சென்னை சங்கமத்தில் எங்களுடய குறும்படஙக்ளை திரையிடும் முகிலன் எங்களை நேற்று மாலை அழைத்திருக்க, போனோம். வாசுவும் தண்டோராவும் ஏற்கனவே அந்த ஏரியாவில் வேலையிருந்ததால் முன்பே வ்ந்திருக்க, நான் ஆறு மணிக்கு மேல் கிளம்பி போனேன். பீச்சுக்கு எதிரே லேடி வெலிங்டன் மைதானமே ஜெகஜோதியாய் இருக்க நல்ல கூட்டம். நடுவே உயராமாய் தனியே வெள்ளை உடையில் ஒருவர் தெரிய அப்துல்லா.
ஒரு பக்கம் லோக்கல் ஜிம்னாஸ்டிக்கை சின்னஞ்சிறு சிறார்கள் அனாயசமாக செய்து கொண்டிருக்க, அதை பார்த்த ஒரு குட்டி பெண் இரண்டு வயதிருக்கும், நானும் ஏறுவேன் என்று அடம்பிடித்து அழ, வேறு வழியில்லாமல் ஆட்கள் துணையோடு குட்டி ஆர்வக்குட்டியாய் ஏறியது எட்டடி கழியின்மேல் பயமில்லாமல். இன்னொரு நாலு வயது பெண் குழந்தையொருத்தி, அவர்கள் கால்களை பின்னி பிணைவதை பார்த்து, தடுப்புக்கு போட்டிருந்த இரட்டை கட்டைகளுக்கு இடையே ஒரு காலையும், இன்னொரு காலை அப்படியே தூக்கி மேல் கட்டையிலும் விட்டபடி, இரண்டுக்கு நடுவில் உடலை நுழைத்து உள்புக முனைந்து ஒரு மாதிரி இக்கிலிபிக்கிலியாய் மாட்டிக் கொண்டு அப்பா..அப்பா என்று கத்த, அவளின் அம்மா தெலுங்கில் திட்டினாள்.
இன்னொரு பக்கம் சிறுவர்கள் நெருப்பு வளையத்தை ஏதோ ராட்டினம் சுற்றுவது போல சுற்றியபடி கீழே படுத்து உருண்டு, குதித்தெல்லாம் சாகசம் செய்ய, இன்னொரு பக்கம் வந்திருக்கும் பார்வையாளர்கள் பங்கெடுக்கும் வண்ணம் உறியடி திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர்கள் எல்லாம் பானையில் அடிக்கிறேன் என்று கயிறு இழுத்த ஆள் மேல் கம்பை வீச, லாவகமாய் நகர்ந்தபடி உறியை இழுத்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் வரிசை கட்டி ஒரு மிக்ஸ்டு வாசனை நம்மை அழைக்க, கொங்கு சமையல், செட்டிநாட்டு, மலபார், என்று கலந்து கட்டி அடிக்க, எண்ணை பரோட்டா சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்தோம். நம் பதிவர் அமுதா கிருஷ்ணன் ஒரு காண்டீன் போட்டிருக்கிறார். எல்லா கடைகளிலும் விலைதான் கொஞ்சம் அதிகம் என்று தோன்றியது.
பின்னால் மிகப் பெரிய மேடை அமைத்து நன்றாக ஒளி,ஒலி அமைத்திருந்தார்கள், கரகாட்டமு, ஒயிலாட்டமும், தேவராட்டமும், ஆந்திர மாநிலத்து தெலுங்காட்டமும், நாக்க மூக்க புகழ் பாடகி சின்னபொண்ணுவின் குழுவும் வந்து அவரவர் பங்குக்கு ஒரு குத்தை போட்டு விட்டு சபையை கலகலத்து போக வைத்தார்கள். பெரும்பால கலை நிகழ்ச்சிகளின் பின்னணி பாடல்கள் ரஹ்மானுடயதாக இருந்த்து அவரின் ஆளுமையை காட்டியது. கும்மி அடி கும்மி அடி பாடல் அங்கிருந்த ஒலிபரப்பில் பின்னி பெடலெடுத்தது.
வலது பக்கத்தில் ஒரு இருண்ட சிறிய அரங்கமைத்து நாற்பது சேர்களை போட்டு இலவசமாய் குறும்படங்களையும், ஆவணப் படங்களையும் திரையிட்டு கொண்டிருந்தனர். என் குறும்படம் இன்று மாலை நாலிலிருந்து முக்கிய விருந்தினர்கள் வரும் நேரத்தில் திரையிடப்படும் என்று சொன்னார்கள். நண்பர் பொன்.சுதாவின் குறும்படம் திரையிடப்பட்டது. குறும்படங்களை அளித்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கு நன்றி. அவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வரும் போது வாசுவும், தண்டோராவும் வேலையிருப்பதாய் கிளம்பிவிட, அப்துல்லா இருங்க நாம இருந்து சாப்ட்டு போலாம் என்று சொல்ல அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, பின்னால் நடக்கப்போகும் நிகழ்வை பற்றி தெரியாமல் கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
சின்ன்ச் சின்னதாய் ஒரு நாலைந்து ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். ஸ்டால்களில் பெரிதாய் ஒன்றும் இல்லை, கிழக்கின் ஸ்டாலும், வ.உ.சி பதிப்பகமும் கடை விரித்திருந்தார்கள். கிழக்கின் மார்கெட்டிங்கை பாராட்ட வேண்டும் கூட்டம் சேரும் இடத்தில் எல்லாம் தங்கள் புத்தகங்களை மக்களிடையே சென்றடைய வைக்க எல்லா முயற்சியையும் செய்து கொண்டேயிருக்கிறது.
வழக்கம போல அழகு பெண்கள், துள்ளும் குழந்தைகள், என்று பராக்கு பார்த்துவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, லேசாய் வயிற்றுக்குள் அங்கிருந்த மசாலா வாசனைகள் பசியை கிளப்ப, ஆளுக்கு நாலு எண்ணெய் பரோட்டாவை சாப்பிட ஆரம்பிக்க, சென்னை சங்கமத்தின் பாடலை ஓளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்துல்லா அதில் வரும் ”தஞ்சம் கொடுத்திடும் சென்னை, இது நெஞ்சம் சுரந்திடும் அன்னை” என்கிற வரிகளை மிகவும் ரசித்து கேட்டார். இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாமல், முக்க்கி உள்ளே தள்ளிவிட்டு, மூச்சு திணறி.. நடக்க முடியாமல் போக, “அண்ணே. வாங்க ஒரு நடை பீச் மணல்ல நடந்தா செரிமாணமாயிரும்” என்றதும். எதிர்பக்கம் பீச்க்குள் போய் வேக, வேகமாய் நடக்க ஆரம்பித்தோம். வெறும் தரையில் நடப்பதை விட மணலில் நடப்பது பெரிய லெவலில் எனர்ஜி வெளியேற்றும். அப்போது ஒரு ஜோடி சுமார் நாற்பது இருக்கும், ஆணுக்கு தலை வழுக்கை, ஒரு கைனடிக் ஸ்கூட்டரில் ஸ்டைலாய் உட்கார்ந்திருக்க, அவருக்கு கீழே அதே வயதில் ஒர் பெண் ப்ளாட்பாரமில் உட்கார்ந்திருக்க, கிட்டத்தட்ட பெண் அவரின் கால்களின் மேல் தலைவைத்து, மேலே பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க, இவரும் குனிந்தபடி பேச, அந்த இருட்டிலும் இருவர் முகத்தில் ரொமாண்ஸ் பொங்கி வழிய, “அண்ணே.. பாருங்கண்ணே.. இத்தனை வ்ருஷம் கழிச்சு கூட வீட்டுல புள்ளைங்களை தனியா விட்டுட்டு இங்க வந்து ரொமான்ஸ் பண்றாங்க” என்றார் அப்துல்லா.”ஆமா ரொமான்ஸ்தான் ஆனா வெயிட் பண்ணுங்க” என்றேன். “எதுக்கு?’ “அதை சொல்லத்தானே வெயிட் பண்ணுங்கங்குறேன்.”என்றபடி ஒரு நடை மணலில் நடந்து விட்டு திரும்ப வருகையில், ரொமான்ஸ் ஜோடி கிளம்பி, ஆளாளுக்கு ஒரு திசையில் தம்தம் வண்டிகளை கிளப்பி போக, “இதைத்தான் சொல்றேன்னு சொன்னேன்” என்றதும். தலையிலடித்து கொண்டு என்னை அம்போவென விட்டுவிட்டு காரெடுத்து போய்விட்டார். நான் வேறு வழியில்லாமல் ஆட்டோ பிடித்து வந்தேன். சென்னை சங்கமம்.
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment
35 comments:
கேபிள் அண்ணா.. அதுங்க உண்மையான காதல் கி(ழங்)ளிகள்.. :)
ஆஹா.. இப்படி.. சாப்பாட்டை சொல்லி சொல்லியே... என் வயிறை பதம் பார்க்கறீங்களே சங்கர்! :)
@அன்புடன் - மணிகண்டன்
ஹா..ஹா
@ஹாலிவுட் பாலா
அது சரி.. :)
போனாமோ, வந்தோமோ இல்லாம,
வழுக்கை என்ன பண்ணுது, 40 என்ன பண்ணுதுல்லாம் இந்த யூத்துக்கு தேவையா?
பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் part-2
www.kaveriganesh.blogspot.com
தீர்க்கதரிசி ஜி நீங்க..::))
இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கா, வந்துடுவோம்
//நடுவே உயராமாய் தனியே வெள்ளை உடையில் ஒருவர் தெரிய அப்துல்லா.//
என்னது எங்க அண்ணன் தனியா இருந்தாரா?
ஹலோ சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு உங்களுக்கு தெரியாதா?
//தலையிலடித்து கொண்டு என்னை அம்போவென விட்டுவிட்டு காரெடுத்து போய்விட்டார்.//
யாரோட தலையில?????
//நான் வேறு வழியில்லாமல் ஆட்டோ பிடித்து வந்தேன்//
வழியே இல்லைன்னா ஆட்டோ எந்த வழியில போச்சு?????
அப்துல்லா எல்லோரையும் நல்லவர்னு நம்புறார் போல.. நல்ல மனசு.. ஆமா உங்களை ஏன் விட்டுட்டு போய்ட்டார்? என்ன கோபமோ? :)))
:)
ஹாட்ஸ்பாட்டில் இருப்பது யாரோ?
வயசு 40? வழுக்கைத் தலை.. ரைட்டு.. நல்லா இருங்க பாஸ்
வயசனா காலத்துல எதுக்கு எண்ணெய் ப்ரோட்டா?
//தராசு said...
//நான் வேறு வழியில்லாமல் ஆட்டோ பிடித்து வந்தேன்//
வழியே இல்லைன்னா ஆட்டோ எந்த வழியில போச்சு?????//
:) : ) :)
என்னங்க இந்த பதிவுக்குலாம் மைனஸ் ஒட்டு போடுறாங்க?
உங்களுக்கு எதிரி ஜாஸ்தி ஆகிட்டாங்கனு நெனக்கிறேன்..
:-))))
ரைட்..அது மாதிரி ஏகப்பட்ட ஜோடி சுத்திட்டு திரியுதுங்க...
கொத்துபரட்டோவில் போட நிறை விடயங்கள் கிடைத்திருக்கும்.. சென்னை மக்கள் சங்கமிக்கீறீர்கள்
கேபிள் நாங்கள் ஒரு பிளேட் மட்டனும்,சிக்கனும் வாங்கினோம் அமுதா அக்காவிடம்.நான் முதலில் சேம்பிள் பார்க்க கொடுக்கிரார்கள் என்று நினைத்தேன்.ஆனால் மொத்தமே அவ்வளவுண்டுதானாம். என்னிடம் இருந்த ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட நோட்டுகள் தீர்ந்து விட்டதால் ரூ 80 அழுதோம்.
அப்புறம் நீ திருக்குறளே எழுதினாலும் மைனஸ் ஓட்டுத்தாண்டி..
நிகழ்வுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்
போனாமோ, வந்தோமோ இல்லாம,
வழுக்கை என்ன பண்ணுது, 40 என்ன பண்ணுதுல்லாம் இந்த யூத்துக்கு தேவையா?./// அதானே..
சரி அந்த போட்டோவும் போடலாம் இல்ல..??
ஹ்ம்ம் ... ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேன்ல..
// Romeoboy said...
ஹ்ம்ம் ... ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேன்ல..//
இன்னைக்கும் சங்கமம் உண்டு...
:-))
:-)))))))))
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா!!
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா!!
உண்மையான காதல்
//KaveriGanesh said...
போனாமோ, வந்தோமோ இல்லாம,
வழுக்கை என்ன பண்ணுது, 40 என்ன பண்ணுதுல்லாம் இந்த யூத்துக்கு தேவையா?
//
விடுங்க ப்ரதர், இது ஒரு பெருசின் பெருமூச்சு ;)
மைனஸ் ஒட்டு மைனர் கேபிள், அப்துல்லாவுக்குத் தெரியாத விஷயம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?
பாம்பின் கால் பாம்பரியும்?? - பெருசுங்க மேட்டர் பெருசுங்களுக்குத்தான் தெரியும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அன்பின் கேபிள்,
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
Post a Comment