கொஞ்ச நாளுக்கு முன்னால் இதே கதைகளனில் ஒரு படம் வந்து போனது. அது சொல்ல..சொல்ல இனிக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் அவன் கடந்து போகும் பெண்கள், அவர்களின் காதல், அவனின் காதல் என்று போகும் படம். இதுவும் அந்த வகைதான்.
சஞ்சய் வெளிநாட்டில் உட்கார்ந்தவாறு வாய்ஸ் ஓவரில் கதை சொல்ல ஆரம்பிக்கிறான். சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும், தனக்கென ஒரு பெண் அமைய மாட்டாளா என்று ஏங்கி, ஏங்கி அலைய, ஒருத்தி கிடைக்க, அவளிடம் நெருங்க முயற்சிக்கும் போது, அவளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்திருப்பது தெரிய, பின்பு ஆர்த்தியுடன் அவன் சுற்ற, ஊரில் பெரிதாய் நல்ல பேர் இல்லாத அப்பெண்ணிடம் உள்ள நல்ல குணத்தை கண்டு அவளுடன் ப்ரோபோஸ் செய்ய, ஊர் பேசியது உண்மை என்பது போல ஒரு விஷயம் அவனுக்கு வர, நொந்து போன அவன் வேறு ஒரு பெண்ணை ப்ரபோஸ் செய்துவிட, ஒரு கட்டத்தில் உண்மை தெரிய, அவளை பார்க்க போகிறான் என்ன ஆனது என்பதை வெண் திரையில் காண்க.
புதுமுக கதாநாயகன், நல்ல உயரமாய், அழகாய், பழைய அஜித் போல இருக்கிறார். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும், மெல்ல மெல்ல பெரிதாய் குறை சொல்லும் அளவிற்கு ஏதுமில்லை. முதல் கதாநாயகி,பூஜா க்ளோசப்பில் படுத்துகிறார். ஆர்த்தி ஓகே, மூன்றாவது பெண் அனுவுக்கு பெரிதாய் வாய்ப்பில்லை.
கதாநாயகனின் நண்பன் தினேஷாக வரும் சாய்பிராசாந்த், கலக்குகிறார். அவரின் பாடி லேங்குவேஜ் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. அதே போல் புரம் பேசும் பெண் ப்ரியா கேரக்டர், மிக இயல்பாய் இருக்கிறார்.
படத்தில் பாராட்டப் படவேண்டிய ஒருவர் யார் என்றால் இசையமைப்பாளர் தமன். படம் நெடுக மிக அருமையான பெப்பியான பின்னணி இசையாலும், சின்ன சின்ன பாடல்களினாலும் மனதை கொள்ளை கொள்கிறார்.
ஆண்டனியின் எடிட்டிங்கும், வின்சென்டின் ஒளிப்பதிவும் குளுமை. நடனபள்ளி அமைப்பில் ஆர்டைரக்டரின் ஒர்க் நன்றாக இருக்கிறது. கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார் கவுதமின் உதவியாளர் மகிழ் திருமேனி. அவரின் சாயலிலேயே வாய்ஸ் ஓவரில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தமிழ் சினிமாவை போல ஒரே தடவையில் காதல் வருவதில்லை, பல பெண்கள் பின்னால் அலைந்து, சிலதில் தோற்று, ஏமாந்து, பின்பு ஒருத்தியை கண்டு பிடிக்கிறான். அதே போல பெண்ணிற்கும் என்பதை இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அந்த இயல்பான நிலை முன் பகுதியில் மிகவும் இழுக்கிறது. பின் பகுதியில் சொல்ல வரும் மேட்டர் இண்ட்ரஸ்டாக இருந்தாலும் ஆழமில்லாத காட்சியினால் மனதில் நிற்க மறுக்கிறது.
அங்கும் இங்கும் அலையும் திரைக்கதையினால் நிலை கொள்லாமல் போகிறது கதை. ஒரு பெண்ணை பார்த்து அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெண்ணை அறிமுகப்படுத்துவதும், அவளுக்கோ, அல்லது அவனுக்கோ இயல்பாகவே இரு இண்ட்ரஸ்ட் ஏற்படுவதும் இயல்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை நமக்கு இருப்பதில்லை. அதனால் இம்மாதிரியான காட்சிகள் வைக்கும் போது லைட்டாக இல்லாமல் மனதில் சம்மணமிட்டு உட்காரும்படி இருந்திருக்க வேண்டும்.
அதே போல் பாராட்ட பட வேண்டிய விஷயம் மிக இயல்பான நகைச்சுவை காட்சிகளும், ஐடி செக்மெண்ட் ஆட்களின் வாழ்க்கை முறையும், அங்கு பெண்களின் பேச்சுக்களும், கண் முன்னே உலவ விட்டிருப்பது. குறிப்பாய் அந்த டான்ஸ் க்ளாஸில் ஜோடி தேடும் காட்சி.. அட்டகாசம் சாய்பிரசாந்த்.
முன் தினம் பார்த்தேனே – நிழலாடியிருக்க வேண்டிய படம்.
கேபிள் சங்கர்
Technorati Tags: திரை விமர்சனம்
Post a Comment
17 comments:
Present
பாடல்கள் கேட்டேன், ஓ.கே. ரகம்.
உங்க விமர்சனத்த "நம்பி(?!) இன்னைக்கு படம் பார்க்க போறேன்.பார்க்கலாம் எப்படின்னு.
இது ஒரு சீசன்!
கப்பிள்ஸ் ரிட்ரீட் படம் தமிழில் எடுக்கிறார்களா?
படம் சுமார்தான்.
இந்த மாதிரி படம் எடுக்க புரோடிசருங்க எந்த நம்பிக்கையில பணம் போடுறாங்கனே தெரியலை. கொட்டாவி விட வைக்கிற இந்த மொக்கைப்படத்தைப்போய் நீங்க ஏன் தான் கொண்டாடுறீங்கனு புரியலை.?
தமிழ்ரசிகர்கள் சமீபத்தில் தியேட்டரில் கொட்டாவி விட்டது இந்தப்படத்துக்குத்தான் இருக்கும். முதல் நாள் மாட்னியில் நாகர்கோவில் ராஜாஸ் தியேட்டரில் ஏசி பாக்சில் இருந்தது நானும் இன்னொரு ரசிகர் மட்டுமே.
முன் தினம் பார்த்தேனே என அழகான கவித்துவமான பாடல் தலைப்பை வைத்துவிட்டு சொதப்பலாக படம் எடுத்த மகிழ்திருமேனியை என்ன சொல்ல..?
// Written by Thiruvattar Sindhukumar
இந்த மாதிரி படம் எடுக்க புரோடிசருங்க எந்த நம்பிக்கையில பணம் போடுறாங்கனே தெரியலை //
கதையாச் சொல்லையில நல்லா சொல்லுவாங்க ஃபீலோட. ஆனா அந்த ஃபீலை செல்லுலாய்டில் மாற்றும்வித்தையை 90% சதவிகித இயக்குனர்கள் அறிவதில்லை. ஆதலால் தயாரிப்பாளர்களைச் சொல்லித் தப்பில்லை.
ஆமாண்ணே, நீங்க குமுதம் குழுமத்தில் எழுதும் சிந்துகுமார் அவர்களா??
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
மீண்டும் வருவான் பனித்துளி !
/இந்த மாதிரி படம் எடுக்க புரோடிசருங்க எந்த நம்பிக்கையில பணம் போடுறாங்கனே தெரியலை. கொட்டாவி விட வைக்கிற இந்த மொக்கைப்படத்தைப்போய் நீங்க ஏன் தான் கொண்டாடுறீங்கனு புரியலை.?
தமிழ்ரசிகர்கள் சமீபத்தில் தியேட்டரில் கொட்டாவி விட்டது இந்தப்படத்துக்குத்தான் இருக்கும். முதல் நாள் மாட்னியில் நாகர்கோவில் ராஜாஸ் தியேட்டரில் ஏசி பாக்சில் இருந்தது நானும் இன்னொரு ரசிகர் மட்டுமே.//
தலைவரே.. நான் படம் நன்றாக இருக்கிறது என்று எங்கு சொல்லியிருக்கிறேன். சில நல்ல விஷயஙக்ளை பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். திரைக்கதையில் முன் பகுதி மிகவும் இழுக்கிறது என்றே சொல்லியிருக்கிறேன். குழப்பமான திரைக்கதையினால் மிகவும் சறுக்கியிருக்கிறது என்பதையே மீண்டும் ஆணித்தரமாய் சொல்லுகிறேன்.
கேபிள் சங்கர்
நீங்களாவது பரவாயில்லை.. நான் பார்த்த சென்னை கமலா தியேட்டரில் சுமார் 40 பேர் தான் இருந்திருப்பார்கள். கொட்டாவியுடன்.:)
//பூஜா க்ளோசப்பில் படுத்துகிறார்//
க்ளோசப்பில பல்லுதானே வெளக்குவாங்க
//அனுவுக்கு பெரிதாய் வாய்ப்பில்லை//
:))
//D.R.Ashok said...
//பூஜா க்ளோசப்பில் படுத்துகிறார்//
க்ளோசப்பில பல்லுதானே வெளக்குவாங்க//
:))
படம் பார்த்து இருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
டாக்டர் அண்ணே.....
தலைவரே ஒரு சின்ன கரக்ஷன்
//அதே போல் புரம் பேசும் பெண் ப்ரியா //
அது புரம் இல்ல புறம் பேசும் தலைவரே
கடைசி ஃபோட்டோல இருக்குற புள்ள நல்லாருக்கு. அம்புட்டுத்தேன்.
ஏனுங்க, //பெப்பியான// அப்படின்னா என்னங்க? ஆனா வஞ்சகம் இல்லாம எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதுறீங்களே, நீங்க ரொம்ப நல்லவருங்க!
பெப்பியான என்றால் துள்ளலான என்று பொருள்..
கேபிள் சங்கர்
நீங்கள் எங்கள் கல்லூரியில் லெக்சரராக பணிபுரிவது போல் நேற்று எனக்கு கனவு தோன்றியது..வாழ்த்துக்கள் :)
Post a Comment