500 Days of Summer -2009
டாம் என்கிற கிரீடிங் கார்ட் கம்பெனியில் வேலை பார்பவனுக்கும் அவனுடய அலுவலகத்தில் சம்மர்டின் என்கிற பெண்ணுக்கு இடையே ஏற்படும் உறவு தான் படம். சம்மரை பார்த்த முதல் பார்வையிலேயே டாம் அவள் தான் தன் வாழ்க்கைக்கு ஏற்றவள் என்று முடிவெடுக்கிறான். ஆனால் சம்மரோ உறவுகளின் மீது நம்பிக்கையில்லாதவள். எந்த உறவும் நிரந்தரமல்ல. எலலாமே நிலையற்றது என்கிற மனப்பான்மை கொண்டவள்.
ஒரு கட்டத்தில் ஒரு நாள் இரவு நடக்கும் கரோக்கே பார்ட்டியில் இருவரின் உறவுகளும் கொஞ்சம் நெருக்கமாய் மாறி நண்பர்கள் என்கிற நிலையில் இருந்து மீறி உடலுறவு வரை சென்றாலும், சம்மருக்கு ஒரு கமிட் மெண்டான உறவுக்கு தான் தயாரில்லை என்கிறாள். ஒரு நாள் இரவு சம்மருக்கும் டாமுக்கு சண்டை வர, நம் உறவுக்கான பெயர் என்ன என்று வாதிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட, அவனுக்கு இருக்கும் ஒரே அறுதல் அவனுடய அடலசண்ட் தங்கையும், இரு நண்பர்களும்தான். அவளிடமிருந்து டாம்பிரிந்தாலும் அதை ஏற்க முடியாமல், ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உடன் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியின் திருமணத்டை சாக்கிட்டு ஒருவரை ஒருவர் ரயிலில் சந்தித்துக் கொள்ள, அந்த சந்திப்பு திருமணம் வரை நீள, கிளம்பும்போது அவனை சம்மர் தன் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு அழைக்கிறாள்.
பார்ட்டியில் தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்று நினைத்திருந்த வேளையில், அவளின் கையில் நிச்சயதார்த்த மோதிரம் பட, பார்ட்டி எதற்கென தெரிந்து வெளியேறுகிறான். காதல் தோல்வியில் தினமும் குடித்துவிட்டு அலையும் டாம், மன விரக்கிதியில் க்ரீட்டிங் கார்ட் கம்பெனியிலிருந்து விலகி, மனம் போன போக்கில் அவனுக்கு இண்ட்ரஸ்டான ஆர்கிடெக்சரல் விஷயத்தில் கான்செண்ட்ரேட் செய்ய ஆரம்பிக்க, அவர்கள் தனியாய் சந்திக்கும் பார்க்கில் சந்திக்கிறாள் சம்மர். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் தன் வாழ்கையை பற்றி பேசிவிட்டு அவனை வாழ்த்தி விட்டும் பிரிகிறாள்.
ஒரு இண்டர்வியூவில் ஒரு பெண்ணை சந்திக்கிறான் டாம். இண்டர்வியூவுக்கு கிளம்பும் போது அந்த பெண்ணின் பேச்சில் இம்ப்ரெஸ் ஆன டாம் அவளை காப்பி சாப்பிட அழைக்க, அவளும் கொஞம் யோசித்து ‘சரி’ என சொல்ல, டாம் அவள் பெயரை கேட்கிறான். அவள் பெயர் ”Autumn” என்று சொல்கிறாள்.
ஒரு சாதாரண கதையாய் தெரிந்தாலும், நான் லீனியர் முறையில் அதாவது டாமுக்கும், சம்மருக்குமான காதல் நடந்த 500 நாளை காலைத்து போட்டு கட்டமைக்கப்பட்ட காட்சிகளாய் சொல்லப்படுவது இண்ட்ரஸ்டிங். டாமுக்கும், அவளது தங்கையும் பேசிக் கொள்ளும் காட்சிகள் க்யூட். அதே போல் ஒருகுழப்பமான பெண்ணாக சம்மரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் டாமாக நடிக்கும் ஜோசப் கார்டன் லிவிட்டியின் நடிப்பு கச்சிதம். சின்ன சின்ன காட்சிகளாய் விரியும் திரைக்கதை இண்ட்ரஸ்டிங். குறிப்பாய் அவளை நண்பனாக ஏற்றுக்கொண்டபின் ரோட்டில் பாடியபடி ஆடும் இடம். பின்பு அதே நேரத்தில் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் திணறும் காட்சிகள் என்று படம் நெடுக க்யூட்டான் காட்சிகள் அணிவகுக்கின்றன. எனந்தான் அவர்கள் நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருந்தாலும் இவர்கள் காட்டும் நாட்காட்டி ஷாட்டுகளை எடுத்துவிட்டாலும் சுலபமாக புரியும் வகையில்தான் திரைக்கதை அமைந்திருக்கிறது.
சுமார் 7.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இண்டிபெண்டண்ட் மூவியான இப்படத்தை பாக்ஸ்சர்ச்லைட் நிறுவனம் வாங்கி விநியோகித்து சுமார் 60 மில்லியன் ரூபாய் சம்பாதித்தது . சண்டேன் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டு ஸ்டாண்டிங் ஓவேஷன் எனும் பாராட்டு பெற்ற படம்.
கேபிள் சங்கர்
Comments
http://msk-cinema.blogspot.com/2009/12/500-days-of-summer-2009.html
இந்த வரியைப் படித்தபின், ஒரு சிறுகதையைப் படித்த உணர்வை தந்தது இந்த விமர்சனம்
ஆமாம் சரவணக்குமார்..
@க.இராமசாமி
ஹி..ஹி..நன்றி
@ரகு
படமும் ஒரு சிறுகதையை போலத்தான் இருக்கிறது.
@சுகுமார்
நன்றி
@தேனம்மை லஷ்மணன்
நன்றி
@க்ளோவ்
அப்படியா தெரியுது..?
@கருந்தேள் கண்ணாயிரம்
நிச்சயம் ரசிக்கக்கூடியபடம்
@ஸ்ரீகிருஷ்ணா
நன்றி
@ஜாக்கிசேகர்
பார்த்துடுங்க
@ஸ்ரீ
ம்
@சைவகொத்துப்பரோட்டா
:)