீமேக் பன்றதுக்கு வாய்ப்பிருக்கும் போல..
Entertaining movie தானே. ஒரு முறை பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டிருக்கேன்.
Post a Comment