Joyfull சிங்கப்பூர்-5
ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை. எம்.ஆர்.டியில் போகலாமா அல்லது பஸ்சில் போகலாமா என்று யோசித்தபடியே கடைசியில் டாக்ஸியில் போகலாம் என்று வெயிட் செய்ய ஆரம்பித்து, சுமார் இரண்டு மணி நேரம் நின்றதுதான் மிச்சம். நின்ற நேரத்தில் டயர்ட் ஆகியதால் இரண்டு பாட்டில் ”சாரு” ஒயினை வாங்கிக் கொண்டு ஒரு வழியாய் ரூமுக்கு போய் சேர்ந்தோம். அதற்கு பிறகு தூங்கும் போது மணி 2. அடுத்த நாள் காலையில் ஜோசப் மதியமே லஞ்சுக்கு லிட்டில் இந்தியா வருவதாய் சொல்லிவிட்டார். மாற்று உடைக்காக பிரபாவீட்டிற்கு கிளம்பினேன். சண்டெக்கிலிருந்து 857 என்கிற பஸ்ஸில் ஏறி கடைசி நிறுத்தமான யூஷுனில் இறங்கி, அங்கிருந்து 804 பிடித்து இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறஙகுமுன் பிரபா பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தார். பக்கத்தில் ரோட்டை தோண்டி ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவை சுற்றி ஒரு வலையம் வைத்துவிட்டு மண்ணை தோண்டி எடுத்து முடிந்தவரை கொஞ்சம் கூட சிந்தாமல், அப்படியே அருகிலிருந்த லாரியில் போட்டார்கள். பக்கத்திலேயே இரண்டு பேர் அப்படியும் கீழே சிந்திய ம்ண்ணை பெருக்கி கொண்டிருந்தார்கள். காலை டிபனை அருகிலிருந்த இந்தி...