தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள். ராமாநாயுடுவின் பேரனும், வெங்கடேஷின் அண்ணன் மகனுமான ராணாவின் அறிமுகப்படம். படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம். இவ்வளவு எதிர்பார்ப்பு போதும் இந்த படத்திற்கு.
டாலர் ட்ரீம்ஸ் படத்தின் மூலமாய் அறிமுகமாகி, ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ் என்று தொடர் மூன்று வெற்றிகளுக்கு பிறகு என்னை எதிர்பார்ப்புக்குள்ளாக்கிய இயக்குனர். மிக அழகாய் கதையை நம் முன்னே பரபரபில்லாமல் விரித்து வைத்து இவரின் கதை சொல்லும் பாணிக்காகவே படம் பார்க்கலாம். ஆனந்த் ஆகட்டும், கோதாவரியில் அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோ பாலிடிக்சில் சேர விழையும் கேரக்டர் ஆகட்டும். சேகர் கம்மூலாவுக்கு இந்திய அரசியல் அமைப்பின் பேரில் ஏதோ விதத்தில் அதை சரி செய்ய யூத்துகளால்தான் முடியும் என்ற ஆணித்தரமான முடிவில் இதுவரை ஆங்காங்ககே சொல்லிவந்த கருத்தை முழு படமாய் வெளிக் கொணர முயன்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆந்திர சி.எம் ஒரு விபத்தில் கோமாவில் இருக்க, அவரின் ஒரே மகன் அமெரிக்காவிலிருந்து வருகிறார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும், அவரின் குடும்பத்தினர்களால் ஆக்கிரமிக்கபட்டுள்ள அவரது அரசியல் சாம்ராஜ்யத்தை அவர்கள் தங்கள் கையில் எடுத்தாள ப்ளான் செய்யும் போது, சிஎம் கண்விழித்து தன் கடைசி ஆசை தன் மகன் சி.எம் ஆவதுதான் என்று சொல்லிவிட்டு சாக, மிகவும் யோசனை செய்து சி.எம் ஆக முடிவெடுக்கிறார் அவரது மகன். அதற்கு அவரின் பெரியப்பா மகனை சி.எம் ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்க, தன் தந்தை அநியாயமாய் ஊழல் செய்து கொள்ளையடித்த 20லட்சக் கோடியை கொண்டு வித்யாசமான முறையில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார். அவர் சி.எம் ஆனாரா? அவரது எதிரிக்ள் என்ன என்ன பிரச்சனைகளை அவர்களுக்கு கொடுட்தார்கள் எப்படி அதையெல்லாம் சி.எம்.வென்றார் என்பதுதான் கதை.
சி.எம் மகனாய் ராணா.. கனகச்சிதமான அறிமுகம். அறிமுகபடத்திற்கு சரியான பில்டப்போடு வெளிவந்திருக்கிறார். பல இடங்களீல் மெச்சூரிட்டியும், சில இடங்களில் சப்மிஸிவாகவும் நடித்து உள்ளார். இவரின் உயரம் பல ஹீரோயின்களுக்கு கஷ்டமாக இருக்கப் போகிறது.
இதுவரை பெரிதாய் பெரிய நடிகர்களை நம்பாமல் புதுமுகங்களையும், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹிட்டடித்துவந்த கம்மூலா, இந்த படத்தில் மூத்த நடிகரான கோட்டா சீனிவாசராவ், சுகாசினி நம்பியிருபது தவிர்க்க முடியாதது. கோட்டா தன் கோட்டாவை சரியாக பயன்படுத்தி மிளிர்கிறார். ராணாவின் பி.ஏ போல் வரும் ஹர்ஷவர்தன் ஆப்ட்.
இரண்டு கதாநாயகிகள் ரிச்சா, பிரியா ஆனந்த், ரிச்சாவுக்குகான கேரக்டர் மனதில் நிற்கும் அளவிற்கு பிரியா ஆனந்துக்கு இல்லை. தனிகலபரணி, கொல்லப்புடி சீனிவாசராவ் என்று பல மனதில் நிற்கும் கேரக்டர்கள்.
படத்தின் முக்கிய தூண் இசையமைப்பாளர் மைக்கேல் ஜே.மேயர், பிண்ணனி இசையில் ஆர்ப்பாட்டமேயில்லாமல் மிரட்டியிருக்கிறார். பாடல் பெரும்பாலும் காட்சிகளூடே இண்டர்லூட் ஆகியிருப்பதால் ஆடியோவில் கேட்க விருப்பம் மேலிடுகிறது. விஜயகுமாரின் ஒளிப்பதிவு ஒகே.
கதை, திரைக்கதை, இயக்கம் சேகர் கம்மூலா, இம்மாதிரியான அரசியல் படஙக்ள் எல்லாம் ஆந்திர சினிமாவிற்கு சாதாரணம், ஏகப்பட்டபடங்கள் வந்திருந்தாலும் அதை காட்சி படுத்தும்போது இது நாள் வரை இருந்த முறையிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட காட்சிகளில் கவனம் செலுத்தி யிருப்பதை பாராட்ட வேண்டும். சிகரட் பிடிக்கும் முதலமைச்சர், சாவின் விளிம்பில் காப்பாற்றப்படும் அலி, எதிர் வேலை பார்க்கும் பெரியப்பா, அவரின் மகன், மாமா, என்று நம் தமிழ் நாட்டு அரசியலை ஞாபகப்படும் காட்சிகளும் உண்டு. ஆரம்ப காட்சியிலிருந்து இடைவேளை வரை மிக அழகாய் விரியும் கதை, அதற்குபிறகு மிகவும் அலைபாய்ந்து தொய்வடைந்து இலக்கில்லாம் உட்கார்ந்துவிடுகிறது. தன் பதவியை காப்பாற்றுவதற்காக ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரின் இரண்டாவது மனைவியின் பெண்ணை காதலிப்பதாய் ஏமாற்றுவது பெரிய கேரக்டர் அசாசினேஷன் விஷயஙக்ள். அந்த காட்சிகளில் இருக்கும் ரொமான்ச் அருமை. படம் பார்க்கும்போது, முதல்வன், சிவாஜி போன்ற படங்களின் ஞாபகம் வருவதை தடுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாமோ சேகர்.?
LEADER- A FIM TO WATCH FOR SEKAR KAMMULA..
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Post a Comment
21 comments:
அப்படியா சரி சரி..
மை நேம் இஸ் கான்,ஸ்ட்ரைகர் பார்த்தாச்சா..சீக்கிரம் விமர்சனம் எழுதுங்கள்..
ஹையா..மீ தி பர்ஸ்ட் :))
அடுத்த படம் பார்க்கும்போதாவது கூப்பிடுங்க தல..:))
நல்லா ஆந்திர சாப்பாடு போலவே, காரமா இருக்கும் போல இந்த படம்.
/அப்படியா சரி சரி..
மை நேம் இஸ் கான்,ஸ்ட்ரைகர் பார்த்தாச்சா..சீக்கிரம் விமர்சனம் எழுதுங்கள்.//
நம்ம பக்கம் ஒழுங்கா வர்றதில்லைன்னு இதுலேர்ந்து தெரியுது.. வெற்றி
சென்னைக்கு இந்த படம் வந்துடுச்சா? இல்ல ஆந்திரா பார்டரில் போய் பாத்தீங்களா :))
இந்த வாரமாவது ஒழுங்கா கொத்து பரோட்டா திங்கள் அன்று எழுதுங்க; போன வாரம் டிமிக்கி குடுதுடீங்க
//நம்ம பக்கம் ஒழுங்கா வர்றதில்லைன்னு இதுலேர்ந்து தெரியுது.. வெற்றி//
விடுங்க படிக்கிற பிள்ளை.. நம்மள மாதிரி கிறுக்கு பிடிச்சு தெரியாம ஒழுங்கா படிக்கட்டும்
சாரி பாஸ்..கல்லூரியில் staffக்கு பயந்து கொண்டே அந்த ரிவியு வாசித்ததால் மனதில் நிறுத்த முடியவில்லை..மறந்து விட்டேன்..ஸ்ட்ரைகர் விமர்சனம் சீக்கிரம் எழுதுங்க.. :))
தெலுகுவில் மகேஷ் பாபு என ஒருத்தர் இருந்தாரே... ஏமி ஆய் போயிந்தி?
தல, இந்த படம் நாலு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச புராஜக்ட், ஆனா அந்திரா சி.எம், அவரது திடீர் சாவு, அவரது மகன்களின் அரசியல் பிரவேஷம், 20 லட்சம் சொத்து எல்லாமே YSR வாழ்க்கையிலும் நடந்தது. இப்ப பார்த்தா இது ஒருமாதிரியான சுயசரிதை கணக்கா இருக்கு. இல்லையா?
தல நாந்தான் முரளி, நண்பனோட மெஷின்ல இருந்து பின்னூட்டியதில் அவனது மெயில் முகவரி வந்துட்டுது. :-) சாரி
//விடுங்க படிக்கிற பிள்ளை.. நம்மள மாதிரி கிறுக்கு பிடிச்சு தெரியாம ஒழுங்கா படிக்கட்டும்//
படிச்சு கிறுக்கு பிடிச்சுட கூடாதுன்னு தான் அப்பப்போ ப்ளாக் பக்கம் வரேன் :)
தல நாந்தான் முரளி, நண்பனோட மெஷின்ல இருந்து பின்னூட்டியதில் அவனது மெயில் முகவரி வந்துட்டுது. :-) சாரி
ஏன் அரசியல் படம் எடுத்தா மட்டும் பப்பு வேக மாட்டேங்குது.
அடுத்த படம் பெரிய ஹிட் ஆகும்.லாஜிக் இருக்கு.பின்னால் சொல்கிறேன்.
கேபிள் அண்ணே!கொத்து பரோட்டா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுண்ணே :(
ஹீரோ ஏதோ ஹிந்திகாரர்னு நினைச்சேன்...
ரைட்.....
>>சிஎம் கண்விழித்து தன் கடைசி ஆசை தன் மகன் சி.எம் ஆவதுதான் என்று சொல்லிவிட்டு சாக, மிகவும் யோசனை செய்து சி.எம் ஆக முடிவெடுக்கிறார்
- Seriously...You liked this crap and stupid story line and the screen play?!
@shankar
நீங்க மனவாடா..?
@சைவகொத்துபரோட்டா
நன்றி
@மோகன் குமார்
காஸினோ
@மோகன் குமார்
எழுதிட்டிருக்கேன்
@வெற்றி
ஓகே
@பப்பு
அவரு படம் இந்த வருஷம் பாதில தான் வருது..
@சுஷில்
செகண்ட் ஆப் சொதப்பியிருச்சு
@இரும்புத்திரை
நம்ம ஊர்ல இருக்கிற சுதந்திரம்
@பொன்.பாரதிராஜா
போட்டு விடுகிறேன்
@ஜெட்லி
:)
@ராஜ் சந்திரா
என்னை பொருத்த வரை முதல்பாதி ஓகே தலைவரே..
'இஷ்கியா' விமர்சனம் போடலையா boss?
உங்கள் திரைப்பட விமர்சனம் படித்தேன்.புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Post a Comment