சிங்கப்பூரில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும், கேப்டன் டிவியில் அக்கரை என்கிற ஒரு நிகழ்ச்சியை நான் இயக்க இருக்கிறேன். அந்நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலையை பற்றியும், அவ்வூரை பற்றிய சுற்றுலா தகவல்களையும், அவ்வூரில் உயர்ந்த நிலையில் இருக்கும் பத்து தமிழர்கள் பற்றியும், போராடி பணம் ஈட்டி ஊருக்கு அனுப்பும் தமிழர்களின் வாழ்க்கை நிலையை பற்றியும், பேட்டிகள் எடுக்கவிருக்கிறோம். அதே போல தமிழகத்தில் அவர்களின் குடும்பத்தையும் பேட்டி எடுக்கவிருக்கிறோம். இம்முறை சிங்கப்பூருக்கு வருவதாக இருக்கிறது எங்களது குழு. உங்களுக்கு தெரிந்த உயர் நிலை வகிக்கும் தமிழர்கள், பொருளாதார ஆதாரத்துக்காக, குடும்பத்தை பிரிந்து வாழ்ந்துகொண்டு போராடும் தமிழர்களை பற்றிய விபரஙக்ளை சொன்னால் அவர்களின் அனுமதியோடு நாங்கள் அவர்களை பேட்டி எடுப்போம். மேலும் தகவல்களுக்கு என்னுடய தொலைபேசியிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சந்தோஷச் செய்தி
என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை பற்றிய விமர்சனம் நேற்றைய தினமலரில் வெளிவந்துள்ளது. அதை பகிர்வதில் எனக்கு சந்தோஷமே. தினமலரை பார்த்து தொலைபேசியில் பாராட்டிய அத்துனை நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.. இத்தொகுப்பில் பலராலும் பாராட்டப் பட்ட “முத்தம்” சிறுகதையை ஒரு டெலிபிலிமாக எடுக்க முயற்சிசெய்து வருகிறேன்.தயாரிப்பாளர்கள் வரவேற்க படுகிறார்கள்.:)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பான ‘ஏ மாய சேசாவூ” படத்தை பார்தேன். திரிஷாவை விட தெலுங்கு கதாநாயகி சமந்தா அட்டகாசம். கொஞ்சம் கமலினி முகர்ஜி சாயலில் மனசை அள்ளுகிறார். சிம்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் இரண்டாவது படத்திற்கு நாக சைதன்யா நன்றாகவே செய்திருக்கிறார். வழக்கமாய் ரெண்டு மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் எல்லாம் ஒரே மாதிரி ஷாட்களில் அடுத்தடுத்து இரண்டு மொழிகளிலும் எடுப்பார்கள். ஆனால் இப்படத்தில் பாடல் காட்சிகளிலிருந்து படத்தில் வரும் முக்கால் வாசி காட்சிகளில் வசனம் மட்டுமே மாறவில்லை மற்றபடி எல்லா ஷாட்களும் வேறு வேறு. காமரா மேன் கேரக்டருக்கு பதிலாய் நம்ம விநாயகுடு கிருஷ்ணடு கேரக்டரும் நன்றாக இருக்கிறது. கவுதம் நிஜமாகவே ஒரு வித்யாசமான இயக்குனர் தான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சாப்பாட்டுக்கடை
சென்னை செனடாப் ரோடில் ஒரு பஞ்சாபி தாபா இருக்கிறது. வெஜ் அண்ட் நன் வெஜ் இரண்டும் கிடைக்கும். இங்கு மதியம் 70 ரூபாய்க்கு வெஜ் புப்பே வழ்ங்குகிறார்கள். புல்கா, நான், பரட்டா, இரண்டும் சைட் சிஷ்ஷுகள், ஒரு சைனீஷ் சைட் டிஷ், தயிர்சாதம் ஊறுகாய் என்று அமர்கள படுத்துவார்கள். இதனூடே அன்லிமிட்டட் ஜிலேபி வேறு அடுப்பிலிருந்து சுடச்சுட.. நிச்சயம் ஒரு அருமையான மதிய உணவை சுவைப்பீர்கள். அதுக்கு நான் கேரண்டி.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார தத்துவம்
வாழ்க்கை நமக்கு சிரிப்பதற்கு மட்டுமில்லை அழவும் கற்று கொடுக்கிறது. காதலிப்பதன் மூலமாய்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார புத்தகம்
சுஜாதாவின் ”கடவுள்களின் பள்ளத்தாக்கு”. பல்வேறு காலகட்டங்களில், பல பத்திரிக்கைகளில் சுஜாதா எழுதிய கட்டுரை தொகுப்புகள். இதில் அவர் பயணம், இலக்கியம், சினிமா, அரசியல், பொது என்று வழக்கம் போல எல்லா தளங்களிலும் அவரின் விஸ்தீரணத்தில்….. என்ன சொல்ல தல புத்தகத்தை பற்றி?. வழக்கம் போல் சூப்பர். இது ஒரு உயிர்மை வெளியீடு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் ஒரு சர்வே செய்து ஒரு பெரிய விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன வென்றால் அந்நாட்டினர் சராசரியாய் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்பதைத்தான். இவர்களது கண்டுபிடிப்பில் நாளொன்றுக்கு நான்கு பேர்களில் ஒருவர் தினமும் பொய் சொல்வதாகவும், அதிகபட்சமாய் நான்கு பொய்கள் சொல்வதாகவும், ஆண்டுக்கு 1500 பொய்கள் சொல்வதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அதிகமாய் சொல்லும் பொய் எது என்று தெரியுமா? “சாரிம்மா.. உன் செல்போனின் சிக்னல் கிடைக்கலை” என்பதுதானாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார பதிவர்
மயில் ராவணன் என்கிற பெயரில் எழுதிவரும் இவரின் பல டாக்குமெண்டரி படஙக்ளை பற்றிய விமர்சனங்களால் கவர பெற்றேன். எழுத்தாளர் வா.மு.கோமுவின் நண்பர். அவரின் சில பல கதைகள், மற்றும் கவிதைகள் கூட இவரது பதிவில் இடம் பெற்றிருக்கிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏ ஜோக்
ஒரு பணக்கார விதவை பெண் தனக்கான மணமகனை தேடி விளம்பரம் கொடுத்தாள் மூன்று கண்டிஷன்களுடன்.
1. அவளை அடிக்கக்கூடாது
2. அவளை விட்டு ஓடக்கூடியவனாய் இருக்கக்கூடாது
3. கட்டிலில் சிறந்தவனாக இருக்க வேண்டும்
விளம்பரம் வெளிவந்தவுடன் ஏகப்பட்ட மெயில்களும், கடிதங்களும், நேரிடையான அழைப்புகள் வந்தவண்ணமாய் இருந்தாலும் அவளுக்கு எவரையும் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவளின் வீட்டு டோர் பெல் அடிக்க திறந்து பார்த்தால், இரண்டு கையும் காலும் இல்லாத ஒருவன் டோர் மேட்டில் இருக்க, அவனை பார்த்த பெண் “ நீ எதற்கு இங்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள். “உனக்கு சரியான கணவன் நான் தான்.” என்றான் “ எப்படி.?” என்றவளிடம் “ இதோ பார் எனக்கு கையில்லை அதனால் உன்னை அடிக்க மாட்டேன். அதே போல் எனக்கு காலுமில்லை அதனால் என்னால் ஓடிப்போக முடியாது.” என்றவனை தடுத்து” மூன்றாவதற்கு?” என்று கேட்டாள். “நீ டோர் பெல் அடித்ததை கேட்கவில்லை?” என்றான் அவன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்
Post a Comment
50 comments:
நன்றி பழைமைபேசி சார்.
//கேப்டன் டிவியில் அக்கரை//
ஆவலாய் இருக்கிறது..!
டபுள் வாழ்த்துகள்!
அக்கரை இயக்குநருக்கு வாழ்த்துகள்!!!கேப்டன் டிவி சவுதியில் தெரியுமா?
அக்கரை இயக்குநருக்கு வாழ்த்துகள்!!!கேப்டன் டிவி சவுதியில் தெரியுமா?
வாழ்த்துகள் கே(பிள்)ப்டன் சங்கர்
வாழ்த்துகள்.
// வாழ்க்கை நமக்கு சிரிப்பதற்கு மட்டுமில்லை அழவும் கற்று கொடுக்கிறது. காதலிப்பதன் மூலமாய்.//
சூப்பர்.
டபுள் வாழ்த்துக்கள்..புதிய பணிக்கும்,தினமலர் அறிமுகத்துக்கும்..
//சாரிம்மா.. உன் செல்போனின் சிக்னல் கிடைக்கலை” என்பதுதானாம்.//
சிக்னல்? புரியல..
நான் சொல்வது 'சாரிம்மா..நீ அனுப்புன மெசேஜ் எனக்கு வரல' :)
வாழ்த்துகள். அசத்துங்க சார்:))
தினமலர்ல புத்தக விமர்சனம் வாழ்த்துக்கள்.
சீக்கிரம் சிங்கையில் அக்கரை நிகழ்சி படப்பிடிப்பில் சந்திப்போம்.
தத்துவம் & ஜோக் ரெண்டும் ரொம்ப சூப்பரு.
வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா...
சின்னத்திரையிலும் கலக்குங்க...
//என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை பற்றிய விமர்சனம் நேற்றைய தினமலரில் வெளிவந்துள்ளது.
வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும், கேப்டன் டிவியில் அக்கரை என்கிற ஒரு நிகழ்ச்சியை நான் இயக்க இருக்கிறேன். //
வாழ்த்துக்கள் அண்ணா
//ஏ ஜோக்
ஒரு பணக்கார விதவை பெண் தனக்கான மணமகனை தேடி விளம்பரம் கொடுத்தால் மூன்று கண்டிஷன்களுடன். //
ஜோ....ஏ ஜோக் வகை என்றாலும் விதவை என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கத் தேவை இல்லை. நான் புரட்சிக்காக இதைக் கூறவில்லை. மறுவாழ்கைத் தேடும் பெண் என்று குறித்தால் அது விதவை மற்றும் மணமுறிவு செய்து கொண்டோரை பொதுவாகக் குறிக்கும, அதையும் கூட தவிர்க்கலாம். இந்த ஜோக்கில் விதவை என்று மட்டுமே குறித்தால் அது விதவைகளைப் பற்றி பலருக்கும் தவறான பார்வையையும் சேர்த்தே ஏற்படுத்தும்.
பாதிரியார், சாமியார், மருத்துவர்களை ஜோக்குக்காகப் பயன்படுத்துகிறோம், காலம் காலமாக பெண்களை குறிப்பாக விதவைகளையாவது ஜோக்கிற்கு சொல்வதை குறைத்துக் கொள்ளலாமே.
ஐயோ சங்கர் சாமி...உணர்ச்சிவசப்பட்டு நான் கருத்துக் கூறவில்லை. ஒரு பரிந்துரை மட்டுமே.
தினமலரின் விமர்சனம் இன்னும் உங்கள் சிறுகதை தொகுதியை பரவலாக கொண்டும் போய் நிச்சயம் சேர்க்க உதவும்.
புதிய டி.வி
புதிய நிகழ்ச்சி..
கலக்குறீர் சங்கர்.. :))
வாழ்த்துக்கள் தல! அடிச்சு ஆடுங்க! :)))
வாழ்த்துக்கள்!... :-)
வாழ்த்துகள் சார்
//வாழ்க்கை நமக்கு சிரிப்பதற்கு மட்டுமில்லை அழவும் கற்று கொடுக்கிறது. காதலிப்பதன் மூலமாய். //
இந்த தத்துவம் பிடிச்சிருக்கு....
கொத்து பரோட்டா எப்பவும் போல நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள், டீ.வி, மற்றும் தினமலர்
செய்திகளுக்கு.
உங்கள் சிறுகதை தொகுதியை
தபாலில் அனுப்பமுடியுமா?
ஆம் எனில்
விபரம்?
அக்கரைக்கும் என்னைப் பற்றிய அக்கறைக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். வழமைப்போல் புரோட்டா நல்ல சுவை.
@prasanna
நன்றி
@கல்ப்-தமிழன்
நன்றி
@புதுவை சிவா
மிக்க நன்றி
@இராகவன் நைஜிரியா
நன்றி அண்ணே
@வெற்றி
சிக்னல் பற்றி மனைவியிடமோ.. அல்லது காதலியிடமோ சொல்வது தலைவரே
@வானம்பாடிகள்
நன்றி
@ஜோசப் பால்ராஜ்
நன்றி.. நிச்சயம சந்திப்போம்.
@ஜெகன்
நன்றி ஜெகன்
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@கோவி.கண்ணன்
அண்ணே.. இப்பத்தான் நான் முதல் முதலா எழுதியிருக்கேன். உடனே நிறுத்தணுமா..:)
@யெஸ்.பாலபாரதி
நன்றி தலைவரே
@சரவணக்குமரன்
நன்றி
@ஆ.ஞானசேகரன்
நன்றிதலைவரே
@நல்லவன் கருப்பு
நன்றி
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி
@மதுமிதா
உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். இங்கிருக்கும் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஆன்லைனில் கூட வாங்க முடியும்.
அக்கரை பல சிந்தனைகளை தூண்டும் நிகழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சார்
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் .....
"அக்கரை" சிறப்பானதாக இருக்கும், ஏனெனில் அதில் ஒரு பாதி இன்னொரு "அங்காடித்தெரு"
கலக்குங்க தல... வேற வழியே இல்லை.. இனி கேபிள் சங்கர் பெயரை சிங்கை சங்கர்னு மாத்த வேண்டியதுதான்
wishes.
as KRP senthil says 1st you could cover the problems within India/within Tamilnadu before going to singapore, dubai, america
வாழ்த்துக்கள்!... :-
அக்கரை நிகழ்ச்சிக்கு, வாழ்த்துக்கள் சங்கர் அண்ணே...
வாழ்த்துகள் ஜி. :))
வாழ்த்துகள்!
//இத்தொகுப்பில் பலராலும் பாராட்டப் பட்ட “முத்தம்” சிறுகதையை ஒரு டெலிபிலிமாக எடுக்க முயற்சிசெய்து வருகிறேன்.தயாரிப்பாளர்கள் வரவேற்க படுகிறார்கள்.:) //
ங்கொய்யால இங்கயும் மார்கெட்டிங்க விடலயாய்யா நீயி :)))
அக்கரைக்கு வாழ்த்துக்கள் கேபிள்
அருமையான சிந்தனைகள் மற்றும் செய்திகள். வாழ்த்துகள்!
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன்.
உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை
மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துகள் கேபிள்
கோவி. கண்ணனின் கருத்தை அப்படியே பரிதுரையாக அல்ல கருத்தவே வழிமொழிகிறேன்.
பாஸ், கருத்திற்கும் பரிந்துரைக்கும் என்ன வேறுபாடு?
வாழ்த்துக்கள். தினமலரில் செய்தி வந்ததற்காக.
வாழ்த்துக்கள்... கலக்குங்க...
vazhthukkal for TV &dinamalar
anna
//////இந்த வார கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் ஒரு சர்வே செய்து ஒரு பெரிய விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன வென்றால் அந்நாட்டினர் சராசரியாய் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்பதைத்தான். இவர்களது கண்டுபிடிப்பில் நாளொன்றுக்கு நான்கு பேர்களில் ஒருவர் தினமும் பொய் சொல்வதாகவும், அதிகபட்சமாய் நான்கு பொய்கள் சொல்வதாகவும், ஆண்டுக்கு 1500 பொய்கள் சொல்வதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அதிகமாய் சொல்லும் பொய் எது என்று தெரியுமா? “சாரிம்மா.. உன் செல்போனின் சிக்னல் கிடைக்கலை” என்பதுதானாம். //////
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகவேண்டும் . இது பொய்யயா ? இல்லை உண்மையா ?
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா.
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் கேபிள் யூத் அங்கிள்..
;-)
வாழ்த்துக்கள் கேபிள்ஜி..
வாழ்த்துக்கள் கேபிள்
கோவியின் கருத்தை வழிமொழிகிறேன் ...
@காவேரி கணேஷ்
நன்றி
@முகிலன்
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
நிச்சயம் உஙக்ளுடன் இதை பற்றி பேச வேண்டும்
@சுகுமார் சுவாமிநாதன்
அது சரி.. இன்னும் நான் பல ஊருக்கு போகணும்யா..
@ராம்ஜியாஹூ
எனக்கு ஒரு ப்ராஜெக்ட்டை தாருங்கள் நிச்சயம் செய்கிறேன்.
@நாய்குட்டி மனது
நன்றி
@குரு
நன்றி
@ஷங்கர்
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி
@எம்.எம்.அப்துல்லா
கடமைய கரெக்டா செய்யணுமில்லை..
@மோகன்குமார்
நன்றி
2புனிதா
நன்றி
@நர்சிம்
நன்றி
@புண்ணாக்கு மூட்டை
இப்ப பிரச்சனை கருத்திலயா. பரிந்துரைக்கிறதிலையா..?
@க.பாலாசி
நன்றி
@மசித்
நன்றி
2ஞானம்
நன்றி
@மேனகாசதியா
நன்றி
@பனித்துளி சங்கர்
கண்டுபிடிங்க
@இராமசாமி கண்ணன்
நன்றி
@ரவிச்சந்திரன்
நன்றி
@கும்க்கி
யாருக்கு பின்னூட்டம்போட்டீங்க..
@நாடோடி
நன்றி
@சாம்ராஜ்யப்ரியன்
நன்றி
@லோகன்
பின்ன யாரை வச்சித்தான் காமெடி பண்றதாம்.:)
vaalthukkal
அக்கரை சிறப்பாக வர வாழ்த்துக்கள்! தல!
Advance வாழ்த்துக்கள் அண்ணா!
Post a Comment