Thottal Thodarum

Jan 27, 2010

எண்டர் கவிதைகள் –7

மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி

Zombie_Beach_Party_Massacre_1_by_cvilaire

வழக்கம் போல்

முயக்கம் முடிந்து

நொடியில் குறட்டை

ஒலியெழுப்புபவனுக்கு தெரியுமா?

என்னுள் இன்னும் சுரந்து

கொண்டிருக்கும் வலியை?

வலி பொங்கி காமம் வழிந்தோடும் நேரம்

புதிதாய் வந்து அணை கட்டி ஒத்தடம்

கொடுத்தவனுக்கும்

பழக்கம் ஆனதும்

வழக்கம் போல்

முயக்கம் முடித்து

நொடியில் குறட்டை

ஒலியெழுப்பினான்

இன்னமும் என்னுள் சுரந்து

கொண்டுதானிருக்கிறது.

வேறொரு ஒத்தடம் தேட பிடிக்காமல்

வலி தாங்க பழகிக் கொள்கிறேன்.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

39 comments:

பாலா said...

என்ன ஆச்சி??

சுவாமியை பார்த்துட்டு வந்ததில் இருந்து மந்திரிச்சி விட்ட மாதிரியே இருக்கீங்களே?

பாலா said...

இன்னைக்கு ஏழு லட்சம்.. அடிக்கப் போறீங்க.

இப்பவே வாழ்த்திடுறேன். அப்புறம் ப்ளிங்க் ஆகும்போது தனியா சொல்லத் தேவையில்லை.

Punnakku Moottai said...

I thought I am the first, but I just missed to another Bala.

No problem. I will read the posting and come back for comments.

Regards,

Bala

Punnakku Moottai said...

ஹலோ கேபிள்,

பாவப்பட்ட பெண் அவள். அனுதாபங்கள்!!

நல்ல முன்னேற்றம் கவிதை நடையில். எதுகை மோனையும் சில இடங்களில் பிண்ணி விளையாடுது.

வாழ்த்துக்கள் சங்கர்.

பாலா.
நைஜீரியா
+234 708 999 6984

Paleo God said...

ஹாட்ஸ்பாட் 7 லட்சத்தின் முப்பெறும் விழாவா..??
------

தல இது வேற களத்துல எண்டர் ஆகுறமாதிரி இருக்கு..:))

----
போன் நம்பர் குடுத்துருக்காரே அவர்தானே அந்த ஸாஃப்ட்வேர் குடுத்தது::)

பாலா said...

சார்.. எனக்கு சாஃப்ட்வேர் கொடுங்க. நானும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்திக்கிறேன்.

Cable சங்கர் said...

நைஜீரியாவிலிருந்து எனக்கு எப்படி ஹிட்ஸ் வரும் என்பதற்கு அண்ணன் பாலா போன்ற வாசகர்கள். என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். :)

மரா said...

//சார்.. எனக்கு சாஃப்ட்வேர் கொடுங்க. நானும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்திக்கிறேன் //

பாலா அண்ணனுக்கு அனுப்புறப்போ
cc ல என்ற பேரயும் சேர்த்துக்கோங்க தல. கவிதையும் படமும் கிலுகிலுப்பாக இருக்கு.

Ashok D said...

//வழக்கம் போல்

முயக்கம் முடித்து

நொடியில் குறட்டை

ஒலியெழுப்பினான்

இன்னமும் என்னுள் சுரந்து

கொண்டுதானிருக்கிறது//

இது கவிதை.. அப்படிதான்.... கலக்குங்க...
யாரங்கே.. தலைவருக்கு அடுத்த பத்மா! பூஷன் ரெடி பண்ணுங்கப்பா... :)

creativemani said...

Super'O'Super!!!!!!!! ;)

தராசு said...

படம் ஒரு மாதிரி இருக்கண்ணே.

அன்பேசிவம் said...

எனக்கும் இப்பத்தான்யா விளங்குது...
எண்டர் அடிச்சி எண்டர் அடிச்சி எழுதுறதால எண்டர் கவிதைன்னு வெளியில சொல்லிகிட்டு, இப்புடி அலேக்கா வேற மேட்டர்ல எண்டர் ஆவுறியே தல.

ம்ம் கலக்குங்க.

ஈரோடு கதிர் said...

உண்மைய பச்சையா சொல்லற உங்க நேர்மை புடிச்சிருக்கு

Raju said...

வழக்கம் போல்

பிறந்து முடிந்து

இறுதியில் மரித்து

முடிப்பவனுக்கு தெரியுமா?

அவனுள் இன்னும் எரிந்து

கொண்டிருக்கும் நெருப்பின் ஜுவாலை.

வசை வாங்கி தன்மானம் வழிந்தோடும் நேரம்

புதிதாய் வந்து முதுகு தட்டி ஆறுதல்

தந்தவனின்

வேலை முடிந்ததும்

ஏமாற்றி முடித்து

ஓடிப்போனான்.

இன்னமும் அவனுள் எரிந்து

கொண்டுதானிருக்கிறது.

ஜுவாலையை அணைக்கப் பிடிக்காமல்

அதனூடே வாழ பழகிக் கொள்கிறான்.

By

கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
அரசி அங்கீகாரம் பெற்றது.

க.பாலாசி said...

//வேறொரு ஒத்தடம் தேட பிடிக்காமல்
வலி தாங்க பழகிக் கொள்கிறேன். //

தலைவரே... அருமை...அருமை...

Unknown said...

அருமை...

சிவகுமார் said...

Very hoT . . . ,

டிராகன் said...

கேபிள் ஜி ,
உங்கள் பதிவுக்கு புது வாசகன் நான் very very nice blog ,மற்றும் ஒரு சின்ன சந்தேகம் பாலா வின் சேது படத்தின் உதவி இயக்குனர் யார் ??

மகா said...

simply superb........

Raju said...

வழக்கம் போல்

மூடி திற‌ந்து

மடமடவென அடித்து

மட்டையாப‌வனுக்கு தெரியுமா?

எனக்குள் இன்னும் எரிந்து

கொண்டிருக்கும் போதையின் வெறி.

கடன் வாங்கி குடித்துக் கூத்தடும் நேரம்

புதிதாய் வந்தமர்ந்து கம்பெனி

கொடுத்தவனுக்கும்

போதை ஏறிப் போனதும்

தலைக்கேறி

மட்டையாகி ப்போனான்.

இன்னமும் என்னுள் எரிந்து

கொண்டுதானிருக்கிறது போதைவெறி.

அதை அணைக்கப் பிடிக்காமல்

தனியாகவே அடிக்கப் பழகிக் கொள்கிறான்.

By

கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
அரசி அங்கீகாரம் பெற்றது.

Raju said...

கடைசி வரியில் “கொள்கிறான்” என்று இருப்பதை “கொள்கிறேன்” என திருத்திப் படித்துக் “கொள்ளவும்”.

நன்றி சுகுணா திவாகர் மற்றும் குசும்பன்.

Raju said...

\\ஈரோடு கதிர் said...
உண்மைய பச்சையா சொல்லற உங்க நேர்மை புடிச்சிருக்கு\\

அண்ணே, எனக்குப் புடிச்ச வாடாமணி கலர்லயும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே..! புண்ணியமா போவும் சாமி.

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கல்......

சங்கர் said...

@ராஜு

முதல் கவிதையை படிச்சிட்டு, உண்மையிலேயே கவிஞர் ஆயிட்டீங்களோன்னு பயந்திட்டேன்

புலவன் புலிகேசி said...

வர வர சேட்டை அதிகமாயிப் போச்சு உங்களுக்கு...குறட்டை விடுபவர்கள் ஜாக்கிரதை

யாத்ரா said...

தலைவரே என்ன இது இப்டி கலக்கறீங்க, ரொம்ப நல்லா இருக்குங்க, இந்த உணர்வு. என்டர் கவிதைகளை தொடருங்கள்.

தோழி said...

nops :(

Henry J said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

எண்டர் கவிதையா? or என்..டர்ர்ர்ர்ர்ர்ர்..... கவிதையா?

Unknown said...

அருமை..

//.. என்..டர்ர்ர்ர்ர்ர்ர்..... கவிதையா? ..//

:-))

Cable சங்கர் said...

@hollywood bala

thanks for advance wishes

பாலா said...

சீக்கிரம்.. ப்ளிங்க் பண்ண விடுங்க கேபிள்..! 7-ஐ தாண்டி.. ஆயிரம் போய்டுச்சி! :)

Paleo God said...

வாழ்த்துக்கள் தல.. 7UP....>>>

Radhakrishnan said...

கவிதை நன்றாக இருக்கிறது, படமும் தான்.

Punnakku Moottai said...

காதல்
பைத்தியம்
கிறுக்கு
மதிஈனம்
இயல்பு உணரான்
வெகுளி
அறிவிலி
இவற்றுள் வேறுபாடுண்டோ!!

சில்க் சதிஷ் said...

தலைவரே... அருமை...அருமை...

அத்திரி said...

என்னமோ நடத்துங்க யூத்து

Cable சங்கர் said...

@hollywood bala

அப்படியா தெரியுது..

@புண்ணாக்கு மூட்டை
நன்றிங்கோ

@பலாபட்டறை
ஆமாம் ஆமா..போய் அவரை பிடிங்க..

@மயில்ராவணன்
உங்களுக்குமா..?

@அசோக்
தபார்றா..

@அன்புடன் மணிகண்டன்
நன்றி

@முரளிகுமார் பத்மநாபன்
ஆகா.. நன்றி

@ஈரோடு கதிர்
நீங்களே சொல்லிட்டீங்க..பொறவு..

@ராஜு
இந்த வாட்டி நிஜமாவே கவிதை எழுதிட்டனோ.. இரண்டுதான் வந்திருக்கு..

@பாலாசி
நன்றி

@ஆறுமுகம் முருகேசன்
நன்ரி
@சிவகுமார்
அப்படியா..?

@மணி
மிக்க நன்றி.. மணி.. உங்கள வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

@மகா
நன்றி

@ராஜு
எதுக்கு சுகுணாதிவாகருக்கும், குசும்பனுக்கும் நன்றி..:((

@ஆரூரன் விசுவநாதன்

நன்றி

@சங்கர்..

நான் ஆயிட்டேன் போலருக்கு..:))

@புலவன் புலிகேசி
அப்படியா..?

@யாத்ரா
நன்றி தலைவரே உற்சாகபடுத்தியதற்கு

@தோழி
:((

@வி
எப்படி வேணுமின்னாலும் வச்சிக்கங்க

@பலாபட்டறை
நன்றிங்கோ

@வெ.ராதாகிருஷ்ணன்
நன்றி

@புண்ணாக்கு மூட்டை
நீங்களுமா..!!!

@சதீஷ்குமார்
நன்றி

@அத்திரி
ஓகே..

Thamira said...

சிறப்பான கவிதை. எண்டர் கவிதைகள் என்ற தலைப்பை விரைவில் வாபஸ் வாங்கிவிடுவீர்கள் என நம்புகிறேன்.