பொங்கல் ரிலீஸில் படத்தின் ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். பொல்லாதவன் கிஷோர் குமார் கதாநாயகனாய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் தமிழ் பட்ம். என்று எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம்.
கிஷோர் மிக அமைதியாய், தனக்கென ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, தன் ஒரே கம்பெனியான சமையக்காரன், நண்பனாகிய சத்யனுடன் வாழ்பவன். அரசியல் ஆதரவு தாதாவை தற்கொலை முயற்சி செய்து மிரட்டியே கைது செய்ய வைப்பவன், வீரன், தீரன், சூராதி சூரன், ஒரே குத்தில் பழைய ப்ளைமெள்த காரை நகர்த்தி எறிபவன் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வருகிறார். இவரின் வாழ்க்கையில் அகஸ்மாத்தாய் நுழையும் பெண்ணினால் ஏற்படும், காதல், மோதல், வீழ்ச்சி, எழுச்சி என்றெல்லாம் போகிறது கதை.
கிஷோர் என்ன செய்கிறார், ஏது செய்கிறார் என்று தெரியவில்லை. மிரட்டலான பாடி லேங்குவேஜால் அந்த் கேரக்டர் மேல் ஒரு எதிர்பார்ப்பை வரவழைத்துவிடுகிறார். அதை ஓரளவுக்கு பூர்த்தியும் செய்திருக்கிறார்.
படம் பூராவும் சத்யன் கேரக்டர் பேசிக் கொண்டேயிருக்கிறது. அவரின் பேச்சை விட அதை இடை மறித்து கிஷோர் பேசும் வசனங்கள் நச். ஓடிவரும் பெண் நல்ல குண்டு பப்பாளிப்போல் இருக்கிறார்.
படத்துக்கு மிக முக்கியமான திருப்பத்தை பற்றி சொல்லும் போது கொஞ்சம் நிமிர்ந்து நிற்கத்தான் வைக்கிறது. காரின் பெரிய ஹாரன், சத்தத்தை வைத்து உணர்தல், பைக் வாங்கும் கடையில் பைக்கின் கலரை பற்றி கேட்பது, ராஜேஷின் கேரக்டர், தாய்லாந்து ப்ளாஷ்பேக், எப்பவும் ஓடிக் கொண்டிருக்கும் பைத்தியக்காரன், குரலையும், போகும் திசையையும் வைத்தே இடஙக்ளை குறிக்கும் காட்சிகள் என்று ஆங்காங்கே சின்ன சின்னதாய் நிறைய விஷயங்கள் நுணுக்கமாய் செய்திருந்தாலும் படம் பூராவும் ஒரு வெறுமை ஒடிக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் பண்டி சரோஜ்குமார்,மற்றும் பிண்ணனி இசையமைப்பாளரும் தான். படும் நெடுக தெரியும் ஒரு செபியா மற்றும் கருமை கலந்த டோனும், சில ஷாட்களும் மிரட்டலாக இருக்கிறது. பிண்ணனி இசை ஆப்டாக இருப்பதும் சந்தோஷம்.
டெக்னிகலாய் சொன்னால் ஆரம்பக் காட்சிகளில் எந்த அளவிற்கு மிரட்டலாய் இருந்ததோ, அதே அளவுக்கு ஒரே மாதிரியான ஷாட்களால் எரிச்சலை ஏற்படுத்துகிறது.. எல்லா ஷாட்களீலும், ரைட் லெப்ட் மூவ்மெண்ட், கால், கை இன்சர்ட்ஸ், ஒரே மாதிரியான வைட் ஆங்கிள் ஷாட்டுகள், மிக மெதுவாய் வரும் டயலாக் டெலிவரி, மைண்ட்லெஸ் வயலன்ஸ், எப்போது வீட்டின் முன் எரிந்து கொண்டிருக்கும் புகை மண்டல வில்லன் இடம், சூனியக் கார கிழவி போன்ற வில்லன். என்று மிக பாஸ்டாய் போகவேண்டிய ஆக்ஷன் காட்சிகள் கூட ஸ்லோமோஷனில் போய் கொட்டாவி, கொட்டாவியாய் வரவழைத்திருக்கிறார் கதை திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கு இந்த 24 வயது பண்டி சரோஜ்குமார். நிச்சயம் இவரால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்.
போர்களம் – டாய் ஸ்டோரி
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment
30 comments:
புதியவர்களை வரவேற்போம் சங்கர்ஜி.
பொங்கல் நாளில் வெளியிடப்பட்ட எல்லா படங்களையும் அலசி ஆராய்ந்து விமர்சனம் எழுதி, பதிவர்கள், வாசகர்களுக்காக வாழும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
நானும் பாத்துட்டேன்.. இந்த படத்தோட மேக்கிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது..
அப்போ பாக்கலாமா...??
me the Fourth :)
illa sixth ;(
விமர்சனம் அழகு..
ஆமா...ரொம்பநாள எண்டர் கவிதைய எண்டர் பண்ணமாட்டேங்குறீங்க
அது ஏன்...!
\\நிச்சயம் இவரால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்//
என்ன பாஸ் நீங்களா எழுதி இருக்கிறது ??
adada .....neenga ippudi solringa..avar appudi solluraru..naan yaarai nambuvathu?
நல்லது ..........
//நிச்சயம் இவரால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் விதைத்திருக்கிறா//
ஹ்ம்ம்...உங்க நம்பிக்கை பொய்க்காமல் இருக்க பிரார்த்தனைகள்.
சூப்பரு
கேபிள்ஜி,
நல்ல விமர்சனம்..
// மிக பாஸ்டாய் போகவேண்டிய ஆக்ஷன் காட்சிகள் கூட ஸ்லோமோஷனில் போய் கொட்டாவி, கொட்டாவியாய் வரவழைத்திருக்கிறார் //
நச் கமென்ட்..
நன்றி,
எழில்.ரா
me the 14th....
நல்ல விமர்சனம் :)
கொஞ்சம் ஸ்லோ மூவிங், ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் என்று சில குறைகள் இருந்தாலும், படம் ஓ.கே. ஒரு தடவை பார்க்கலாம்.
நான் டிவி லயே பாத்துக்கரன் தல..:)
indha padatha romba ethir paathutu irundhen.. but sumara velaikaavala nu sonnanga..
ippa neenga sumara irukkunu solrathu naala.. poi paakalam nu irukken... :)
toy storyனா?
நானும் பாத்துட்டேன் கேபிள். மேக்கிங், லைட்டிங், இடைவேளையில வர்ற அந்த ட்விஸ்ட் நல்லாயிருந்தது.
ஆனா, கேமரா மூவ்மெண்ட்னாலயா, என்னன்னு தெரியல, படம் ரொம்ப ஸ்லோவா போற மாதிரி ஒரு ஃபீலிங்!
//ஆமா...ரொம்பநாள எண்டர் கவிதைய எண்டர் பண்ணமாட்டேங்குறீங்க//
கதிர் சார், ஏன்? எதுக்காக? ஏன் இப்படிலாம்???
//ப்பவும் ஓடிக் கொண்டிருக்கும் பைத்தியக்காரன்,//
சிவராமன் சொல்லவேயில்லை!!
பாக்கலாம்னு சொல்றீங்க.
ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்.இதற்காகவேனும் ஒருதடவை ,,,,
'Poor'-kkalam???
///படத்தில் என்ன புதுசு என்றால் மேகிங் எனலாம் அப்புறம் கேமரா
ஷாட்ஸ், எடுத்த விதம் நன்று, ஆனால் போக போக அதுவே பல
கொட்டாவி வர காரணம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.////
படம் ஆரம்பிக்கும் போது இம்ப்ரெஸ் பண்ணுற மேகிங் , கேமரா ஷாட்ஸ்
திரும்ப திரும்ப வரும்போது நீங்க சொல்ற மாதிரி போரடிக்குதுங்க
ஆனா டெக்னிக்கலா நல்லா படங்க .....
///படத்தில் என்ன புதுசு என்றால் மேகிங் எனலாம் அப்புறம் கேமரா
ஷாட்ஸ், எடுத்த விதம் நன்று, ஆனால் போக போக அதுவே பல
கொட்டாவி வர காரணம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.////
படம் ஆரம்பிக்கும் போது இம்ப்ரெஸ் பண்ணுற மேகிங் , கேமரா ஷாட்ஸ்
திரும்ப திரும்ப வரும்போது நீங்க சொல்ற மாதிரி போரடிக்குதுங்க
ஆனா டெக்னிக்கலா நல்லா படங்க .....
பாஸ் நீங்க ஒரு படம் எடுங்க சும்மா கிழி கிழின்னு கிழிக்க போறாங்க !!! இப்போவே சொல்லிட்டேன் பா :(
எனக்குப் பிடித்திருந்தது.
பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்யா..
Perfect Review Sir.
i Like & Love This Movie...
Post a Comment