இரவு சுமார் 11.45 இருக்கும் நானும் “அண்ணே” நண்பரும், படம் பார்த்துவிட்டு டிநகர் பஸ்ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ் குவாலிஸ் வேன் வந்து நிற்க, சரி இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறோமே? எங்களை துரத்துவதற்கு முன் கிளம்புவோம் என்று நினைத்த போது, வேனிலிருந்து வாட்டர் பாக்கட் மூட்டைகள், வாட்டர் கேன்கள் எல்லாம் அருகில் இருந்த கடைக்கு சப்ளையானது அதை இறக்கியவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். போலீஸ் வேன் எப்போது லோட் அடிக்கும் வேன் ஆனது? என்று வேன் போனதும் விசாரித்த போது “அவங்கதாங்க இந்த ஏரியாவுல இருக்கிற எல்லா கடைக்கும் தண்ணி பாக்கெட், வாட்டர் கேன் எல்லாம் சப்ளையர்ங்க. பெரிய ஆபீசர் ஒருத்தர் சொந்தமா ப்ளாண்ட் வச்சிருக்காராம் அதனால. வேற இடத்தில வாங்கினா பிரசச்னை. ஆனா ரேட்டெல்லாம் கரெக்டாத்தான் போடறாங்க” என்றார். வாழ்க ஜனநாயகம்.
#################################################################
தமிழ் சினிமாவை காப்பாற்ற யாருக்கும் வீடு, நிலம் எல்லாம் கொடுத்து தூக்கி நிறுத்த தேவையேயில்லை. டிக்கெட் விலையை அரசு நிர்ணையித்த விலையில் கொடுத்து, பார்வையாளர்களை ஏதோ அடு மாடு என்ற நிலையில் வைத்து ஒரே நாளில் தியேட்டர் கொள்ளளவை விட அதிக பேரை 30 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய் வரை ஏற்றி, ஏசியும் போடாமல், ஏன் என்று கேட்டால் இஷடமிருந்தா பார் இல்லாவிட்டால் வெளியே போ என்று மிரட்டும் காரியத்தை இவர்கள் கைவிட்டாலே நிச்சயம் தமிழ் சினிமா வாழும். திருச்சியில் எந்த ஒரு பெரிய படத்துக்கும் குறைந்த பட்சம் 150-200 ரூபாய் இல்லாமல் படம் பார்க்க முடியாது. ஏன் சிறிய படமான தமிழ் படம் ரிலீசான நாள் அன்று 50ரூபாய்க்கு விற்ற டிக்கெட்டுகள், ஹிட் என்றானதும், 80 ரூபாய் ஆகிவிட்டது. ஞாயமாய் பார்த்தால் அரசு நிர்ணையித்த விலை சென்னைக்கே ஒரு சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டருக்கு அதிகப்படியான டிக்கெட்டின் விலை ரூ.50தான். ஆனால் அதை சென்னையிலேயே சிட்டி தியேட்டரை தவிர மற்ற எந்த தியேட்டரிலும் கடை பிடிப்பதில்லை. சிட்டி தியேட்டர்கள் கூட தமிழ் படம் ரிலீஸ் செய்யும் போது குறைந்த பட்ச டிக்கெட்டே கொடுக்காமல், ப்ளாட்டாக 50 ரூபாய்க்கும் 70 ரூபாய்க்கும் விற்கிறார்கள். இப்படி தியேட்ட்ர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களுமே சினிமாவை அழித்து கொண்டிருக்கிற நிலையில் சட்டத்தை அமுல் படுத்தினால் தனக்கு விழா எடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று தலைவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறாரோ..?
##################################################################
சாப்பாட்டுக்கடை
பரோட்டா என்றாலே நம் எல்லோருக்கும் மதுரை, தேனி, பார்டர் கடை என்று தான் ஞாபகம் வரும்.
அப்படி ஒரு பிரபலமான கடை தான் ராஜாக்கிளி ஓட்டல். பரோட்டா, சால்னாவுக்கென்றே புகழ் பெற்றது. அவ்வளவு மெல்லீசான, வாயில் போட்டால் உருகி கரையும் பரோட்டாவை நான் தமிழகத்தில் சாப்பிட்டது கிடையாது. அவ்வளவு சுவை. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ்ஸ்டாண்டுக்கு வெளியே, இருக்கும் ஒரு சிறிய ஓட்டல் தான் ராஜாக்கிளி. அவ்வூருக்கு வரும் யாராக இருந்தாலும் ஒரு வேளை உணவு ராஜாக்கிளி பரோட்டாவாகத்தான் இருக்கும். நீங்கள் அவ்வூர் பக்கம் போகும் போது நிச்சயம் மிஸ் செய்யாதீர்கள்.
##################################################################
இந்த வார குறும்படம்
Validation.. ஒரு பதினைந்து நிமிடத்தில் ஒரு அழகான காதல் கதையை, ஒரு செய்தியோடு கொடுத்திருக்கிறார்கள். யார் தான் பாராட்டுக்கு மயங்காதவர். எல்லோரும் எங்கேயும் எப்போதும் யாராவது ஒருவரின் அங்கீகாரத்துக்கோ, பாராட்டுதலுக்கோ, நம் மனம் தேடிக் கொண்டுதானிருக்கிறது. அதையே வேலையாய் செய்யும் ஒருவன், மிகவும் புகழ் பெற்று விட, டிரைவிங் லைசென்ஸுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு அழகிய பெண்ணை சந்திக்கிறான். ஆனால் அவள் சிரிக்கவே மற்ந்தவள். அவளின் மேல் காதல் கொண்டு மீண்டும், மீண்டும் அவளை சிரிக்க வைக்க முயன்று தோற்றுப்போய், இவன் நொந்து, இருந்த வேலை போய் திரிய, மீண்டும் அதிலிருந்து மீண்டு வரு போது அவன் காதலியை சந்திக்கிறான். முடிவு என்ன? படம் கொஞ்சம் நீளமானாலும் நிச்சயம் பாருங்க.16 நிமிஷம்தான். ஒரு அழகான மனதை கொள்ளை கொள்ளும் காதல் கதை உங்களுக்காக.. லிங்க் கொடுத்து என் ரசனை மேல் நம்பிக்கை வைத்த பதிவர் செந்திலுக்கு நன்றி.
##################################################################
இந்த வார காமெடி
போனவாரம் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியவர், இந்த வாரம் குழந்தை கிள்ளியதையும் பொருட்படுத்தாமல் “போதா.. வெண்நெய்” என்று நடிக்காவிட்டால் ரேஸ் கார் ஓட்ட போய்விடுவேன் என்று சொல்லிவிட்டதால், வேறு வழியில்லாமல், விழாவில் நடந்தது குழந்தை கன்னத்தில் வைக்கும் கருப்பு திருஷ்டி பொட்டு என்றும், நாம் கலை குடும்பத்தினர் எல்லாம் எலலவற்றையும் மறந்து அறிக்கை விடாமல், ஏற்கனவே விட்டதை மறந்து ஒன்றாய் வேலை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை போன வாரமே ஏதும் செய்யாமல் விட்டிருந்தால் இப்படி கேவலப் பட்டிருக்க வேண்டாம். வேற வழி பேரப் புள்ள படத்துக்கு கால்ஷீட் வாங்கியிருக்கிற நேரத்துல படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்திருச்சுன்னா.. பொருளாதாரம் முக்கியமில்லையா..? இவ்விஷயத்தில் தங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் தங்கள் கருத்துக்களுக்காக ஆணித்தரமாய் நின்ற அஜித், ரஜினி இருவரையும் பாராட்டுவோம்.
###################################################################
இந்த வார தத்துவம்
அதிர்ஷ்டத்துக்கு ஒரு பழக்கம் யார் தன்னை மதிக்காம, தன்னை நம்பாம இருக்கிறானோ அவனிடம் தான் போய் உதவும். அதானால அதிர்ஷத்தை நம்ப பக்கம் திருப்பணுமின்னா பெரிய மேட்டரே இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பாம, உங்களை நம்புங்க. நீங்க் பாட்டுக்கு உங்க வேலைகளை பாருங்க அதிர்ஷடம் உங்களை தேடிவரும்.
##################################################################
ஏ ஜோக்
ஒரு ஆஸ்ப்பிட்டலின் டொனேஷன் பிரிவில் ஒரு ஆணும், பெண்ணும் க்யூவில் நின்றிருந்தார்கள், ஆணிடம் பெண், நான் ப்ளட் டொனேட் செய்ய வந்திருக்கிறேன் ஒரு முறைக்கு 500 ரூபாய் தருகிறார்களாம். நீ ? என்று கேட்க, அதற்கு அவன் “தான் விந்தணு கொடுக்க வந்திருப்பதாகவும் அதற்கு 1500 தருகிறார்கள் என்றான். சில மாதங்கள் கழித்து அதே டொனேஷன் செண்டரில் ஆண் அந்த பெண்ணை பார்க்க ‘என்ன பிளட் டொனேஷனா.? “ என்று கேட்க, அதற்கு பெண் வாயை திறக்காமல் ”ம்ஹும்..ம்ஹும்” என்றாள்
##################################################################
கேபிள் சங்கர்
Post a Comment
57 comments:
me the first!!
கொத்து பரோட்டா சுவை குறைவு!!!
ஏ ஜோக் புரியல??
//ஏ ஜோக்///
அடிப் பாவி இப்படியா????
amazing movie sir. thank you so much
//இரவு சுமார் 11.45 இருக்கும் நானும் என் நண்பரும் //
கேர்ள் ஃபிரண்டோடயா போனீங்க? என்னோடதானே போனீங்க. என் பெயரை எழுத என்ன தயக்கம்????
// வானம்பாடிகள் said...
amazing movie sir. thank you so much
1:03 AM
//
இன்னா நைனா இம்மா நேரம் ஆன்லைன்லகீறீங்கோ??? வய்சான காலத்துல தூக்கம் வர்லயா??
அண்ணே.. வந்து சேர்ந்தாச்சா.? வானம்பாடி எப்ப்வுமே ராவுல கூவுறவுரு..:)
” அண்ணே” உங்க பெயரை போட்டுட்டேன்னே..:)
No taste
கொத்து பரோட்டா சூப்பர்.. காரம்,சுவை எல்லாம் கலக்கல். அந்த ராஜாகிளி பரோட்டா கடை பார்த்ததா ஞாபகம். அடுத்து போனா டேஸ்ட் பண்ண வேண்டியது தான்.
கலைஞர் திரைகதை இயக்கம் சூப்பர்.. காமெடி படம்.
குறும்படம் அருமை..:)
பகிர்விற்கு நன்றி.
ஏ ஜோக் புரியல??
ஏ ஜோக் புரியல. தியேட்டர் சமாச்சாரமும், அஜித் மேட்டரும் சூப்பர். தத்துவம் சூப்பரோ, சூப்பர்!
நீ கலக்கு சித்தப்பு!
(உங்க தத்துவத்தை என் வலைப்பூவில் நிரந்தரமாக சேர்த்திருக்கிறேன்)
அஜித் வாழ்க......
அதிஷ்டம் விசயம் அருமை.
சென்னையை தவிர மற்ற ஊர்களில் திரையரங்கின் கொள்ளை அதிகம்.
குறும்படம் பகிர்விற்கு நன்றி.
குறும்படம் அருமை..தத்துவமும் சூப்பர்..
நன்றி! கேபிள் அண்ணா!!
ஏ ஜோக் புரியாதவங்களுக்கு ...ஹி.. ஹி ....
அன்புடன்
கே.ஆர்.பி.செந்தில்
தத்துவம், பித்துவம் அப்பறம் மருத்துவம்..
மேட்டர் கம்மியா இருக்கே தல.
// தனக்கு விழா எடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் //
பதிவர்கள் சார்பாக அவருக்கு ஏதாவது பாராட்டு விழா எடுக்க ஏற்பாடு செய்யுங்கண்ணே... நமக்கும் ஏதாவது நிலம் கிடைக்குதான்னு பாப்போம்...
// அஜித், ரஜினி இருவரையும் பாராட்டுவோம் //
பாராட்டுவோம்
// இந்த வார தத்துவம் //
புரியுது ... ஆனா புரியல....
ஆங்... அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...
இந்த புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு....அழகா இருக்கு...
சச்சின் பத்தி ஒரு வரி கூட இல்ல :(
இவ்வளவு மட்டமான ஏ ஜோக்க எங்க தலைவரே புடிச்சீங்க.
ஏ ஜோக் புரியாதவங்கள நல்லவங்க லிஸ்ட்ல சேத்தாச்சு சேத்தாச்சு.
வாவ் ராஜாகிளி கடை பரோட்டா அப்பப்பா....செம taste தல
குறும்படம்.... தூள்..
ஜோக்....... நிறைய சிரித்தேன்
// வேற வழி பேரப் புள்ள படத்துக்கு கால்ஷீட் வாங்கியிருக்கிற நேரத்துல படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்திருச்சுன்னா.. பொருளாதாரம் முக்கியமில்லையா..? //
A=B means B=A too.
தன் பேரனை ஊட்டி வளர்த்தால், ஊரார் பேரன்கள் தானாய் வளர்வார்கள். அவர்களின் மெளனத்தின் பின் தமிழ் சமூகம் மேல் அவர்கள் வைத்திருக்கும் அலாதி அன்பு தெளிவுற தெரிகிறது. அவர் போடும் கணக்கை பார்த்தால், தமிழில் மட்டுமல்ல கணிதத்திலும் மேதை என்றே தெரிகிறது.
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அதான் எடுத்துக் கொள்கிறார்கள்.
தத்துவம் ஜூப்பரு, ஏ ஜோக், ஹா........ஹா........
//Written by எம்.எம்.அப்துல்லா
1:05 AM
//இரவு சுமார் 11.45 இருக்கும் நானும் என் நண்பரும் //
கேர்ள் ஃபிரண்டோடயா போனீங்க? என்னோடதானே போனீங்க. என் பெயரை எழுத என்ன தயக்கம்???//
அதான் “அண்ணே நண்பர்ன்னு போட்டாச்சே?”
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா?
”தும்பை பூ” தைரியம் வரவேற்க்க தக்கது...
பரோட்டா சூப்பர்...
-
DREAMER
இந்த வாரம் கொத்தில் ஏதோ குறையற மாதிரி இருக்கு; என்னான்னு தெரியலை
//“அவங்கதாங்க இந்த ஏரியாவுல இருக்கிற எல்லா கடைக்கும் தண்ணி பாக்கெட், வாட்டர் கேன் எல்லாம் சப்ளையர்ங்க. பெரிய ஆபீசர் ஒருத்தர் சொந்தமா ப்ளாண்ட் வச்சிருக்காராம் அதனால. வேற இடத்தில வாங்கினா பிரசச்னை. ஆனா ரேட்டெல்லாம் கரெக்டாத்தான் போடறாங்க” //
சே நம்ம ஊரு போலிசு எவ்வளவு நியாயமா நடந்துகிறாங்க
நாமதான் அவுகள தப்பாவே நினைக்கிறோம்
//தங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் தங்கள் கருத்துக்களுக்காக ஆணித்தரமாய் நின்ற அஜித், ரஜினி இருவரையும் பாராட்டுவோம்.//
ரஜினி ? எப்போது? அவர் தான் இப்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட உடன் பிறப்பாக மாறிவிட்டாரே !!!
//அதற்கு பெண் வாயை திறக்காமல் ”ம்ஹும்..ம்ஹும்” என்றாள்//
:-)))))))))))
ஏ ஜோக் புரியாதவங்களை எல்லாம் நல்லவங்க லிஸ்ட்ல சேர்த்துடுங்க
சில போலீஸ்காரங்க வீட்ல உள்ள பொண்டாட்டி புள்ளைங்களல்லாம் தூக்கி வண்டிக்குள்ள போட்டுகிட்டு ஜாலியா கல்யாணத்துக்குகூட போறாங்க...
ப்ரோட்டா பிரியரே, ஊர் ஊரா போய் வயனமா திங்கறது.. அப்புறம் எங்க வயித்தெரிச்சல கொட்டிகறது... பசிக்கர நேரத்தல படிக்கசொல்ல வாயூருதுதில்ல..
நல்லா இருக்குங்க உங்க பதிவு எல்லாம்!
ஹாட்ஸ்பாட்டும் தத்துவமும் சூப்பர் அங்கிள்... குறும்படம் வரலயே??
ஜொக்கு ஒன்னும் புரியலயே???
வணக்கம் கேபிள்ஜி!!
அதே தான்..வணக்கம் கேபிள்ஜி..
ஜோக்கு புரியலையா???
விண்ணைத்தாண்டி வருவாயா எங்கே ?
template சோக்காக் கீது...புரோட்டா ஓகே..
வணக்கம் கேபிள்ஜி! நலமா..??
அதேதான் வணக்கம் கேபிள்ஜி நலமா??:-)
Hi Cable Sir,
////மங்குனி அமைச்சர் said...
//“அவங்கதாங்க இந்த ஏரியாவுல இருக்கிற எல்லா கடைக்கும் தண்ணி பாக்கெட், வாட்டர் கேன் எல்லாம் சப்ளையர்ங்க. பெரிய ஆபீசர் ஒருத்தர் சொந்தமா ப்ளாண்ட் வச்சிருக்காராம் அதனால. வேற இடத்தில வாங்கினா பிரசச்னை. ஆனா ரேட்டெல்லாம் கரெக்டாத்தான் போடறாங்க” //
சே நம்ம ஊரு போலிசு எவ்வளவு நியாயமா நடந்துகிறாங்க
நாமதான் அவுகள தப்பாவே நினைக்கிறோம்////
How postivie is our மங்குனி அமைச்சர்
A joke puriyadhavanga ellam nallavangannu yaaru sonnadhu.... They are bit less in presence of mind in 18+ list.
ஜோக் புரியாதவிங்களுக்கு ஒரு க்ளூ!
அந்தப் பெண்மணியும் டொனேட் பண்ணத்தான் வந்திருக்கார். ஆனா பளட் டொனேஷன் இல்லை. அவருக்கு டொனேஷன் விஷயத்தில் இன்னொருவரும் உதவியிருக்கார். சரியா?
A - புரியாதவங்களுக்கு.
அந்த பெண்மணியும் 1500 ரூபாய்க்காக வந்திருக்கிறார்.இதுக்கு மேல விளக்கம் குடுத்தா.......
புரோட்டா அருப்புக்கோட்டை, விருதுநகர் ஏரியால சாப்ட்டு பாருங்க.
-தினா
\\பொருளாதாரம் முக்கியமில்லையா..? \\
கலைஞரின் திறமை யாருக்கு வரும்..
வாழ்த்துகள் கேபிள்ஜி..
தலைவா கொத்து அருமை
ஏ ஜோக் புரியல??
//அதற்கு பெண் வாயை திறக்காமல் ”ம்ஹும்..ம்ஹும்” என்றாள்//
வாயை திறந்தால் விந்தனு கொட்டிவிடும்..
@ஈகிள் ப்ளேஸ்
:(
@குரு
நன்றி
@மணிநரேன்
நன்றி
@சில்க் சதீஷ்
நல்லா படிங்க..இல்ல இன்னும் சில வருஷம் கழிச்சு படிங்க..:)
@பெயர் சொல்ல விருப்பமில்லை
உங்களூக்குமா புரியல.. ஏ.ஜோக் நான் நம்பிட்டேன்
@ஜெட்லி
வாழ்க..வாழ்க
@காவேரி கணேஷ்
ஆமாம்.
@ராதாகிருஷ்ணன்
நன்றி
@புலவன் புலிகேசி
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
ஹீ..ஹி..
@ரோமியோ
என்னா ஆச்சு
@சுகுமார் சுவாமிநாதன்
என்னா புரியுது.. என்னா புரியலை..
@விசா..
விசா நீ நல்லவனா கெட்ட்டவனா..?
@அப்துல் சலாம்
ம்...
2ஈரோடு கதிர்
நன்றி
சாம்ராய்ஜப்ரியன்
ஆமாம் கொடுத்து வைத்தவர்கள்
@சைவக் கொத்துபரோட்டா
நன்றி
@அப்பாவி முரு
அது சரி
@ட்ரீமர்
நன்றி
@மோகன் குமார்
அப்படியா..
@மங்குனி அமைச்சர்
இதுதாண்டா போலீஸு
@குறை ஒன்றும் இல்லை
அந்த குடைச்சல் தாங்காமத்தான் எழுந்து கைய தட்டினாரு..:)
@கேவிஆர்
சேர்த்துடலாம்
@க.பாலாசி
அது சரி
@அசோக்
சாப்ட்டு படி
@லெனின்
நன்றி
@அசோக்
நீ இன்னும் வளரணும்..
2ந்ர்சிம்
@தண்டோரா
நன்றி
@வெள்ளிநிலா
யாருக்கு?
@செந்தழல் ரவி
என்ன காந்தி செத்துட்டாரா.?
@மயில்ராவணன்
நன்றி
@சூர்யா
நன்றி வணக்கம்
@ஷங்கர்
வணக்கம்
@வெங்கி
அப்படியெல்லாம் சொல்லப்படாது..:)
@லதானந்த்
ஓகே..ரைட்டு
@அறிவிலி
சரி..
@தினா
வ்ந்து சாப்டுட்டா போவுது
@நிகழ்காலத்தில்
அதனால தான் 5 வாட்டி முதலமைச்சர் ஆகியிருக்காரு
@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
நன்றி
@வி
கொட்டிட்டாங்கப்பா..:)
கமென்ட் படிச்சப்புறம் கூட அந்த பலான ஜோக் எனக்கு புரியவே இல்லைனே..
Trichy thaeatre kodumai ..... ithai thattikaetka yaarumae illaiayaa ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Post a Comment