அரசியல்
அஜித் நடிகர்கள் மிரட்டப்படுவதாய் பேசியதற்கும், ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ததையும் பார்த்து அப்படியாரும் மிரட்டக்கூடாது என்று சொல்லி மேடையில் கைதட்டு வாங்கிய நம் தலைவர், அடுத்த நாள் மதியமே ரஜினியும், அஜித்தும் தலைவர் வீட்டில் நேரில் போய் விளக்கம் கொடுத்துவிட்டு, ஆல்மோஸ்ட் காலில் விழாத குறையாய் பேசிவிட்டு வந்திருந்தாலும், பின்னாடியே ஜாக்குவார் தங்கத்தை விட்டு கல் வீசி கொல்ல பார்த்தார்கள் என்று மாலை ஆறு மணீக்கு அஜித்தின் மேல் புகார் கொடுக்கிறார் ஜாக்குவார். (இவர் எத்தனை பிரச்சனைகளை செய்திருக்கிறவர் என்று தெரியுமா.?) அடுத்த நாள் அதுக்கு ஏதும் ரியாக்ஷன் இல்லை என்றதும், பெண்டாட்டி பிள்ளைகளை அழவிட்டு போட்டோ கொடுத்து இன்னொரு புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பெப்ஸியை விட்டு ரஜினிக்கு கண்டனமும், அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் சங்கத்தின் மூலமாய் பிரஷர். அப்படி என்னய்யா சொல்லிட்டாரு அஜித். இஷ்டப்பட்டவங்களை கூப்பிட்டு வச்சி எந்த எழவை வேணுமின்னாலும் செஞ்சிக்கங்க, வேண்டாதவங்களை விட்டுருங்கன்னு தானே கேட்டாரு. அதைத்தானே வழிமொழிஞ்சாரு ரஜினி இதுல என்ன தப்பு.?. அந்த இம்சை எவ்வள்வு கஷ்டம்னு ரஜினிக்கும், கமலுக்கும் தெரியும். அவங்களே வேற வழியில்லாம, திமுக பிரதிநிதி போல தலைவர் எங்க போனாலும் பின்னாடி நிக்க வேண்டியதா போச்சுன்னு புலம்பிட்டிருகாங்களாம். இவ்வளவு பிரஷருக்கும் பின்னாடி இருக்கிற பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுற,ஆள் யாருன்னு உங்களுக்கெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோஷம்1
சென்ற வாரம் அறிவித்திருந்த சந்தோஷ விஷயமான சிறுவன் கதிருக்கான ஹியரிங் எய்டுக்கான பணம் வசூலாகி கடந்த 19/02/10 அன்று மாலை பொறுத்தியாகிவிட்டது. டாக்டர் அவனுக்கு பொறுத்திவிட்டு அவன் கண்ணை மூடச்சொல்லிவிட்டு, இடது காதுபுறம் சற்று தொலைவில் கையினால் சொடக்கு போட, தானாகவே அவனின் கண் விழிகள் ஒலி வந்த பக்கம் உருள, சிரித்தபடி கண் திறந்து சிரித்தபடி “கேக்குது” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அடுத்த நாள் பூராவும் ஒரே சந்தோஷமாய் நாள் முழுவதும் சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தானாம். இன்று அவனை பார்க்க போகும் போது டிவியின் சத்தத்தை 25ல் வைத்து போகோ பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன் நான் அவனை பார்க்க போகும் போது அதே போகோவை 75ல் வைத்துக் கொண்டு டிவியின் அருகில் சேர் போட்டு உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன். உதவிய அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி. நன்றி என்று கண்ணீர் மல்க கதிரின் தாயார் நன்றி கூறியது நெகிழ்ச்சியாய் இருந்தது. என் சார்பிலும் உதவிய அத்துனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோஷம் 2
போன வாரம் ஞாயிரன்று வெளியான என்னுடய “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகமும், பரிசலின் ”டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்” தொகுப்பு இரண்டும் ஆன் லைன் புக்கிங்கிங்கில் பெஸ்ட் செல்லர் பகுதியில் இருக்கிறதாம். இற்நூற்றியைம்பதுகும் மேற்பட்டபிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன என்று பதிப்பாளர் குகன் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆதரவும், விமர்ச்னங்களையும் உடனடியாய் கொடுத்த வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. ஆன்லைனின் புத்தகங்களை வாங்க பத்து சதவிகித கழிவுடன் வாங்கலாம். குரியர் செலவுகள் தனி.
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்.. வாங்க இங்கே க்ளீக்குங்கள்
டைரி குறிப்பும்.. காதல் மறுப்பும் வாங்க இங்கே க்ளிக்கவும்
சென்னையில் நேரில் வாங்க
Discovery Book palace, 6, Munusamy salai, west k.k.nagar, ch
New Book lands, North usman Road, t.nagar, ch-17
American book shop, opp to L.I.C, next to Hikkinbothoms..ch.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சாப்பாட்டுக்கடை
வடபழனியில் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு எதிரே ஒரு புதிய சிக்கன் பர்கர் ஷாப் திறந்திருக்கிறார்கள். கே.எஃப்.சி போல இது பி.எஃப்.சி. கம்பேரிட்டிவாய் பார்த்தால் இருக்கும் எல்லா ஃபிரைட் சிக்கன் பர்கர் கடைகளில் இது கொஞசம் சல்லீசாக இருக்கிறது. சுவைக்கு ஏதும் குறைவில்லாமல். நிச்சயம் ஒரு நடை போய்விட்டு வரலாம் ப்ஃரைட் சிக்கன் ரசிகர்கள். (இங்கேயும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள். நான் சண்டை போட்டு வாங்கினேன்.)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த கொத்து பரோட்டா ஸ்பெஷல் வீடியோ..
சூப்பரா இல்லை..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எண்டர் கவிதைகள்- 8
நாளை என்பது
அதள பாதாளமாய்
தெரிந்தாலும்
அட்லீஸ்ட்..
இன்று நடக்கும்
பாதையாவது
முட்களில்லாமலும்
குண்டு குழியில்லாமலும்
நன்றாக இருக்கட்டும்.
எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று மெயில், போன், மற்றும் நேரிலும் வந்து மிகவும் வருந்திய ரசிக கண்மணிகளுக்காக..:))) முக்கியமாய் பாஸ்டன் ஸ்ரீராமுக்காக..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த வார தகவல்
நாசாவில் விஞ்ஞானிகள் நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஏ ஜோக்
anxietyக்கும், panicக்குக்கு உள்ள வித்யாசம் என்ன?
Anxiety என்பது முதல் முறையாக முதல் ரவுண்ட் முடித்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு லுல்லா ரெடியாகவில்லை என்றால் ஏற்படுவது.
Panic என்பது இரண்டாவது முறையாய் முதல் முறையே லுல்லா எழும்ப மறுக்கும் போது ஏற்படுவது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு பெண் பச்சை குத்துபவனிடம் போய் தன்னுடய வலதுதொடையில் “Merry Christmas” என்று பச்சை குத்தச் சொன்னாள். பச்சைகுத்துபவன் அழகாய் மரம் எல்லாம் போட்டு வரைந்தான். அடுத்ததாய் ஒரு ஷாம்பெயின் பாட்டிலை வரையச் சொல்லி ஹாப்பி நியூ இயர் என்று வரைய சொல்ல, அவனும் வரைந்தான். பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில் பச்சை குத்துபவன் “மேடம் உங்களீடம் ஒன்று கேட்க வேண்டும். இதுவரை யாருமே குத்தாத வித்யாசமான இடத்தில் ஏன் இம்மாதிரி பச்சை குத்த சொன்னீர்கள் என்று கேட்டான் அதற்கு அவள் என் பாய் ப்ரெண்டு ரொம்ப புலம்புகிறான். கிருஸ்துமஸ்ஸுக்கும், ப்துவருடத்திற்கும் இடையே நல்லதாய் சாப்பிடுவதற்கு சரியாக ஏதும் இல்லை என்று புலம்புகிறான் அதற்க்காகத்தான் என்றாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
டிஸ்கி: திருஷ்டி பட்டு கிடக்கும் பரிசலுக்கு எழுந்தோட வாழ்த்துக்களும், புது கல்யாண பையன் அதிஷாவுக்கு திருமண வாழ்த்துக்களும் சொல்வோம்.
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Post a Comment
44 comments:
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தல..
அந்த பையன் நலம் பெற்றதில் மகிழ்ச்சி..:)
அஜித் விஷயத்தில் ..இவ்வளவு 'கீழ்த்தரமாகவா' போகவேண்டும் இந்த பெரிய மனிதர்கள்..எல்லாவற்றிலும் அரசியல்..ச்சே..
அஜித் மேட்டர் :-((
அஜித் மேட்டர் :-((
ஃபுல் என்பது
சொர்க்க போதையாய்
இருந்தாலும்
ஆரம்பிப்பதை
ஒரு 3அவுன்ஸிலிருந்து
செய்வோம்.
காயமில்லாமலும்
தள்ளாடாமலும்
வீடு செல்வதற்காக...!
BY
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
அரசி அங்கீகாரம் பெற்றது
காதல் என்பது
அதல பாதாளமாய்
இருந்தாலும்
செக்ஸாவது
நல்ல குண்டும்
குழியுமாய் இருக்கட்டும்..
BY
ராஜுவின் தொண்டர்
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
அரசி அங்கீகாரம் பெற்றது
தமிழ்மண பட்டையைக் காணேம்???
இந்த வார கொத்து பரோட்டா கலக்கல் வழக்கம் போல. சந்தோஷம் 1 ரொம்ப சந்தோஷம், சந்தோஷம் 2 டபுள் சந்தோஷம்.
கதிருக்கு காது கேட்பது பற்றி கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு அண்ணே.
தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளும் வழக்கம் நமக்கு ஒன்றும் புதிதல்லவே.
ஏ ஜோக் - ரொம்ப சுமார் ரகம்.
அன்பின் கேபிள்
கொத்து பரோட்டா நல்லாவே இருக்கு
திருஷ்டி பட்ட பரிசலுக்கு சீக்கிரமே குணமாக பிரார்த்தனைகள்
ஏ ஜோக்கெல்லாம் காரமே இல்ல - சப்புன்னு இருக்கு
சிறுவன் கதிருக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
கொத்து பரோட்டா வீடியோ சூப்பர் - ஏற்கனவே வேற யோரோ போட்டாங்களே - அதெப் போலத்தான் நாசா சரக்கும் - ரெபெடிஷன் வேணாமே
என்ன தல "எண்டர்ர்ர்ர் கவிதை" சைவமாயிருச்சி...???
அந்த சிறுவனுக்கு காது கேட்பது எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்..
எண்டர் கவிதை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு..எங்க இருந்து சுட்டீங்க :)
யூத்து, உரை நடை அருமை (நல்லா கவனிங்க - உரை நடை..)
ஜெஃப்ரி பாய்காட் எப்போதும் கர்ட்லி அம்புரோஸுக்கு ஒரே ஒரு ஷாட்தான் பேட்டிங்கில் வரும் என்பார். ஒரு நாள் அம்புரோஸ் பாய்காட்டை பாத்து கேட்டாராம், Geoff, did you see the other shot yesterday?? அதுக்கு பாய்காட் சொன்னாராம், I love you Curtly, but you still have only one shot.
அது போல, உங்க கதை மற்றும் other பதிவுகளின் மிகப் பெரிய ரசிகன் நான், ஆனால் கவிதை?? comments reserved.... :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
thala ......enter kavithai...innum nalla eluthi irukkalam
ரஜினி & அஜித் - காய்ச்ச மரம்
கதிர் - மிக்க சந்தோஷம்:))
பரோட்டா கேட்ச் - முதல்ல தோனிக்கு இந்த வீடியோவை ஃபார்வர்ட் பண்ணுங்க. இவரைத்தான் இந்தியாவுக்கு ஃபீல்டிங் கோச்சா சேர்க்கணும்
"நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்."
app side dish kku enna pannuvinga
சிறுவன் கதிருக்கு வாழ்த்துக்கள்.
அஜித் ... இதுவும் கடந்து போகும்....
அஜித்தை கலாய்த்து வந்த பல விஜய் ரசிக நண்பர்கள் அஜித்தின் தைரியத்தை பாராட்டுகிறார்கள்...
எல்லாம் நன்மைக்கே....
சூப்பர் பரோட்டா!
எல்லா டேஸ்ட்டும் இருக்கே! :)
அதுலயும்
//நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.//
என்னா ஒரு லொள்ளு! :))
ரசனையான பதிவு!
உடற்குறையுள்ள சிறுவனுக்கு உதவிய அந்த தகவல் கண்டு மகிழ்ந்தேன்...... உதவியவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
பரோட்டால எண்டர் கவிதைன்னு பாயாசம் ஊத்திட்டீங்க...:)
தலைவரே அந்த பரோட்டா கேட்ச்..எந்த ஊரு கடை...??
மைனஸ் ஓட்டு போட்ட டமில் சரணுக்கு நன்றி..:)
வாழ்த்துகள் கேபிள்.
தலைவரே அந்த பரோட்டா கேட்ச்..
வேளாங்கண்ணீ தானே?
A.Doss
தல!,அந்த ஒரு மைனஸ் வோட்டு போட்ட கம்முனாட்டிய பதிவர் சங்கத்துல போட்டு கொடு தல., நம்மளோட விளையாடுறதே இந்த கட்டதொரைக்கு வேலையா போச்சு!
வாழ்த்துகள் கேபிள்
விரைவில் நல்ல செய்தி சொல்ல வாழ்த்துகள் கேபிள்.
காத்திருக்கிறேன்.
Best seller வரிசையில் வந்ததுக்க வாழ்த்துக்கள் தல
வாழ்த்துகள்.
//ஆல்மோஸ்ட் காலில் விழாத குறையாய் பேசிவிட்டு வந்திருந்தாலும்//
*******
ரஜினியை பற்றி எது எழுதினாலும், அதில் “கேபிள் பிராண்ட்” குத்து இருப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்...
//ஆள் யாருன்னு உங்களுக்கெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன? //
கேடுகெட்ட ஜென்மங்கள்...
இருவருக்கும் வாழ்த்துக்கள்...
நடிகர் விஜயும்,கேபிளும்,கார்க்கியும்..
http://anbu-openheart.blogspot.com/2010/02/blog-post_20.html
கேபிள் சார்,
கொத்துபரோட்டா அருமை...
//நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும்.//
சைட் டிஷ்க்கு... அங்க பாட்டி வடை சுடுவாங்களாமே... அவங்ககிட்ட வாங்கிக்க வேண்டியதுதானா..!
-
ட்ரீமர்
அந்த மாஸ்டருக்கு வேலை போயிடுச்சுன்னா ? நீ போகலாம் கேபிள்!!
ரெண்டு நாள் முன்னே இந்த வீடியோ பார்க்கக் கிடைச்சப்போ உங்களை தான் நினைச்சுக்கிட்டேன்.
எண்டர் கவிதை கொஞ்சம் சுமார். அடுத்த தபா கொஞ்சம் சூடு கூட்டுங்க தலைவா
இந்தவார தகவல் உட்பட அனைத்தும் சுவாரசிய சேதிகள்.
கவுஜைதான் நல்லாயில்லை.! :-)
பராட்டாக்கு ஏத்த பாராட்டா.. என்னா.. டெக்னிக்கு… நம்மாளுகள் இதுகளில பக்காவா முன்னேறுறாங்க…
வாழ்த்துக்கள் கேபிள் சார்..
//கவுஜைதான் நல்லாயில்லை.! :-)//
இதத்தானே நானும் ஒவ்வொரு முறையும் சொல்றேன் :)
ஒவ்வொரு உரைநடைக்கும் ஒவ்வொருத்தர் சொல்றாங்க, நான் ஒவ்வொரு முறையும் சொல்றேன்.. :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
கதை எத்தனை வேணா எழுதுங்க உரைநடை வேண்டாம்...
எவ்வளவு மோசமாக அரசியல் பண்ண முடியும் என்பதற்கு அஜித் மேட்டர் ஒரு உதாரணம். ரஜினி இல்லாமல் இங்கே (கலைத்துறை 'சங்கங்கள்') யாருமே பொழப்ப ஓட்ட முடியாது. திட்டுவதற்கும் அவர் தேவை...இவர்கள் சைக்கிள் ஒட்டவும் இவர் தேவை...இப்ப, அஜித்தும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார்.
வெளங்கிடும் !!!!!
//"நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்."//
போம்போது டிக்கட் போட்டு என்னை கூட்டிட்டு போங்க தல. சரக்கு நான் எடுத்துட்டு வரேன். சைட் டிஷ்ஷுக்கு.. நிச்சயமா அங்க ஒரு நாயர் டீக்கடை வெச்சிருப்பாரு. வடை வாங்கிக்கலாம்.
இந்த வார கொத்து பரோட்டா
நல்லா இருக்கு
சங்கர்....
இந்த கவித பொழச்சி போகட்டுமே... விட்டுடுங்களேன்!!! பாருங்க.. ஸ்ரீராம் அழுவறாரு??!!
nalla iruku; Anna daily kothu parotta eluthinal nalla irukum !
Post a Comment