தமிழ் திரையுலகில் சமீப காலமாய் பரபரப்பாய் பேசப்பட்டுவரும் வரும் படம் வசாபி. ரொம்ப சிம்பிளான நிச்சயம் தமிழிலிலோ, அல்லது இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் எடுத்தாளக்கூடிய கதைகளம்.
பிரான்ஸில் அரக்கத்தனமாய் வேலை பார்க்கும் கமிஷனர் ரீனோ. ஒரு முக்கிய வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிக்க, போகும் இடத்தில் ஒரு பெண்ணை நேருக்கு நேராய் முக்கில் குத்தி கைது செய்து வரும் வேளையில் அவனின் மேலதிகாரியின் மகனையும் யார் என்று தெரியாமல் ஒரு குத்து குத்திவிட்டு வர, இம்மாதிரியான அரகண்டான வழியில் அவன் நடந்து வருவதை, கண்டித்து வேறு வழியில்லாமல் இரண்டு மாதம் சம்பளத்துடன் சஸ்பென்ஷன் செய்யப்படுகிறான்.
தனிக்கட்டையான அவனை விரும்பும் பெண்ணிடம் கூட 19 வருடங்களுக்கு முன் தன்னை விட்டு பிரிந்து போன காதலியை நினைவுகூற்கிறான். அவளை மறந்துவிட்டு வா.. அப்போது மீண்டும் சந்திப்போம் என்று பிரியும் அவளை பற்றி பெரிதாய் கவலைபடாதவனுக்கு ஒரு செய்தி வருகிறது. அவனது காதலி இறந்து விட்டாள் என்றும், அவன் பெயரில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிருப்பதாகவும் தெரிய வர, ஜப்பானுக்கு கிளம்புகிறான். அங்கே போனால் அவனுக்கும் அவன் காதலிக்கு பிறந்த பெண்ணையும், 200 மில்லியன் டாலர் பணத்தையும் அவள் மேஜராகும் வரை கார்டியனாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்று உயிலில் எழுதியிருக்க, ரினோவுக்கு காதலியின் சாவில் மர்மம் இருப்பதாய் தெரிய, விசாரிக்க ஆரம்பிக்கிறான். இன்னும் இரண்டே நாட்களில் மேஜராகப் போகும் பெண் தன் தகப்பன் தன் தாயை ரேப் செய்துவிட்டு எமாற்றி விட்டு போய்விட்டான், அவனை பார்த்தால் கொலை செய்வேன் என்று புலம்பும் பெண்ணிடம் தான் தான் அவள் தகப்பன் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறான். இன்னொரு பக்கம் அவளை கொலை செய்ய ஒரு கும்பல் அலைகிறது. அவன் காதலியின் சாவின் பிண்ணனி என்ன? ஏன் அவள் மகளை கொலை செய்ய துரத்தப்படுகிறாள்? அவளிடம் ரீனோ தன்னை வெளிப்படுத்தி கொண்டானா.? என்பதை ஜக்குபாய் வந்ததுமோ.. இல்லை வசாபி டிவிடியை பார்த்தோ தெரிந்து கொள்க.
இறுக்கமான, ஸ்டைலான, அரகண்டான இம்மாதிரியான கேரக்டர்கள் ரினோவுக்கு அல்வா சாப்பிடுவது போல. மனுஷன் பாடி லேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும், அவரது ஸ்பாண்டெயினிடியிலும் கொள்ளை கொள்கிறார்.
அவரின் உதவியாளர் ஒருவர் நிச்சயம் நல்ல காமெடியன்களுக்கான ரோல். தமிழில் கவுண்டர் ரீ எண்ட்ரி. ரினோவின் மகளாக வரும் எக்ஸெண்ட்ரிக் யூத் சமங்களில் அவரது நடிப்பு ரொம்பவும் குழந்தைதனமாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் நெஞ்சில் நிற்கிறார். ஸ்ரேயா இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். என்ன அவரது காஸ்ட்யூம் மற்றும் ஹேர் ஸ்டைல் அதே போல இருப்பதாய் படுகிறது.
ஒரு பெரிய வில்லன் கோஷ்டி என்றும் டான் என்றும் சொல்லப்படுகிற ஆள் படு மொக்கையாய் இருப்பது பெரிய காமெடி.வெளிநாடுகளில் இப்படத்தை ஆக்ஷன் காமெடி படம் என்றுதான் சொல்கிறார்கள். நாம் சீரியஸாய் எடுக்கும் ஆக்ஷன் படங்களை விட இது எந்தவிதத்திலும் குறைவில்லை.
நிச்சயம் வசாபி ஒரு நல்ல இண்ட்ரஸ்டிங்கான தமிழ்படத்துக்கான கதை களனை கொண்ட படம் என்றே சொல்ல வேண்டும். கே.எஸ்.ரவிகுமார் போன்ற திறமையான இயக்குனர் கைகளில் கிடைக்கும் போது இன்னும் நமக்கேற்ற மசாலாவை சேர்த்து கமகமக்க வைப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
Wasabi – French Masala
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment
42 comments:
Me the first படிச்சிட்டு வரேன் ..:)
ஜக்குபாய் ஹிட் ஆகிடும்ன்னு சொல்லுரிங்க..
I am number three.
படிச்சிட்டு அப்புறமா பின்னோட்டம் போடுறேன்.
ஆபிஸ்லே blog ஸ்டாப் பண்ணிடானுங்கோ.
ரஜினி வச்ச ஆப்பு பத்தாதா? நீங்க வேற திருப்பி வைக்கிறீங்க!!
ks ravikumar pondra tiramai mikka iyakunarkal- I cant control my laugh
டெய்லி எவ்ளோ படம் பார்பீங்க அண்ணா,,,,
இன்டர்நெட்ல ஜக்குபாய் ரிலீஸ் செய்தது நீங்களா அல்லது முதலில் பார்த்தது நீங்களா மாப்பு ..சினிமா பத்தி எழுதித்தான் பொழப்பு ஓட்டுறீங்க அப்புறம் ஏன் இந்த மாதிரி மத்தவன் பொழப்புல கை வைக்கிறீங்க ...
padam nalla masala va irukkum nu KSR edukkum podhe theriyume.. nalla oduna seri :) :)
athukulla andha french padatha paathuteengale.. :) :)
மொக்கை படங்களை எடுத்துவிட்டு தவிக்கும் கே.எஸ். ரவிக்குமாருக்கு நல்லதாக லீட் தந்துடிங்க ....
நல்ல இருக்குங்க ......
ரீமேக் ராஜாக்கள் கிட்ட மாட்டாமல் இருந்தால் சரி தான்
ஓஹோ அப்ப தமிழ் படத்துக்கு நல்லா செட் ஆகும்னு சொல்லுறீங்க... ரைட்டு... அந்த ஆளை பாத்தாலும் வயசான சரத் தாத்தா மாதிரிதான் இருக்காரு....
பார்த்துட வேண்டியதுதான்..:) இவரோட மெதில்டா படம் பார்த்திருக்கேன்.
நம்மூர்ல என்ன பேர் வைப்பாங்க ‘பீஸா வா’ ன்னா..?? இல்ல ’வாதாபி’ன்னா?
:)
நானும் பார்த்தேன் அந்த முதல் காட்சியில் ஒரு பெண்ணையும்,போலீஸ் அதிகாரியின் மகனையும் குத்தும் காட்சியை அப்படி உருவி ஒரு தமிழ் படத்தில் ஏற்கனவே வைத்துவிட்டார்கள் இந்த படத்திலும் அந்த காட்சி வர தான் போகிறது .ரெனோ கோட் சூட் போட்டிருந்தார் என்பதற்காக சரத்தும் கோட் ,அவர் லேசான தாடி வைத்திருந்தார் என்பதற்காக தாடி ஜப்பானிய பெண் பதின்மவயதுகாரர் என்பதால் குட்டை பாவாடை இங்கே ஸ்ரியவிற்கு எப்போதுமே குட்டை பாவாடை .உளவுத்துறையில் வேலை செய்பவராக கவுண்டர் எல்லாம் அதே .சங்கர் அது பிரெஞ்சிலேயே ஆக்சன் காமெடி தான் வசாபி என்பதே ஒரு உணவின் பெயர் கிண்டலாக வய்த்த பெயர் இங்கே எதற்கு ஜக்குபாய் என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை . ஆமா இந்த படத்தின் ரீமேக் உரிமை வாங்கி தான் எடுக்கிறார்களா ? .
உஷார்...
திரைத்துறையைச் சேர்ந்த கேபிள் சங்கர், வாசாபி படத்தின் விமர்சனத்தை வெளியிட்டு எத்தனை பேர் ஜக்குபாய் படத்தைப் பார்த்தேன் அப்படியே சீன் பை சீன் இருக்கிறது என்று எழுதுகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்து அவர்களை குண்டாஸில் போட ஏற்பாடு செய்கிறார். பின்னூட்டமிடுபவர்கள் கவனத்துடன் இடவும்.....
:)))
நான் பர்ஸ்ட் படிச்சப்ப அசல் கதை இதுதான்னு நினைச்சேன்..அப்புறம்தான் ஜக்குபாய்ன்னு தெரிஞ்சுச்சு..
போட்டோவில இருக்கிற வயசான தாத்தாவுக்கு அஜித்த பொருத்தி பாருங்க..பக்காவா பொருந்தும்..மிஸ் பண்ணிடீங்க அஜித்..
பி.கு. சீரியஸா தான் சொல்றேன்..அஜித்த கலாய்க்கல.. :))
ஜக்குபாய் ஓடிச்சின்னா உங்களுக்கு சுக்குகாபி வாங்கித்தரேன்.
சாப்பாட்டு கடை விமர்சனம் போலவே வாதாபி விமர்சனத்தையும் முடுச்சிட்டீன்களே தல. பாப்போம் ரவிக்குமார் கடை மசாலா டேஸ்ட் எப்படி இருக்குன்னு.
அப்ப படத்தை பர்த்துட வேண்டியதுதான்..சுட்ட படத்துக்கு தான் இப்ப மதிப்பு..கேபிள்ஜி
கே.எஸ்.ரவிகுமார் போன்ற ””திறமையான”” இயக்குனர் கைகளில் கிடைக்கும் போது இன்னும் நமக்கேற்ற மசாலாவை சேர்த்து கமகமக்க வைப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.///////////
அப்புறம் அந்த படத்தையும் காப்பி பேஸ்ட் திரைப்படங்களில் சேர்க்கலாம்.
அவங்களாக ஏதாவது சிந்திக்கட்டும் கேபிள்.. அந்த் கொடுமை தான் தாங்க முடியலன்னு சொல்கிறீர்களா..?? அதுவும் சரிதான்.
ஜக்குபாயை திருட்டு விசிடியில் பார்க்காமல், நேரடியான மூலப்படத்தை மட்டும் பார்த்து விமர்சனம் எழுதிய உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
/இன்டர்நெட்ல ஜக்குபாய் ரிலீஸ் செய்தது நீங்களா அல்லது முதலில் பார்த்தது நீங்களா மாப்பு ..சினிமா பத்தி எழுதித்தான் பொழப்பு ஓட்டுறீங்க அப்புறம் ஏன் இந்த மாதிரி மத்தவன் பொழப்புல கை வைக்கிறீங்க .//
நான் என்ன பொழப்பு ஓட்டுறேன்.. அப்படியே எழுதி மாசம் லட்ச ரூபா சம்பாதிச்சிட்டேன்.. போய்ய்யா போய் உன் புள்ள் குட்டிகளை படிக்க வை..:)
jakkubaaai odumaaa?
//வெளிநாடுகளில் இப்படத்தை ஆக்ஷன் காமெடி படம் என்றுதான் சொல்கிறார்கள். நாம் சீரியஸாய் எடுக்கும் ஆக்ஷன் படங்களை விட இது எந்தவிதத்திலும் குறைவில்லை//
:)))
ரீனோவோட ரசிகன் தல நானு... ஆனா இந்த படத்த மிஸ் பண்ணிட்டேன் :(
தமிழில் ஒரு கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதுடன் படம் தொடங்கும்.20 நாள் முன்பே பார்தாச்சு.மொஎக்கை படம்!!! ஓடினால் அதிசயம்தான்!!!
எந்திரன் பாட்டு ஒண்ணு நெட்டில் கிடைக்கிறதெ எந்திரன்தானா?
வசாபி பாத்தா ஜக்குபாய் பாத்தா மாதிரின்னு சொல்லுங்க....இருந்தாலும் ஜக்குபாய் எந்த அளவுக்கு சொதப்பலா இருக்குன்னும் பார்க்கணும்
அருமையான படம் போல
நான் கவுண்டர்க்காக போலாம்னு இருக்கேன் தலைவரே
இங்கிலீஷ் அளவுக்கு இல்ல தமிழு..!
ரொம்ப சுமாராத்தான் இருக்கு..!
என்ன கடைசீல வழக்கம்போல அண்ணன் கே.எஸ்.ரவிக்குமாரு தலையை நீட்டுறாரு..!
இந்த கதைல காதல்டுயட் இல்லயே. தமிழ்ல எப்படியாவது கே.எஸ் காதல்டுயட் வெச்சிருவாரே! திரைக்கதைனு பேர் வேற போட்டுக்குவாரு...
திரையுலகில் இருப்பதாக கூறும் நீங்களே திருட்டுத்தனமா படத்தை தரவிறக்கி பாக்குறிங்க,விமர்சணமும் செய்கிறீர்களே, உங்களை எல்லாம் சரத்குமார் ஒன்னும் சொல்ல மாட்டாரா?
இல்லா நான் எல்லா உலக படத்தையும் ஒரிஜினல் டிவிடி வாங்கி அதுல தான் பார்பீங்கனா, மன்னிச்சுகோங்க
நல்ல பகிர்வு ..
http://vittalankavithaigal.blogspot.com/
நல்ல பகிர்வு ..
http://vittalankavithaigal.blogspot.com/
கே.எஸ்.ரவிகுமார் போன்ற ””திறமையான”” இயக்குனர் கைகளில் கிடைக்கும் போது இன்னும் நமக்கேற்ற மசாலாவை சேர்த்து கமகமக்க வைப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது./////////// அருமையான படம்.
ஜக்குபாய்
நல்ல படம் தான்.. அதைத் தானே தலைவரும் சொன்னாரு..
படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் உங்களின் திரை விமர்சனத்தை அமைத்து இருக்கீங்க .
வாழ்த்துக்கள் நண்பரே !
////ஏன் அவள் மகளை கொலை செய்ய துரத்தப்படுகிறாள்? அவளிடம் ரீனோ தன்னை வெளிப்படுத்தி கொண்டானா.? என்பதை ஜக்குபாய் வந்ததுமோ.. இல்லை வசாபி டிவிடியை பார்த்தோ தெரிந்து கொள்////
சரி சரி ... ரஜினிக்கு போட்டியாக நீங்களும் நல்லா நக்கலடிக்கறீங்க
ஆனாலும் எங்க தலைவர் தில்லுதான் சூப்பருங்க
ரைட்டு ஜக்குபாய் பாக்க வேணாம்.
எம்பட தலையெழுத்து 'ஜக்குபாய்'ன்னு ஆயிப்போச்சுன்னா.. அது யாரால சாமி மாத்த முடியும்?
@romeo
சரியான கலவையில் எடுத்த நிச்சயம் ஹிட் ஆகும்
@புண்ணாக்கு மூட்டை
ரஜினி வச்சது ஆப்புன்னு இப்ப ஒத்துக்கிறீங்களா..? :)
@குப்பன் யாஹு
குப்பன்.. ரவிகுமார் ஒரு பெரிய கமர்சியல் ஹிட் இயக்குனர். ஒரு கமர்சியல் ஹிட் கொடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று யாருக்கும் தெரிவதில்லை
2ஸ்ரீ.கிருஷ்ணா
அது நேரத்தை பொறுத்து
@டம்பிமேவி
ஏற்கனவே எடுத்து முடிச்சிட்டாங்கப்பா
@சுகுமார் சுவாமிநாதன்
ஆமாம்
@பலாபட்டறை
அதுவும் அருமையான் படம் சங்கர்
@பலாபட்டறை
வசாபின்னா.. ஒரு சாப்பிடற அயிட்டம் ஜப்பான்ல காரமானது..
@ஜோ
தேவையில்லாம நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக்கூடாது..
@முகிலன்
அப்ப இதை எதிலேர்ந்து எடுத்தாஙக்ளோ அவஙக்ளைதான் முதல்ல்ல போடனூம்
@வெற்றி
புரியுது
@தண்டோரா
ஏன் இவ்வளவு காண்டு
@நாடோடி
:)
@பட்டர்ப்ளை சூர்யா
:)
@ராமலிங்கம்
நிச்சயம் நான் தமிழ் படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பதில்லை அது உங்களுக்கே தெரியும் ராமலிங்கம்
@அசோக்
நம்பிட்டேன்.
@கல்ப் டமிலன்
நோ.. கமெண்ட்ஸ்
@ரகுநாதன்
:)
@ஸ்டார்ஜான்
:)
@ஜெட்லி
பார்ப்போம்
@உண்மைதமிழன்
அண்ணே இதுஇங்கிலீஷ்படம் இல்லைன்ணே.. ப்ரெஞ்சு படம்..
@டமால் டுமில்
யாருங்க யாரை கேட்குறது.. நான் எங்கேயும் அய்யய்யோ சுடறாங்களேனு புலம்பல.. என்னை பொருத்த வரைக்கும் ப்ரெஞ்சு, அமெரிக்க படங்கள் சுடுவது.. யாருக்கும் தெரிவதில்லை..
@விட்டாலன் கவிதைகள்
நன்றி
@சங்கர்
நன்றி
@நாய்வால்
ரஜினிக்கு போட்டியா.. அவ்வ்ளவு கேனத்தனமாவா எழுதியிருக்கேன்
@ஸ்ரீ
:((
@சாம்ராஜ்யப்ரியன்
பாருங்க..29 ரிலீஸ்
வசாபி-ன்னா ந்ம்மூரு ப.மிளகாய் துவையல் மாதிரி.நல்ல கிளிப்பச்சை நிறம்... காரம் எக்கச்சக்கம்... சூசி (அதுவும் ஜப்பானின் உணவு - அரிசியும் டூனாவும் கலந்து செய்தது)மேல தடவி சாப்பிடலாம். கொஞ்சம் அதிகமாச்சினாஆ... அவ்வளவுதான், செத்தோம்! புகை மண்டும் காது, மூக்கில். அமோனியாவின் pungent ஸ்மெல் பரவும். BTW-வே தங்களின் விமர்சனம் நன்று.
ஓஹோ..
Post a Comment