Thottal Thodarum

Jan 30, 2010

கோவா – திரை விமர்சனம்

Goafilm சென்னை 28, சரோஜாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு டீமிலிருந்து வந்திருக்கும் படம். ஊர்பட்ட கடன் பிரச்சனையில் பஞ்சாயத்துக்களை பார்த்து வெளிவந்திருக்கும் படம். சாதாரணமாகவே ஹாலிடே மூடில் இருக்கும் இவரின் படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஹாலிடே என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தியிருந்த படம்.

இவர்களும் வழக்கம் போல பழைய தமிழ் சினிமாக்களை கிண்டலடித்தே ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தில் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றி திரியும் ஜெய், பிரேம்ஜி,வைபவ் மூவரும் பஞ்சாயத்தில் நிற்கும் காட்சியில் தொடங்குகிறது படம். ஏற்கனவே பலராலும் கிழித்து தொங்கவிடப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து காட்சிகள். பிரேம்ஜி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சாமி பையன் என்பதற்கான ப்ளாஷ்பேக் சீன் அட்டகாசம். முக்கியமாய் ஷண்முகசுந்திரத்தின் படு காமெடியான் சீனில் அவரின் சீரியஸ் நடிப்பும், ஒரே நேரத்தில் வாந்தியெடுத்து,குழந்தை பிறப்பது வரை வரும் காட்சி நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்ய வைக்கிறது.

Goa Photos01 அதன் பிறகு வரும் காட்சிகளில் ஏதும் பெரிய ப்ளஸ் இருப்பதாய் தெரியவில்லை. பிரேம்ஜியை சாமி கண்ணை குத்துவதாய் வரும் காட்சியும், அதை ஜெய் சொல்லுமிடமும் சிரிப்பு. அதுக்கப்புறம் மூவரும் கோவா போய் சேர்ந்து தாடி, மீசையை மழித்ததை தவிர பெரிதாய் எதுவும் நடக்காத முதல் பாதிக்கு இண்டர்வெல் விடுகிறார்கள்.

இவர்களை தங்கள் காட்டேஜில் தங்க வைக்கும் ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்களுக்கு புதுசு. ஆகாஷின் ஸிக்ஸ் பேக்கை நம்பர் போட்டு காட்டுவதும், சம்பத், பிரேம்ஜி ரூமுக்குள் “உங்களுக்கு இவ்வளவு பெரிசா” என்று போட்டோவை காட்டி கேட்பதை வெளியே தவறாய் புரிந்து கொண்டு குமையும் ஆகாஷ் நடிப்பு. அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறது. நிஜமாகவே சம்பத்தின் பாடிலேங்குவேஜும் டயலாக் டெலிவரியும் அருமை.
goa_tamil_movie_20091019_1995007725 ஆரம்ப காட்சியில் பிரேம்ஜியை காதலிக்கும் வெள்ளைக்கார பெண்ணை கரெக்ட் செய்ய பிண்ணனியில் கண்கள் இரண்டால் பாட்டை போட்டு அதில் ஜெய்யின் முன்னாலேயே தலையாட்டி பாடுவதும், சிரிப்பதும் அருமை ஆனால் அதையே படம் முழுவதும் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள்.

ஜெய் பியா ஜோடிக்கு பெரிதாய் வேலையில்லை. அவர்களின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லாததால் பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. பியா அழகாய் இருகிறார். வைபவ் ஸ்நேகா காட்சிகள் படு சொதப்பல். க்ளைமாக்ஸ் காட்சிகள் முற்றிலும் பொலிவிழந்ததாகவே இருக்கிறது.

படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரியான நடிப்பு, பிரேம்ஜியும், சம்பத்தும், பரவாயில்லை. மற்றவரக்ளுக்கு பெரிதாய் ஏதுமில்லை. படம் முழுக்க பிரேம்ஜியை நம்பியே இருந்திருப்பது தெரிகிறது.
Goa Photos01 (1) சக்தி சரவணனின் ஒளிப்பதிவு துல்லியம், யுவனின் இசையில் இரண்டு பாடல்களை தவிர பெரிதாய் ஏது சொல்வதற்கில்லை. ஆண்ட்ரியாவின் இதுவரை அட்டகாசம், டைட்டில் பாடலும் நச்சென்று நிற்கிறது.

வழக்கமாய் வெங்கட்பிரபுவின் படங்களில் ஒரு சின்ன மேட்டரை எடுத்துக் கொண்டு அதை நோக்கி போகும் போது மிக இயல்பான நகைச்சுவையோடு திரைக்கதை நகரும். இதில் அது மிஸ்ஸிங். இங்கிலீஷ் காரி தமிழ் பேசும் காட்சி படுத்தல் மிக அருமை. முழுக்க, முழுக்க, பிரேம்ஜியை நம்பி களமிறங்கியது பெரிய லெட்டவுன். ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் இருக்கிறதே திரைக்கதையின் தொடர் தொய்வினால் இளமை கொப்பளிப்பாக வந்திருக்க வேண்டிய படம் நம்முள் ஏற மாட்டேன் என்பது சோகமே. என்னை பொருத்தவரை வெங்கட்பிரபு ஹாட்ரிக் மிஸ் செய்துவிட்டார்.

கோவா – A Dull & Boring Holiday.



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

creativemani said...

Hiiiiii.. Me the 1st... :)

கடவுள் பாதி மிருகம் பாதி.. said...

haiyiyoo.. ithuvum innoru aayiraththil oruvanaa..
sir oru thadavai kooda intha padaththai paarkka mudiyaatha.. :(

masiad said...

nallavelai naan thappichen

k7smart said...

தமிழ் படம் விமர்சனம்
http://tamilmoviesong4u.blogspot.com/2010/01/tamil-padam.html

gulf-tamilan said...

உங்கள் பார்வையில் புட்டுகிச்சா??

Chennai boy said...

அய்யோ பாவம் ஐஸ்வர்யா முத படம் எடுத்தாங்க அது இப்படி போகனுமா? பரவாயில்ல ரஜினியின் கஜானாவில் கொஞ்சம் குறைஞ்சுடும். அதான் எந்திரன் வருதில்ல அது அள்ளிவிடும்.

Manoj (Statistics) said...

அப்ப இந்த வருடத்தின் முதல் blockbuster hit தமிழ்ப்படம் தான்னு சொல்றீங்க.... ஓகே
அப்பிடியே நாளைக்கு மதியத்துக்குள்ள ஜக்குபாயையும் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்களேன்... அப்பத்தான் evening எந்த படத்துக்கு போகலாம்னு ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் ....

நாடோடி said...

பட விமர்சனம் லேட் ஆன போதே லைட்டா டவுட் வந்தது.

kanagu said...

படம் சுமார்-னு தான் பல இடங்களிலிம் பேச்சு.. நீங்களும் அதயே சொல்லிட்டீங்க... சோ நான் தமிழ் படத்துக்கு போறேன் நாளைக்கு :) :)

பாலா said...

இப்படி புது முயற்சிகளை வரவேற்கலைன்னா எப்படி சங்கர்??

நாம சண்டைக்காக படத்தை ஓட வச்சிருக்கோம். பாட்டுக்காக ஓட வச்சிருக்கோம். ஒரு தடவை.. ஹோமோ செக்ஸ் காட்சிகளை காட்டியதுக்காக ஓட வைச்சா என்ன தப்புங்கறேன்??!!! :) :)

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
இப்படி புது முயற்சிகளை வரவேற்கலைன்னா எப்படி சங்கர்??//

அதானே..:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹாலிவுட் பாலா said...
நாம சண்டைக்காக படத்தை ஓட வச்சிருக்கோம். பாட்டுக்காக ஓட வச்சிருக்கோம். ஒரு தடவை.. ஹோமோ செக்ஸ் காட்சிகளை காட்டியதுக்காக ஓட வைச்சா என்ன தப்புங்கறேன்??!!! :) :)//

:)))))

திவ்யாஹரி said...

கோவா பார்த்துட்டு வந்து படிக்கிறேன் நண்பா..

வெற்றி said...

என்னங்க தலைவி சினேகாவை பற்றி விமர்சனத்தில் ஒரு வரி கூட இல்லை..இதை சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்..


இவன்
புன்னகை பேரரசி ரசிகர் மன்றம்
தலைவர் - ஜாக்கி சேகர்

வெற்றி said...

பாலா அண்ணே நச் கமெண்டு :)

//நாம சண்டைக்காக படத்தை ஓட வச்சிருக்கோம். பாட்டுக்காக ஓட வச்சிருக்கோம். ஒரு தடவை.. ஹோமோ செக்ஸ் காட்சிகளை காட்டியதுக்காக ஓட வைச்சா என்ன தப்புங்கறேன் :))//

அதானே என்ன தப்பு :)

பாலா said...

இன்னும் என்னென்ன எல்லாம் ஆட் பண்ணலாம்????

01. இது தமிழுக்கு புது genre. இதை வரவேற்கலைன்னா.. தமிழ் சினிமாவே அழிஞ்சிடும். இனிமே.. வேற யாரும் ஹோமோ செக்ஸ் படமே எடுக்க மாட்டாங்க.

02. பல கோடி செலவில் பணம் எடுத்திருக்காங்க. மன்னிச்சி படம் பார்ப்போம். 100-200 தானே செலவாகும்.

03. இப்படி மிக்ஸ்ட் ரிப்போர்ட் கொடுக்காதீங்க. மக்கள் எல்லாம் கன்பீஜ் ஆகறாங்க. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ‘நல்லாயிருக்கு’ இல்லைன்னா ‘நல்லாயில்லை’ன்னு மட்டும்தான் சொல்லணும்.

04. இந்த விமர்சனத்தால.. தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேரும் இந்தப் படத்தை புறக்கணிக்கப் போறாங்க.

05. சினிமாவை பத்தி எழுதி பொழப்பை ஓட்டிகிட்டு, இப்படி அதைப்பத்தியே தப்பா எழுதலாமா?

------

ஒன்னுமில்லைங்க சங்கர். ஆ.ஓ- பதிவுக்கு வந்தவங்களை எல்லாம் இன்னும் காணாம். அதான்.. அவங்களுக்கு ஒரு வேலையை கம்மி பண்ணலாம்னு.
==========

ஆ. ஓ-க்கு ‘மிக்ஸ்ட்’ ரிப்போர்ட் கொடுத்தனால தப்பிச்சீங்க!! :) :)

ஆனா.... நம்ம தண்டோரா மட்டும் கையில சிக்கினா.....

பாலா said...

ஹைய்யோ....

ரெண்டு வருட ‘உழைப்பை’ மறந்துட்டனே...!!!

ஸாரி கைய்ஸ்!!

Cable சங்கர் said...

பாலா படத்தைவிட உங்க பின்னூட்டம் கலக்கல்.

Cable சங்கர் said...

ஆன்லைன்ல இருந்தா கூப்பிடுங்க பாலா

R.Gopi said...

கோவா விமர்சனம் படிச்சப்போ இதுதான் எனக்கு புரிஞ்சது...

படம் நல்லா இல்லைன்னு சொல்லல... நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்..

புலவன் புலிகேசி said...

அய்யய்யோ தல இன்னைக்கு புக் பன்னிருக்கேன் இப்புடி சொல்லிட்டீன்களே..

kailash,hyderabad said...

ஐயா, எனக்கொரு உம்ம (உம்மா இல்லை ) தெரிஞ்சாகணும்.
படம் நல்லாருக்கா ? இல்லையா ?
படத்தை ஒருதடவ பாக்கலாமா கூடாதா ?
படம் ஓடுமா ,ஓடாதா?
(வடிவேலு பே இருக்கா என்று ரஜினியிடம் கேட்பதுபோல் படிக்கவும்.)

Hari said...

not bad..
oru dhadava pakkalam........

kailash,hyderabad said...

சாரி. 'பேய் இருக்கா' என்று திருத்தி படிக்கவும்.
கரண்டு போயிடுச்சிபா !

CS. Mohan Kumar said...

Nice review. Seems Goa is well below expectations.

கார்க்கிபவா said...

கலக்கல். நிச்சயம் இது வேலிட் பாயிண்ட். ஓரின சேர்க்கையை பற்றிய படத்தை ஆதரித்தே ஆக வேண்டும். செளந்தர்யா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க. அந்த உழைப்புக்காகவது நான் பார்ப்பேன்.. :))

Ashok D said...

அட போங்க தலைவரே... இப்படிதான் வேட்டைக்காரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவனையும் சொன்னீங்க. நேத்தும் இன்னைக்கும் இரண்டு படமும் பார்த்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்த்தது. so கோவாவும் நல்லாயிருக்கும் நம்பறேன்.(ஜாலியா இருக்கும்ன்னு என் கணிப்பு)

இந்த சினிமா விமர்சனம் எழுதற பிளாகர்களை எல்லாம்... தூக்கி bay of bengalலா தான் போடனும்.

Mugilan said...

@ ஹாலிவுட் பாலா
//இப்படி புது முயற்சிகளை வரவேற்கலைன்னா எப்படி சங்கர்??

நாம சண்டைக்காக படத்தை ஓட வச்சிருக்கோம். பாட்டுக்காக ஓட வச்சிருக்கோம். ஒரு தடவை.. ஹோமோ செக்ஸ் காட்சிகளை காட்டியதுக்காக ஓட வைச்சா என்ன தப்புங்கறேன்?//
ஒரு படத்தில் வடிவேலு பேசிய டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது பாலா!
" ஓ! அவனா நீ? " :-))) :-)))

பாலா said...

அவனேதான்...!!! :)

நர்சிம் வந்து...

“மிகப்பிடித்திருந்தது பாஸ்.. நல்லா சொல்லி இருக்கீங்க பாலா.” -ன்னு

சொல்லிட்டா... ஆட்டம் முடிஞ்சது!!! :) :) :)

யாரையாவது கலாய்க்கலைன்னா... தூக்கமே வர்றதில்லைங்க இப்பல்லாம்!! ஸ்போர்டிவா எடுத்துகிட்டதுக்கு நன்றி :)

பாலா said...

//////D.R.Ashok said...

இந்த சினிமா விமர்சனம் எழுதற பிளாகர்களை எல்லாம்... தூக்கி bay of bengalலா தான் போடனும்.

////

தயவு செஞ்சி அதை பண்ணுங்க தல.

உங்களுக்கு புண்ணியமா போகும், கூடவே கவிதை எழுதறவங்களை, இந்தியப் பெருங்கடல்ல தள்ளுங்க தல!! என்ன செலவானாலும் பரவாயில்லை. :)

(பலா... மைனஸ் ஓட்டு குத்தக் கூடாது. சொல்லிபுட்டேன்)

Mugilan said...

:-)

அப்படியே இந்த ஹாலிவுட் பட விமர்சனங்கள் எழுதுறவங்கள கருங்கடல்ல தள்ளனும்! :-))

Palaniappa Manivasagam said...

Friends,
I saw the movie. Movie is not bad. I was able to laugh to the extent. All 3hrs i was laughing like anything.

You can enjoy the movie if you don't watch the bits and pieces in television.

Definitely you can watch once in theater and i feel it is worth to the cost we pay.

P.S: Go with a friends gang, you will enjoy more.

Thanks
Palani

Baby ஆனந்தன் said...

//01. இது தமிழுக்கு புது genre. இதை வரவேற்கலைன்னா.. தமிழ் சினிமாவே அழிஞ்சிடும். இனிமே.. வேற யாரும் ஹோமோ செக்ஸ் படமே எடுக்க மாட்டாங்க.

02. பல கோடி செலவில் பணம் எடுத்திருக்காங்க. மன்னிச்சி படம் பார்ப்போம். 100-200 தானே செலவாகும்.

03. இப்படி மிக்ஸ்ட் ரிப்போர்ட் கொடுக்காதீங்க. மக்கள் எல்லாம் கன்பீஜ் ஆகறாங்க. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ‘நல்லாயிருக்கு’ இல்லைன்னா ‘நல்லாயில்லை’ன்னு மட்டும்தான் சொல்லணும்.

04. இந்த விமர்சனத்தால.. தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேரும் இந்தப் படத்தை புறக்கணிக்கப் போறாங்க.

ஹைய்யோ....

ரெண்டு வருட ‘உழைப்பை’ மறந்துட்டனே...!!!
//

நன்றி பாலா ஸார்... நானும் பேமஸ்... நானும் ரவுடி... (நல்ல வேலை நினைத்தது நல்லபடியாக நடந்து முடிந்தது :-)

பாலா said...

பிரதீப்.. நினைச்சேன்! அதுக்குதானே அந்த 100-200 ஐ ஆட் பண்ணினதே!!! :) :)

இங்க எல்லா பின்னூட்டத்தையும் படிச்சிப் பாருங்க. லிஸ்டில் நீங்க மட்டுமில்லை! :)

http://cablesankar.blogspot.com/2010/01/blog-post_14.html

மிக்ஸ்ட் ரிப்போர்ட் ‘எப்பூடி’க்கு!! :)

------------

என்னோட கேள்வியெல்லாம்...,

‘புது முயற்சி’, ‘புது genre', ‘எனக்குப் பிடிச்சிருக்கு’, ‘கேபிள் சொல்லிட்டா படமே ஓடாது’ -ன்னு அன்னைக்கு அத்தனை பேரும் ரவுண்ட் கட்டி, பின்னூட்டத்தில் அடிச்சாங்க.

இன்னைக்கு ஏரியாவே சைலண்டா இருக்கு. ஏன்?? ஏன்?? ஏன்??

===

A Christmas Carol படத்தை ‘பார்க்காதீங்க’ -ன்னு எழுதினப்ப.. நீங்க சொல்லிட்டீங்க.. அப்படியே பண்ணிடுறோம்னு பின்னூட்டம்.

அதே நாளில் 2012 படத்தை கிழிச்சாலும்.. ‘நீ என்ன சொல்லுறது? பார்க்கத்தான் போறோம்’ன்னு பின்னூட்டம்.

யாரோட ரசனையையும் யாரும் மாத்த முடியாது. ஒருத்தருக்கு ஒரு படத்தின் மேல் விருப்பம் இருந்தா.. அதை கேபிளோ, நானோ சொன்னதுக்காக எல்லாம்.. பார்க்காம இருக்கப் போறதில்லை.

இங்க என்ன எழுத்துப் புரட்சியா நடந்துகிட்டு இருக்கு?????!!! :)

கேபிள் சுமார், சூப்பர்ன்னு சொன்னப் படங்களை கூட என்னால் பார்க்க முடியலை (சுப்ரமணியபுரம், நாடோடிகள்).

எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு/இல்லைன்னு சொல்லுறது என் உரிமை. அந்தப் படம் உங்களுக்கு பிடிச்சிருக்குங்கறனால... நானும் அதையே சொல்லனும்னோ... அல்லது.. அதைப் பத்தி. எதையுமே சொல்லக் கூடாதுன்னோ நினைக்கிறதுதான்... ஏன்னு புரியலை.


சரி.. சரி.. இன்னைக்கு ஏரியாவை கலாய்க்கறதுக்குன்னு யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்!!!!

ரெடி.. ஸ்டார்ட் மீஜிக்!!! யாராவது ஆட்டத்துக்கு ரெடியா????

==============

பாலா said...

//////Mugilan said...

அப்படியே இந்த ஹாலிவுட் பட விமர்சனங்கள் எழுதுறவங்கள கருங்கடல்ல தள்ளனும்! :-))

///

செலவு ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாகும்.. முகிலன். :) அட்லாண்டிக்கில் தள்ளினா ரொம்ப சீப். 10 மைல்தான்!! :)

ஆனா.. தள்ளுறதுக்கு யாருமில்லை. நானாவே போய் குதிச்சாதான் உண்டு!! :)

பிராட்வே பையன் said...

கடைசி அரைமணி நேரம் சொதப்பல்.
சினேகா டுயட் படு போர்.

விமர்சனம் படிக்காமல் போனது என் தப்பு.

ஹஸன்.

"ராஜா" said...

பியாவுக்கு இதும் ப்ளாப்பா

அத்திரி said...

//கார்க்கி said...
கலக்கல். நிச்சயம் இது வேலிட் பாயிண்ட். ஓரின சேர்க்கையை பற்றிய படத்தை ஆதரித்தே ஆக வேண்டும்
//

சகா அவனா நீ.அவ்வ்வ்................சொல்லிக்கிற மாதிரி இந்த படத்துல எதுவும் இல்ல பிரெம்ஜி மற்றும் அவரின் காதலியை தவிர

வினோத் கெளதம் said...

படம் ஓகே தல..வருகின்ற மொக்கை படங்களுக்கு இது எவ்வளவோ தேவலாம்..
வைபவ் & ஸ்னேஹா வரும் பகுதிகள் நல்லா தான் இருந்தன. என்னை கேட்டால் வைபவ் கொஞ்சம் நல்லா பண்ணி இருந்தார்..
ஆனால் வெங்கட் பிரபு கொஞ்சம் சருகியிறுக்கார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது சரி, படம் முழுவது பலவித கெட்டப்புகளில் வருகிறாரே அவர் யார், என் வருகிறார், யாருக்காச்சும் பதில் தெரியுமா? ப்ளீஸ்
ஸ்கூல் வாத்தியார்(முதல் பஞ்சாயத்து சீன்)
அய்யர் (அழகர்-வெள்ளைக்காரி திருமணம்)
பஞ்சாப் லாரி டிரைவர் (மூவரும் கோவா போகும் லாரி)
போலீஸ் (இண்டர்வல் சீன்)
நாட்டாமை(கிளைமாக்ஸ்)

Cable சங்கர் said...

@ramesh romba nallavan
ரமேஷ் அவர் ஒரு பழைய டிவி.. மற்றும் சினிமா நடிகர் அவர் அந்த காலத்தில் கம்லை இமிடேட் செய்வார். கொஞ்ச காலங்களுக்கு முன் வரை அம்பிகாவின் முன்னாள் கணவர் அவர்தான்.

அவர் ஏன் வருகிறார் என்பது பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே வைக்கலாம். ஒரு வேளை ஒரு பின்நவினத்துவ குறியீடாய் இருக்குமோ?

kuruvi said...

//ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்களுக்கு புதுசு//.

அப்போ வேட்டையாடு விளையாடு??

Ashok D said...

@ஹாலிவுட் பாலா
அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்ற ப்ளாக்கர்கள்ல தான் சொன்னேன்.. உங்களை அல்ல :)

பாலா said...

///அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்ற ப்ளாக்கர்கள்ல தான் சொன்னேன்.. உங்களை அல்ல :)//

ஏங்க.. என்னை யாராவது ப்லாகரா ஏத்துக்கங்க!!! நானும் ரவுடிதான்! :( :(

Ashok D said...

பாலா நீங்க குருவ மிஞ்சன சிஷ்யனாச்சே... நீங்கதான் சிறந்த சினிமா விமர்சன ப்ளாகர் ஓகேவா :)

Mugilan said...

நண்பர் ஒருவர் சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியொவில் Animation Engineer'ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறர்! அவரின் அன்பு வற்புறுத்தலுக்காக நேற்று அவருடன் தேவி தியேட்டரில் கோவா படம் பார்த்தேன்! படம் ரொம்ப சுமாருக்கு ரொம்ப சுமார் (மொக்கைன்னு சொல்ல வேணாமேன்னு பார்த்தேன் :-)) படத்தில் எனக்கு பிடித்த விஷயங்கள் இரண்டு! பிரேம்ஜியின் காதலியாக வரும் வெள்ளைக்கார பெண்ணின் முகபாவனைகள் வெகு அழகு! சுப்பிரமணியபுரம் பட ஸ்வாதி போல் அவர் வெட்கப்படுவது மனதைக் கொள்ளை கொள்கிறது! அடுத்தது Gay'ஆக வரும் சம்பத் ( ஹாலிவுட் பாலா :-))) முற்றிலும் மாறுபட்ட நடிப்பு! பட்த்தில் வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை!

Mugilan said...

Perfect review Cable'ji!

Thamira said...

படிச்சாச்சு.