Thottal Thodarum

Jan 22, 2010

Adhurs – Telugu Film Review

adhursreveiw ஜூனியர் என்.டி.ஆரின் இரட்டை வேடம், நயந்தாரா, என்.டி.ஆரின் ஆதர்ச இயக்குனர் வி.வி.விநாயக், தேவி ஸ்ரீபிரசாத், என்று எல்லோரும் சேர்ந்து மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியிருந்தபடம்.

தெலுங்கு சினிமா உலகத்தை திருப்பியெல்லாம் போடவில்லை. வழக்கமான மசாலாதான். இரட்டையர்களாய் பிறநது, பிரிந்து போய். சாரி என்று கோவிலில் பிரம்மானந்தத்திடம் அஸிட்டெண்ட் பூசாரியாய் ஒருவன். கேங்ஸ்டரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து போலீஸ் ஆபீசர் சாயாஜி ஷிண்டேவிடம் கொடுக்கும் நர்சிம்மனாக ஒருவன். அவனுக்கு ஒரே எய்ம் போலீஸில் சேருவது. இன்னொரு பக்கம் நரசிம்மனை தேடியலையும் கல்கத்தா டான் மகேஷ் மஞ்ச்ரேக்கர். அவன் எதற்காக தேடியலைக்கிறான் நரசிம்மனை? நரசிம்மனும், சாரியும் சேர்ந்தார்களா? என்பதை வெள்ளி திரையில் காண்க.

இரட்டை வேடங்களில் சாரியாகவும், நரசிம்மனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். நரசிம்மனாக வரும் என்.டி.ஆரைவிட, சாரியாக வரும் என்.டி.ஆர் மனதில் நிற்கிறார் அவரும் பிரம்மானந்தமும் அடிக்கும் காமெடி கூத்தினால். பிரம்மானந்தம் நயந்தாராவை காதலிக்க, நயன் தாரா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நரசிம்மனை பார்த்துவிட்டு சாரியை காதலிக்க, ஒரு கட்டத்தில் நயனுக்கும், சாரிக்கும் நிச்ச்யதார்த்தம் நடந்துவிட அவர்களுக்கு வில்லனாய் மாறி குடைச்சல் கொடுக்கும் பிரம்மானந்தம் அட்டகாசம். நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பீர்கள். இன்னொரு என்.டி.ஆருக்கு ஜோடி போலீஸ் ஆபிஸர் சாயாஜியின் மகள் ஷீலா.
adurs நயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஷீலா ஓகே. வில்லன் மகேஷ் மஞ்ச்ரேக்கர் பற்றி பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. பல சமயங்களில் அவரும் ஆஷிஷ் வித்யார்த்தியும் காமெடி பீஸ்களாய் வலம் வருகிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் சந்திரகலா..சந்திரகலா பாடலை தவிர வேறேதும் நினைவில் இல்லை. சோட்டா கே நாயுடுவின்  ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்வதற்கில்லை.

இயக்குனர் வி.வி. விநாயக் வழக்கம் போல அரைத்த மாவை அரைத்திருந்தாலும் சாரி என்.டி.ஆரையும் பிரம்மானந்தத்தையும் வைத்தே படத்தை ஓட்டிவிடுகிறார். பெரும்பாலும் பல படங்களில் பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப வருவது அலுப்பூட்டவே செய்கிறது.

Adhurs – மொக்கை மசாலா பிரியர்களுக்கு

Technorati Tags: ,



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

15 comments:

Unknown said...

Me the 1st to comment.

eppidi ippidi,

yella padathyam porumaya parthtringley.. athuke ungaluku oru viruthu kudukalam.

D. Ramesh
west saidapet

Paleo God said...

கேபிளானந்தாகாரு.. நமஸ்காரமண்டி..

நயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது.//

போளி..:)

எறும்பு said...

Present sir...

முரளிகண்ணன் said...

திரிஷா படமும் ஒண்ணு வந்திருக்கே? அது எப்போ கேபிள்ஜி?

Ashok D said...

me the 5th

Ashok D said...

இந்த படம் பல படங்கல நியாபகபடுத்துதே !!

Anonymous said...

சுருக்கமா தெலுங்கு விஜய் படம்னு சொல்லுங்க....

மகா said...

waiting for enter kavithaigal........

Ravikumar Tirupur said...

தெலுங்கு விஜய் படம்அ?

Romeoboy said...

தலைவரே சம்போ சிவா சம்போ டாப்பா இல்ல பிளாப்பா ??

Romeoboy said...

கொய்யால இதுக்கு கூட மைனஸ் ஓட்டா ...

shortfilmindia.com said...

@முரளீகண்ணன்
இன்னும் பாக்கலை

@ரோமியோ
படம் மிக சுமாரான ஓப்பனிங் என்றுதான் கேள்வி.. ரெண்டு பெரிய படஙக்ளுக்கு நடுவில் வெளிவந்திருப்பதால் இரண்டுமே நல்ல ஓப்பனிங் இருந்ததாலும் இருக்கும் பார்க்கலாம் இன்னும் ரெண்டொரு நாளில் தெரியும்.

கேபிள் சஙக்ர்

அமர பாரதி said...

நல்ல விமர்சனம். பிரம்மானந்தத்தில் விசிறி நான். ஒரிஜினல் தெலுங்கு போக்கிரியில் அவர் பிச்சைக் காரர்களால் படும் அவதி இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். தமிழ் ரீமேக்கில் வடிவேலு குங்பூ மாஸ்டராக சொதப்பியிருப்பார்.

மேவி... said...

"நயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது"


adada .....

R.Gopi said...

விமர்சனம் எல்லாம் ஓகே “தல”...

இந்த படத்த “இளைய தொளபதி” டமில்ல ரீமேக் பண்ணுவாரா, மாட்டாரா?? அத்த சொல்லுபா...