நம்மளையும் ரவுடியாய் சேர்த்து எழுதி பெருமை படுத்திய தினமணி பத்திரிக்கைக்கு நன்றி..நன்றி
கொடைக்கானலில் படிக்கும் இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்களின் வாழ்கையை சுற்றி வலைய வரும் கதை. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளி வந்திருக்கும் ப்டம். தியேட்டரில் முதல் காட்சி பூராவும் படத்தில் சின்ன சின்னக் கேரக்டர்களில் நடித்தவர்கள் முதல் கதாநாயகன் வரை எல்லோரும் இருந்தார்கள்.
கொடைக்கானல் இன்ஜினியரிங் காலேஜில் படிக்க வரும் பையன்கள், பெண்கள் என்று மொத்தம் ஏழு பேரின் நான்காண்டு வாழ்க்கையை விவரித்திருக்கிறார்கள். பெண்கள் அழகாய் இல்லை என்பதற்காகவே வேறு டிபார்ட்மெண்டை மாற்றிக் கொண்டு வரும் ஹீரோ, அடுத்ததாய் வந்து சேரும் ஸ்கூல் மேட் நந்து, தெலுங்குகார ரெட்டி பெண், அவளின் ப்ரெண்ட் சீனியர் பெண், எப்பப்பார் குடித்துக் கொண்டும், தண்ணியடித்து கொண்டும் சடாமுடி ஜானி, அப்பாவியாய் வந்து சேரும் கிராமத்து பையன் என்று பல நிலையுள்ள பையன், புதிதாய் வந்து சேரும் ஹெ.ஓடியின் மளையாள பெண் என்று இவர்களிடையே ஏற்படும் நட்பு, காதலை பற்றிய படம்.
சீனியர் பெண் கதை நாயகன்
படம் ஆரம்பித்து பத்து நிமிடம் வரை இவர்களின் நட்பு ஏற்படும் காட்சிகளுக்காகவே போனாலும் பெரிதாய் இண்ட்ரஸ்ட் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஹீரோ கேரக்டரும் அவனின் நண்பன் நந்து கேரக்டரும் தாங்கள் செலக்ட் ஆகியிருக்கும் டிபார்ட்மெண்டில் பெண்கள் சரியாக இல்லை என்பதால், வேறு டிபார்ட்மெண்ட்க்கு மாறி கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. புதிதாய் வந்து சேரும் கதாநாயகி, கிராமத்து அரை குறை இங்கிலீஷ் பேசும் பையன் என்று கொஞ்சம் கொஞ்சமாய் களை கட்டுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் நாங்கள் தான் சிறந்த கேங் என்று சொல்லி திரியும் ஒரு கூட்டம் கவலையில்லாம இருக்கும் அது போல இவர்கள் அலைய. திடீர்னு ஜானி மட்டும் எப்போது பாய்ஸுக்கும் கேர்ஸுக்கும் ஒத்து வராது என்று சொல்லிக் கொண்டே அலைபவன், சதா தண்ணி அடித்துக் கொண்டும், தம் அடித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் அலைவது ஏன் என்று தெரியவில்லை. இவனுக்கும், காலேஜ் சீனியரான பெண்ணுக்கும் உள்ளே ஓடும் காதல், நைஸ்.
இடைவேளை வரை பெரியதாய் ஏதும் புதுசாய் இல்லாத காட்சிகளாகவே நகர்கிறது. ஆங்காங்கே லேசாய் புன்முறுவல் செய்ய வைக்கும் காமெடியை தவிர, ஹீரோ, ஹிரோயினுக்குள் ஏற்படும் காதல் காட்சிகள், புரபசருக்கும், ஆபீஸ் ஸ்டாப் நிலிமாவுக்கும் இடையே ஏற்படும் காதல் காட்சிகள் வரை எல்லாமே ஏற்கனவே பார்த்த காட்சிகள், படத்துக்கு பெரிய மைனஸ் என்றே சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டவுடன் தான் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. அப்படியே பிடித்தாலும் எதை நோக்கி போகிறது என்ற ஒரு கேள்வி போய்க் கொண்டுதானிருக்கிறது நம் மந்தில். கடைசி பத்து நிமிட காட்சியில் தான் மொத்த படத்தின் உயிர்நாடியை பிடித்து வைத்திருக்கிறார்கள். அதில் தான் புகைப்படமாய் மனதில் நிற்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.
கதாநாயகனை விட, அவனின் நண்பனாய் வரும் குரு என்ற்ழைக்கப்படும் ஜானியின் நடிப்பு கச்சிதம், அதே போல் அவனை டேய் அண்ணா என்று அழைக்கும் தெலுங்குகார பெண்ணும் க்யூட். கதாநாயகி பெரியதாய் அழகாய் இல்லாவிட்டாலும் இம்ப்ரஸிவ். அதே போல கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் நடிகரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் ஸ்கோர் செயய முயற்சி செய்கிறார். அவரின் ஸ்கூல் நண்பனாக வரும் நந்துவுக்கு பெரிதாய் முக்யத்துவம் இல்லாவிட்டாலும், நிச்சயம் ஸ்கீரின் ப்ரெசென்ஸில் கண்ணில் நிற்கிறார். இப்படத்தின் மூலம் ஜானியும், தெலுங்குகார பெண்ணும், நந்துவும் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்கள் என்று தோறுகிறது.
தெலுங்குகார ரெட்டி பெண் கிராமத்து தடாலடி ஆங்கிலம்பேசும் பையன்
இசை கங்கை அமரன் ஆங்காங்கே நெருடல் இல்லாத பாடல்களை அளித்திருக்கிறார். ”உடைக்கணும், உடைக்கணும் அஞ்சாறு பாட்டில்களை: பாடல் பழைய இளையராஜாவின் பாடலை ஞாபகப்படுத்தினாலும் செம குத்து. அதே போல் சித்ரா, எஸ்.பி.பியின் இது கனவோ இல்லை நிஜமோ பாடலில் மெலடியிலும் ஒரு கம்பேக் என்றுதான் சொல்ல வேண்டும்.
குடிகார குருவும், சீனியர் பெண்ணும்
16எம்.எம் கேமராவில் எடுக்கப்பட்ட படம். சரியான டிஜிட்டல் இண்டர்மீடியேட் செய்யவில்லையோ என்னவோ, படம் ம்ழுவதும் க்ரெயின்ஸ் இருக்கிறது. டிஜிட்டல் கேமராவிலேயே எடுத்திருக்கலாம் அட்லீஸ்ட் நல்ல குவாலிட்டி கிடைத்திருக்கும். கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தியும் புண்ணியமில்லாமல் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். சுப்ரமணிய புரம், மாயாண்டி குடும்பத்தார் ப்டம் எல்லாமேஎ சூப்பர் 16 எமெம்மில் எடுக்கப்பட்டு டி.ஐ செய்யப்பட்டதுதான். இவர்கள் வெறும் 16 எம்.எமில் எடுத்து இருக்கிறார்களோ.. என்ன செய்வது பட்ஜெட் என்ற ஒன்று இயக்குனரின் கைகளை கட்டித்தான் போடுகிறது. அதையும் மீறி ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் தன் முத்திரையை பதித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
நந்து
ராஜேஷ்லிங்கம் இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர். திரைக்கதையில் தெலுங்கு ஹாப்பிடேஸின் தாக்கம் நிறைய, வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிப்பதிலிருந்து ஆங்காங்கே ஹாஸ்டல் காட்சிகள், காலேஜ் ரேடியோ, கதாநாயகன், நாயகியின் காதல், ரொம்பவும் சில்லியான விஷயத்துக்காக பிரிவு என்பது போன்றா காட்சிகள் படம் முழுக்க. அதையும் மீறி க்ளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கும் படியான ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். அது தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. பல காட்சிகளில் திரும்ப திரும்ப பட்ஜெட் விஷயத்தால் ஒரே இடத்திலேயோ, அல்லது ஒரே விதமான காட்சிகளிலோ அலைந்து கொண்டிருப்பது போரடிக்கிறது. நடிகர்களீன் ப்ரெஷ்னெஸ், திரைக்கதையில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அசோக்கும், ஷாலுவும்
கடைசி க்ளைமேக்ஸ் காட்சி ஒன்றை மட்டும் போது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இம்மாதிரியான க்ளைமாக்ஸுக்கு முன்னால் அவர்களிடையே நடக்கும் காட்சிகளில் ஒரு இயல்பு வேண்டாமா.? அவர்களின் வாழ்கையின் ஒரு பகுதியை நம் கண் முன் ஓட வேண்டாமா?. திரைக்கதையில் நுணுக்கமாய் செதிக்கியிருந்தால் நெகிழ்ந்து போய் உருக வைத்திருக்கும். அதில் மிஸ் செய்ததால் க்ளைமாக்ஸ் கொடுப்பது அதிர்ச்சி மட்டுமே. அதே போல க்ளைமாக்ஸ் காட்சிகளின் வசனங்கள் கொஞ்சம் ஓவர்தான், திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி பட்ஜெட்டில் இம்மாதிரியான படங்கள் வருவது நம்பிக்கைக்குறியதாகவே இருக்கிறது.
புகைப்படம் - இன்னும் கொஞ்சம் சரியா எக்ஸ்போஸ் செய்திருக்கலாம்
டிஸ்கி:
நிறைய படங்களை போட்டிருப்பதன் காரணம் என்னவென்றால் மொத்தமாய் ஏழு எட்டு புதுமுகங்கள் நடித்திருக்கும் ப்டத்தில் அவர்களின் ஒரிஜினல் பெயர்களும், திரைப்பட கேரக்டர் பெயர்களும் மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் இதில் வரும் இரண்டு மூன்று கேரக்டர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிளிர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க
Post a Comment
32 comments:
கேபிள்,
பட விளம்பரத்தை பார்த்து இன்னும் வித்தியாசமா ஏதாவது பண்ணியிருப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். அரைச்ச மாவையே அரைச்சிருக்காங்க.
காலேஜ்ல, படிக்கற பசங்களும் இருக்காங்க சார், அவங்கள்லாம் இவங்க கண்ணுக்கு invisible மேட்டர் போல
//நிச்சயம் இதில் வரும் இரண்டு மூன்று கேரக்டர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஜெயிக்க வாய்ப்புள்ளது//
("நாயகன்" இளையராஜா BGMஉடன் இதை படிக்கவும்) உங்கள் நல்ல மனசுக்கு இது ஒரு உதாரணம்:)
இப்படி ஒரு மொக்கை படத்தை பார்த்துட்டு, எங்களக்கு விமர்சனமும் அளித்த உங்களுக்கு நாங்க என்ன கைம்மாறுண்ணே பண்ணப்போறோம்... அதனால இப்போதைக்கு ஓட்டு மட்டும்போடுறேன்...:-)
//("நாயகன்" இளையராஜா BGMஉடன் இதை படிக்கவும்) உங்கள் நல்ல மனசுக்கு இது ஒரு உதாரணம்:)//
டிங் டி டிங் டி டிங் டி டிங் டி டிங்
BGM போதுமா
super .................
பாதி நேரம் மக்களை புகைப்பிடிக்க செய்தததால் புகைப்படம் என்று பெயர் வந்ததாய்..
செவி வழி வந்த சேதி...
நிச்சயம் இதில் வரும் இரண்டு மூன்று கேரக்டர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிளிர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திரை கலைஞர்களை ஊக்குவிக்கும் கேபிள் சங்கட் அண்ணா வாழ்க
நான் மிகவும் எதிர்பார்த்த படம் இது தல .....இதுவும் மொக்கையா ????
உங்களை ரவுடி ஆக்கி தினமணி பிரபலம் ஆகிருச்சு தல .......
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தெலுங்கு. "ஹாப்பி டேஸ்". வாசனை நிறைய இருக்கும் போல இருக்கு..
அடடா !
புது வருசத்திலும் ஒரு புது ஏமாற்றாமா ?
பகிர்வுக்கு நன்றி நண்பரே !!!
யூத்துகளுக்கு ஏற்ற படம்..
//அதிலும் ஹீரோ கேரக்டரும் அவனின் நண்பன் நந்து கேரக்டரும் தாங்கள் செலக்ட் ஆகியிருக்கும் டிபார்ட்மெண்டில் பெண்கள் சரியாக இல்லை என்பதால், வேறு டிபார்ட்மெண்ட்க்கு மாறி கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது//
//திடீர்னு ஜானி மட்டும் எப்போது பாய்ஸுக்கும் கேர்ஸுக்கும் ஒத்து வராது என்று சொல்லிக் கொண்டே அலைபவன், சதா தண்ணி அடித்துக் கொண்டும், தம் அடித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் அலைவது ஏன் என்று தெரியவில்லை//
இந்த மாதிரி கேரக்டர்களை எங்கள் கல்லூரியிலேயே பார்த்திருக்கேன்.
படம் தேறுமா
பாக்கலாம்னு நெனைச்சேன்...நல்ல வேலை சொல்லிட்டீங்க
கங்கை அமரன் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தேன் ;)
ella new fasukkum oru snap koduththathil u stand alone nalla review.
ம்....
தலைவரே.. ரொம்ப கஷ்டம்போல.. ‘ஊக்கு’ எல்லாம் விக்க ஆரம்பிச்சிட்டீங்களா... ;)
பதிவுல என் பேர யூஸ் பண்ணால் (மிஸ்யூஸ் பண்ணாலும்) ராயல்டி கொடுத்தாகனும்ன்னு தெரியாத உங்களுக்கு.. ஒழுங்கா ராயல்டி(ராயல்சேலஞ்சாகவும்) தொகையினை அனுப்பிவைக்கவும்...
இப்படிக்கு ப்ராப்ள சாரி பிரபல பதிவர்.
ரிஸ்க்கு வேணாம்.
இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன். ஒரு தடவை கூட பார்க்க முடியாத அளவுக்கு மொக்கையா? :((
@ சங்கர்
//("நாயகன்" இளையராஜா BGMஉடன் இதை படிக்கவும்) உங்கள் நல்ல மனசுக்கு இது ஒரு உதாரணம்:)//
டிங் டி டிங் டி டிங் டி டிங் டி டிங்
BGM போதுமா
போதுங்கையா... போதும்.
ஆனாலும் சங்கர் அண்ணனுக்கு ரொம்ப நல்ல மனசுதான்.
என் கணிப்பு தப்பவில்லை தலைவரே...
நான் முதலில் போவதாக இருந்தேன் ஆனால்
டி.வி.யில் கிளிப்பிங்க்ஸ் பார்த்த பிறகு மனம்
மாறி விட்டேன்.......
விரைவில் ஜக்குபாய் விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.
ஒரு முறை பார்க்கலாம் போல இருக்கு விமர்சனம்.
//விரைவில் ஜக்குபாய் விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.//
என்று முரளி சொல்லியிருக்கிறார்.
இங்கே கனடாவில் ஜக்குபாய் டிவிடி
வந்து ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது. எடிட்டிங் சமயத்தில் ப்ரிண்ட் எடுத்திருப்பார்கள் போல் இருக்கிறது. Counter number எல்லாம் தெரிகிறது. சில இடங்களில் பின்னணி
இசை மிஸ்ஸிங்.
தயாரிப்பாளரின் நிலைதான் பரிதாபம்.
பாக்கலாம்னு நெனச்சிகிட்டு இருந்த என்னை பாக்கலாமா வேணாமான்னு நெனைக்க வெச்சிட்டீங்க. :-)
நீங்கள் விமர்சனம் எழுதியிருக்கிற விதமும், நடையும் நல்லாருக்கு.
ஜக்குபாய் நெட்டில் கிடைக்கிறது.எப்படி ரிலிஸ் ஆனது???எதுவும் தெரியுமா??ஊரில் பொங்கல் ரிலிஸா?
தல,சொல்லிட்டீங்கல்ல,பாக்கல
@அகநாழிகை
ஆமாம்
@குறும்பம்
இதில் படிப்பை பற்றியும் பேசுகிறார்கள். காமெடி என்னவென்றால் ஸ்கூலில் சொல்வது போல இன் ஜினியரிங்க் காலேஜ் ரிசல்ட்டை க்ளாசுக்கு வந்து சொல்கிறார்கள்..
@நாஞ்சில் பிரதாப்
:((
@சங்கர்
நல்லாருக்கு
@இராஜப்ரியன்
நன்றி
@ஜிகர்தண்டா
அப்படியெல்லாம் இல்லை
@காவேரிகணேஷ்
நல்லாருக்கின்றதை நல்லாருக்குன்னுடஹனே சொல்லணும்
@டம்பிமேவி
நன்றி
@கிஷோர்
ஆமாம்
@சங்கர்
என்ன பண்றது
@பட்டர்ப்ளை சூரியா
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
@கேவிஆர்
அப்படியா..?
@ஸ்டார்ஜான்
கஷ்டம்தான்
@புலவன் புலிகேசி
எஸ்கேப்
@பித்தன்
நன்றி
@கானாபிரபா
பெரிசா ஒண்ணும் செய்யலை
@பரிசல்காரன்
என்ன ம்ம்..??
@அசோக்
ஊக்கு நான் விக்கலைன்னா யார்விக்கிறது..
@ஸ்ரீ
அது சரி..
@ரிஷொபான்
முடிஞ்சா ட்ரைபண்னிட்டு சொல்லுங்க
@சரண்
நன்றிங்கோ
@ஜெட்லி
எஸ்கேப்
@முரளி
பார்த்தவுடன் சொல்கிறேன்
@மாயாவி
இங்க ஒரு காப்பி அனுப்புங்க
@சும்மாதான்
நன்றி
@கல்ப் தமிழன்
அப்படியா லிங்க் கொடுங்க
@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ரைட்டு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
"திரைக்கதையில் நுணுக்கமாய் செதிக்கியிருந்தால் நெகிழ்ந்து போய் உருக வைத்திருக்கும். அதில் மிஸ் செய்ததால் க்ளைமாக்ஸ் கொடுப்பது அதிர்ச்சி மட்டுமே."
தெளிவாகப் புரிந்தது.
ஜக்குபாய் torrents file u can get here www.tamiltorrents.com
hello cable ji pls delete the link
for JAKKU BHAI
Post a Comment