Thottal Thodarum

Apr 13, 2010

பார்கிங் எனும் பகல் கொள்ளை

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்...

sathyam theater pic சென்னையில் எனக்கு தெரிந்து ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் கூட சைக்கிளுக்கு 3 ரூபாயும், பைக்குக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாயும் வாங்கி கொண்டிருந்தார்கள். பின்னாளில் பல காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் என்பதே இல்லாமல் வழக்கொழிந்துவிட்டது.

சென்னையில் பைக் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டவர்கள் சென்னையில் ஏன் தமிழ் நாட்டிலேயே முதல் முதலாய் மல்ட்டிப்ளெக்ஸ் எனும் கான்செப்டை அளித்த சத்யம் தியேட்டர் நிறுவனத்தினர் தான். அருமையான உள் கட்டமைப்பு வசதியோடு ஒளி, ஒலி அமைப்புடன், முதல் தரமான வசதிகளூடன் அமைக்கப்பட்ட தியேட்டருக்கு மக்களின் அமோக ஆதரவினால் இன்றளவிலும் சென்னையின் மிக சிறந்த மல்ட்டிப்ளெக்ஸாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

முதலில் பைக்குக்கு பத்து ரூபாய் என்பது கஷ்டமாக இருந்தாலும், மெல்ல, மெல்ல அது பழகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் அவர்கள் நீங்கள் டிக்கெட் வாங்குவதற்கென்று ஒரு அரை மணி நேர இலவச பார்க்கிங் வசதி வைத்திருக்கிறார்கள். அதற்கென ஒரு ஆளை போட்டு அரை மணி நேரத்திற்கு பின் நீங்கள் அங்கேயே வண்டியை வைத்திருந்தால் அதற்கு 50 ரூபாய் வரை ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். இவர்கள் பத்து ரூபாய் வாங்க ஆரம்பித்தவுடன் பக்கதில் இருந்த உட்லாண்ட்ஸ் வாங்க ஆரம்பித்தது. அவர்கள் கூட பரவாயில்லை, சென்னையில் மிக விஸ்தாரமான பார்க்கிங் இடம் கொண்ட தியேட்டர்களில் உட்லாண்ட்ஸ், பைலட், சத்யம் ஆகியவை ஆகும். ஆனால் இவர்கள் அளவுக்கு தியேட்டரில் ஒலி,ஒளி வசதியோ, கட்டமைப்பு வசதியோ, பார்க்கிங் வசதியோ, இல்லாத தியேட்டர்களான மெலடி, ஜெயப்ரதா( இப்போது மூடப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு வரி பாக்கியினால்) போன்றவைகளும் வாங்க ஆரம்பித்ததுதான். கேட்டால் சத்யம்ல வாங்கறாங்க இல்லை.. என்று சொல்கிறார்கள். சத்யமில் தியேடட்ர் பூராவும் வேர்காம ஏஸி போடுறாங்க நீஙக் போடுறீங்களா? சீட் எல்லாம் நல்ல வசதியா வச்சிருக்காங்க நீ வச்சிருக்கியா என்று யாரும் கேட்பதில்லை. என்னை தவிர.
kamala theatre சரி எல்லோரும் தியேட்டர் வசதிகளை மேம்படுத்துறாஙக்ளோ இல்லையோ பார்க்கிங் ரேட்டையும், டிக்கெட் ரேட்டையும் சத்யம் தியேட்டரை பார்த்து ஏத்திட்டானுங்க. இவனுங்களுக்கு அப்பன் ஒருத்தன் அரம்பிச்சான். சென்னை சிட்டி செண்டர்ல ஐநாக்ஸுனு ஒண்ணை. சென்னையில் மால் கான்செப்டில் வந்த முதல் தியேட்டர் என்று சொல்லலாம். இங்கு படம் பார்க்க மட்டும் வருபவர்களுக்கு தியேட்டர் ஆரம்பித்த சில நாட்கள் தனியே பார்க்கிங் என்று பத்து ரூபாய் வாங்கினார்கள். பின்பு சில நாட்களீலேயே முதல் இரண்டு மணி நேரத்திற்கு பத்து ரூபாயும், அடுதத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து ரூபாயும் வாங்க ஆரம்பித்தார்கள். உள்ளே போகும் போதே தியேட்டரா என்று கேட்டு விட்டு பதினைந்து ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். இங்கும் என்னை போல் சிலர் மட்டும் தான் முதல் இரண்டு மணிநேரங்களுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு போகும் போது மேலும் சில மணி நேரங்கள் ஆகியிருந்தால் அதற்கேற்ற பணத்தை வாங்கிக் கொள்வார்கள்.  இந்த தியேட்ட்ரில் நீங்கள் டிக்கெட் ஆன்லைனில் வங்கினால் பரவாயில்லை டிக்கெட் நிச்சயம் என்று வண்டியை பார்க்கிங் செய்யலாம். ஆனால் இங்கே டிக்கெட் இருக்கிறதா இல்லையா என்று பார்பதற்கே பத்து ரூபாய் தண்டம் அழ வேண்டும். வெறும் சினிமா மட்டுமே பார்க்க வருபவன் டிக்கெட் இருக்கிறதா இல்லையா என்று பார்பதற்கே பத்து ரூபாய் ஆழ் வேண்டும். டிக்கெட் இல்லையென்றால் பணம் எள்ளுதான்.

அடுத்த புலி நம்ம உதயம் தியேட்டர் இவனுங்க தியேட்டர்ல வீக் எண்டுல படம் பார்க்க பார்க் பண்ணிட்டு உள்ளே போறதுகுள்ள படம் இண்டெர்வெல் விட்டுருவான். அதே லட்சனம் தான் நம்ம சாந்தி,  தேவி காம்ப்ளெக்ஸ் எல்லாம்.

சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டராக இருந்து இரண்டு ஸ்கிரீன் தியேட்டராக மாறிய கமலா தியேட்டரின் அழும்பு அதை விட அநியாயம். பைக் பார்க்கிங் டைரக்டாக பதினைந்து ரூபாய். அம்மாம் பெரிய மாலே முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ரேட்டும், அடுத்து வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ரேட் வாங்கும் போது, இவர்களுக்கென்ன மூத்திர சந்து போல இரண்டு இடங்களை தவிர மிக குறுகலான பார்க்கிங் வசதியுள்ள இவர்கள் தியேட்டருக்கு  பதினைந்து ரூபாய் கொள்ளை.

மால்காரர்கள் சொல்லும் ஒரு காரணம் இங்கே வருபவர்கள் படம் மட்டும் பார்ப்பதில்லை. குறைந்த பட்சம் ஜோடியாக வருபவர்கள் வண்டியை வைத்துவிட்டு நான்கு முதல் ஆறு மணிநேரம் சுற்றி விட்டுதான் வருகிறார்கள். இவர்களில் யார் சினிமாவுக்கு போனவர்கள். யார் சும்மா விண்டோ ஷாப்பிங் செய்தவர்கல் என்று எங்களூக்கு தெரியாது. அதனால் தான் அவ்வாறு வாங்குகிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். ஏன் வாங்க முடியாது தியேட்டருக்கு என்று தனியே பார்க்கிங் லேன் போட்டுவிட்டால் கண்டு பிடிக்கலாமே.?
parking ticket இதெல்லாம் கொடுமை, கொடுமை என்று குதித்தால் இன்னொரு கொடுமை வந்து இங்க கூத்தாடுது. அதான் புதுசா திறந்திருக்கிற பி.வி.ஆர் சினிமாஸ்தான். அம்பா மால்ல பார்க்கிங் எல்லாம்  அருமையா பேஸ்மெண்டுல வண்டிய வெய்யில்ல காய வைக்காம எல்லா ப்ரோட்டீன் குறைஞ்ச .. கொண்ட பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் ரேட்டில் நீங்க மயக்கமே போட்டு விடுவீர்கள். இவர்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய். பின்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து ரூபாய். நீங்கள் நாலாவது ப்ளோரில் இருக்கு தியேட்டருக்கு சென்று கவுண்டரில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கவே பத்துரூபாய் அழ வேண்டியிருக்கும்.  இதை விட கொடுமை என்னவென்றால் வார இறுதி நாட்களில் முதல் ஒரு மணிக்கு பத்து ரூபாயும், அடுத்து வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இருபது ரூபாயும் வாங்குகிறார்கள். ஸோ.. நீங்க ஒரு படம் பார்க்க போனால் தியேட்ட்ர் காசு 120 ருபாயும், குறைந்த பட்சம் அரை மணி நேரம் முன்னதாக இருக்க வேண்டிய பட்சத்தில்  மூன்று மணி நேரத்திற்கு சாதாரணமாக முப்பது ரூபாயும், வார இறுதி நாட்களுக்கு 50 ரூபாயும் பார்க்கிங்குக்கு மட்டும் செலவாகும்.
inox chennaiஇவ்வளவு புலம்பல்களின் நடுவில் பி.வி.ஆர் தியேட்டரை பற்றி சொல்லியாக வேண்டும் மிக அருமையான டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்புடன், ஒரு சீட்டிற்கும், மற்றொரு சீட்டிற்கும் ஒருவர் கை இன்னொருவர் மீது படாது, அதே போல் யார் காலும் மிதிபடாமல் நடக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட அருமையான தியேட்டர். ரசிக்குமபடியான இண்டீரியர், அற்புதமான ஏஸி, பயோ டெக்னாலஜியின் மூலமாய் தண்ணீரே கிட்டத்தட்ட பயன்படுத்தாத கழிவறைகள் என்று அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் விற்கும் ஸ்நாக்ஸ் விலையை தவிர, குறைந்த பட்ச விலையே 50 ரூபாயிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அத்துனை தியேட்டரிலும் டிஜிட்டல் புரொஜெக்‌ஷனை நிறுவியிருக்கிறார்கள். இவர்களின் சீட்டிங் வழக்கமாய் எல்லா தியேட்டர்களில் இருப்பது போல பின்னால் இருக்கும் வரிசை ஏ விலிருந்து ஆரம்பிக்காமல் திரைக்கு முன்னால் இருக்கும் வரிசையிலிருந்து ஏ வரிசை ஆரம்பிக்கிறது. விரைவில் கோயம்பேடு ரோகிணி  தியேட்டருக்கு  ஆப்பு வரும்  என்று தெரிகிறது. மேலே சொன்ன எந்த வித வசதிகளும் இல்லாமல் அவர்கள் தியேட்டரில் குறைந்த பட்சம் முதல் வாரத்தில் 100 ரூபாய் தான் டிக்கெட். விரைவில் அவர்கள் தியேட்டரை  புதுப்பிக்காவிட்டால் மக்களிடம் பப்பு வேகாது என்றே சொல்லுவேன்..

பிவிஆர் காரர்கள் நிச்சயம் மாலின் முகப்பிலேயே அவர்களது பாக்ஸ் ஆபீஸுக்கான ஒரு கவுண்டரை நிச்சயம் திறக்க வேண்டும். அதே போல் சினிமா டிக்கெட் வாங்குபவர்களுக்கு மட்டுமாவது சத்யத்தை போல டெம்பரவரி பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் இல்லையேல் டிவிடியே நமஹ என்று வீட்டிலிருந்தே படம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் ரசிகர்கள்.

ஏதோ கலைஞர் புண்ணியத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளோடு தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே வசதியுள்ள மற்ற மாநில பிவிஆர் மற்றும் இதர மல்ட்டிப்ளெக்ஸ்லி எல்லாம் முதல் வாரத்தில் குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை போகும். ரசிகர்கள் பொன் முட்டையிடும் வாத்து தான் அதற்காக முழுவதாக அறுக்க நினைத்தால் அவர்கள் இழக்கப் போவது தியேட்டர் ரசிகர்களைத் தான். 

டிஸ்கி: இந்த லட்சணத்தில் வண்டிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது ஸ்பேர்பார்ட்ஸ் காணாமல் போனாலோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று ஒரு டிஸ்கி வேறு காசை வாங்கிக் கொண்டு.

கேபிள் சங்கர்
Post a Comment

56 comments:

க ரா said...

ம்ம். என்னத்த பன்றது இவனுங்கள.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஏதோ கலைஞர் புண்ணியத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளோடு தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கிறது.
கலைஞ்சர் ஆட்சி
2011 லல 2021 வரைக்கும்
டோய்

அரவிந்தன் said...

இங்கே பிவிஆர்-ல 15 ரூபாய் பார்க்கிங் கட்டணம் ஆனால் படம் பார்க்க குறைந்தபட்சம் ரூ 150 வாரயிறுதியில் ரூ200

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

இராகவன் நைஜிரியா said...

// ரசிகர்கள் பொன் முட்டையிடும் வாத்து தான் அதற்காக முழுவதாக அறுக்க நினைத்தால் அவர்கள் இழக்கப் போவது தியேட்டர் ரசிகர்களைத் தான். //

ரசிகர்களை குத்துயிரும் கொலையுறுமாக்கிவிட்டு, அய்யோ அய்யோன்னு அலற ஆரம்பிச்சாத்தான் தெரியும்.

GEETHA ACHAL said...

நீங்க சொல்வது உண்மை...தியோட்டர் என்று இல்லாமல் இப்பொழுது அனைத்து இடத்திலும் பார்க்கிங் தொல்லை அதிகம்..கோயில்களிலும் பார்க்கிங்க்கு என்று எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டராக இருந்து இரண்டு ஸ்கிரீன் தியேட்டராக மாறிய கமலா தியேட்டரின் அழும்பு அதை விட அநியாயம். பைக் பார்க்கிங் டைரக்டாக பதினைந்து ரூபாய்.//

இந்த ஒரு காரணத்திற்காகவே நான் கமலா போவதில்லை. எனக்கு சென்னையில் பிடிக்காத ஒரே இடம் கமலாதான். அவங்களும் அவங்க வரவேற்ப்பும்.

பிவீயார் ஓபன் பண்ணியாச்சா? எப்போ அண்ணா? ரோஹிணிக்கு சங்குதானா?

நீங்கள் சினிமா வில்தான இருக்குறீங்க. இந்த பார்கிங் கொள்ளைக்கு எதாச்சும் பண்ண முடியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//குறும்படம்//

முதல் மரியாதை பாகம் 2 ஆ? ஹீரோ ன்னு நாற்ப்பது வயது ஆளை காட்டுறீங்க?

Unknown said...

நான் இருக்கிற ஊர்ல எல்லாம் பார்க்கிங்குக்கு காசே வாங்கிறது இல்லைங்க..

திருநெல்வேலி ஜங்ஷன் said...

ahaa!!! cchennai ell eppadium kollaiya????????anna enga villagukku vanthudnga ! ammam suliiputtan.

திருநெல்வேலி ஜங்ஷன் said...

முதல் மரியாதை பாகம் 2 ஆ? ஹீரோ ன்னு நாற்ப்பது வயது ஆளை காட்டுறீங்க?

ramesh! nalla paarunga adu enthiran secound part nu nanikandran.

anpudan
gnanam

சைவகொத்துப்பரோட்டா said...

விரிவான அலசல்!!

VISA said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ....

Unknown said...

என்னத்துக்கு அவ்வளவு அவசரமா தியட்டருக்கு போய் படம் பாக்கணும்,
ஒரு பதினஞ்சு நாள் காத்திருந்தா, விமர்சனம் நல்லா இருந்தா,
ஒரிஜினல் படம் முப்பது ரூவாய்க்கு கிடைக்குது, வாங்கி ஹோம் தியட்டருல பாக்க வேண்டியதுதானே.

நான் சமீபத்தில் தியட்டரில் பார்த்த படங்கள்,
அங்காடித்தெரு, விண்ணைத்தாண்டி வருவாயா மட்டும்தான்.

ராம்ஜி_யாஹூ said...

இன்னமும் திரை அரங்கில் போய் படம் பார்க்கிறீர்களா.

இணையத்தில் விருப்பம் போல ஆன் ஆப் செய்து பார்க்கும் வசதி, எந்த திரை அரங்கிலும் கிடைக்காது.

Beski said...

அருமையான அலசல்.

பைரசியை ஒழிக்க நினைப்பவர்கள், தியேட்டர் டிக்கட் விலையுடன் ஒதையும் கவனத்தில்கொள்ளவேண்டும். நாம என்ன புலம்பி என்ன பிரயோசனம்... ஒருத்தனும் கண்டுக்கிறது இல்ல... ஆட்சி மாறுனாலும் ஒரு சில விசயங்களை மாற்றவே முடியாதுன்னே தோனுது...

Raju said...

ஒய் டென்சன்...?
படம் ரிலீஸாகி மூனே நாள் வெயிட் பண்ணுனா போதும்.
:-)

ரோஸ்விக் said...

அண்ணே, இப்போ எல்லாமே வியாபாரம் தான். இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பொறுக்கிங்க... அங்க உள்ள கழிப்பறைக்கும் கட்டணம் வசூலிப்பாய்ங்க... (நீங்க அவங்கள __-ல காசு பொறுக்கின்னு கூப்பிட்டாலும் கவலைப் பட மாட்டானுக)

பர்மா பசார்-ல பார்க்கிங் ப்ரீ. DVD க்களும் மிகக் குறைந்த விலையாம்... இதெல்லாம் தியேட்டர் முதலைகளுக்குத் தெரியாதோ??

இப்போ இந்த பொன் முட்டையிடுகிற வாத்துகளுக்கு இவனுக நோண்டுற நொந்துல சூ_ _ எரிஞ்சுக்கிட்டு தான் முட்டையே இடுறாங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கேபிள் அண்ணே, நீங்க என்ன தான் ஆதங்கத்தோட பதிவு எழுதினாலும், அவங்க செய்யறதுல தப்பு இருக்கற மாதிரி தெரியல!!

என்னைப் பொறுத்த வரை பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றைப் பயன்படுத்த / நடக்க ஆரம்பிக்க வேண்டும். நல்ல / நிறைய பேருந்துகளை அரசாங்கம் விட வேண்டும். எத்தனை பேருங்க ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கற தியேட்டருக்கு நடந்து போறோம்?? "வெயில் ஜாஸ்திப்பா"னு சொல்வீங்க. குளிர் காலத்துல / இராத்திரி மட்டும் நடந்து போற மாதிரி :))

இப்ப வர்ற ஒவ்வொரு படமும் சென்னைல குறைஞ்சது 15 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது. பெரும்பாலான தியேட்டர்கள் 1-2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கவே செய்கிறது (கோட்டூர்புரம்,மந்தவெளி போன்ற சில இடங்களைத் தவிர்த்து)

நம்ம ஜனத்தொகைக்கு எத்தனை ரூபாய்க்கு பார்க்கிங் கட்டனம் வைத்தாலும் கட்டுவதற்குத் தயாராகவே இருப்பார்கள்/ இருப்போம்!! மேலும் அம்பாமால், ஐ-நாக்ஸ் போன்ற மால்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ஓரளவு வசதியிருப்பவர்களே!!

அடுத்த வருசம் 50 ரூபாய் ஏத்தினாலும்... நம்ம ஆளுங்க கொடுக்கத் தயாராகவே இருப்பார்கள்!!

Jackiesekar said...

கமலா தியேட்டர் மேட்டரை கிழித்தமைக்கும்..பையா படத்துக்கு எழுதிய விமர்சனத்தில் நான் தியேட்டர் டிஸ்க்கியில் எழுதிய பார்கிங் கொள்ளையை ரகவாரியாக பிரித்து மேய்ந்தமைக்கும் என்னுடைய படங்களை அதாவது கமலா தியேட்டர் நிழற்படங்களை உபயோகபடுத்தியமைக்கு என் நன்றிகள்...

Beski said...

செந்தில்வேலன்,
நெருக்கடி அதிகமாக இருக்கும்போது மாற்றுவழிகளைப் பார்க்கவேண்டும். அதை யாரும் தேடக்கானோம்...

சில வருடங்களுக்கு முபு, சென்னை தி.நகரில், பல அடுக்கு வகை பார்க்கிங் ஒரு ஜப்பான் நிறுவன உதவியுடன் கொண்டுவரப்போவதாக செய்தித்தாளில் பார்த்தேன். அதன் பிறகு அவ்வளவுதான்.

---

இவர்களுக்கும் அதே பிரச்சனை இருக்கிறது, ஆனால் மாற்றுவழி செய்துவிட்டார்கள். விலை ஏற்றினாலும் பிற்காலத்தில் இடம் கிடைக்காத நிலை உருவாகும். அப்போதுதான் இந்த மாதிரி திட்டங்களை நோக்கிச் செயல்படவேண்டியிருக்கும். முன்னமே செய்துவைக்கும் பழக்கம்...

http://armchairtravelogue.blogspot.com/2009/07/worlds-largest-automatic-bike-parking.html

http://www.youtube.com/watch?v=yIHrmN_ptJc

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல சுட்டி அதி பிரதாபன்!!

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே, நெல்சன் மாணிக்கம் சிக்னல்ல ஏற்படற போக்குவரத்து நெரிசலால் பச்சையப்பா வரைக்கும் வாகனங்கள் நிற்கும். அந்த இடத்துல இப்படி ஒரு மால்... இனி போக்குவரத்து நெரிசலிற்குச் சொல்லவா வேண்டிம்??

நம்ம மாதிரி பதிவர்கள்.. ஏன் கட்டணம் அதிகரிக்குது கேட்கும் வேளையில், ஏன் அதிகமாக வாகனங்கள் இது போன்ற பார்க்கிங்கில் வருகிறதென்று கேட்க வேண்டும்??

Community Parking பற்றி குறைந்தது 10 வருடங்களாகப் பேசி வருகிறோம். ஆனால் வந்தபாடில்லை!!

ஒரு பிரச்சனைக்குக் 'காரணமானவர்'களைத் தேடுவதை விட.. 'பிரச்சனை'யைத் தேடுவதே நன்று.

ramtirupur said...

திருப்பூரில் தியெட்டர்களில் இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய் பண்ணிட்டாங்க சார்..

Vidhoosh said...

பாஸ்கர் மற்றும் என் விருப்பம் எப்போதும் சத்யம் தியேட்டர் தான். சௌகரிய-வசதிகள் என்பதால் மட்டும் இல்லை, அதை விட முக்கியமாக நான் தனியாகவே திரைப்படம் பார்க்கப் போனாலும் தொல்லை தராத crowd என்பதாலும். திடீரென்று ஒன்றும் யாரும் திரைப்படம் பார்க்கப் போவதில்லையே (இப்போதெல்லாம்) அரை மணி நேரம் முன்னாலேயே பஸ்ஸில் சென்று விட்டால், பார்க்கிங் தொல்லையிலிருந்து விடுபடலாம். பார்க்கிங் சார்ஜை விட, காரை அவ்ளோ நெருக்கமாக parallel(??!!) park செய்வதும், அடிபடாமல் எடுப்பதும் எப்போதுமே எனக்கு பெரிய challenge. :( தியேட்டருக்கு பயணம் என்றால் என் சாய்ஸ் எப்போதும் பேருந்துதான், காலாற கொஞ்சம் நடைதான்.

ரமேஷ் வைத்யா said...

nice one

CS. Mohan Kumar said...

இவ்ளோ கஷ்டம் இருக்கா? பிரிச்சு மேஞ்சுடீங்க

ஜெட்லி... said...

சங்கம் தியேட்டரை விட்டுட்டீங்க தலைவரே....
பைக் விட்டுட்டு டோக்கன் வாங்க அரை மணி நேரம்
அடிச்சு பிடிச்சு வாங்க வேண்டியதா இருக்கு......

Aba said...

இதைவிட ஒரு நாலு வருசம் பல்ல கடிச்சுகிட்டா.... சன் டிவில "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...."ன்னு நிம்மதியா பாக்கலாம்...

சிவகுமார் said...

Nan chennai la Ippa varai , theaterla padam pathathu illa , ellam valla OC DVD one and Only .

பனித்துளி சங்கர் said...

////இந்த லட்சணத்தில் வண்டிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது ஸ்பேர்பார்ட்ஸ் காணாமல் போனாலோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று ஒரு டிஸ்கி வேறு காசை வாங்கிக் கொண்டு./////

சொல்லிட்டீங்கள்ல

திருவாரூர் சரவணா said...

நானும் இங்க ஒரு தியேட்டர்ல வேலை செய்திருக்கேன். 1995 ம் வருஷம் பாட்சா படம் வந்ததுல இருந்துதான் டிக்கட்டுல இருக்குறது ஒரு விலை, வாங்குறது கொள்ளைன்னு ஆரம்பிச்சாங்க. அந்த காலகட்டத்துல அடுத்த ரெண்டு வருஷம் இன்னொரு தியேட்டர்ல டிக்கட்டுல போட்ட கட்டணம் மட்டும்தான் வாங்கினாங்க. அப்போ உள்ளூருல தினக்கூலி பார்க்குற ஆளுங்க நிறைய பேர் சாதாரண படத்தைக் கூட போய் பார்த்ததால ரெண்டு வாரம் நல்ல வசூல் செய்தது. பிறகு அந்த தியேட்டர் காரவுங்களும் அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு விலையை ஏத்துனாங்க. அப்ப,என் கூட தியேட்டர்ல வேலை பார்த்த ஒருத்தரும் நானும் அந்த தியேட்டருக்கு போனப்ப கூடுதல் விலை சொன்னாங்க. என் சக ஊழியர் "அப்போ தியேட்டர் போரையும் மாத்திடுங்கப்பா..."ன்னு சொன்னார். காரணம் வேற ஒண்ணும் இல்லை. தியேட்டர் பேரு சோழா...மனுநீதிக்கு பேர் போன திருவாரூர்ல இந்த ஒரு தியேட்டர்ல பேருக்கு ஏற்ற படி இருந்த டிக்கட் விலையை தாறுமாறா ஏத்துனதுக்கு இப்படி ஒரு பதில் சொன்னாரு. தியேட்டருக்கு ஆளுங்க வராம விரட்டி அடிக்கிறதுல இவங்களுக்கு பி.ஹெச் டி பட்டமே தரலாம்.

ராஜரத்தினம் said...

//ஏதோ கலைஞர் புண்ணியத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளோடு தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கிறது.//

நீங்க சினிமா பார்ப்பதற்கு அவர் ஏன் புண்ணியம் பண்ணனும். அவர் பண்ண புண்ணியத்துக்கு எப்ப பாராட்டு விழா?

சீனு said...

சில மாதங்களுக்கு முன் சத்யம் சென்ற பொழுது, பார்க்கிங் செய்துவிட்டு டோக்கன் கேட்டால் உள்ளே வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டனர். உள்ளே சென்று 10ரூ கொடுத்து ஒரு டோக்கன் வாங்கி கொண்டேன். ஏன் வெளியே பார்க்கிங் இடத்திலேயே கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, "தெரியல சார். யூ.எஸ்.ல இப்படித்தானாம். அதான் இங்கேயும்" என்று பதில் வந்தது. என்ன நடந்ததோ...பின் கொஞ்ச நாள் கழித்து பழைய மாதிரியே மாற்றிக் கொண்டனர்.

டிக்கெட் மினிமம் 100ரூ. பார்க்கிங் 10 - 20 ரூ. ஸ்நாக்ஸ் அனியாயத்துக்கு மினிமம் 50ரூ. ஏதாவது வாங்கி கொண்டு போனால், பிச்சைக்காரர்களை போல் வழியிலேயே பிடுங்கி கொள்கிறார்கள். உள்ளே வாங்க வேண்டும் என்றால், 1/2 லிட்டர் பாட்டில் தண்ணீர் 30 ரூ. இவ்வளவு செலவு பன்னி படம் பார்க்குறதுக்கு, 20ரூபாயில ஒரு திருட்டு டி.வி.டி.யில பாத்துடலாம்.

அப்படியே படம் பார்த்தே தீர வேண்டும் என்றாலும் (அவதார் 3டி போல), வெளியே நல்லா சாப்ட்டுட்டு, உள்ளே வாங்கவே கூடாது என்ற வைராக்கியத்துடன் தான் படம் பார்க்கிறேன்.

சீனு said...

சில மாதங்களுக்கு முன் சத்யம் சென்ற பொழுது, பார்க்கிங் செய்துவிட்டு டோக்கன் கேட்டால் உள்ளே வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டனர். உள்ளே சென்று 10ரூ கொடுத்து ஒரு டோக்கன் வாங்கி கொண்டேன். ஏன் வெளியே பார்க்கிங் இடத்திலேயே கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, "தெரியல சார். யூ.எஸ்.ல இப்படித்தானாம். அதான் இங்கேயும்" என்று பதில் வந்தது. என்ன நடந்ததோ...பின் கொஞ்ச நாள் கழித்து பழைய மாதிரியே மாற்றிக் கொண்டனர்.

டிக்கெட் மினிமம் 100ரூ. பார்க்கிங் 10 - 20 ரூ. ஸ்நாக்ஸ் அனியாயத்துக்கு மினிமம் 50ரூ. ஏதாவது வாங்கி கொண்டு போனால், பிச்சைக்காரர்களை போல் வழியிலேயே பிடுங்கி கொள்கிறார்கள். உள்ளே வாங்க வேண்டும் என்றால், 1/2 லிட்டர் பாட்டில் தண்ணீர் 30 ரூ. இவ்வளவு செலவு பன்னி படம் பார்க்குறதுக்கு, 20ரூபாயில ஒரு திருட்டு டி.வி.டி.யில பாத்துடலாம்.

அப்படியே படம் பார்த்தே தீர வேண்டும் என்றாலும் (அவதார் 3டி போல), வெளியே நல்லா சாப்ட்டுட்டு, உள்ளே வாங்கவே கூடாது என்ற வைராக்கியத்துடன் தான் படம் பார்க்கிறேன்.

Beski said...

இங்கு சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கிங்கையும் கவனிக்க.

இருபது ரூபாய் டோக்கன் கட்டணம் வசூலிப்பார்கள். உள்ளே சென்று பொருள் வாங்கும்போது அந்த டோக்கனைக் கொடுத்து இருபது ரூபாயைக் கழித்துக்கொள்ளலாம். மொத்தத்தில் பார்க்கிங் இலவசம்.

சென்னையில் எனக்குத் தெரிந்து இலவச பைக் பார்க்கிங் கொடுத்திருப்பது சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமே.

Sanjai Gandhi said...

கோவைல சினிமா தியேட்டர், மாநகராட்சி நிறுத்துமிடம் எல்லாம் 10 ரூபாய் தான்..

Unknown said...

/சென்னையில் எனக்குத் தெரிந்து இலவச பைக் பார்க்கிங் கொடுத்திருப்பது சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமே.
//

வடபழனி பிக்பஜாரில் கூட அப்படித்தான்

pichaikaaran said...

இன்னுமாடா நம்மளை நம்பி தேட்டருக்கு வர்றாயங்க ? - வருத்தபடாத தியட்டர் உரிமையாளர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

க. தங்கமணி பிரபு said...

சரியா சொன்னீங்க கேபிள்!

இதனாலதான் 18லர்ந்து 30ரூவா வரைக்கள்ளாற குடுமபம் முழுசுக்கும் படம் பார்க்க உதவும் கருப்பு மார்க்கெட் டிவிடிகளை ஒழிக்க முடியல!

இது மக்களாட்சி, அதான் அவங்க தியேட்டர் கொள்ளைக்காரர்களுக்கு பதிலா திருட்டு டிவிடிய ஆட்சில ஏத்திட்டாங்க!

மரா said...

அண்ணே நல்ல அலசல்.

Krishna said...

அனேகமா, எல்லாரோட ஆதங்கத்தையுமே நீங்க எழுதிட்டீங்க... ஆனா இந்த பதிவை, தியேட்டர் ஆட்கள் படிக்கணுமே??? எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணியே பழக்கப்பட்ட மக்கள், கேள்வினு ஒரு விஷயம் இருக்கறதையே மறந்து போய்ட்டாங்க. ஒரு பத்து பேர் கேள்வி கேக்க ஆரம்பிச்சா, மத்தவங்களும் கேக்க ஆரம்பிப்பாங்க.. இங்க initiate பண்றது யாருன்னுதான் குழப்பமே...

chennaivaasi said...

I just wanted to pass the below as well, recently I had been to Citicentre & Abhirami...

Citicentre
There is no water in Food Court
Parking - they provide a Smart card and if we lose that we will be charged the maximum possible parking plus 100/- fine. Why should i safe keep their smart card when they any way going to charge me the max. parking when I lose the slip


Abirami - They claim the Cooldrinks as 450 ml but it will not be more than 300ml.
Bathroom there is lot of smoking

Are the authorities looking at this?

R.Gopi said...

//ஏதோ கலைஞர் புண்ணியத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளோடு தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கிறது.//


******

யோவ் கேபிளாரே... சும்மா இருக்க மாட்டீரா!!?? நீர் சொல்றது “தல” காதுல விழுந்தா இதுக்காக ஒரு பாராட்டு விழா எடுங்கன்னு ராம நாராயணன், ஜெகத் கிட்ட சொல்லிட போறாரு......

R.Gopi said...

இங்க (துபாய்ல) ஒரு தியேட்டரில் “மொக்கசாமி, நொந்தசாமி, கந்தசாமி” படம் பார்க்க போனபோது இந்திய மதிப்பில் சுமாராக ரூ.375/- கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த பின், பார்க்கிங் சார்ஜ் என ரூ.600/-க்கும் மேல் தண்டம் அழுதோம்...

அந்த பார்க்கிங் சார்ஜ் கேட்டதும் கண்ணுல தானா தண்ணி வந்துச்சு... அத கர்சீஃப் வச்சு தொடச்சு பக்கெட் ஃபுல்லா புடிச்சு வச்சோம்...

அதுக்கு அப்புறம் தியேட்டர் பக்கமே போறதுல்ல...

நெக்ஸ்ட் “எந்திரன்” தான்...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

Anusha raman said...

சங்கர் சார் தங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மதுரை இல் அங்காடி தெரு பார்தேன் .டிக்கெட் ருபீஸ் 50 மட்டும் .புல் குளிர் வசதி .வின் நை தாண்டிவருவா யா மதுரை சுந்தரம் jazz ருபீஸ் 65 .பார்கிங் சர்கஸ் மிக குறைவு .அதனால் தங்களது திரை விமர் சனம் பார்த்து சினிமா பார் பேன்

karthik said...

Thats why i never see movies in Theater. only DVD. If you ppl reduce price around 20 i will come to theater

Unknown said...

போட்டோ எப்ப எடுத்தது BLUFFMASTER

DREAMER said...

நல்லா சொன்னீங்க கேபிள் சார், இது கிட்டதட்ட பெட்ரோல் விலை மாதிரிதான். கவர்மெண்ட் விலை ஏத்துனா, மிட்நைட்லியே ஏறிடும், ஆனா விலை குறைப்பு செஞ்சாங்கன்னா மட்டும், 'இல்லியே, எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலியே'ன்னு வெகுளியாப் பேசுவாங்க...!

//ரசிகர்கள் பொன் முட்டையிடும் வாத்து தான் அதற்காக முழுவதாக அறுக்க நினைத்தால் அவர்கள் இழக்கப் போவது தியேட்டர் ரசிகர்களைத் தான்.//
ஃபினிஷிங் டச் அருமை..!

-
DREAMER

இளமுருகன் said...

ஏதோ நீங்களாவது எழுதி இருகிங்க...பார்க்கலாம் ஏதாவது மாறுதான்னு

இளமுருகன்
நைஜீரியா

கடைக்குட்டி said...

அன்றாடம் பார்க்கக் கூடிய...
சொல்ல மறந்த பதிவு..


நிச்சயமா இது உங்க பெஸ்ட்டு பதிவு..

ஜோசப் பால்ராஜ் said...

திரையரங்குகளில் நம்மிடம் வசூலிக்கும் கட்டணம் நமது வண்டி நிறுத்துவதற்கும் சேர்த்து தான். ஆனால் நம்மிடம் தனியாக பார்க்கிங் சார்ஜ் என கொள்ளையடிக்கின்றார்கள் என ஒருமுறை ஏதோ ஒரு இதழில் ஒரு வழக்கறிஞர் கூறியிருந்ததை படித்த நினைவு. தயவு செய்து சட்ட வல்லுநர்களிடம் விசாரியுங்களேன். பொது நல வழக்கு மூலமாக இந்த கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டலாம்.

Thamira said...

வண்டியே காணாமல் போனாலும் நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லாத வரைக்கும் சரிதான்.!

பிவிஆர் இன்னும் போகவில்லை. பார்ப்போம்.

சீனு said...

//வண்டியே காணாமல் போனாலும் நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லாத வரைக்கும் சரிதான்.!

பிவிஆர் இன்னும் போகவில்லை. பார்ப்போம்.
//

இல்லை. அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் வசூல் செய்வது வண்டிக்கான பார்க்கிங் கட்டணம் தான். கேட்டு பாருங்கள். வண்டி காணாமல் போனால அவர்கள் தாங்கள் பொருப்பல்ல என்று தான் சொல்வார்கள். நான் கேட்டிருக்கிறேன்.

தியேட்டர் கட்டணம் வண்டியின் பார்க்கிங் கட்டணத்துக்கும் சேர்த்து தான் என்பது இதுவரைக்கும் எனக்கு தெரியாது. அப்ப, அவர்கள் மேல் தாராளமாக கேஸ் போடலாமே? பூனைக்கு யார் மணி கட்டுவது?

DHANS said...

நான் எப்பவும் சத்யம் தியேட்டர் அன்நேக்சர்ல ஓசில பார்க் பண்ணி பழகிட்டேன்

இத எப்போ புடுங்கப்போரங்க தெர்ல

கோவில்பட்டி ராஜ் said...

இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது எக்ஸ்பிரஸ் அவென்ன்யு...கடந்த சனிக்கிழமை போயிருந்தேன் .ஒன்றரை மணி நேரத்துக்கு நாற்பது ரூபாய் வசூல் செய்தார்கள்.விசாரித்ததில் மணிக்கு இருபது ருபாய் பார்கிங் கட்டணமாம் !!