செய்தி சேனல்களின் முக்கியத்துவத்தை நாம் தேர்தல் நேரத்தில் பார்த்திருக்க முடியும், அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு, அது சுனாமியோ, பூகம்பமோ, தீவிரவாதிகள் முற்றுகையோ, நம் வாழ்க்கையின் இணை பிரிக்க முடியாத ஒரு அம்சமாக ஆகிவிட்ட ஒரு விஷயம் செய்தி சேனல்கள்.
ஒரு சேனலை வைத்து ஆட்சியையே பிடித்த விஷயம் நம் எல்லோருக்கு தெரிந்த விஷயம்தானே.
இப்படி மீடியாக்கள் தங்கள் கையில் வைத்துள்ள பல அரசியல் கட்சிகள் சொல்லும் செய்திகளில் எவ்வளவு தூரம் உண்மையிருக்க முடியும்? அவ்வளவு சேனல்களை பார்க்கும் பார்வையாள்ர்கள் குழம்பி போவது நிதர்சனம் தானே? இது தான் ரான் படத்தின் கதை.
இந்தியா 24X7 என்கிற சேனலை நடத்தும் அமிதாபுக்கு தன் சேனலில் வரும் செய்திகள் எப்போதும் உண்மைக்கு மாறாக இருக்கக் கூடாது என்று உறுதியாய் இருப்பவர். அவரது அமெரிக்க ரிட்டர்ன் மகன் சுதீப்புக்குகோ, நியூஸ் சேனல் என்பது இன்னொரு வியாபாரம் அவ்வளவுதான். அமிதாபினுடய தொழிலதிபர் மாப்பிள்ளை ரஜத் கபூர் ஒரு சந்தர்பவாத ஆசாமி. அமிதாபினுடய சேனலிலிருந்து வெளியேறி போட்டி சேனல் ஆரம்பித்த ஹெட்லைன் 24 என்கிற சேனலின் காரணமாய் டி.ஆர்.பி இறங்கி வெளிறி போயிருக்கிற நேரத்தில், அமிதாபின் சேனலில் உள்கையாய் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இங்கு வரும் ஸ்கூப் நியூஸையெல்லாம் எதிரி சேனல் ஒளிபரப்ப, மாப்பிள்ளையும், மச்சானுமாய் சேர்ந்து எதிர்கட்சி தலைவர் பரேஷ் ராவலுக்கு ஆதரவாய் ஒரு ஸ்கூப்பை உருவாக்கி ஆட்சியையே கலைத்து அவரை பிரதமராக்க முயற்சி செய்கிறார்கள். அமிதாபின் நேர்மையை பார்த்து அவரையே ரோல் மாடலாய் வைத்து அவரின் சேனலிலேயே வேலைக்கு சேரும் ரிதேஸ் தேஷ்முக், அவரது லிவிங் டூ கெதர் காதலி குல்பனாங்.
ரிதேஷுக்கு ஒரு கட்டத்தில் இவர்களது சதிவேலை தெரிந்து அதை உடைக்க தனியாளாய் செய்தி சேகரித்து அதை இண்டியா24X7 சேனலில் ஒளிபரப்ப முயற்சி செய்ய, அது முடியாமல் போக, ஆட்சியை கைபற்றப் போகும் நேரம் நெருங்க. விஷயத்தை அமிதாபுக்கு தெரிய வர க்ளைமாக்ஸ்.
அமிதாப் ஒரு சேனலின் தலைவராய் வாழ்ந்திருக்கிறார். அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் வாய்ஸ் மாடுலேஷனும், கண் பார்வையினாலேயே ஒரு தோற்ற உணர்வையும், அடிபட்ட பார்வையினால் வெட்கி தலைகுனியும் மன்னிப்பும் சூப்ப்ர். வழக்கமான ஹைபர் டென்ஷனான, ரெஸ்ட்லெஸ்ஸான, இம்பல்சிவ் அமெரிக்க ரிட்டன் பையன் சுதிஷ். அவரின் காதலியாய் நீது சந்திரா, பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது உறையும் கண்கள்..
ரிதேஷுக்கு நல்ல கேரக்டர் அதை உணர்ந்திருக்கிறார். அவரது காதலியாய் வரும் குல்பனாங்.. ம்ஹும்… டிபிக்கல் அரசியல் வாதி பரேஷ் ராவல். ரொம்ப காலத்திற்கு பிறகு ஆர்.ஜி.வியின் படத்தில் நச், கிரியேட்டிவ் ஹெட்டாய் வரும் ராஜ்பால் யாதவ், அக்கா வீட்டுக்காரர் ரஜத்கபூர், ஆபீஸில் டபுள் கேம் விளையாடும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்று எல்லோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து ந்டித்திருக்க்கிறார்கள்.
அமித்ராயின் ஒளிப்பதிவு அருமை. வித்யாசமான கோணங்கள், சிங்கிள் ஷாட்கள் என்று கலக்கியெடுத்திருக்கிறார். படத்துக்கு மிகப் பெரிய பலம் வசனங்கள். சில இடங்களில் வள வள என்றிருந்தாலும் படு ஷார்ப்.
வழக்கமான ராம் கோபால் வர்மாவின் படங்களில் வரும் க்ரைம் இல்லை. ஆனாலும் நம்மை படம் முழுக்க ஆணி அடித்தது போல உட்கார வைக்கிறார். அருமையான, வித்யாசமான கேமரா கோணங்கள், மற்றும் கேரக்டர்கள், கேரக்டர்களின் மூலம் திரைக்கதையை உந்தித்தள்ளும் லாவகம் எல்லாம் இவரின் பலம். இவரின் எல்லா படங்களிலும் வரும் கேரக்டர்கள் எல்லோரும் ஒவ்வொரு கேரிகேச்சர்களாய் வலம் வருவது இவரது சிறப்பு.
RANN – A Must Watch For RGV Fans
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி..
Post a Comment
23 comments:
good review. thinking of watching this movie, now for sure wll watch it. thanks Sankar
பார்க்கணும்.
RGV rocks....
பார்த்துருவோம்
நல்ல இருக்கு review கண்டிப்பா பார்க்கணும்
Ishqiya?
நல்ல விமர்சனம். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் வாய்ஸ் மாடுலேஷனும், கண் பார்வையினாலேயே ஒரு தோற்ற உணர்வையும், அடிபட்ட பார்வையினால் வெட்கி தலைகுனியும் மன்னிப்பும் சூப்ப்ர்.//
அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆச்சே சும்மாவா?
பார்த்தாச்சு..
தலைவா.. ISHQIA கண்டிப்பா பாருங்க.. நீங்க பார்க்காம விட்டுருந்தீங்கனா.. கதை என்னமோ சாதாரண One Line தான்.. ஆனா சொல்லிய விதம் சூப்பர்.. நடிப்பு, Cinematography, Music etc.. Wonderful.
தல Road To Sangam படம் பத்தி பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. விரைவில் எதிர்பார்க்கிறேன்.
Review superb aa irukku..
so parthidalam Shankar..
இந்திப் படத்துக்கெல்லாம் நல்ல மாதிரிதான் தல விமர்சனம் எழுதுறீங்க..
டக்கீலாவுக்கு வாழ்த்துக்கள்.
/இந்திப் படத்துக்கெல்லாம் நல்ல மாதிரிதான் தல விமர்சனம் எழுதுறீங்க..
டக்கீலாவுக்கு வாழ்த்துக்கள்.
//
தலைவரே.. நான் நல்லாருக்கிற படங்களை பற்றி மட்டும் தான் மற்ற மொழி படங்களுக்குஎழுதுகிறேன். தமிழ் படம் எல்லாவற்றையும் எழுதுகிறேன்.
கேபிள் சஙக்ர்
”மூன்றாவது கண்” இந்த தலைப்பில் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கிறது.புரொடியூசர் இருந்தால் சொல்லுங்கள்!!
தொடரட்டும் உங்கள் சேவை...
"Moral of the Story" - பத்தி ஒண்ணுமே சொல்லலியே....
இருந்தாலும், படம் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க.....
அப்புறம், ஒட்டு மொத்த பதிவுலமே "ஜக்குபாய்" தமிழ் படத்தை புறக்கணிக்கறதை பார்த்தா ஏதோ ஒரு உள்குத்து இருக்கறா மாதிரி தெரியுதே!
You too Cableaar??
ASAL - ticket reserve panniyacha...???/
Expecting your genuine review tomorrow itself..
thanks in advance...
//மீடியாக்கள் தங்கள் கையில் வைத்துள்ள பல அரசியல் கட்சிகள் சொல்லும் செய்திகளில் எவ்வளவு தூரம் உண்மையிருக்க முடியும்? அவ்வளவு சேனல்களை பார்க்கும் பார்வையாள்ர்கள் குழம்பி போவது நிதர்சனம் தானே?//
மக்கள் குழம்புவாங்களா!!!
RGV - The name is enough. nice review but இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் உங்ககிட்டயிருந்து.
விமர்சனம் படித்து,படம் பார்க்க “பாரடைஸு”க்கு விரைகிறேன்.
அமிதாப் ஐ இந்த படத்தில் பாராட்டினால் நாம் அவரை கேலி செய்வது போல் ஆகும் , அவருக்கு இதெல்லாம் சும்மா ரஸ்க் சாப்டுற மாதிரி. நல்ல நயமான வெளிப்பாடு. படத்தில் கன்னட அக்டோர் சுதீஷ் அவருடைய பழைய நடிப்புகளை எல்லாம் தூக்கி சாப்டிருக்கார், மொத்த படத்தின் தூணாக கதை நகர்த்தியிருக்கிறார் என்பது மறுக்கவே முடியாது. அவருக்கு குரல் கொடுத்தவரும் நன்றாக தன் பணியை தொய்வின்றி செய்திருக்கிறார்
இந்த வருடத்தின் முதல் பாலிவுட் வெற்றிப் படம் , பாக்கி 7உம தொபுக்கடீர்
கச்சிதமான விமர்சனம் பாத்துடுவோம்.
கேபிள் ஜி... படம் பேரு ரான் இல்ல... ரண்.. அப்படின்னா ”ரணபூமி” (Battle Field)-ன்னு அர்த்தம்.
அட்டகாசமான திரைப்பார்வைக்கு நன்றி
சுந்தர்
ருவாண்டா
உங்கள் வார்த்தைகளில்,கதையே அருமையாக இருக்கிறது,ஷங்கர்.
Post a Comment