Love Sex Aur Dhoka – Hindi Film Review

lsd1 இந்திப் படங்கள் வழக்கமான மசாலா தளங்களை விட்டு நகர்ந்து நாளாகிவிட்டது. ரசிகர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இமமாதிரியான வித்யாசமான, நான் லீனியர் படங்கள் வெளியாகி இரண்டு வாரம் ஓடாது. இரவு காட்சிக்கு ஐ.பி.எல்லை மீறி 200 டிக்கெட் வந்திருக்காது.

படத்தில் மூன்று கதைகள் பிலிம் இன்ஸ்டியூட் மாணவன் ஒருவன் தயாரிக்கும் டிப்ளமோ படக் கதாநாயகிக்கும் அவனுக்கும் ஏற்படும் காதலும், பின்னர் அவர்கள் ஜாதிக்காக இருவருமே குடும்பதாரால் கொல்லபடும் கதையும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் காதல் வயப்படும் பெண்ணுடன் உடலுறவு கொள்லும் காட்சியை சி.சி டிவி புட்டேஜை காசுக்காக விற்று சம்பாதிக்கும் ஒரு கதை, பெரிய பாடகனான ஒருவனை அவனது வீக்னெஸ்ஸை பயன்படுத்து வீடியோ எடுக்க முயற்சி செய்து பின்னர் களேபரமாகும் கதை. கதைகளாக மூன்றும் வேறு வேறு தளங்களானாலும் அவைகளை ஒன்று சேர்க்கும் டைரக்டரின் யுத்தி பாராட்ட தகுந்தது.
lsd முதல் கதையில் ஹிந்தி சினிமாவின் அபத்தங்களை, அதுவும் ஷாருக்கின் தில்வாலே துல்ஹனியாவை ஓட்டியிருப்பது தமிழ்ப்படம். இரண்டாவது கதையில் வரும் காதலும், அதன் பிறகு ந்டக்கும் செக்ஸும் நிதர்சனம். மூன்றாவது கதையில் வரும் காட்சிகளும் நிஜ வாழ்க்கையை ஒட்டியே நடைபெறுவதால் ஈர்த்து உட்கார முடிகிறது.
lsd2
முதல் கதையின் முடிவில் காட்டப்படாத கொலை காட்சிகளானாலும் அதன் இம்பாக்ட் அபாரம். அதே போல் இரண்டாவது கதையில் நடித்த நடிகர்களின் நடிப்பு அவ்வளவு இயல்பு யாரும் புதுமுகம் என்றே சொல்ல முடியாது. அவ்வளவு இயல்பு. மூன்றாவது கதை நாயகியின் நடிப்பும் கச்சிதம். கேமரா என்பது எல்லா ஷாட்களும் கேண்டிட் கேமரா முயற்சியாகவும்,சிசிடிவி ப்ளாட் ப்ரேமாக இருப்பதாக இருந்தாலும் நச்.
lsd4 Sony Ex3யில் படமாக்கபட்ட டிஜிட்டல் திரைப்படம். அவலைபிள் லைட்டிங்கிள் காட்சிகள் துல்லியம். Love sex and Videotapes என்கிற ஸ்டீவன் ஷோஹன்ஸ்பர்க் இயக்கிய அந்தப் படம் ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தப்படம். அதுவும் கிட்டத்தட்ட இதே போல வீடியோ பார்மெட்டில் பெண்களின் அந்தரங்க இண்டர்வியூக்க்ளை வைத்து எடுக்கப்பட்ட படம். படம் அக்காலத்திலேயே மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சக்கை போடு போட்ட படம்.  படத்தை இயக்கிய திபங்கர் பானர்ஜிக்கு பாராட்டுக்கள். நிறைய
இடஙக்ளில் வசனங்கள் அட்டகாசம்.
LOVE SEX AUR DHOKA – A FilmTo Watch.
கேபிள் சங்கர்

Comments

க ரா said…
விமர்சனம் வழக்கம் போல ரொம்ப நல்லாருக்கு.
butterfly Surya said…
கேபிள் பதிவுல me the first வரவே முடியாதா..?

இராமசாமி கண்ணா .. முந்திட்டார்.
butterfly Surya said…
கேபிள்.. நல்ல படங்களை பார்க்க தனியாதான் போவீங்களா..??
butterfly Surya said…
நன்றி. பார்க்க வேண்டும்..
Prabhu said…
கேள்வி பட்டேன் Ground breaking என.
வாழ்த்தக்கள்

அன்புடன் ஞானம்
படம் பார்த்து எங்களயும் பார்க்க சொல்லும் உங்களை ?????????
விமர்சனம் மிகவும் சிறப்பு !
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் !
பாத்துடலாம். இங்க சிங்கபூர் ல குருஷேத்திரம் அப்டின்னு ஒரு தமிழ் படம் நேத்து ரிலீஸ் ஆகி இருக்கு. இங்க வந்து அந்த படம் பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுவீங்களா அண்ணா?
kalil said…
வழக்கம் போல் விமர்சனம் அருமை ...தல இன்னைக்கு இருக்கற ப்ளாக் ல உங்க ப்ளாக் சினிமா விமர்சனம் தான் ரொம்ப technical knowleged இருக்குது ....ரொம்ப உன்னிப்பா பாப்பீங்களோ ???
/பாத்துடலாம். இங்க சிங்கபூர் ல குருஷேத்திரம் அப்டின்னு ஒரு தமிழ் படம் நேத்து ரிலீஸ் ஆகி இருக்கு. இங்க வந்து அந்த படம் பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுவீங்களா அண்ணா?
//
போன மாசம் அஙக் வந்த போது லிட்டில் இந்தியாவில் விளம்பரம் பார்த்தேன் படம் பாத்தீங்களா.. எப்படி இருக்கு.

கேபிள் சங்கர்
நான் படம் பாக்கலை அண்ணா. டிரைலர் பாத்தாலே பயமா இருக்கு. ஆனா இங்க அத திருவிழா மாதிரி கொண்டாடுறாங்க. முதல்நாள் கலக்சன் $1,20,000 அப்டின்னு news ல சொல்றாங்க.
kanagu said…
padam nalla irukku nu solreenga.. seekram paakanum nu thonuthu... :)
@இராமசாமி கண்ணன்
நன்றி

@பட்டர்ப்ளை சூர்யா
இல்ல சூர்யா இது ஒரு ஷோ அதுவும் நைட் ஷோ ஐநாக்ஸ்ல ஓடுது.
@பப்பு
அப்படி சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் ஒரு நலல் முயற்சி

@மிஸ்டர் இட்லி
நன்றி

@பனித்துளி சங்கர்
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அப்படியா..
@கனகு
ஆமாம் சீக்கிரம் பாருங்க தியேட்டர் விட்டு எடுத்துற போறாங்க.
இந்தி திரைப்படங்கள் முன்னேற ஆரம்பித்து நாளாகிவிட்டது - தமிழ் படங்கள் அப்படி வர எத்தனை நாளாகுமோ தெரியவில்லை.. நான் - லீனியர் கதைகளுக்கு இங்கே பஞ்சமில்லை..களமும் அற்புதமானது. வலைஎழுத்தாளர்கள் பார்த்தாலே திரைப்படம் 4 வாரம் பிரச்சனை இல்லாமல் ஓடும் - எனினும் யாருக்கும் தைரியமில்லை என்று சொல்லலாமா.!!
வித்தியாசமான படம்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.