அடுத்த நாள் காலையில் ராமிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, நானும் ஜெகதீசனும், கோவி.கண்ணனை சந்திக்க கிளம்பினோம். ”நான் உங்களை கோவியாரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே கிளம்புகிறேன் என்றார் ஜெகதீசன். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நானும் உங்களுடம் வருகிறேன் செண்டோசாவுக்கு என்றார். எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. ஏன் என்றால் அவர் என்னுடய் நெருங்கிய நண்பரை போல அச்சு அசலாய் இருந்தார். பேச்சை தவிர, மிக மிக அளந்த பேச்சு, கூர்ந்து கவனிக்கும் தன்மை, மிக இயல்பாய் எங்களுக்குள் ஒரு “கெமிஸ்ட்ரி” உருவாகிவிட்டது.
கோவியாருடன் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சண்டோசாவுக்கு கிளம்பினோம். சண்டோசாவில் பிரபலமான கேபிள் காருக்கு போகலாம் என்று நினைத்த போது அதை நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார்கள். கோவியார், ஜெகதீஷ் எல்லோருக்கும் வழக்கமாய் சிங்கப்பூர் வருபவர்களை எல்லாம் இம்மாதிரியான சுற்றுலா தளங்களுக்கு அழைத்து வந்து சுற்றி காட்டி சுற்றிக் காட்டியே ஒரு விதமான மொனாட்டனி நிலையில் இருந்தார்கள்.
சண்டோசா நம்ம ஊர் கிஷ்கிந்தா, வாட்டர்வேர்ல்ட் போல ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க்தான். ஆனால் நம்ம ஊரைப் போல உள்ளே செல்லும் போதே 400-500 ரூபாயை பிடிங்கிக் கொண்டு உள்ளே அனுப்பிவிட்டு, மொக்கை கேம்களை எல்லாம் அதில் சேர்த்துவிட்டு, நன்றாக இருக்கும் கேம்களுக்கு தனியே பிடுங்கும் நேக் எல்லாம் இல்லாமல் அனுமதி கட்டணம் 3 டாலர் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நமக்கு பிடித்திருந்தால் அதற்கான அனுமதி கட்டணம் கொடுத்து அந்த அந்த ரைடுக்கு போகலாம்.
டைகர் டவர் என்று ஒரு உயரே சுமார் 50 மாடி கட்டிடம் அளவில் எழும்பி, பின் மெல்ல ஒவ்வொரு அடியிலும் ஒரு சுற்று, சுற்றி டாப் ஆங்கிளில் ஊரை காட்டுகிறார்கள். அந்த ரைட் எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு புதியதாய் ஆரம்பிக்க இருக்கும் யுனிவர்சல் ஸ்டூடியோ ஏரியாவுக்கு சென்று படம் பிடித்துவிட்டு, அங்கிருந்து வாட்டர் வேர்ல்டுக்கு சென்றோம். கோவியாரும், ஜெகனும் நீங்கள் மட்டும் போய்வாருங்கள், என்று என்னை அனுப்பி வைத்தார்கள். ஏதோ கடலுக்குள் போகும் இம்பாக்ட்டை செட் போட்டு கொடுத்திருந்தார்கள். இதனால் சிங்கப்பூர் செல்ல இருக்கும் நண்பர்கள் எல்லோருக்கு தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் டூரிஸம் போடும் போட்டோக்களை பார்த்து ஆஹா ஓஹோ என்று நினைத்து கொண்டு போகாதீர்கள். ஒரு பெரிய மீன் தொட்டியை கட்டி அதனுள் நம்மை விடுகிறார்கள் அவ்வளவுதான். மற்ற படி மிகப் பெரிய ஆச்சர்யங்கள் ஏதுமில்லை. இதை சொன்ன போது கோவியார் முன்னாடியே சொன்னா உங்களுக்கு பெப் குறைஞ்சிரும் அதான் சொல்லலை என்று சிரித்தார்.
நான் மிகவும் ஆசைப்பட்டு போக முடியாத ஒரு இடம் கேஸினோ. உள்ளே செல்வதற்கு டிரஸ் கோட் பிரச்சனையால் போக முடியவில்லை. ஷூவும் பேண்டும் இருந்தால் மட்டுமே அனுமதி என்பதால் போக முடியவில்லை. உள்ளூர் காரர்கள் கேஸினோவுக்கு போவதற்கு 100 டாலர் கொடுத்தால்தான் அனுமதியாம். வெளிநாடுக்காரர்களுக்கு இலவசமாம். தன் நாட்டுக்காரர்கள் சூதாடி காசை இழப்பதை அரசு விரும்பவில்லையாம். அப்படியிருந்து உள்ளூர்காரர்கள் போய் கொண்டுதானிருக்கிறார்கள். விரைவில் சிங்கையில் ஒரு புத் கேசினோ உருவாகிவருகிறது. நகருக்குள்ளேயே.
இதற்கு நடுவில் சாமியும் வெற்றிக் கதிரவனும் போன் செய்ய அவர்களையும் இங்கே சண்டோசாவுக்கு வரச்சொல்லிவிட்டு, லேசர் ஷோவுக்கு டிக்கெட் எடுத்து வர சொல்லிவிட்டோம். அதே சமயத்தில் ஆஸ்த்ரேலியாவிலிருந்து வந்திருந்த கானாபிரபா எங்களுக்கு போன் செய்ய, அவரையும், பதிவர் டோன்லியையும், ஞான சேகரனையும் சண்டோசாவுக்கு வரச்சொல்லிவிட, மீண்டும் ஒரு குட்டி பதிவர் சந்திப்புக்கு தயாரானோம்.
சாதாரணமாகவே டூ பீஸில் அலையும் பெண்கள் இன்னும் சிறிய டூபீஸில் பீச் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் டால்பின் ஷோ ஆரம்பிக்க, அதையும் பார்த்துவிட்டு வந்தோம். இண்ட்ரஸ்டிங்.
லேசர் ஷோ ஆர்ம்பிப்பதற்கு இன்னும் நேரம் இருந்தததால் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கானாபிரபா ஆஸ்திரேலியாவுக்கு வாங்க என்று அழைப்பு விடுத்தார். (நிஜமாவே வந்திருவோமில்ல). மிக இயல்பாக பழகினார். பதிவுலகம், அதனால் ஏற்படும் நட்பு, சிங்கப்பூர், என்று பேச்சு கச்சேரி முடிந்து ஷோ ஆரம்பித்தது.
பதிவர் ஞானசேகரன் புதியதாய் அன்று தான் ஒரு எஸ்.எல்.ஆர். கேமரா ஐடி ஷோவிலிருந்து வாங்கிவந்திருந்தார். புகைப்படமெடுப்பதில் காதல் கொண்டவர். அவரது வெள்ளெந்தியான சிரிப்பு என்னை ஆட்கொண்டது. குறைவாகத்தான் பேசினார். இன்னும் கிராமத்து மணம் மாறாத ஒரு இயல்புத்தன்மை கொண்டவர். அவரின் கேமராவில் நிறைய படஙக்ள் எடுத்தோம். அண்ணே.. எடுத்தது இருந்தா கொஞ்சம் அனுப்பிச்சி வையுங்கண்ணே..
நிச்சயம் பார்க்க வேண்டிய ஷோ. சும்மா வெட்டவெளியில் லேசர்களை வைத்து டகல்பாஜி காட்டாமல். சொன்ன கதைக்குள் ஒரு அருமையான திரைக்கதையை அமைத்து வழங்கியதால் அந்த அரை மணி நேரம் போனது தெரியவில்லை. அருமையான ஷோ. சண்டோசா போனால் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஜோசப் போன் செய்து என்னை சந்திக்க குழலி புருஷோத்தமன், அவரது நண்பர் ராம் வந்திருப்பதாகவும் அதனால் இரவு உணவு மற்றும் எல்லாவற்றிக்கும் சிங்கை பதிவர் பிரபல கொடைகடைக்கு வரசொல்லிவிட்டார். கோவியார் தான் வீட்டிற்கு போய்விட்டு வ்ந்து ஜாயின் செய்து கொள்வதாய் சொல்லிவிட்டு கிளம்பினார். கோவியாரை பற்றி சொல்லியாக வேண்டும். மனிதர் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னையில் அடிக்கடி அவரை பார்த்திருந்தாலும் அவ்வளவாக பேசியதில்லை. அவரின் பதிவுகளில் பல சீரியஸ் விஷயங்களை பற்றி படித்ததிலிருந்து என் மனதினுள் இவர் ஒரு சீரியஸான மனிதர் என்ற பிம்பம் ஒட்டியிருந்தது. ஆனால் இந்த ஒரு வாரத்தில் அவருடன் பழகியதிலிருந்துதான் எனக்கு புரிந்தது. இவ்வளவு ஜாலியான மனிதரா என்று. அவ்வளவு இயல்பாகவும், கனிவாகவும், அதிராமல் பேசுகிறார். “என்னப்பா. இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்?” என்று அவர் கேட்கும் கேள்வியில் உள்ள நெருக்கத்தை பழகியவர்கள் தான் உணரமுடியும். எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது இவரின் அன்பு.
சாமி எங்களிடமிருந்து விடைபெற, நாங்கள் வழக்கம் போல் லிட்டில் இந்தியா. நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே செட்டிலாகியிருந்தார்கள். ராம், குழலி புருஷோத்தமன், ராம், ஜோசப் என்று எல்லோரும் சேர, மீண்டும் கலை கட்டியது கூட்டம். புருஷோத்தமன் அடுக்கடுக்காக பல கேள்விகளை சினிமாவை பற்றி கேட்டு வந்தார். விவாதங்களில் என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சிங்கப்பூர் வாழ்க்கை, க்ளைமேட், சினிமா, ஆயிரத்தில் ஒருவன், தமிழ்ப்படம், தமிழ்வெளி என்று பல விஷயங்களில் பேசிவிட்டு கிளம்பினோம். மிக அருமையான சந்திப்பு. குழலி புருஷோத்தமனுடன் அளவளாவியது மனதிற்கு சந்தோசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்றால் மிகையில்லை நன்றி தலைவரே.
அன்று இரவு பிரபாவீட்டில் தங்குவதாய் ஏற்பாடு, அவரின் ஷிப்ட் விஷய குழப்பங்களினால் ஏற்கனவே அவரின் வீட்டு சாவி என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தினால் கொஞ்சம் லேட்டாகவே கிளம்பினாலும் வழக்கம் 857,804 பஸ்களை பிடித்து சேர்ந்தேன். அடுத்த நாள் காலை வேறு ஒரு பதிவர் என்னை பிரபா வீட்டில் வந்து பிக்கப் செய்துகொள்வதாகவும், என்னுடய வாசகர் ஒருவர் என்ன சந்திக்க வருவதாகவும் சொல்லியிருந்தார். அடுத்த நாளுக்கான புதிய சந்திப்புகளை எதிர்பார்த்தபடியே தூங்கினேன்.
கேபிள் சங்கர்
Post a Comment
19 comments:
அய்யா நான்தான் பர்ஸ்ட்
/////சண்டோசா நம்ம ஊர் கிஷ்கிந்தா, வாட்டர்வேர்ல்ட் போல ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க்தான். ஆனால் நம்ம ஊரைப் போல உள்ளே செல்லும் போதே 400-500 ரூபாயை பிடிங்கிக் கொண்டு உள்ளே அனுப்பிவிட்டு, மொக்கை கேம்களை எல்லாம் அதில் சேர்த்துவிட்டு, நன்றாக இருக்கும் கேம்களுக்கு தனியே பிடுங்கும் நேக் எல்லாம் இல்லாமல் அனுமதி கட்டணம் 3 டாலர் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நமக்கு பிடித்திருந்தால் அதற்கான அனுமதி கட்டணம் கொடுத்து அந்த அந்த ரைடுக்கு போகலாம். ///////
ஆஹா எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருப்பார்களோ .
Present Cable
// புருஷோத்தமன் அடுக்கடுக்காக பல கேள்விகளை சினிமாவை பற்றி கேட்டு வந்தார்.
//
நாங்களும் வருவோமில்ல உங்களுக்கு போட்டியா படம் எடுக்க :-) மிக்க நன்றி அது தான் நம் முதல் அறிமுகம், ஆனால் நெருக்கமாக உணர்ந்தேன்...
தொடர்கதை போலவே இருக்கு,
முடிக்கிற ஸ்டைல்.
//சாதாரணமாகவே டூ பீஸில் அலையும் பெண்கள் இன்னும் சிறிய டூபீஸில் பீச் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் டால்பின் ஷோ ஆரம்பிக்க, அதையும் பார்த்துவிட்டு வந்தோம். இண்ட்ரஸ்டிங்.//
:) இடை பட்ட நேரத்தில் இல்லை இடையில் இருந்து எடுத்த கண்ணுடன்...!
அப்பறம் அங்கிட்டு பீச்சில் ஆந்திரியா ரேஞ்சுக்கு ஒரு நாயகியைப் பார்த்து நம்ம படத்துக்கு டிஸ்கசனுக்கு கூப்பிடலாமா என்று சொன்னதை நீங்கள் கவனமாக தவிர்த்திருப்பது கண்டனத்துக்குரியது.
செண்டோசாவுல நல்லா பொழுதை கழிச்சிருக்கீங்க ... :-)
இங்கு நிறைய பதிவர்கள் பழகுவதற்கு அன்பும், அறிவும், எளிமையும் நிறைந்தவர்கள். அவர்களையெல்லாம் நீங்க சந்திததில் மகிழ்ச்சி.
/அப்பறம் அங்கிட்டு பீச்சில் ஆந்திரியா ரேஞ்சுக்கு ஒரு நாயகியைப் பார்த்து நம்ம படத்துக்கு டிஸ்கசனுக்கு கூப்பிடலாமா என்று சொன்னதை நீங்கள் கவனமாக தவிர்த்திருப்பது கண்டனத்துக்குரியது.
//
அதை பத்தி சொன்னா அவஙக் அம்மாவை பத்தி சொல்லணும். வேற யாராவது சினிமாக்காரன் தூக்கிட்டு போயிட்டான்னா என்ன பண்றதுன்னுதான். தலைவரே.
சில ரகசியஙக்ளை வெளிய சொல்லப்படாது..:)
கேபிள் சங்கர்
// ஏதோ கடலுக்குள் போகும் இம்பாக்ட்டை செட் போட்டு கொடுத்திருந்தார்கள். இதனால் சிங்கப்பூர் செல்ல இருக்கும் நண்பர்கள் எல்லோருக்கு தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் டூரிஸம் போடும் போட்டோக்களை பார்த்து ஆஹா ஓஹோ என்று நினைத்து கொண்டு போகாதீர்கள். ஒரு பெரிய மீன் தொட்டியை கட்டி அதனுள் நம்மை விடுகிறார்கள் அவ்வளவுதான். மற்ற படி மிகப் பெரிய ஆச்சர்யங்கள் ஏதுமில்லை. //
கேபிள் சார் maintainence தான் மிக அவசியம். அது தான் வாட்டர் வேர்ல்டு.
//ஒரு பெரிய மீன் தொட்டியை கட்டி அதனுள் நம்மை விடுகிறார்கள் அவ்வளவுதான் //
உண்மை தான்.
/Written by ரோஸ்விக்
11:02 AM
செண்டோசாவுல நல்லா பொழுதை கழிச்சிருக்கீங்க ... :-)
இங்கு நிறைய பதிவர்கள் பழகுவதற்கு அன்பும், அறிவும், எளிமையும் நிறைந்தவர்கள். அவர்களையெல்லாம் நீங்க சந்திததில் மகிழ்ச்சி//
ரோஸ்வி தம்பி ! உன் அன்பு பரிசு கிடைக்கப் பெற்றேன் பேறு.. அன்பும், வாழ்த்துக்களூம்...
summa sullakudathu. nalla suthureenga-
nan tour pathi sonnan.
//
பேச்சை தவிர, மிக மிக அளந்த பேச்சு, கூர்ந்து கவனிக்கும் தன்மை
//
இன்னுமா என்னைய ஊரு நம்புது....
அண்ணே,
அல்ரெடி நீரும் நானும் ரொம்ப க்ளோஸ் . ( அட ரெண்டு பேரும் பிரபல பதிவர்கள்ல) . இப்ப என் அன்பு உறவினர் ஜெகதீசனோட உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.
அண்ணா நீங்க கலாங் ல எடுத்த போட்டோ இன்னும் வரல...
அண்ணா நீங்க கலாங் ல எடுத்த போட்டோ இன்னும் வரல...
பயண அனுபவங்கள் சூப்பர்.
@பனித்துளி சங்கர்
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி
@குழலி
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தலைவரே.. மிகவும் ஒரு நெருக்கமான் உணர்வுதான் எனக்கும்
@சைவக் கொத்துபரோட்டா
ம்
@ரோஸ்விக்
ஆமாம் விக்டர்
@விஜய் ஆனந்த்
நிச்சயமாய் மெயிண்டெனென்ஸை பாராட்டியே ஆகவேண்டும். சிங்கப்பூரே மெயிண்டெனென்ஸில்தானே ஓடுகிறது..
@மணிஜி
ரொம்ப நாள் கழிச்சு வந்து பின்னூட்டியதற்கு நன்றி..
@ஞானம்
ம்
@ஜெகதீசன்
ஹா..ஹா
@ஜோசப் பால்ராஜ்
ஆமாம்ணே
குடைக்கடை சந்திப்புக்கு நானும் வந்திருந்தேன். மிக ஆழமாக சமீபத்திய திரைப்படங்களை பற்றி அலசினோம். மொத்தத்தில் நல்ல கலந்துரையாடலாக அமைந்தது. மீண்டும் சிங்கையில் சந்திப்போம்.
-- வேல் --
டால்பின் ஷோ மற்றும் அண்டர் வாட்டர் வேர்ல்ட் நன்றாக இருக்கிறது.
Post a Comment