விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்
காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...