ஓர் அறிவிப்பு
சிங்கை பதிவர்கள் மற்றும் அரசின் தொடர் அழைப்பை ஏற்று (ம்ஹுக்கும்.. டேய் வேணாம்) இலக்கிய உரை ஆற்றுவதற்க்காக (பின்ன எழுத்தாளர் ஆயிட்டோமில்ல) வருகிற 10ஆம் தேதி அன்று என் சிங்கை பயணம் ஆரம்பமாகிறது. 16ஆம் வரை. நண்பர்கள் யாரும் தமிழர்களின் பழக்க தோஷத்தில், ஊரெங்கும் கட்டவுட் வைத்து வரவேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.:) (அப்படினா வையுங்கன்னு அர்த்தம்)
###################################################################
நித்தயானந்தா – ரஞ்சிதா
போனவாரம் பதிவுலகையே கலக்கிய ஒரு மேட்டர். இன்னும் ஒரு வாரத்தில் புஸ்ஸென ஆகிவிடும். ஒரு பக்கம் பாவம் ரஞ்சிதா என்றும், இன்னொருபக்கம் நித்யானந்தா மோசம் செய்துவிட்டார் என்றும், ஒழுக்க சிலர் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது நான் ச்ட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்று அறிக்கை விடுத்திருகிறார். இன்னொரு பக்கம் வேறு எந்த பத்திரிக்கைக்கும் செய்திகளை தராமல் தங்கள் பத்திரிக்கைகளில் மற்றும் டிவிக்களில் மற்றும் அரைமணிக்கொரு முறை ஒளிபரப்பி கீழே “தீராத விளையாட்டு பிள்ளை” பட விளம்பரத்தை போட்டு தஙக்ளீன் டி.ஆர்.பி குறையாமல் பார்த்துக் கொண்ட சன் டிவீயும், கால் வாசி படத்தை போட்டு விட்டு முழு வீடியோ வேண்டுமென்றால் சப்ஸ்கிரைப் செய்யுஙக்ள் என்று விளம்பரம் போட்ட நக்கீரனுக்கும் நித்யானந்தாவுக்கும் என்ன வித்யாசம்.:)
##################################################################
வலைபதிவாளர்களுக்கு பிரஸ் அட்டை
ஆம வலைப்பதிவாளர்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கான அடையாள அட்டையை நியூயார்க் சட்டத்துறை அளித்துள்ளதாம். ஆனால் இதற்கு காவல் துறை எதிர்ப்பு தெரிவிருந்தாலும் சட்டதுறையை சார்ந்தவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள். வலைப்பதிவுகளும் ஒரு மாபெரும் ஊடக சக்தியாய் வளர்ந்து வருவதாலும் அச்சு மற்றும் ஒலி,ஒளி ஊடகங்களூக்கு இணையாய் செய்திகளை சேகரித்து வெளியிடுவது அதிகரித்துள்ளதாலும், ஞாயமான முறையில் எதையும், யாரையும் சார்புபடுத்தி செய்திகளை தராமல் நேர்மையான, நம்பிக்கையான செய்திகளை வலைப்பதிவாளர்கள் தருகிறார்கள் என்று அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார். சிறந்த முறையில் செய்திகளை அளித்துவரும் மூன்று சீனியர் பதிவர்களுக்கு இவ்வட்டையை அளித்துளார்கள். வலைபதிவாளர்களுக்கு இம்மாதிரியான அங்கீகாரம் கொடுத்திருப்பது உலகிலேயே இது முதல் முறை ஆகும்.விரைவில் நமக்கும் அம்மாதிரியான் அங்கீகாரம் வரும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
##################################################################
சாப்பாட்டுக்கடை
மிக அருமையான அராபியன் க்ரில் சிக்கன், தந்தூரி சிக்கன், மற்றும் பல தந்தூரி ஐயிட்டஙக்ளை நம் கண் முன்னே தயாரித்தளிக்கிறார்கள் சென்னை டாக்டர்.அம்பேத்கர் சாலையில்,சாமியார்மடம் அருகே உள்ள “MOTHER’S KITCHEN” நாங்கள் ஒரு அரை ப்ளேட் அராபியன் க்ரில் சிக்கனும், ரெண்டு பட்டர் நானும், ஒரு தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்தோம். மிகச் சுவையான, ஜூஸியான, ஸ்பைசியான க்ரில் சிக்கன். சுடச்சுட வந்த்து. அதே போல பட்டர் நானும், தந்தூரி சிக்கன் கிரேவியும். நல்ல சுவை. உணவகம் பெரியதாய் இருந்தாலும், சர்வீஸ் விஷயத்தில் கொஞச்ம் மெத்தனம்தான். நிச்சயம் தந்தூரி அயிட்டஙக்ளை விரும்புவர்கள் ஒரு ட்ரை செய்யலாம்.
##################################################################
இந்த வார குறும்படம்
இது ஒரு கார்ட்டூன் குறும்படம். ஆனால் இப்படம் சொல்லும் விஷயங்கள் பல. பார்ப்பவர்களின் பார்வையில் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தை உணர்த்துகிறது இப்படம். அருமையான பின்ணனி இசை படத்தின் முக்கிய விஷயமாகும். 95,96ஆம் ஆண்டுகளில் பல உலக பட விஷாக்களில் சிறந்த கார்டுன் படத்துக்காக போட்டியிட்ட படம். ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம்.
##################################################################
இந்த வார தத்துவம்
வேலை செய்வதை நிறுத்து, உங்கள் மைண்டை ரிலாக்ஸாக்கிக் கொள்ளுங்கள். நேராக படுக்கைக்கு போங்கள். படுத்து விட்டு தீவிரமாக சிந்தித்து பாருங்கள். அப்போது தெரிய வரும் வழக்கம் போல இன்னைக்கும் நாம வெட்டியாத்தான் சுத்தியிருக்கோம்னு.
##################################################################
ஏஜோக்
விவசாயி ஒருவன் காட்டின் வழியாய் தன் பசுவையும் கன்றுகுட்டியையும் மேய்சலுக்கு போயிருக்க, வழியில் வந்த திருடர்கள் அவ்னை அடித்து உதைத்து பசுமாட்டை திருடிக் கொண்டு, அவனை நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டி தொங்க விட்டுவிட்டு போய்விட்டார்கள். அதிகாலையில் அவ்வ்வழியே வந்த வழிப்போக்கர்கள் இவனின் நிலையை பார்த்து அதிர்ந்து போய் அவனை மரத்திலிருந்து இறக்கிவிட்ட வேகத்தில் கீழே கிடந்த பெரிய மரத்துண்டை எடுத்துக் கொண்டு, கன்றுக்குட்டியை அடி அடியென அடித்தான். கூடியிருந்தவர்கள் என்னவென்று கேட்க, “நானும் ராப்பூரா கதர்றேன். நான் அவ அம்மா இல்லை அம்மா இல்லைன்னு. விட்டாளா இவ? உறிஞ்சியெடுத்துட்டா..” என்றான்.
###################################################################
கேபிள் சங்கர்
Post a Comment
54 comments:
me the first
சிங்கை சூப்பர் ஊர் .... enjoy
வழக்கம்போல் கொத்துப்பரோட்டா அருமை.
கொஓர் அறிவிப்பு//// typing error
வணக்கம் கேபிள்ஜி
வாழ்த்துக்கள் சிங்கை பயணத்திற்கு
பதிவு அருமை
சிங்கை பயணமா..?? சொல்லவேயில்லை. தனியாவா..??
என்ஜாய்...
சிங்கை பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா :) :)
வலைப்பதிவர்களுக்கு அடையாள அட்டையா??? அருமையான விஷயம்.. பகிர்வுக்கு நன்றி அண்ணா :) :)
மதர் கிச்சன்க்கு சீக்கிரம் போறேன் :) :)
நித்தியா விசயத்தில் குமுதத்தை விட்டுடிங்க!!!
congrauts for singai trip
சாப்பாட்டுக் கடை பல நேரத்திலே நம்ம ஏரியாவிலேயே வருது!!! எந்த ஏரியா ஜி நீங்க? நீங்க சொல்லி “ஒருசோறு” மட்டன் சுக்கா ட்ரை பண்ணேன், சூப்பர்.
ஏ ஜோக் ரொம்ப பழசு
சிங்கை பயணத்திற்கு வாழ்த்துக்கள் தல..
சிங்கை செல்லும் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்....
என்ன தலைவரே சைதையில் இருந்து ஏர்போர்ட்
வரைக்கும் கட் அவுட் வச்சிருவோமா.....
கேபிள்,
சிங்கபூர் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
சென்னையில் தான் சந்திக்க முடியவில்லை. சிங்கப்பூரில் சந்திக்கலாம்.
வந்தவுடன் போன் செய்யுங்கள். என் சிங்கப்பூர் கைபேசி எண் 9015 0346 .
மறக்காமல் அழையுங்கள்.
இப்படிக்கு,
பாலா.
சிங்கப்பூர் போறீங்க.....வாழ்த்துகள்! வரும்போது தம்பிக்கு டைகர் பாம், டிவிடி ப்ளேயர், சொக்கத் தங்கத்துல சங்கிலி இதெல்லாம் வாங்கிட்டு வர வேண்டாம், புரியுதா அண்ணே! (இதுக்கும் உங்களோட லாஸ்ட் வரிகளுக்கும் சம்பந்தம் இல்லீங்கோ!)
//Written by ஜெட்லி :
சிங்கை செல்லும் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்....
என்ன தலைவரே சைதையில் இருந்து ஏர்போர்ட்
வரைக்கும் கட் அவுட் வச்சிருவோமா.//
இங்கே இருந்து போகும்போது கட் அவுட் வச்சா, அது ஏதோ கெட் அவுட் சொல்றாப்பல தோணும்பா...... பேசாம அண்ணன் ரிட்டன் வரும்போது வச்சுடலாம் அதுதான் சரி.
//நக்கீரனுக்கும் நித்யானந்தாவுக்கும் என்ன வித்யாசம்.//
இவரு இப்பதான் இப்படி, அவங்க எப்பவுமே இப்படிதான் - அதுதான் வித்தியாசம்!
"A" Joke is a joke but it is not A-1 Joke
சிங்கை பயணமா..?? சொல்லவேயில்லை. தனியாவா..??
என்ஜாய்.
வாழ்த்துக்கள் தல..
ஆற்றபோகும் இலக்கிய உரைக்கு வாழ்த்துக்கள்.
வலைபதிவாளர்கள் தெரியும்..!
அது யாருண்ணே அவங்க “வாலைப்பதிவாளர்கள்”....?!?!?
//வலைப்பதிவாளர்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கான அடையாள அட்டையை நியூயார்க் சட்டத்துறை அளித்துள்ளதாம். //
arumai...
பயணம் இனிதே நடைபெற வாழ்த்துகள் கேபிள். (பட ரிலீஸையெல்லாம் தள்ளி வைக்கச் சொல்லிட்டீங்களா?)
congrates
அண்ணா வணக்கம்!!! உங்களை எளிய எழுத்து நடை மற்றும் தகவலுக்காக தொடர்ந்து வாசித்து வருகிறேன். இருந்தாலும் இதுதான் எனது முதல் பின்னூட்டம்.
உங்களின் சலனப் படம் பர்ரிய தகவலை முன்னரே "துறவியும் மீனும் - :: RAMAKRISHNAN ::" அவர்களின் வலைப்பதிவில் படித்து அறிந்திருக்கிறேன்.
நன்றி அண்ணா
அன்புடன்
அறிவுடை நம்பி, மலேசியா
சாமியார் மேடம் தெரியும் (ரஞ்சிதா) சாமியார் மடம் எங்க இருக்கு மெட்ராஸ்ல? ட்ரிப்புக்கு வாழ்த்துக்கள் கேபிள் ஜி..
Bon Voyage sir,
இலக்கிய உரை ஆற்ற நீங்களா, என்னயிது.. வெறென்ன சொல்லறது கலி முத்திடுத்து... வாழ்த்துகள்... போய்டுவந்து எந்த ஹோட்டல் சிக்கன் நல்லாயிருந்ததுன்னு ஒரு இலக்கிய கட்டுரை எழுதவும் :))
தத்துவம் உங்க்ளுக்குதானே...?
A-ஜோக்கு thumbsdown
வாழ்த்துக்கள் சிங்கை பயணத்திற்கு!!!!
வாழ்த்துக்கள் சிங்கை பயணத்திற்கு
சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
வருக வருக !
Happy Journey Anna......
A Joke.... Toooooo much...
கேபிள் சார்...
பரோட்டா சூப்பர். வலைப்பதிவர்களுக்கு நம்மூருல ப்ரெஸ் கார்டு கொடுத்தாங்கன்னா, பைக்ல PRESSனு போட ஆரம்பிச்சிடுவாங்க... அப்புறம் நம்ம டிராஃபிக் போலீஸெல்லாம் திண்டாடவேண்டியதுதான். நல்லாத்தான் இருக்கும்...
-
DREAMER
ஆஹா...
சிங்கம் சிங்கை போக களம் எறங்கிடுச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்......
ஆல் தி பெஸ்ட். பத்திரமா போய்ட்டு வாங்க.. எதுக்கும் புளியோதரை கட்டி எடுத்துட்டு போங்க.. போற வழியில பசிக்கும்ல??
இந்த வார புகைப்படம் என்றும் நீங்கள் ரசித்த ஒரு படத்தை போடலாமே ? இன்னும் ரசிக்கும்படி அமையுமே கொத்து ?
அனுப்பி வெச்சவங்க பகுதியில்
PORNSTAR FINDER [2370]
Japanese Gay Club an... [2334]
Asian Gay Free Movie... [2090]
widget.linkwithin.co... [1869]
Free Porn Movie and ... [1771]
??????: ?????? ?????... [1770]
?????? - ADULT SEARC... [1743]
JAPANESE BABES NUDE [1705]
Japanese Live Web Ca... [1677]
????????????? Shanka... [1587]
?`??????!: ?? -?????... [1579]
thamizmaNam : Tamil ... [1194]
draft.blogger.com [1085]
Google [1006]
Yahoo [883]
ASIAN PORN DVD [748]
Japanese Free Porn V... [735]
ஒரே மேட்டரா இருக்கு. என்ன விஷயம் ??? சிங்கபூருக்கு போறதுக்கு முன்னாடி இரும்பு பூட்டு வெச்ச டவுசர் போட்டு அனுப்பனும் போலருக்கு.
ravi,
இதெல்லாம் எப்பூடி என் லிங்குல வரதுன்னே தெரியல.. கொஞ்சம் தெரிஞ்சா நல்லருக்கும் ஹி..ஹி..
//இதெல்லாம் எப்பூடி என் லிங்குல வரதுன்னே தெரியல.. கொஞ்சம் தெரிஞ்சா நல்லருக்கும் ஹி..ஹி//
இதெல்லாம் சில மினி ஹேக்கிங் ஆசாமிங்க போலியா அனுப்புற referrer list. அந்தத் தளங்களுக்குப் போய்ப் பார்த்தா அப்படி ஒரு லிங்கும் உங்க தளத்துக்கு இருக்காது.
தலைவரே....அது ‘ஏ’ ஜோக்கா ???
சிங்கை சென்று திரும்பி வந்ததும்..போட்டோவெல்லாம் போடுவீங்கள்ல....
செந்தழல் ரவி கண்டுபிடிச்ச பின்னாடிதான் நானும் பார்த்தேன். என்ன இது? இருக்குற சர்ச்சை போதாதா? நீங்க வேற எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? :-)))))))
14 முதல் 18 வரை சிங்கையில் இருப்பேன்
அங்கே சந்திப்போம் ;)
அட கிரகமே பிரபு.. நானே ஒரு சின்னப்பையன் நான்போய் இதெல்லாம் செய்வேணா..?:))))
கலி முத்திடுத்துடா அம்பீ...!!!! கெரகம் கெரகம்.
சிங்கை பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
விவேகானந்தர் தெரு,
சிங்கப்பூர் பஸ்டான்டு
சிங்க்கப்பூர்
இங்க கொததுபரோட்டா நல்லா இருக்கும்
மறந்துடாதீங்க....
வருக... வருக.. என வரவேற்கிறோம்.
வருக... வருக.. என வரவேற்கிறோம்.
வருக... வருக.. என வரவேற்கிறோம்.
சிங்கைக்கு வருகை தரும் , தானைதலைவன்..
தங்கத் தமிழன்.. குறிஞ்சி மலர்.. கேபிள் சங்கர்
அவர்களே...
வருக ... வருக...
இவன் - சிங்கை நாடாளுமன்ற உறிப்பினராக, அயராது பாடுபடும் பட்டாபட்டி
தலைவரே அப்படியே அந்த ஊருல location பார்த்துட்டு வந்துடுங்க.
வாழ்த்துக்கள் கேபிள்...
//y கோவி.கண்ணன்
11:24 AM
சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
வருக வருக !
//
எங்க பெரியவாவுடன் இணைந்து உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாளை மாலை சந்திப்போம்.
அங்கயிருந்து எதுவும் வீடியோ ரிலீஸ் ஆகிடாம பார்த்துக்கங்க கேபிள்!! :)
வாழ்த்துக்கள் சிங்கை பயணத்திற்கு
பதிவு அருமை
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .
Post a Comment