கொத்து பரோட்டா –25/01/10

omkar omkar1
போன வாரம் சுவாமி ஓம்கார் வந்திருந்தார். நிறைய முறை தொலைபேசியிலும், சாட்டிலிலும் பேசியிருந்தாலும், முதல் முறையாய் நேரில் சந்திக்கிறேன். .மதியமே அப்துல்லாவின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு சாமியாரிடம் பேசும் சங்கடங்கள் ஏதுமின்றி ஒரு நண்பனிடம் பேசுவது போலவே பேசினார். சாயங்காலம் பீச்சில் குழுமியிருந்த “பெரும்” கூட்டத்தில் ஒவ்வொருவரை பற்றியும் கேட்டறிந்து கொண்டு மிக இயல்பாய் பேசினார். அவர் ப்ளாகராவதற்கு ஜெயமோகந்தான் காரணம் என்றார். இயல்பாய் ஜோக்கடித்தார், பாவனாவை பற்றி பேசினார்.. என்ன பேசினார் என்பதை வந்திருந்தவர்களிடம் கேட்டோ, அல்லது அவரது பதிவை படித்தோ தெரிந்து கொள்ளவும். ஒரு முக்கிய விஷயம் வலிக்காமல் ஆன்மீகம் பேசுகிறார் என்பது குறிப்பிடதக்கது. அதற்காகவே அவரிடம் ஆன்மீகம் கேட்கலாம் போலிருக்கிறது. அப்துல்லா என்னை பற்றி அவரிடம் சொல்லும் போது ஒரு ஆன்மீக நாத்திகவாதி என்றாராம்.
*************************************************************************************
தவிச்ச வாய்க்கு தண்ணி
சிக்கிங், கே.எப்.சி. போன்ற இடங்களில் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று நுழைந்தால் குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் போக முடியாது. சரின்னு போய் உட்கார்ந்தா, தவிச்ச வாய்க்கு தண்ணி கிடையாது. காசு கொடுத்துதான் வாங்கணும். வெளியேர்ந்தும் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. இவனுங்க கொடுக்கிற தண்ணியத்தான் விலை கொடுத்து வாங்கணும், இல்லைன்னா பெப்ஸி,கோலா என்பது போன்ற பூச்சி மருந்துகளை பேக்கேஜா வாங்கி வயித்தை க்ளீன் பண்ணிக்க வேண்டியதுதான். நம்ம மாநகராட்சி சட்டபடி ஒரு உணவகத்தில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரமான உணவு, சாப்பிடும் இடங்கள், சுத்தமான தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் போன்ற பல விஷயங்கள் இருந்தால் தான் லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் இவர்களுக்கு கிடையாது போலிருக்கிறது. ஒரு சாதாரண சின்ன ஹோட்டலிலேயே குடிப்பதற்கு கேன் வாட்டரை கொடுக்கும் ஹோட்டல்கள் நிறைய உள்ளன. அப்படியிருக்க சாப்பிட வரும் மக்களை கட்டாயப்படுத்தி பாட்டில் தண்ணீரையோ, குளிர்பானங்களையோ வாங்க வைப்பது எந்த விதத்தில் ஞாயம்.? போகிற போக்கில் தவிச்ச வாய்க்கு தண்ணி வேண்டுமென்றால் காசு கொடு தண்ணீர் தருகிறேன் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே. இதில் எனக்கு தெரிந்து மேரிப்ரவுன் பரவாயில்லை டேபிளில் வைக்காவிட்டாலும், கேட்டால் தருவார்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு கட்டாயம் நல்ல குடிநீரை ஒவ்வொரு ரெஸ்டாரண்டு வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருமா..?
**************************************************************************************
சாப்பாட்டுக்கடை
சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் ஹோட்டல் ரேணுகா என்று ஒரு செட்டிநாடு மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு,பிரியாணி கிடைக்கும். சைட் டிஷ் வாங்காவிட்டாலும் உங்களுக்கு சிறந்த கவனிப்பு நிச்சயம் உண்டு. மதிய சாப்பாட்டுக்கு, அவர்கள் கொடுக்கும் ஸ்பெஷல் கிரேவிகள் இருக்கிறது பாருங்கள் அதுக்கே சாப்பிட போகலாம். மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, நண்டு கிரேவி, மீன் குழம்பு, இதை தவிர ரசம், மோர் என்று ஒரு விருந்தே படைக்கிறார்கள். ஞாயமான விலையில். முக்கியமாய் போடும் போதே ஒரு கப்பில் சாதத்தை வைக்காமல், ஒவ்வொரு முறையும் இலையில் வந்து கேட்டு பரிமாறுவது ஹோம்லி டச். தண்ணீர் கேன் வாட்டர் குறையாமல் தருகிறார்கள். நிச்சயம் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், நிச்சயம் மறு முறை போவீர்கள்.
************************************************************************************
அரசியல்
போன வாரம் மொக்கை மெயிலில் எனக்கு வாழ்த்து சொல்லி மெயில்கள் வந்தது. என்னடான்னு பார்த்தால் வருண் என்பவர் சாருவை ஓவர் டேக் செய்த கேபிள்சங்கர் என்று அலெக்ஸா ரேங்கிங்கில் சாருவை விட முன்னிலையில் இருப்பதை பற்றி எழுதியிருந்தார். அவரை எனக்கு முன் பின் பழக்கம் கிடையாது. அவ்வப்போது அவரின் குட்டி, குட்டி பதிவுகளை படித்திருப்பதை தவிர. என்னையும் ஒரு பொருட்டாய்  மதித்து  உற்சாகப்படுத்திய அவருக்கு என் மனம் கனிந்த நன்றிகள். பின்னூட்டத்தில் நான் ஏதோ நைஜிரியாவிலிருந்து வரும் டிராபிக்  எல்லாம் சாப்ட்வேர் வைத்து கொண்டுவருவது என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள். இப்படி ஒரு சாப்ட்வேர் இருக்கிறது என்று தெரிய வைத்தமைக்கு. எனக்கு தெரிந்து நைஜிரியாவில் இருக்கும் ஒரே சாப்ட்வேர் அண்ணன் நைஜீரியா ராகவன் மட்டும் தான். பார்ப்போம் சீக்கிரம் கூகுளை தாண்டுவோம் சாப்ட்வேரை வைத்து. :)
************************************************************************************ 
இந்த வார பதிவர்
சமீபத்தில் நண்பர் வண்ணத்துப்பூச்சியார் ரெபரன்ஸில் படித்த பதிவு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட B.T கத்திரிக்காயை பற்றியும் அதனால் நம்க்கு ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றியும், தமிழக அரசு காட்டும் மெத்தனத்தை பற்றியும் எழுதியிருந்தார். ஜெயமார்த்தாண்டன் என்பவருடய இந்த பதிவு நிச்சயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவாகும்.
**************************************************************************************
இந்த வார குறும்படம்
மறைபொருள் என்னுடய நண்பர் பொன்.சுதா இயக்கிய முதல் படம். சர்ச்சைக்குரிய விஷயத்தை கையிலெடுத்து, அதை தைரியமாய் சொல்லியிருப்பார். நிறைய விருதுகளை பெற்ற படம். இந்த படததை எடுக்க தூண்டியவன்  என்கிற முறையில் எனக்கும் மிக சந்தோஷமே..(எந்த முறையில் என்று சுதாவை கேட்டால் தெரியும்:)))

*************************************************************************************
ஏ ஜோக்
கணவன் ஒரு நாள் மனைவியிடம் “நாம் இன்று புதிய உறவு முறையான 68 செய்வோம்”என்று சொல்ல, மனைவி “அதென்ன 68 நான் 69 கேள்விபட்டிருக்கிறேன்” என்றவுடன். கணவன் “ இது லேட்டஸ்ட். முதலில் நீ எனக்கு செய்ய வேண்டும். பின்பு நான் உனக்கு செய்ய வேண்டும் என்பதை கணக்கில் வைத்து கொள்ள வேண்டும்” என்றான்
*************************************************************************************
இந்த வார தத்துவம்
வாழ்வின் மோசமான நிலைகளில் உன்னோடு இல்லாதவனுக்கு, உன்னுடய சந்தோஷ காலங்களில் சிறிது நேரம் கூட இருக்க தகுதியற்றவன்.
*************************************************************************************



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Comments

கே.எப்.சி மேட்டர் சரியே.....
தத்துவம் சூப்பர் அண்ணே!!
Raghu said…
த‌ண்ணிகூட‌ த‌ர‌லைனா அந்த மாதிரி ஹோட்ட‌ல்க‌ளுக்கே போகக்கூடாது. அப்ப‌டி எல்லாரும் சேர்ந்து ஒதுக்கிவெச்சாதான் திருந்துவாங்க‌. ம்ஹும், சொன்னா யாரு கேக்க‌ப்போறாங்க‌, சினிமாத்த‌ன‌மா பேசாத‌ன்னு ந‌ம்ம‌ள‌தான் திருப்பி குத்த‌ம் சொல்லுவாங்க‌:(

இதுக்கு பேர் ஏ ஜோக்கா? அய்யோ, அய்யோ:)))

த‌த்துவ‌ம் சூப்ப‌ர்:)
Unknown said…
அருமையான குறும்படம் அண்ணா..
நல்ல நேர்த்தியான ஒலி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்..
இந்த குழுவினருக்குள் ஒரு சிறந்த சினிமா புதைந்து கிடக்கிறது,
காலம் இவர்களை மொத்தமாகவோ, தனித்தனியாகவோ
அடையாளபடுத்தும்....
என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து எழுதியதற்கு நன்றிகள்.

ஆன்மீக நாத்திகருக்கு... :) நாளை செவ்வாய் கிழமை என்பதை அன்புடன் நினைவு கூறுகிறேன்.
Sukumar said…
// தவிச்ச வாய்க்கு தண்ணி //
கண்டிப்பாக இது கேட்கப்பட வேண்டிய விஷயம் தல.....
BT கத்தரிக்காய் பற்றிய பதிவை அறிமுகபடுத்தியமைக்கு தங்களுக்கும் சூரியாவிற்கும் என் நன்றி.
நல்ல கொத்து ..
ஷங்கி said…
"ரேணுகா” இன்னும் இருக்கா? பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தி.நகரில் இருந்தபோது பல ஞாயிறுகள் உண்ட இடம். ஹ்ம்! கனாக் காலங்கள்!
குறும்படத்தின் கடைசி விநாடிகளில் அந்த கண்களில் தெரியும் உணர்வு.....

நேர்த்தியான பதிவு
"போகிற போக்கில் தவிச்ச வாய்க்கு தண்ணி வேண்டுமென்றால் காசு கொடு தண்ணீர் தருகிறேன் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே. "

உண்மை தான் கேபிள்ஜி. அனுபவம் இருக்கு.
DR said…
இதாவது பரவா இல்லை...
இங்க ( மலேஷியா ) கையேந்தி பவன்ல கூட தண்ணி ( Ice Worm )
வேணும்னா 20 சென்ட் குடுக்கணும். மழை பெய்யாத நம்ம ஊர்லயே தன்னிக்கு காசு வாங்குறது இல்லை. ஆனா இங்க இவனுங்களுக்கு என்ன குறைச்சல். மாசத்துல 4 தடவ மழை பெய்யுது.
Paleo God said…
உங்க காமெராவும் அண்டத்தில் அதிர்வலைகளுக்கு தப்பவில்லையா குருஜி..:))
சிலர் அவர்களாகவே அவர்களை சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலரைத்தான் மற்றவர்கள் அங்கீகரித்து உயர்ந்த நட்சத்திர அந்தஸ்து கொடுப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் நீங்கள் இரண்டாவது ரகம் ஐயா ....... என்னுடைய இந்த (எதற்கும் உதவாத)மொக்கை பின்னூட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் ..............
ஹோட்டல் வச்சிருக்கறவங்க தண்ணீ கொடுக்கலன்னா எப்டி.?? இது மிக கண்டிப்புக்குரிய விசயம்தான்.

தத்துவம் நல்லாருக்கு...தலைவரே..
மரா said…
கொத்து சூப்பர். தவிச்ச வாய்க்கு தண்ணி
கண்டிப்பாச் சொல்ல வேண்டிய விசயம்.
//பார்ப்போம் சீக்கிரம் கூகுளை தாண்டுவோம் சாப்ட்வேரை வைத்து. :)//
என்னா வில்லத்தனம் :)வாழ்த்துக்கள்.
// தவிச்ச வாய்க்கு தண்ணி //

எல்லா ஊர்லியும் இதே பிரச்சனை தாங்க...
anujanya said…
அந்த நைஜீரியா டிராபிக் பற்றி தெரியாது. உங்க வலையிலிருந்து கட்டாயமா என்னோட வலைப்பூவுக்கு வர மாதிரி ஏதாவது வழி செய்யுங்களேன் :((

உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பொதுவான ரசனைகள் பற்றிய புரிதல், ஏராளமான உழைப்பு - இவற்றைப் புரிந்து கொள்ளாதவர்கள் பொறாமையில் பேசுவதையும் நீங்கள் இயல்பாக அணுகியதில்...மகிழ்ச்சி.

Keep rocking Cable.

அனுஜன்யா
அண்ணே கேஎப்சி மேட்டரு டாப்பு... உண்மைதான் அநியாயம் பண்ணுறானுங்க... உலகமயாக்கலின் விளைவுகள் எல்லாம் அனுபவசிச்சுத்தான் ஆகனும்...

கடைசியா சொன்ன அந்த ஜோக்குதாண்ணே பதிவையே அழகாக்கிடுச்சு...ஹீஹீஹீ
எனக்கு ஜோக்கு புரியல :((
Ashok D said…
குறும்படம் முடிவின் அதிர்வலை வயலினோடு சொல்லியிருப்பது அருமை.
//அனுஜன்யா said...
அந்த நைஜீரியா டிராபிக் பற்றி தெரியாது. உங்க வலையிலிருந்து கட்டாயமா என்னோட வலைப்பூவுக்கு வர மாதிரி ஏதாவது வழி செய்யுங்களேன் :((//

இனிமே, புரியுற மாதிரி கவிதை (என்டர் கவிதைன்னும் சொல்லலாம்) மட்டும் தான் எழுதுவேன்னு, ஒரு அறிக்கை விட்டுப் பாருங்க, எவ்வளவு கூட்டம் வருதுன்னு :))
CS. Mohan Kumar said…
கொத்து வழக்கம் போல்.. பீச்சில் நடந்த சந்திப்பு பற்றி தெரியாது. தெரிந்தால் வந்திருப்பேன்
வழக்கம் போல் கலக்கல்
மணிஜி said…
நான் சிக்கன் சாப்பிடறதை விட்டு ரொம்ப நாளாச்சு கேபிள். ஒன்லி கோழிதான்!!
தல கூகுல தாண்ட வாழ்த்துக்கள்.
சாஃப்ட்வேரை கண்ணுல காமிங்க நாங்களும் ஏதாவது பண்றோம், நீங்க கூகுள தாண்ட.
மறை பொருள் : நிறைவு (பின்னணி இசை கலக்கல்)

தத்துவம் : உண்மை
essusara said…
reunka hotel maraka mudiyatha bramacharigalin hotel.

2002 il suganthi mansionil nanbargoludu thangiirunthapothu eppoluthellam kayil kasu niraigiratho appoluthu renuka hotel engakaluku sorgam .

nandu giravey romba special .

gbaga paduthiyathirku nandri sankar avargaley.
எங்களுக்காகவே ஏ ஒன் ,
தமிழ்மணம் 9/10
இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

cablesankar kathir nadodiyinparvaiyil SHANKAR balasee mathans gulf_tamilan aruran thandora tamilnaducongress

9/9 இருந்தது... இப்போ 9/10
யார் அதுன்னு தெரியுதுங்களா கேபிள்.. கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்...

எனக்கும் ஒரு மைனஸ் வந்திருக்கு
கொத்து ப‌ரோட்டா சூப்பர் தலைவரே.
Chandran Rama said…
The non availability of drinking water in such hotels is really a very genuine issue.

Thanks for projecting it Cable..

I only hope the concern authorities take immediate remedy for this...

The short film " Maraiporul " is excellent...where lies the explanation for this...??????
Unknown said…
காரம்,மணம்,சுவை நிறைந்த
கொத்துபரோட்டா.
கூட சுவையும்,சூடும்.
அருமையான பதிவு.
அன்பின் சங்கர்,

மறுபடியும் ஒர் நீண்ண்ண்ட பின்னூட்டம் எண் -1,

முதலில் ஸ்வாமி ஓம்கார் பற்றி, ஓம்கார் அவர்கள் சோதிடத்தின் உதவியால் தினசரி அதிரடி மாற்றங்கள் ஏற்படும் பங்கு வர்த்தகத்தையே எளிமையைக கையாண்டு இலாபம் அடைய பாடம் எடுப்பதாக அவரின் இடுகைகள் மூலம் அறிந்தேன். எனக்கு அது தேவை இல்லை. எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. கைவசம் கணனி தொழில் உள்ளது. மாறாக நாங்கள் ஈடுபட்டுள்ள " "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவைக்கு" அவருடைய பண்டைய கால தொழிலநுட்பமாக கருதப்படும் சோதிடத்தின் உதவி மிக மிக தேவை. கிடைத்தால் தன்யனவேன். அவரை போன்றவர்களுக்கு இங்கே ஓர் வேண்டுகோள் (or) சவால் காத்திருக்கிறது . அவர் ஏற்றுக்கொள்ள தயாரா? தயார் என்றால் என்னை மறுநொடியே தொடர்புகொள்ளவும். எங்களுக்கு உலகில் M7.5 அளவிற்கு மேல் ஏற்படும் பூகம்பத்தை பற்றி குறைந்தபட்சம் 24 மணி நேரம் முன்பாக தெரிந்தால் போதுமானது. நாங்கள் களத்தில் இறங்கிவிடுவோம். டீலா, நோ டீலா ? ஒரே வார்த்தை. பிறகு அவருக்கு ஓகோனு வாழ்க்கை தான். இதை நானே நேரடியாக அவரிடம் கேட்பேன். ஆனால் முன்னொரு முறை நான் ஈடுபட்டிருக்கும் ஒரு இதிகாச கால நபரை பற்றிய ஆராய்ச்சி விஷயமாக மின்னஞ்சல் செய்ததற்கு இதுவரை அங்கிருந்து பதிலில்லை. அதை Gmail ஒரு வேளை Spam ஆக கருதிவிடவும் வாய்ப்பு உண்டு.விவரம் அறிந்தால் வேண்டுமானால் மறுபடியும் அனுப்பி வைக்கிறேன். :-).



with care & love,

Muhammad Ismail .H, PHD.,

குறிப்பு - இந்த சோதிடம் என்பது பகவத் கீதையின் சாராம்சத்திற்கு எதிரானது. அந்த சாராம்சத்தின் படி "எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. (அதாவது கடந்த காலம்), எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது (இது நிகழ் காலம்), எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும். (இது எதிர்காலம் பற்றியது). வடிவேலு பாணியில் இதற்கான விளக்கம் என்னவெனில் " உங்களில் யாரும் ஆணியே புடுங்க வேண்டாம், நான் முன்னர் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும் " என்பதுதான். மேலும் இந்த சாராம்சமானது கீதையில் நேரடியாக எங்கும் கிடையாது. இது பற்றி மறைந்த சிந்தாநதி கேட்ட கேள்வியான இடுகை இதோ. ஆனால் இது போன்ற வசனங்கள் குர் ஆனில் உண்டு. யாருக்காவது அது தெரியுமா?



with care & love,

Muhammad Ismail .H, PHD.,
அன்பின் சங்கர்,

மறுபடியும் ஒர் நீண்ண்ண்ட பின்னூட்டம் எண் -2,


இது தவிச்ச வாய்க்கு தண்ணி மற்றும் மரபணு மாற்ற கத்தரி பற்றி. சிக்கிங், கே.எப்.சி. போன்ற அன்னிய நிறுவனங்கள் உள்ளே வெறும் குடிதண்ணீரை வைத்து ஆடும் ஆட்டத்தை எதிர்காலத்தில் மரபணு கத்தரியின் விதையை வைத்து மான்ஸன்டோவும் செய்யும். காரணம் எதிர்காலத்தில் நமது தேசத்தின் 110 > கோடி மக்களின் உணவில் கையை வைத்து ஆடப்போகும் மீப்பெரு ஆட்டம் அது. விவரம் தேவைப்படும் பொறுமைசாலிகள் மக்கள்-சட்டத்தின் இந்த மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார் இடுகையையும். எனது பின்னூட்டத்தையும் படிக்கவும். பிரச்சினை புரியும்.

with care & love,


Muhammad Ismail .H, PHD.,
குறும்படம் மிக அருமை.

:-)
பரோட்டா மிகவும் சுவையாக இருந்தது.

குறும்படம் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.
sriram said…
அதிசயம் ஆனால் உண்மை யூத்து, 17 ஓட்டுல ஒரே ஒரு மைனஸ் ஓட்டுதான் இருக்கு..

அப்புறம், கூகுளைத் தாண்டுவதற்கு நைஜீரியா சாஃப்ட்வேரெல்லாம் வேணாம், இனிமே கவிதை எழுதமாட்டேன்னு ஒரு அறிக்கை விடுங்க, எத்தனை பேரு தெகிரியமா உங்க பக்கம் வருவாங்க பாருங்க...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/இனிமே கவிதை எழுதமாட்டேன்னு ஒரு அறிக்கை விடுங்க, எத்தனை பேரு தெகிரியமா உங்க பக்கம் வருவாங்க பாருங்க..//

நாளைக்கு கவிதை ரிலீஸ்
ரேணுகா மெஸ் மறக்க முடியாத இடமாச்சே. நீங்க ரங்கனாதன் தெருக்கு நேர் எதிர் தெருவில் உள்ள மெஸ்ஸை தானே சொல்கிறீர்கள். எப்பவுமே கூட்டமா இருக்கும்.

கொத்து புரோட்டா சூப்பர்.
sriram said…
//நாளைக்கு கவிதை ரிலீஸ்//
அடங்க மாட்டீங்களே...

As I will be suffering from கவுஜ ஃபீவர், please give me 2 days leave from cablesankar blog page :)

பாலா, இந்த ஆள் அடங்க மாட்டேங்குறார், என்னன்னு பாருங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
kfc, pizzahut, no free water- nice
குகன் said…
குறும்படம் நல்ல டச் :)

// இந்த படததை எடுக்க தூண்டியவன் //

நீங்கள் தூண்டியதால் அந்த பெண் பாத்திரத்தை அதுவாக இருக்குமோ என்று நினைத்துவிட்டேன்.
Kumky said…
எல்லாம் சரி.. கேபிள்.
இந்த ஏ” ஜோக்கை மட்டும் தனி பதிவா போடக்கூடாதா...?

குறும் படத்தில் நடிப்பவர் கேமிராவையே பார்த்துக்கொண்டிருக்ககூடாதல்லவா...?
Shajahan.S. said…
அந்த குறும்படத்தில் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை.ஒரு குடும்பபெண் தன்னுடைய அழகை முழுதும் ரசிக்க தகுதியுடையவன் தன் அன்புக் கணவன் மட்டுமே, வீதியில் நடந்துபோகும் ஆடவர் அல்லர் என்பதை மிகவும் இதைவிட அழகாக யாரால் சொல்ல முடியும்.
ரசிக்கும் வகையில் சந்திப்பின் தருணங்களையும் , ரசித்த பதிவுகளையும் தொடுத்து எழுதி இருக்கிறீர்கள் .
பகிர்வுக்கு நன்றிகள் !
@jetli

நிச்சயம் எல்லோரும் கேட்க வேண்டிய விஷயம்

@குறும்பன்
நன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி பாராட்டுகள் நண்பருக்கு உரித்தாகுக

@ஸ்வாமி ஓம்கார்
நன்றி சாமி

@சுகுமார் சுவாமிநாதன்
கேளுங்க

@ஜெ.ஜெயமார்த்தாண்டன்
எதுக்குங்க நன்றியெல்லாம் என் கடமை

@
@jetli

நிச்சயம் எல்லோரும் கேட்க வேண்டிய விஷயம்

@குறும்பன்
நன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி பாராட்டுகள் நண்பருக்கு உரித்தாகுக

@ஸ்வாமி ஓம்கார்
நன்றி சாமி

@சுகுமார் சுவாமிநாதன்
கேளுங்க

@ஜெ.ஜெயமார்த்தாண்டன்
எதுக்குங்க நன்றியெல்லாம் என் கடமை

@
@srikrishna
நன்றி

2ஷங்கி
இல்லாம என்ன..?

@ஈரோடு கதிர்
நன்றி

@நாடோடி
ஆமாம் நாடோடி

@தினேஷ்
அட கொடுமையே

@பலாபட்டறை

:))

@
@இராஜபிரியன்
ஏன் உங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள் ப்ரியன்.. நீங்களும் சிறந்தவரே..:)

@க.பாலாசி
நன்றி
@மயில்ராவணன்

:)

@சங்கவி
அட ஆமாங்க. யாராவது கேட்கணும்

@அனுஜன்யா
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.. நான் என்ன அலெக்ஸாவை பார்த்தா பதிவெழுத வந்தேன் ..:))

@
@நாஞ்சில் பிரதாப்
நன்றி

@சங்கர்
:((

@மோகன் குமார்
திடீர்னு அமைசிருச்சு.. என்பதிவுலபோட்டிருந்தேனே மோகன்

@ஆருரன்விசுவநாதன்

நன்றி
@தண்டோரா

ஏன்?

@முரளீகுமார் பத்மநாபன்
அது தெரிஞ்சா நான் ஏன் இங்க் இருக்கேன்

@சைவகொத்து பரோட்டா
நன்றி

@எஸ்சுரா
ஆமா சார்..

@தாராபுரத்தான்

:)

@ஈரோடு கதிர்
அட விட்டுத்தள்ளுங்க அந்த கேனப் பயலுங்க...

@
@ஆறுமுகன்
நன்றி

2அபுல்பசர்
நன்றி

@பரிசல்காரன்
ந்னறி

@முகமதுஇஸ்மாயில்
உங்கள்து கேள்விகள் ஓம்கார் கிட்ட் கேட்க வேண்டிய கேள்விகள்
@பா.ராஜாராம்
நன்றி

@வெ.ராதாகிருஷ்னன்
நன்றி

@பாஸ்டன் ஸ்ரீராம்
அவ்வளவு போவுதா சொல்லுஙகள்

2ஷாஜகான்
உங்கல் கருத்துக்கு நன்றி
@வாசகனா ஒரு கவிஞன் சங்கர்
நன்றி
butterfly Surya said…
ஜெயமார்தாண்டன் பதிவிற்காக லிங்க் கொடுத்த உங்களுக்கு நன்றி கேபிள்.


பதிவுலகின் சூப்பர் ஸ்டார் கேபிள் வாழ்க..
Thamira said…
குறும்படம் இயல்பாக சிறப்பாக இருந்தது.

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.