கொத்து பரோட்டா –08/02/10
துருக்கியில் பதினேழு வயது பெண் ஒருத்தியை உயிருடன் புதைத்து கொன்றிருக்கின்றார்கள் அவர்கள் குடும்பத்தினர். குடும்ப மானத்தை, கெளரவத்தை காப்பதற்காகவாம். விஷயம் அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது நுரையீரல் எல்லாம் மண்ணாய் நிரம்பியிருந்ததை கண்டறிந்து அந்த பெண்ணினுடய தாத்தாவையும், தகப்பனையும் கைது செய்திருக்கிறார்கள். ஒன்பது பேருடன் பிறந்த அந்த பதினேழு வயது பெண் அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களூடன் பேசி பழகியதை அவளுடய தாத்தா கண்டித்தும் மீறி பேசியதால், தங்கள் குடும்ப மானம் போனதாகவும், அதனால் குடும்பத்தினர் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து அந்த பெண்ணை கொன்றதாகவும் தாத்தா கூலாய் சொல்கிறார். என்ன கொடுமை சார் இது?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோசம் 1 சென்ற வாரம் கொத்து பரோட்டாவில் இரண்டும் காதும் கேட்காத குறைபாடுள்ள ஆறு வயது சிறுவனுக்கு காது கேட்கும் கருவி பொறுத்துவதற்காக நிதி உதவி பெறுவதற்காக விடப்பட்டிருந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிங்கையிலிருந்து திரு ஜோசப் பால்ராஜின் மூலமாய் சுமார் இருபதாயிரம் ரூபாய் வசூலாகியிருக்கிறதாகவும்,மேலும் இன்னும் சிலர் ஓரிரு நாளில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் சொன்னார். சென்னையில் என் வங்கி கணக்கில் சுமார் 3000 வரை வசூலாகியிருக்கிறது. உதவியவர்களுக்கு என் நன்றி. இன்னும் சில ஆயிரங்களே தேவை என்கிற நிலையில், உங்களால் இயன்ற உதவி செய்து அச்சிறுவனுக்கு ஒலி கொடுப்போம். நன்றி ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கும், உதவியவர்களுக்கும், உதவ போகிறவர்களுக்கும்….நன்றி..நன்றி..நன்றி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோஷம் 2
பரிசலுடய புத்தகமும், என் புத்தகமும் வருகிற 14 ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்பை போடச் சொல்லி நெருங்கிய நண்பர்களூக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அனுப்பிய அடுத்த ஒரு மணிநேரத்தில் தமிழ் பதிவுலகில் இருக்கும் பெரும்பான்மையான பதிவுகளில் அந்த அறிவிப்பை வெளியிட்டதோடுமல்லாமல், போனிலும், மின்னஞ்சலிலும் போட்டாச்சு என்று தொடர்பு கொண்டு பாராட்டியவர்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரு விஷயம் இது உங்க விழா அல்ல.. எங்களுடயது என்று.. மனம் நெகிழ்ந்து போயிற்று.. அப்புறம் ஒரு விஷயம் பத்து செட் புத்தகம் முன்பதிவு ஆகியிருக்காம் நம்ம பப்ளிஷர் குகன் சொன்னாரு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சாப்பாட்டுக்கடை
திநகர் ராகவய்யா ரோடில் மவுத்புல் Flame Grill என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அருமையான க்ரில் சிக்கன், பிஷ் என்று பரிமாறுகிறார்கள். விலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், அவர்கள் தரும் க்ரில் சிக்கனகளின் ஜூஸியான சுவையே நம்மை அடிமையாக்கும். அதே போல அவர்கள் பரிமாறும் மண்பாண்ட பிரியாணி. சிம்பிளி சூப்பர்ப்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த வார குறும்படம்
வித்யாசமான இந்திய ஆங்கில குறும்படம். முக்கியமான பிரச்சனையை பற்றி பேசும் படம் கூட.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
செவிக்கினிமை
மீண்டும் விண்ணைதாண்டி வருவாயாவை பற்றி எழுதியாக வேண்டியதாகிவிட்டது. ஏற்கனவே ஹோசன்னாவும், ஓமனப்பெண்ணேவும் கலக்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஆரோமலே என்கிற பாடல் உயிரை உருக்குகிறது. அதிலும் பாடல் ஆரம்பத்தில் வரும் கிடாரும், திடீரென உருக்கும் குரலில் வரும் ஆரோமலே என்று பாட ஆரம்பிக்கும் குரலில் உள்ள காதலுக்கான ஏக்கமும், தவிப்பும், கோபமும்.. சிலிர்க்கிறது எனக்கு இந்த ட்ரைலரை பாருங்கள். நாளைக்கே படம் பார்க்க மாட்டோமா என்று இருக்கிறது கெளதம் & ரஹ்மான் காம்பினேஷன். வாழ்க பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ ஜோக்
ஒரு பெண் தன் குருவிடம் டெவிலுக்கும், ஹெல்லுக்கும், ஹெவனுக்குமான விளக்கத்தை விவரிக்குமாறு கேட்க, குரு: என் கால்களுக்கிடையே உள்ளது டெவில் என்று வைத்துக்கொள், உன் கால்களுக்கிடையில் இருப்பது ஹெல் என்று வைத்துக் கொள். டெவிலை, ஹெல்லுக்குள் நுழைத்தால் உணர்வாய் ஹெவனை என்றார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த வார தத்துவம்
”எப்படி செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் நிச்சயம் ஒரு நல்ல வேலையை தெரிவு செய்து கொள்ள முடியும். “ஏன் செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் தான் முதலாளி ஆக முடியும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Comments
வேலை அதிகமா பாஸ்? நடுவுல ”வேலை” என்ற வார்த்தை மிஸ் ஆகிறதே
தகவல்கள் கதம்பமாய்....
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கும் பரிசல் அவர்களுக்கும்....
விட்ஜட் பிரச்சனை இருப்பதால் உங்கள் அறிவிப்பை
போட முடியவில்லை......
அப்புறம் விண்ணைதாண்டி படம் தெலுங்கில் நாகர்ஜுன்
மகன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன்....
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு டைமில் ரிலீஸ் ஆகுதா??
வி. தா. வ - கதாநாயகனே, பிண்ணனியில் பேசும் ஸ்டைல் ஏற்கனவே "காக்க காக்க" வில் பார்த்தது..அதுவே, விண்ணை தாண்டி வருவாயா படத்தை பற்றி ஒரு பயம் தருகிறது...ஜெயிக்குமா?
http://naadodigal.wordpress.com
வழக்கம்போலவே.......கொத்து.........ம்ம்ம்....
எனக்கு நன்றி இல்லையா..?
சென்னையில எனக்குத் தெரிந்து ‘முழுக் கோழி’ மாதிரி ‘முழு ஆடு’ கிடைக்கும் இடம் ‘மவுத்ஃபுல்’ தான்னு நினைகிறேன். செம டேஸ்டா இருக்கும்
யாரப்பா அந்த புண்ணியவான்கள்?? கண்டிப்பா அவங்கள பாராட்டியே தீரனும் . என்ன ஒரு தைரியம் , என்ன ஒரு தைரியம்
புக்கிங் என்னைக்கு முடியுது கேபிள்?
புத்தக வெளியீட்டுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே.
புத்தக வெளியீட்டு விழாவை விட உங்கள் இயக்கத்தில் வரும் படம் வெளியாகும் விழாவைத்தான் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த நன்னாள் விரைவில் அமைய வாழ்த்துக்கள்.
தத்துவம் அருமை பாஸ்.
பையனுக்கு உதவுவது குறித்து தனிமடல் அனுப்பி இருக்கேன், முடிஞ்சா சாட்டில் வாங்க, இல்லன்னா நாளைக்கு போன் பண்றேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தங்கையின் திருமண வேலை இருப்பதால் புத்தகக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனது ஏமாற்றமே. வெயிலான் சாரும், முரளிகுமார் சாரும் வருகிறார்கள்.
பாத்துட்டேன் மெயில் அனுப்பிட்டேன்
@புலவன் புலிகேசி
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.
@ஷங்கர்
என்ன உள்குத்து>.??
@சுகுமார் சுவாமிநாதன்
சந்தோஷம்
@கார்க்கி
நடுவுல ஒரு வேஸ்ட்டா வந்திருச்சு
@மோகன்குமார்
நன்றி
@வெள்ளீநிலா
எவரோடபதிவுல?
@நாடோடிகள்
நம்பிக்கைத்தான்
@பேநாமூடி
நன்றி
@மாக்ஸோ
நீஙக் அந்த ஓட்டல் சேர்ந்த ஆளா..? இதோடரெண்டு மூனு தடவை பின்னூட்டமா இந்த ஓட்டலை பத்தி மட்டுமே சொல்லிட்டீங்க..:)
@அசோக்
நன்றி
@தென்னமெயில்லக்ஷ்மணன்
தலைவரே.. வருகிற ஞாயிறுதான் புக்ரிலீஸ்
@எறும்பு
நன்றி
@உண்மைத்தமிழன்
வழக்கமா வர்றவ்ங்களுக்கு எல்லாம் கிடையாது புது ஆளூக்குத்தான்
@சைவகொத்துபரோட்டா
நன்றி
@நாஞ்சில் பிரதாப்
:0
@தண்டோரா
ஓகே
@மயில்ராவணன்
எதுக்கு.. ஆமாம் தலைவரே அதை சொல்ல மறந்திட்டேன்
@ரோமியோ
என்ன ஒரு தைரியம்..??
@பரிசல்
12
@ஜோசப் பால்ராஜ்
நிச்சயம் அதுக்கான நாள் விரைவில் வரும்னு நினைக்கிறேன்
@அறிவிலி
மிக்க நன்றி
@ஸ்ரீராம்
நிச்சயம்
@ரவிகுமார்திருப்பூர்
பரவாயில்லை வேலையை பாருங்கள் உங்கள் தங்கையின் திருமணத்துக்கு வர பார்க்கிறேன்..
@தாராபுரத்தான்
அப்படியா.. சரி ப்ண்ணிடறேன்..:)
unga bank account detailsa shiva.george@gmail.com ku anupineengana etho ennala mudchantha hearing aid antha payanuku vanga help panren.
Varta
thala