Thottal Thodarum

Jan 18, 2010

கொத்து பரோட்டா –18/01/10

கெவின் காஸ்ட்னர் என்று ஒரு நடிகர், 1995 என்று நினைக்கிறேன் அன்றைய காலகட்டத்திலேயே ஹாலிவுட்டில் சுமார் 600 மில்லியனுக்கு மேல் செலவு செய்து, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் கடலின் நடுவிலேயே செட் போட்டு, புயல் மழையில் அதெல்லாம் அழிந்து போய், மீண்டும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போய் ஒரு வழியாய் முடிக்கபட்ட “வாட்டர் வேர்ல்ட்” எனப்படும் அன்றைய ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படம். ஒரு சூப்பர் டூப்பர் ப்ளாப். இத்தனைக்கு அவர்கள் கையில் ஸ்கிரிப்டோடு எல்லாவற்றையும் பேப்பரில் இல்லாமல் போகாதவர்கள். இவர்களின் உழைப்பு ஒன்றும் யாருடைய உழைப்புக்கும் கீழ் இல்லை. ஒரு திரைப்படம் என்பது எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வைத்து இல்லை. சொல்ல வந்ததை எப்படி மக்களிடம் கன்வே செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துதான். இவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்.. அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்.
*************************************************************************************
சென்னை சங்கமம்
இத்தனை வருடங்களாய் சென்னை சங்கமத்தில் சங்கமித்தில்லை. ஆனால் இந்த வருடம் சங்கமித்து கொண்ட்டாடிய வருடம். ஆரமபித்த இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து போய் வந்ததில் மெல்ல இது ஒரு நல்ல டூரிஸ்ட் அட்ராக்‌ஷனாகிவிடக்கூடிய ஒரு கலாசசாரமாக மாறிவிடக்கூடும் என்று தெரிகிறது. சரி அதை விடுங்கள். போகி அன்று வெங்கட்நாராயணா ரோடை முழுவது அடைத்து கிராமிய கலைஞர்களின், தேவராட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், என்று ஊர் பட்ட ஆட்டங்களை ஆடினார்கள். சுற்றி பெருங்கூட்டமாய் நின்றிருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும், போட்டோ எடுத்து கொண்டும் இருக்க, ஒவ்வொரு குழுவாய் மெல்ல நகர்ந்து கொண்டே ஆடிக் கொண்டு போய் கொண்டிருக்க, லேசான கைதட்டல் மட்டும் அங்கே கேட்க, ”என்னணே.. எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடுறாங்க.. கொஞ்சமாச்சு அவங்களை பாராட்ட வேண்டாம்? என்று கேட்டுவிட்டு உள்ளே களத்தில் குதித்து ஆட்டமாட ஆரம்பிக்க, உடன் நானும் குதிக்க, மெல்ல மெல்ல ஆட்டத்தின் காரணமாய் வாசிப்பாளர்களின் உத்வேகமும் ஏறி அவர்களின்

ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்க.. அப்துல்லா ஆடிய ஆட்டம் மற்றவர்களுக்கும் ஜுரம் போல பரவி மேலும் பல ஆண்களும், பெண்கள் ஆட்டத்தில் இறங்க, கலைஞர்கள் மேள தாளங்கள் மேலும் ஓங்காரத்துடன் ஏற.. நிச்சயம் ஒரு பெரிய எக்ஸ்டஸியை கொடுத்தது என்றால் அது மிகையில்லை என்பதை சுற்றி ஆடிய ஆண்களும் பெண்களும் அப்துல்லாவிற்கும், ஆடிய கலைஞர்களுக்கும், எங்கள் எல்லோரும் கை கொடுத்து வாழ்த்தியதிலிருந்தே தெரிந்தது. அவர்களுடய தாளத்துக்கு ஏற்றவாறு ஆடியது, மக்கள் கூட ஆட இறங்கியதும், கலைஞர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இருக்கிறதே. அடடா.. இந்த அங்கீகாரத்துக்கு அவன் இன்னும் ஒரு வருஷம் சந்தோஷமா உயிர் வாழ்வாண்ணே என்றார். அதன் பிறகு ஒவ்வொரு ஆட்ட க்ரூப்பிலும் போய் ஆடிய ஆட்டம் என்ன..? அடடா சூப்பர்.. இரவு ஒரு மணி வரை… வீடியோவை பார்த்தாலே தெரியும்.
***********************************************************************************
சாப்பாட்டுக்கடை
சென்னை சைதாப்பேட்டையில் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவின் முனையில் பாத்திமா ஆற்காடு பிரியாணி என்றொரு கடை இருக்கிறது. காலை மற்றும் மாலையில் பிரியாணி கடை திறந்திருக்கும். வழக்கமாய் திகட்டும் மசாலா இல்லாமல், சரியான கலவையில், அருமையான பாஸ்மதி அரிசியில் சுடச்சுட த்ருகிறார்கள். அவர்கள் கடை திறந்து காலியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. வெங்காயம், கத்திரிக்காய் இல்லாமலேயே பிரியாணியை சாப்பிட முடியும் அவ்வளவு ருசியாக இருக்கும். ஹேவ் எ ட்ரை..
**********************************************************************************
குறும்படம்
பிக்ஸாரின் அனிமேட்டட் குறும்படங்கள் புகழ் பெற்றவை. அதிலிருந்து ஒன்று.

************************************************************************************
பின்நவீனத்துவம்னா என்ன?
பரிசல் என்கிட்ட கேட்டிருந்தாரு.. இன்னொருத்தரும் கேட்டிருந்தாரு.. பின்நவினத்துவம்னா என்னன்னு? ரொம்ப கஷ்டப்பட்டு உட்காந்து யோசிச்சதிலே.. ஒன்று புரிஞ்சிச்சி பின்நவீனத்துவம்னா எனக்கு ஒரு மாதிரி புரியுது. அதை நீ பாக்கும் போது உனக்கு வேற மாதிரி புரியுது. இன்னொருத்தன் பாக்கும் போது அவன் வேற ஒண்ணை சொல்றான். இதையெல்லாம் பாக்குறவன் ஒரு வேளை நாமும் ஒரு கருத்தை சொல்லைன்னா நம்மளை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டாங்களோன்னு அவனும் மூணு பேர் சொல்றதுல ஏதோ ஒண்ணுக்கு தலை ஆட்டுவான். இப்படி யாருக்குமே புரியாம ஆளாளுக்கு ஒண்ணை புரிஞ்சிக்கிறதுக்கு பெயர்தான் பின்நவினத்துவம். என்ன புரிஞ்சுதா..? இல்லாட்டியும் புரிஞ்ச மாதிரி தலையாட்டுங்க.. இல்லாட்டி உங்களையும் ஆட்டத்தில சேத்துக்காம போயிருவாங்க..:)
*************************************************************************************
ஏ ஜோக்
ஒரு இத்தாலிய வர்ஜின் பெண் தன் முதல் இரவுக்கு போகும் முன் தன் தாயிடம் “அம்மா பயமாயிருக்கு என்று சொல்ல, கவ்லை படாதே மகளே ஜான் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்றாள். உள்ளே சென்ற பெண்ணை பார்த்ததும் ஜான் சட்டையை கழற்ற, மார்பு நிறைய முடியுடன் நின்றான். உடனே கீழே வந்த பெண் “அம்மா ஜான் மார்பு பூராவும் முடி” என்றாள். அம்மா” நல்ல திடமான ஆண்களுக்கு நிசசயமாய் முடி இருக்கும் ஜான் பார்த்து கொள்வான்” என்றாள். திரும்பவும் மேலே போன பெண் இப்போது ஜான் பேண்டை கழட்டியதும் கால்களில் கூட முடியிருப்பதை பார்த்து “அம்மா.. கால்களிலும் முடி இருக்கிறது” என்றாள். அம்மா.. “ நல்ல ஆண்களுக்கு அப்படித்தான் இருக்கும் ஜான் பார்த்துப்பான்” என்று அனுப்பி வைத்தாள். இப்போது ஜான் தன் சாக்ஸை கழட்ட, அவனின் இரண்டு கால் பாதங்களில் ஒருகாலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருக்க, கீழே வந்த பெண்” Mom. John has got One and half foot” என்றதும், அம்மா கண்கள் விரிய.. நீ இங்கே சமையல் வேலை செய்.. இது அம்மாவுக்கானது என்று ஆசையாய் ஓடினாள்.
*************************************************************************************
இந்த வார தத்துவம்
வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.. சொன்னது யார் - யாருக்கு தெரியும்??
**************************************************************************************



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

53 comments:

creativemani said...

//யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்//
உண்மையான வார்த்தை..

அப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்.. ;)

ஓஓஓ... பின் நவீனத்துவம்'னா இவ்வளோ இருக்கா? :)

கார்க்கிபவா said...

கேபிள்ஜி, இதுல பெரிய காமெடி என்னான்னா, தோரணை பார்த்துட்டு ஏதாவ்து லாஜிக் இருக்கான்னு கேட்ட புன்ணியவான் ஆ.ஒ பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், இவளோ ஆராய்ச்சியெல்லாம் தேவையா கார்க்கி? படத்த என் ஜாய் பண்ணுவீங்களான்னு கேட்டார். செம காமெடி இல்ல. எதுல எதை பார்க்கனுமோ அதை விட்டு இப்படியெல்லாம் சொல்றாங்க. இதுல இன்னும் காமெடி என்னன்னா, எனக்கு விஜய் பிடித்தாலும் வேட்டைக்காரன், வில்லு நல்லா இல்லைன்னு எழுதினேன். இன்னொருத்தர் நான் செல்வாவின் ரசிகர் அதனால் விமர்சனம் கொஞ்சம் biased இருக்கும்ன்னு சொல்றார். ஆனால் நான் விசலடிச்சான் குஞ்சாம். அவர் ஒலக பட ரசிகராம். :))

ஜெட்லி... said...

//அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்.
//

ரைட்......

Cable சங்கர் said...

கார்க்கி.. இன்னிக்கு ஸ்ரீதர் நாராயண் அவ்ர் பதிவுல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராச்சும் இருக்காங்களா..?

நான் கூட செல்வாவின் மிகத் தீவிர விசிறி..

Cable சங்கர் said...

கார்க்கி.. இன்னிக்கு ஸ்ரீதர் நாராயண் அவ்ர் பதிவுல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராச்சும் இருக்காங்களா..?

நான் கூட செல்வாவின் மிகத் தீவிர விசிறி..

CrazyBugger said...

Cableji, saapattu kadai solrappo address mattrum landmark udan sollunga.. engala mathiri bachelorsku othavum

ILA (a) இளா said...

செம குத்தா இருக்கே!

Romeoboy said...

அப்துல்லா அண்ணே செம குத்து குத்தி இருகாரு .. ஹா ஹா ஹா

சரி \\சைதாப்பேட்டையில் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெரு// உண்மையாலுமே இந்த மாதிரி பெயரில் ஒரு தெரு இருக்கா தலைவரே ? பேர்ரே கலிஜா இருக்கே !!!

sathishsangkavi.blogspot.com said...

அப்துல்லாவின் குத்தாட்டம் சூப்பர்...

guru said...

ஓ இது தான் பின் நவீனத்துவமா!...

எதுக்கும் தலையாட்டி வைப்போம்...

butterfly Surya said...

கும்தலகடி கும்மாவா .. அப்துல்லான்னா சும்மாவா..??

கொத்து.. குத்து... சூப்பர்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

கு(கொ)த்து சூப்பர்.

எனக்கு பின்-நவீனத்துவம் புரிஞ்சுடுச்சு. :)

//காலை மற்றும் மாலையில் பிரியாணி கடை திறாந்திருக்கும். வழக்கமாய் திகட்டும் மசாலா இல்லாமல், சரியான கலவையில், அருமையாண் பாஸ்மதி அரிசியில் சுடச்சுட த்ருகிறார்கள்//

திறாந்திருக்கும்??
அருமையாண்??

சாப்பிட்டுகிட்டே தட்டச்சு அடிச்ச மாதிரி இருக்கு...ஹீ ஹீ

பரிசல்காரன் said...

அப்துல்லா அரசின் இயல் இசை நாடக மன்றத்தலைவராகும் அத்தனை தகுதிகளுடன் இருக்கிறார். Hats off u dude!

@ கேபிள்

இந்த வார கொத்துபரோட்டாவையாவது மொளகா இல்லாமப் போட்டீங்களே.. தேங்க்ஸு!

Raju said...

அப்துல்லா அண்ணன் அவர்களுக்கு கொடுத்த அங்கீகரத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.

Anbu said...

எல்லோரும் சொல்றாங்க..தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு மைல்கல் என்று..எனக்கென்னவோ 32 கோடி ரூபாய் செலவழித்து இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு நாடோடிகள் மாதிரி நாலு நல்ல படம் எடுத்தாலே போதும் தமிழ் சினிமா முன்னேற வாய்ப்பிருக்கிறது...

படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம்...

தராசு said...

//அடடா.. இந்த அங்கீகாரத்துக்கு அவன் இன்னும் ஒரு வருஷம் சந்தோஷமா உயிர் வாழ்வாண்ணே என்றார்//

இது....இது.....இது எங்க அப்துல்லா அண்ணன்.

Ashok D said...

//கும்தலகடி கும்மாவா .. அப்துல்லான்னா சும்மாவா..//
தலைவரே எனக்கு ஒரு போன் அடிச்சுயிருந்தா வந்து ஒரு குத்து போட்டுயிருப்போம்ல :(

மரா said...

அப்துல்லா நல்லலா பாடுவாருன்னு எனக்குத் தெரியும்.நல்லா ஆடுவாருன்னு இப்ப பாத்துட்டேன்.கூட ஆடுற யூத் யாரு?
கொத்து சூப்பர்.போர்க்களம் எப்போ?

Unknown said...

/*
வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.
*/
சித்த வரிகள்...
பகிர்ந்தற்கு நன்றி...

நர்சிம் said...

சுவை.

ஆரூரன் விசுவநாதன் said...

கொத்து சூப்பர்......ஆட்டம் அதவிட சூப்பர்......கலக்கல் பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் பாவி எப்பய்யா இதெல்லாம் படம் புடுச்ச???!!??

அண்ணே உண்மையில் அந்த எளிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்களை அவர்கள் மொழியில் நாம் அங்கீகரிப்பது மட்டுமே.

நான் ஆடத்துவங்கியதும் பார்வையாளர்கள் சுமார் 1000 பேர் ஆடத்துவங்கியது பெரும் மனநிறைவை அளித்தது.

எம்.எம்.அப்துல்லா said...

//கூட ஆடுற யூத் யாரு?


//


யாருக்குத் தெரியும்??? அவர் அங்கு எங்களைப்போலவே வந்திருந்த ஒரு பார்வையாளர். ஏதோ ஒரு கொரியன் கம்பெனியில் ஜி.எம்.ஆக வேலை செய்வதாய்ச் சொன்னார்.

க.பாலாசி said...

தத்துவம் நல்லாருக்கு தலைவரே...

Paleo God said...

குத்துன குத்துல பரோட்டா செரிச்சிடிச்சி..::))

குசும்பன் said...

நீங்க ஆடும் ஆட்டத்துக்கு சுனாமி வராம தப்பிச்சீங்களே அதுவே பெரும் நிம்மதி:)))

அப்துல்லா அண்ணே கலக்கலா கை சுத்துறீங்க:)

Naadodigal said...

கோடம்பாக்கத்துக்கு இரண்டு குத்தாட்ட பார்ட்டி கிடைச்சு இருக்காங்க :-). யாராவது அள்ளிட்டு போங்கப்பா...

சங்கர் said...

பின்நவீன ஜோக்கு சூப்பர்,
என்ன பின் நவீனம் இருக்குனு கேட்கிறவங்க, ஆட்டத்தில இல்லை

சங்கர் said...

//தலைவரே எனக்கு ஒரு போன் அடிச்சுயிருந்தா வந்து ஒரு குத்து போட்டுயிருப்போம்ல :(

யாரை குத்துவீங்க, கேபிளையா ?

சி.வேல் said...

தீவிரவாதிகளும் கடினப்பட்டு உழைத்துதான் தப்பு செய்யக்கிறார்கள் அதற்கு எல்லாம் அங்கீகாரம் தர முடியுமா
உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும். சரியான வாக்கியம்

வெற்றி said...

ஆ.ஒ. பத்தி உங்கட்ட ஒன்னும் பேசுறாப்புல இல்ல..விடுங்க..

ஆமா அவ்ளோ பெரிய பாடிய வச்சிக்கிட்டு எப்படி ரெண்டு பேரும் இவ்ளோ பாஸ்டா ஆடுறீங்க..
உண்மையிலேயே வேகமாதான் ஆடுநீங்களா இல்ல வீடியோ தகிடுதத்தம் ஏதும் பண்ணீங்களா?

//வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும்//

பப்ளிக்கா கிஸ் பண்ண நான் என்ன அமெரிக்காவிலா இருக்கேன் :))

வெண்பூ said...

அப்துல்லா, கேபிள்,

ரெண்டு பேருக்கும் பாராட்டுகள், அந்த கலைஞர்களை அவங்க மொழியிலேயே பாராட்டுனதுக்கு...

kanagu said...

adada.. naan indha vaati chennai sangamatha miss panniten anna... last time sivamani oda drums nadanthudu.. chance eh illa...

AO padathin redavathu pathiyin sarukkalukku kaaranam anubavaminmai-nu nenaikiren anna... enna than pala english padangla paathu irundhalum.. atha screen-la avlo perfect-ah kondu varathu kastam...

tamil-la fantasy oda adutha muyarchi vetri adanja.. AO athuku oru padikkal nu sollalam..

appa saidapet-ku vandha kandipa naama anga sapduvom na :)

முரளிகண்ணன் said...

cableji sridhar narayan link please

Subha said...

Cable,
I you are confident of what you believe and what you are saying then you will not react. I think there is something personal in your review, that's why you are reacting so much....anyway i continue to read your stuff....

ஈரோடு கதிர் said...

//குதித்து ஆட்டமாட ஆரம்பிக்க, உடன் நானும் குதிக்க//

குதிக்க....
உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கண்ணே

பாலா said...

@முரளி...

http://www.sridharblogs.com/2010/01/blog-post_17.html

நானே.. கண்டுபிடிச்சேனாக்கும்.

சின்னப் பையன் said...

அப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்.. ;)

கொத்து - கலக்கல்... :-))

அத்திரி said...

உள்ளேன் ஐயா

ரோஸ்விக் said...

அப்துல்லா அண்ணே... சிங்கப்பூர்-ல நான் கை சுத்தி காமிச்சப்ப நீங்க ரசிச்ச விதத்தை வச்சு, அண்ணேன் பெரிய கலா ரசிகரா இருப்பார் போலன்னு நினைச்சேன். ஆனா பெரிய குத்தாட்டக்காரரா இருந்துருக்கீக. தெரியாமப் போச்சண்ணே. இல்லேனா இங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டிருக்கலாம்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியல.

பின் நவீனத்துவம் புரிஞ்சிடுச்சுனு நானும் தலையாட்டிக்கிரேன். இல்லையினா ஆட்டையில சேர்த்துக்க மாட்டீங்கள்ல...

Chitra said...

கொத்து பரோட்டாவும் குத்து பரோட்டாவும் சூப்பர்.

Rajasekaran said...
This comment has been removed by the author.
Rajasekaran said...

Waterworld's budget seems to be $175 million, not $600 million...

http://en.wikipedia.org/wiki/Waterworld#Production

அஹோரி said...

உங்களுடைய விமர்சனம் நல்லா இருக்குமே. ஆயிரத்தில் ஒருவனுக்கு ஏன் இப்படி மொக்கையா எழுதி இருக்கீங்க. படம் நல்லா தான இருக்கு.
உங்க விமர்சனத்த ஊருல இருக்குற விவசாயியா படிக்க போறான். இண்டர்நெட்ல பிரௌஸ் பண்றவனுக்கு இந்த படம் புரியலையா என்ன ?

பாலா said...

செகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்?

Krubhakaran said...

நானும் சென்னை சங்கமம் போனேன், தவர விடக் கூடாத நிகழ்ச்சி,என் அனுபவங்கள் மற்றும் படங்கள்.
http://ilakindriorpayanam.blogspot.com/2010/01/14-01-2010.html

தாராபுரத்தான் said...

சங்கமத்தில் சங்கமமா.கெத்துதான்ங்க.

Ganesh-Vasanth said...

cablena,

கடந்த 6 மாசமா உங்களோட எல்லா "மேட்டரையும்" படிச்சுட்டு வரேன் , இப்பதான் மொத மொத பின்னூட்டம் குத்தறேன்.

உங்க குத்து டான்ஸ் தான் என்ன பின்னூட்டம் குத்த வச்சுது.சான்சே இல்ல அசால்ட் பண்றீங்க.இன்னா டான்சு , நீங்க ஆடறதும் அவங்க பாடறதும் அய்யய்யயோ...... அப்படியே லேப்டாப்பை கீழ வச்சுட்டு நானும் ஒரு டான்ஸ் போதுதான் முடிச்சேன்.அடுத்த தபா எப்டியாவது நாம சேந்து ஆடறோம் சங்கமத்துல ,

கல்வெட்டு said...

கலைஞர்களைக் கெளரவித்த அப்துல்லா மற்றவருக்கும் (கேபிள் நீங்களா அது ?) வாழ்த்துகள். கொண்டாட்டம் என்பது இயல்பாய் வெளிப்படவேண்டும். அது உங்களிடம் உள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுகளின் போது திருமங்கலத்தில் பட்டயக் கெளப்பி உள்ளோம். ஒரு குத்தாட்டாம் போடணும் கேபிள் உங்களுடன். :-))

எம்.எம்.அப்துல்லா said...

//செகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்?
//

ஆமாம் பாலான்ணா. சிகப்புச் சட்டை நானேதான் :)

பித்தன் said...

அப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்..

கண்ணா.. said...

//ஹாலிவுட் பாலா said...
செகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்?//

யோவ் ஹாலி பாலி,

அப்துல்லா அண்ணனை தெரியாமல ஓரு வருசமா ப்ளாக்ல குப்ப கொட்டிருக்க....

டிவீட்டர் ஆரம்பிக்க காரணமே அப்துல்லா அண்ணனோட குட்டி குட்டி பதிவ பாத்துதான்....

ஹாலிவுட் படத்த பத்தி மட்டும் தெரிஞ்சா போதாது.... டிவீட்டர் உருவாக யார் காரணம்னும் தெரியணும்...!

Thamira said...

முதல் பகுதிக்கு.. அதானே.!

அப்துல் ஆட்டம் கலக்கல், பல வகைகளிலும்.!

குறும்படம் சொல்லவே வேண்டாம்.. பிக்ஸார்னாலே சிறப்புதான்.

பின்னவீனத்துவ விளக்கம் புல்லரிப்பு.