கொத்து பரோட்டா – 19/04/10
############################################################
கொஞ்ச காலமாய் லிவ்விங் டு கெதர் கான்செப்ட் தமிழ் நாட்டில் பரவ ஆரம்பித்து மிகவும் ஆழமாய் ஊடூருவ ஆரம்பித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ஆண், பெண் இருவருக்குமான பொருளாதார சுதந்திரம் தான் என்கிறார்கள் மன நல வல்லுனர்கள். கமிட்மெண்ட் இல்லாத ஒரு வாழ்க்கை, பகிர்ந்து கொண்டு வேலை செய்யும் மனப்பான்மை, யாரும் யாரையும் டாமினேட் செய்யாத வாழ்க்கை, இதனால் வாழ்ககை சுகமாக போகிறது என்கிறார்கள் இந்த ஜோடிகள். இதே உணர்வு திருமண பந்தத்தில் கிடைப்பதில்லை என்றும். திருமண பந்தத்தில் ஏதும் ஸ்பெஷலாக இல்லை என்றும் அது சமுதாயத்தால் உன்னதமான விஷயம் என்று பெரிதாக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு தெரிந்த லிவிங் டு கெதர் ஜோடிகள்.
############################################################
சென்ற வாரம் அரும்பு மீசை குறும்பு பார்வை என்கிற படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு, சென்றிருந்தேன். படத்தின் இணை தயாரிப்பாளர் என்னுடய நண்பர். சமீபகாலத்தில் சுமார் ஆயிரம் பேர் வந்திருந்த பாடல் வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருக்கும் என்று என் எண்ணம். அழைப்பிதழையே வித்யாசமாய் அனுப்பியிருந்தார்கள். படத்தின் ஸ்டில்களோடு, வைரமுத்துவின் பாடல் வரிகளை அந்த கால பாடல் புத்தகம் போல அடித்துக் கொடுத்திருந்தார்கள். வெளியீட்டு விழாவை ஒரு நாலு வயது பெண் குழந்தைக்கு தேவதை போல வேடமிட்டு சுவையான தமிழில் பேசியது அதி மதுரம். அதே போல் இணைதயாரிப்பாள்ர் படத்தில் ஒத்துழைத்த உதவி இயக்குனர்களுக்கும், ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுக்கும் நன்றி சொன்னது நெகிழ்வாக இருந்தது. வெளியே வரும் போது ஆளுக்கு ஒரு சுருக்கு பை அதில் பெருவிளங்காய் உருண்டை, கொடுக்காப்புளி, நாவல் பழம் என்று கிராமத்து அயிட்டங்களாய் கொடுத்தது இன்னும் இண்ட்ரஸ்டிங். வெளியிடப்பட்ட பாடல்களில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் பாரதிராஜாவின் சீடராம். பார்போம் வித்யாசமான விளம்பரங்கள், மூலம் கவனிக்க வைத்திருக்கும் இக்குழுவினரின் படம் எந்தளவுக்கு நம் கவனத்தை கவரும் என்று.
###########################################################
சாப்பாட்டுக்கடை
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலஸுக்கு எதிராய் ஒரு இரவு நேர கையேந்தி பவன் இருக்கும். முருகன் இட்லிகடை இட்லியைவிட நன்றாக இருக்கும் சகாயவிலையில். இட்லிக்கு சால்னாவை விட காரசட்னி பெஸ்ட். சூடான சுவையான இட்லிக்கு..
###########################################################
இந்த வார குறும்படம்
நண்பர், பதிவர் திருப்பூர் ரவிக்குமார் எழுதி இயக்கியபடம். படம் கொஞ்சம் நீளம் என்றாலும்.. மிக சுவாரஸ்யமாய் தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவை அழகாய் சொல்லியிருக்கிறார்.
Kannamoochi
Uploaded by mathavaraj. - Classic TV and last night's shows, online.
###########################################################
இந்த வார தத்துவம்
வெற்றி பெற்றவர்களின் கதைகளை படிக்காதே. தோல்வியடைந்தவர்களின் கதைகளை படி ஏனென்றால் தோல்வி கதைகளில் தான் வெற்றியடைவதற்கான வழிகள் உள்ளது. பிடரல் காஸ்ட்ரோ.
############################################################
இந்த வார கண்டுபிடிப்பு
சம்சாரம் ஒரு மின்சாரம்னு சொல்றாங்க அப்ப சின்ன வீட்டை என்னன்னு சொல்வாங்க? ஜெனரேட்டர்னுதான்.
###########################################################
ஏ ஜோக்
ஒரு பாலைவனத்தில் வேலை செய்யும் தன் கம்பெனி ஆளூக்கு அவனுடய செக்ஷுவல் வறட்சியின் காரணமாய் ஒரு அழகாம பெண்ணுடன் ஒரு வாரம் டூர் அனுப்பியது கம்பெனி. ஒரு வாரம் கழித்து வேலைக்கு திரும்பியவனிடம் உடன் வேலை செய்பவர்கள் எல்லாம் கூடி நின்று என்னாச்சு சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்க, அவன் மூணாவது நாள் என்னாச்சுன்னா.? என்று ஆரம்பித்தான். முதல் நாளிலேர்ந்து ஆரம்பி என்றார்கள் நண்பர்கள். அதைத்தான் சொல்றேன்.. மூணாவது நாள் அன்னைக்கு தான் அவ கேட்ட கொஞ்சம் பாத்ரூம்போயிட்டு வந்திரட்டுமா..?
############################################################
Comments
ஏன் பெட்ரமாக்ஸ் லைட்டா இருக்கலாமே ஸார்.
கேபிளு.. படத்தின் பெயரை சரியா எழுதவும்...
அந்த விழாவில் உங்க பக்கத்து சீட்ல யாரும் இல்லையா..??
சம்சாரம் ஒரு மின்சாரம்னு சொல்றாங்க அப்ப சின்ன வீட்டை என்னன்னு சொல்வாங்க? ஜெனரேட்டர்னுதான்.
###################///
சூப்பர் சூப்பர் சூப்பரப்பு
தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி .
//திருமண பந்தத்தில் ஏதும் ஸ்பெஷலாக இல்லை என்றும் அது சமுதாயத்தால் உன்னதமான விஷயம் என்று பெரிதாக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு தெரிந்த லிவிங் டு கெதர் ஜோடிகள்.//
அவர்கள் யார் யார் என்று அவர்களின் அனுமதியோடு உங்களால் வெளியிட முடியுமா? (கமல், ராம்கி, பிரபுதேவா என்று திரைஉலகு நட்சத்திரங்கள் வேண்டாம் )
அப்படி வெளியிட்டால் "திருமண பந்தத்தில் ஏதும் ஸ்பெஷலாக இல்லை" என்று நானும் உடன்படுகிறேன்...
//இந்த வார கண்டுபிடிப்பு
சம்சாரம் ஒரு மின்சாரம்னு சொல்றாங்க அப்ப சின்ன வீட்டை என்னன்னு சொல்வாங்க? ஜெனரேட்டர்னுதான்.//
;-)))
வாழ்த்துக்கள்.
நாகராஜன் மற்றும் அவரின் பேரன்
பாரட்டப்பட வேண்டியவர்கள்.
தமிழ் நாட்டில் லிவிங் டு கெதர்
கான்செப்ட் என்பது ஒரு குழந்தை
மாதிரி. அது பெரியமனுஷனாக
அல்லது பெரிய மனுஷியாகட்டும்.
அப்போது வச்சிக்கலாம் விமர்சனத்தை.
:)
தத்துவம்லாம் சொல்லி... நீங்க எங்ங்ங்ங்கயோ போயிட்டீங்க தலைவரே....
Joke puriyaliye :( - original link irundhaa anuppunga...
எப்போ வேணும்னாலும் விட்டுட்டுப் போலாம்கிற மன நிலையில இருக்கறப்போ, தன்னலமற்ற எதிர்பார்ப்பில்லாத காதல் வெளிப்படும்னு
தோணல.. :-)
அருமையான பதிவு..
நல்வரவு....
ஃபிடல் காஸ்ட்ரோ, பிடரல் அல்ல!
ஹி ஹி ரகு நீங்களும் கண்டுபிடிச்சுட்டீங்களா ?
இதே பிடல் காஸ்ட்ரோ கெம்பேனி தான் ஈழப்போராட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் வாக்களித்தது என்றும் கேபிளாருக்கு சொல்லிடுங்க.
/
இதில் இருந்து நன்றாகத் தெரிகிறது தமிழ்நாடு விரைவில் தலைகீழாக மாறப்போகிறது என்று .
இதில் என்னங்க சந்தேகம் மின்சாரத்தை தூக்கி பின்னாடி போடுங்க சின்ன தூக்கி முன்னாடிப் போடுங்க .
எப்புடீ ??????????????
மீண்டும் வருவேன் பரோட்டா – சாப்பிட
living together ஒரு குறிப்பிட்ட மன நிலையில் உள்ளவர்களுக்கு சாத்தியம், சந்தோசம் இளமை இருக்கும் வரை / அவர்கள் பிரியும் வரை.
முதுமையும் / நோயும் / இயலாமையும் வரும்போது தெரியும் திருமணத்தின் முக்கியம். அப்படிப்பட்ட நிலைகளிலும் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டால் அந்த பந்தம்தான் உறுதியானது. அது திருமணத்தில் பல வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
திருமணம் / Living together பெயர்களில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். இரண்டிலுமே இருவரின் மன நிலைகளும் அவர்களின் விட்டுக்கொடுத்தல் / புரிதல்களில் தான் வாழ்கை இருக்கிறது.
ஆற்காட்டார் மின்சாரம் தான் தரமாட்டேன்கிறார்... எப்புடியாவது ஒரு ஜெனரேட்டரை எனக்குத் தரச் சொல்லுங்கண்ணே... (இதுக்கும் உங்க ஜோக்குக்கும் சம்பந்த்தப் படுத்திப் பார்த்தால் எனது நிர்வாகம் பொறுப்பல்ல) :-)
நான் வாழ்த்தி என்ன அக போகுது . நான் சின்ன பையன். நான் ப்ளாக் தொடங்க நீங்க தான் காரணம்.
மிஸ்டர் இட்லி @ ஞானம் .
நான் வாழ்த்தி என்ன அக போகுது . நான் சின்ன பையன். நான் ப்ளாக் தொடங்க நீங்க தான் காரணம்.
மிஸ்டர் இட்லி @ ஞானம் .
y not inverter?
நன்றி
@அன்பரசன்
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?
@நேசமித்ரன்
நன்றி
@சூர்யா
நன்றி சரி பண்ணிட்டேன். நீங்க இருந்ததை எழுத மறந்திட்டேன்
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி
@முகிலன்
:(
@
அடுத்த முறை ஏத்திடுவோம்.. காரத்தை
@அக்னிப்பார்வை
நன்றி
@லோஷன்
நன்றி
@கதிர்
வாய்பளித்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்
நன்றி
@மோகன்குமார்
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.