Thottal Thodarum

Jan 6, 2010

எண்டர் கவிதைகள் –5

enter5

சேர்ந்து சுற்று

ஒன்றாய் வாழ்

அலுக்க, அலுக்க

புணர்ந்து மகிழ்

அவள் வலி உணர்

பிணக்கு கொள்

ஊடல் கொண்டாடு

கூடல் செய்

முரண்பட்டு நில்

கோபம் கொள்

நிஜ முகம் காட்டு

இத்தனையும் மீறி

இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால்

திருமணம் செய்.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க
Post a Comment

77 comments:

தோழி said...

nalla kavithaindratha vida nalla karuthu. Kalakkareenga Sankar

வந்தியத்தேவன் said...

கவிதையும் படமும் அசத்தல்.

சிநேகிதன் அக்பர் said...

தண்டர் கவிதைகள்.

விண்டர்ல படிக்கிறது கஷ்டமா இருக்கு.

கலக்கல் பாஸ்.

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

கல்யாணத்துக்கு புது விளக்கமா இல்ல இருக்கு! பாத்துன்னா, யூத்து உங்க கருத்த எல்லாரும் பாலோ பண்ண ஆரம்பிச்சிடப்போறாங்க!

கலக்குங்க!

பிரபாகர்.

பாலா said...

ஆரம்பிச்சா... என்னா ஆய்டுங்க பிரபாகர்??

---

அஞ்சில் இதுதான் பெஸ்ட்!!! ஆனா.. இதை.. ‘பின்னு விக்கறேன்’ன்னு எடுத்துகிட்டு.. இன்னும் எழுத வேணாம்!! :) :) :)

Unknown said...

ஹாட் ஸ்பாட் நல்லா இருக்குங்க.

(கவிதையப் பத்தி என்னத்தச் சொல்றது?)

Unknown said...

/ஹாலிவுட் பாலா said...
ஆரம்பிச்சா... என்னா ஆய்டுங்க பிரபாகர்??

---

அஞ்சில் இதுதான் பெஸ்ட்!!! ஆனா.. இதை.. ‘பின்னு விக்கறேன்’ன்னு எடுத்துகிட்டு.. இன்னும் எழுத வேணாம்!! :) :) :)
//

அண்ணன் கேபிள் சங்கர் எத்தன இளம் பதிப்பாளர்கள கவித எழுத பின்னு வித்துட்டு இருக்காரு. நீங்க அவர இதுக்கு மேல எழுத வேணாமுன்னு சொல்றீங்க?

யேய் யார் அங்க, அமெரிக்காவுக்கு ஒரு ஆட்டோ ரெடி பண்ணு.

வெற்றி said...

கவிதைலாம் நல்லாத்தான் இருக்கு..ஆனா இதெல்லாம் 'தமிழ்' கலாசாரத்துக்கு சரிப்பட்டு வருமா ஜி..

Thenammai Lakshmanan said...

இது என்ன கவிதை ஆத்திச்சூடியா

நல்லா இருக்கு கேபிள் சங்கர்

திருவாரூர் சரவணா said...

நிறைய காதல்கள் இந்த நிலைகளைக் கடப்பதற்குள் காணாமல் போகின்றன. காலம் மாறிப் போச்சு?!

ஜிகர்தண்டா Karthik said...

குருவே,
என்ன உங்க சிஷ்யனா ஏத்துக்குங்க..
திருமணத்தை இதைவிட தெளிவா விளக்க முடியாது.

Paleo God said...

இத்தனையும் மீறி

இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால்

திருமணம் செய்.//

என்னாத்துக்கு..?? ஜி ??

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்.

புலவன் புலிகேசி said...

இப இருக்குற மக்களுக்கு ஐடியா குடுக்குரீங்களா..? தலைவரே

மரா said...

ஓ இதுக்கு பேருதான் ‘Living 2gether'ஆ ........உங்க பின்னாடி ஒரு ஒளி வட்டம் தெரியுது தல.....

VISA said...

சேர்ந்து சுற்று(கிரைண்டர் & அரிசி)

ஒன்றாய் வாழ்

அலுக்க, அலுக்க

புணர்ந்து மகிழ்

அவள் வலி உணர்

பிணக்கு கொள்

ஊடல் கொண்டாடு

கூடல் செய்

முரண்பட்டு நில்

நிஜ முகம் காட்டு

இத்தனையும் மீறி கிரைண்டரிலிருந்து மாவை அள்ளி கல்லில் ஊற்றினால்

தோசையாய் மலர்ந்துவிடு.

Prabhu said...

உங்களுக்கு இந்த ஃபோட்டோலா எங்க கிடைக்குது? எப்படி தேடுறீங்க.
இதப் பார்த்த பிறகும் கவிதையா வருது?

Prabhu said...

உங்களுக்கு இந்த ஃபோட்டோலா எங்க கிடைக்குது? எப்படி தேடுறீங்க.
இதப் பார்த்த பிறகும் கவிதையா வருது?

சைவகொத்துப்பரோட்டா said...

இவ்வளவையும் செஞ்ச அப்புறம் கடைசி வரி மட்டும் மறந்துருமே.

பின்னோக்கி said...

புதிய ஆத்திச்சூடி மாதிரியான நடை.
நல்லாயிருக்கு....... கவிதை

எம்.எம்.அப்துல்லா said...

சர்ர்ரி.

கார்க்கிபவா said...

ரைட்டு.. இன்னும் ராஜு வரல. நான் அப்பாலிக்க வறேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

தத்துவம்னே !!!!

ஈரோடு கதிர் said...

//ஊடல் கொண்டாடு//

ங்கொய்யாலே இது கொண்டாடத் தெரியமத்தானே... பாதி பயபுள்ளைக பிச்சுக்குது...

Romeoboy said...

காதல் என்கிற பெயரில் எல்லாத்தையும் பண்ணிட்டு அப்பறம் என்ன காதல் இருந்தால் ??

shortfilmindia.com said...

/காதல் என்கிற பெயரில் எல்லாத்தையும் பண்ணிட்டு அப்பறம் என்ன காதல் இருந்தால் ??
//

இந்த உந்துதலால் தானே ஓடிப்போயோ.. அல்லது போராடியோ காதல் திருமணஙக்ள் செய்துவிட்டு ஒரு வருஷத்தில் டைவர்ஸுக்கு நிக்குதுங்க..

sathishsangkavi.blogspot.com said...

இது எல்லாம் நிறைவேறியதற்கு அப்புறம் எதற்கு தலை திருமணம்...

வால்பையன் said...

பின் அடிவாங்கி சாவு!

என்று முடித்திருக்கலாம்!

அன்பேசிவம் said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

sreeja said...

வன்மையான கண்டனத்தை
பதிவு செய்கிறேன்.

இராஜ ப்ரியன் said...

கவிதை அருமை கவிஞருக்கு எனது வாழ்த்துகள் ........................

இராஜ ப்ரியன் said...

கவிதை அருமை கவிஞருக்கு எனது வாழ்த்துகள் ........................

தராசு said...

கவிதை எழுதறதுக்கு இந்த மேட்டர விட்டா வேற எதுவுமே கிடைக்காதா....

ஈஸ்வரா....

பரிசல்காரன் said...

இத்தனையும் மீறி

இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால்

திருமணம் செய். //

அட்டகாசம் கேபிள்!

Raju said...

தண்ணீர் வை

புண்ணாக்கு போடு

திகட்ட திகட்ட

தவிடு கொடு

அதன் சுவை உணர்

கட்டிப் போடு

பொங்கல் கொண்டாடு

பூஜை செய்

பவ்யமாய் நில்

பொட்டு வை

பக்தி காட்டு

இத்தனையும் மீறி

சண்டித்தனம் செய்தால்

பிரியாணி செய்

By

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசி அங்கீகாரம் பெற்றது)

இராஜ ப்ரியன் said...

இந்த கவிதை பற்றி கண்டனம் தெரிவிக்கும் அனைவருக்கும் இதனால் சொல்லிகொள்வதென்னவென்றால்
இதை ஒரு படைப்பாக பாருங்கள். அப்படி இந்த கவிதை தரும் கருத்தை ஏற்க மனம் ஒவ்வவில்லையா விட்டுவிடுங்கள் .
நாம் அனைவரும் திரைப்படம் பார்க்கிறோம் பெரும்பாலான படத்தில் காதலர்கள் இறுதியில் ஒன்று சேர்வார்கள் போராடி பணத்திற்கெதிராக, ஜாதி சண்டைக்களுக்கு எதிராக அதனால் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு நடக்கிறார்களா? தன் வீட்டில் காதல் செய்தால் அதை ஒழுங்கீனமாக கருதுகிறார்கள் படத்தில் ஒன்று சேரவேண்டுமென நினைக்கிறார்கள் அதைப்போலவே இந்த பதிவையும் கருதுங்கள். இதை படைப்பாக பாருங்கள் மனமிருந்தால் பாராட்டுகள் இல்லையெனில் உங்களது கண்டன கருத்துக்களை தெரிவியுங்கள் அதற்கு உரிமை இருக்கிறது. இருந்தாலும் இதிலுள்ள ஒரு படைப்பாளியின் பங்கை கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாம் ....

Raju said...

பிக் பாக்கெட் அடி

வீடு புகுந்து திருடு

அடித்து அடித்து

தண்டல் வாங்கு

ரத்தச் சுவை உணர்

கட்டிப் போடு

மிரட்டிக் கொண்டாடு

கொலை செய்

எதிர்ப்பவனையும் கொல்

வேட்டு வை

கோரமுகம் காட்டு

இத்தனையும் மீறி

செல்வாக்கு மிச்சம் இருந்தால்

அரசியலில் நில்

By

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசி அங்கீகாரம் பெற்றது)

Cable சங்கர் said...

கலக்குறியே ராஜு.. கார்க்கி எங்கப்பா.. ராஜு வந்தாச்சு..

Raju said...

வளைத்துக்கட்டி அடி

சாம்பார் ஊற்றிக் கொள்

உறிஞ்சி உறிஞ்சி

பாயாசம் குடி

பொறியலின் சுவை உணர்

மோரும் கேள்

குடித்துக் கொண்டாடு

அவியலை சுவை

எக்ஸ்ட்ராவாய்க் கேள்

கொடுக்கவில்லையெனில்

சொந்தமென்று சொல்.

இத்தனையும் மீறி

மனசாட்சி மட்டும் இருந்தால்

மொய் செய்.

By

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசி அங்கீகாரம் பெற்றது)

மகா said...

அப்பறமும் காதல் இருக்குமா அண்ணா .....

மகா said...

அப்பறமும் காதல் இருக்குமா அண்ணா .....

Raju said...

அது இன்னவோ தெர்லண்ணே.
உங்க கவிதையப் படிச்சா மட்டும், கற்பனை காட்டாறாக் கொட்டுது.
:-)

ஷண்முகப்ரியன் said...

superb,Shankar.

ஆரூரன் விசுவநாதன் said...

kalakkal......

Ashok D said...

மொளச்சி இன்னும் 3 இலைவிடல(5 கவிதை) அதுக்குள்ள messagea பாரு..

தலைவரே... கவிதைகளில் காமம் ஒரு புள்ளியாக இருக்கலாம்... ஆனால் காமமே கவிதையாக இருத்தல்... மிகுந்த boreயை தருமென உறுமு புலவர் சொல்லியிருக்கிறார்.

உங்கள் குழந்தைதனத்தயே கவிதையாக சொல்லமுயற்சிக்கலாம்... நல்லாயிருக்கும்...

இருந்தாலும் உங்க 5 கவிதையிலே இது கொஞ்சம் தேவல...

வழக்கம் போல ராஜுவின் கவிதைகள் superb...

போற போக்க பார்த்தா ராஜுக்கு ஒரு கொலைவெறி படை உருவாகிவிடும்போலயிருக்கு :)))

Guru said...

தல, இது என்ன காதல் ஆத்திச்சூடியா? ஆத்தி ஆத்திச்சூடி மாதிரி தான் தெரியுது.. என்னமோ தெரியல மார்கழி மாசம் எபெக்டா இருக்குமோ?

butterfly Surya said...

எண்டர் கவிதைகள் அருமை.

பின்னூட்ட Enter..ராஜீ.. Super.

சிவகுமார் said...

SUpppppppppppppppppppppppper .

மணிப்பக்கம் said...

எச்சரிக்கை!
எண்டர் கவிதைகள் தடம் மாறி
ஒரிஜினல் கவிதையாகி வருகிறது! ;)
வாழ்த்துக்கள் கேபிள்!

செங்கோவி said...

அந்த புகைப்படமே ஒரு நல்ல கவிதை போல் இருக்கிறது .
அன்புடன்,
செங்கோவி

வெள்ளிநிலா said...

ippave kanna kettuthea.....

Anbu said...

ராஜூ அண்ணா கலக்கல்

சினிமா புலவன் said...

கவிதை சூப்பருங்க..

creativemani said...

நான் மட்டும் பெருசா என்னத்த சொல்லி கிழிச்சிட போறேன்..
கவிதைகள் மெருகேறிட்டே வருது.. சூப்பரா இருக்கு.. :)

குடுகுடுப்பை said...

அந்தக்கடைசி வரை மட்டும் தேவையில்லை என்பது சுப்புடுவின் கருத்து

Unknown said...

adipozhi.... :)

ஜெட்லி... said...

போட்டோ சூப்பர்....

ஜெட்லி... said...

போட்டோ சூப்பர்....

Unknown said...

இந்தக் கவிதையை நீங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே எழுதி இருக்கலாம். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (இப்போ பெருமூச்சு விட்டு என்ன பிரயோஜனம்?)

Thamira said...

நல்லாயிருக்குது.

அதைவிடவும்.. ராஜுவின் எதிர்கவிதைகள் அழகு. குறிப்பாக சாப்பாட்டுகவிதை.! :-))

VELU.G said...

என்ன தல, கல்யாணம் பண்ணிக்கிட்டு மிச்ச காதலையும் ஒழிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

க.பாலாசி said...

//மணிப்பக்கம் said...
எச்சரிக்கை!
எண்டர் கவிதைகள் தடம் மாறி
ஒரிஜினல் கவிதையாகி வருகிறது//

கேபிளாரின் கவிதைகள் எண்டராகி வருகிறது.

கவிதை நல்லாருக்கு தலைவரே...

தினேஷ் ராம் said...

ஆ..ஹா...

Katz said...

kavithai romba super. true lines.

ரோஸ்விக் said...

அச்சச்சோ.... இவ்வளவும் முன்னாடியே பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணனுமா?? என்னாண்ணே... இத எவனும் முன்னாடியே சொல்லாம போயிட்டாய்ங்க... ஏமாந்து போயிட்டேனே... எல்லாத்தையும் வெவரம் இல்லாமா இப்படி கல்யாணத்துக்கு அப்பறம் பண்ணிக்கிட்டு இருக்கனே... ச்சே...

ஏண்ணே அழிச்சு கிழிச்சு முதல்ல இருந்து ஆட விடுவாய்ங்களாண்ணே?? :-)))

Punnakku Moottai said...

Cable,

Kavithai was very good, if enjoyed looking away from the logic. But the same is reorganized as below, it will be more enjoyable to narrow minded, hypocrates like me. I think the better sequence is,

சேர்ந்து சுற்று
நிஜ முகம் காட்டு
முரண்பட்டு நில்
கோபம் கொள்
அவள் வலி உணர்
ஊடல் கொண்டாடு
திருமணம் செய்
ஒன்றாய் வாழ்
கூடல் செய்
அலுக்க, அலுக்க
புணர்ந்து மகிழ்
இத்தனையும் மீறி
இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால்
orirudu iru
illaiyel saavu.

Retype the last 2 lines in Tamil.

To some extend this makes sense. 'Naarakudiyil' pirakkaatha ennakku I am not in alignment with your sequence.

Setthaalum kadhalithavalaiye kaipidikka vendum enbathu en thathuvam. May be I am little outdated with today's culture.

Regards,

Bala.

அத்திரி said...

யூத்து கவிதன்னா இதானா??????????

தர்ஷன் said...

//Punnakku Moottai said...

Setthaalum kadhalithavalaiye kaipidikka vendum enbathu en thathuvam.//

அவர் பெயருக்கும் கருத்துக்கும்தான் எத்தனைப் பொருத்தம்

Punnakku Moottai said...

//Punnakku Moottai said...

Setthaalum kadhalithavalaiye kaipidikka vendum enbathu en thathuvam.//

///அவர் பெயருக்கும் கருத்துக்கும்தான் எத்தனைப் பொருத்தம்///

அய்யா தர்ஷன் அவர்களே,

தத்துவங்கள் பெரும்பாலும் கடைபிடிக்க படுவதில்லை. அது எனக்கும் பொருந்தும். நான் முன்பே சொல்லிவிட்டேனே நான் ஒரு Hypocrite என்று. பிறகு என்ன? ஊருக்கு மட்டுந்தான் உபதேசம். எனக்கு இல்லை.

so no கவலை.

பெயர் பொருத்தம் வேறு காரணத்திற்காக!

இந்த மேட்டர் விஷயத்தில் நான் cable ஐ விட கில்லாடி. அவனவன் 'எத்தணை' என்று விரல் விட்டு எண்ணுவான். நான் 'எத்தனை நாட்டு' அய்ட்டம் என்று எண்ணுவேன்.

இப்படிக்கு,

பாலா.

Cable சங்கர் said...

தோழி

நன்றி..

@ஸ்டார்ஜான்
நன்றி

@வந்தியத்தேவன்
நன்றி

@அக்பர்
அப்படியா.. போத்திட்டு படிங்க

@பிரபாகர்
நன்றிண்ணே..

Cable சங்கர் said...

@hollywood bala
நன்றி

@முகிலன்
அது சரி

@முகிலன்
வேணாம் விடுங்க அவரு நம்ம நண்பரு..

@வெற்றி
தமிழுக்குன்னு ஏதாவது கலாச்சாரம் இருக்குதா என்ன..?:))

@தென்னமாலக்‌ஷ்மணன்
எப்படியோ கவிதை மாதிரி இருந்திச்சு இல்ல

@சரண்
அதனால் தான் இந்த கவிதை

@ஜிகர்தண்டா கார்த்திக்
நன்றி

@பலாபட்டறை

அதுக்கு அப்புறம் தானே விசயம் இருக்கு

@ராதாகிருஷ்ணன்
நன்றி

@புலவன் புலிகேசி
ஐடியா இல்லை இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது.

Cable சங்கர் said...

@விசா
நன்றி

@பப்பு
ஒரு நல்ல இயக்குனருக்கு வர வாசகர்களை, பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்க்க தெரிந்திருக்க வேண்டும்

@சைவ கொத்துபரோட்டா
ஏன்?

@பின்னோக்கி
நன்றி

@எம்.எம்.அப்துல்லா
என்ன.. அவ்வளவு அழுத்தம்

@கார்கி
ரைட்டு

Unknown said...

கவிதைக்கு பொருத்தமான படம்..
கலக்கல்..

shortfilmindia.com said...

@குறை ஒன்றும் இல்லை
அப்படியா..

@ஈரோடு கதிர்
அதானே

@ரோமியோபாய்
அதான் தலைவரே.. இதுக்காக காதல் பண்ணிட்டு டைவர்ஸுக்கு நிக்குதுங்களே

@சங்கவி
மேற்சொன்ன பதில்தான்

@வால்பையன்
:)

@முரளிகுமார் பத்மநாபன்
ஏன்.. ஏன். இந்த கொலைவெறி

@ஸ்ரீஜா
நன்றி

@இராஜபிரியன்
நன்றி

@தராசு
இப்பதைக்கு அதான் வருது..

மயிலாடுதுறை சிவா said...

சூப்பர் சங்கர்

ராஜூ பதில் கவிதைகளும் அருமை!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

ஈரோடு காக்கா said...

எங்க ரூம் போட்டு யோசிக்கரிங்க?