Varudu – Telugu Film Review
ராமனிடமிருந்து சீதையை ராவணன் கடத்தி போன கதையை மீண்டும் அல்லு அர்ஜுனை வைத்து திரும்பி எடுத்திருக்கிறார் குணசேகர். மணிசர்மா, ஆர்.டி.ராஜசேகர், என்று பெரிய பெரிய டெக்னீஷியன்கள் கொண்ட படமாதலால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்.
சாண்டி என்கிற சந்தீப் ஒரு பார்ட்டி அனிமல். ஆனால் இன்னொரு பக்கம் மிகவும் ட்ரெடிஷனல். காதல் திருமணம் செய்த பெற்றோர்களிடம் தான் அவர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய ரெடியாக இருப்பதாகவும். பழைய காலம் போல ஐந்து நாள் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும், திருமணத்தன்று தான் பெண்ணை பார்க்க போவதாகவும் சொல்ல, அவனுக்காக ஒரு பெண்னை பேசி சாண்டியே பார்க்காததினால் குடும்பத்தில் வேறு யாரும் பார்க்காமல் ஐந்து நாள் திருமணம் நடைபெறுகிறது. தாலி கட்டும் முன் இருவரும் பார்த்த பார்வையிலேயே காதல் பிறந்துவிட, தாலி கட்டும் நேரத்தில் வில்லன் வந்து கதாநாயகியை கடத்தி போய் விடுகிறான். அவன் ஏன் அவளை கடத்தினான்? வில்லனிடமிருந்து தப்பித்தாளா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து எழும் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார். இயக்குனர்.
படம் முழுவதும் எல்லா ப்ரேமிலும் அல்லு அர்ஜுன் ஆக்கிரமித்தபடி இருக்கிறார். பலகை போல் உடம்பை வைத்துள்ளார். பாதி படம் முழுவதும் எண்ணைய் தேய்த்த உடலை காட்டியபடி வருகிறார். நிறைய பேசுகிறார். ஆடுகிறார், பாடுகிறார், சமஸ்கிருதம் சொல்கிறார், படத்தில் காதல் என்ற வஸ்துவை தேடினாலும் கிடைக்காத போதும், என் காதல் அப்படி, என் காதல் இப்படி என்று பேசுகிறார். ஆனால் பாவம் விழலுக்கு இறைத்த நீர்.
கதாநாயகி புதுமுகம் என்று நினைக்கிறேன் பானு ஸ்ரீ மெஹ்ரா, ஆல்லு அர்ஜுன் பலகை உடம்பு வைத்திருக்கிறார் என்றால், இவர் பென்சில் போலிருக்கிறார். எந்த விதமான் எக்ஸ்ப்ரஷனும் இல்லாமல் ஒரு முத்தம் கொடுக்கிறார் பாருங்கள் அய்யடா..
கதாநாயகியை தூக்கி போகும் ராவணணாக நம்ம ஆர்யா.. டார்க் நைட்டில் வரும் ஹீத் லெட்ஜரின் கேரக்டரை போல அமைத்திருப்பது இண்ட்ரஸ்டிங். ஆரம்ப காட்சிகளில் அவரின் பாடி லேங்குவேஜும், வேடங்களும் அருந்ததி ரவிஷங்கரின் குரல் பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவும் சோப்ளாங்கியான வில்லனாவிட்டபடியால் எபெஃட் குறைந்துவிடுகிறது.
சமீப காலத்தில் பிரம்மானந்தம் எடுபடாமல் போனது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன். படு மொக்கை. சுனில், ஆலி, ஷாயாஜி ஷிண்டே, நாசர், சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, என்று ஏகப்பட்ட பேர் நடித்திருந்தும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு வழக்கம் போல. ஸ்டன் சிவாவின் சண்டை அமைப்புகளில் ஒரு சில சேசிங்க் காட்சிகளை தவிர ம்ஹும். கதை, திரைக்கதை இயக்கம் நம்ம குணசேகர். அருமையான ப்ளாட் கிடைத்தும் மிக மொக்கையான திரைக்கதையால் சொதப்பிவிட்டார். ஹோம் மினிஸ்டர் பெண்ணையே காதலனுடன் சேர்த்து வைத்தவனுக்கு ஏன் எந்த பெண்ணின்மீதும் காதல் வரவில்லை என்று சொல்லி செட்டிலாவதற்கே பாதி படம் முடிந்துவிடுகிறது. இரண்டாவது பாதியில் வில்லன் ஏன் அவளை கடத்தி போனான் என்பதை சொல்ல அரத பழசான காட்சிகளை வைத்திருப்பதும், ஆந்திர போலீஸே பயந்து நடுங்கும் வில்லன் பிரதர்ஸ் என்ற பில்டப்புகளை மெயிண்டெயின் செய்ய வைத்திருக்கும் காட்சிகள் படு காமெடி சொதப்பல். இவ்வளவு மொக்கை வில்லனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. தேவையில்லாமல் க்ளைமாக்ஸில் 20 நிமிட சண்டை காட்சி வேறு க்ராபிக்ஸோடு. முடியலை.
Varudu – A Big Let Down
கேபிள் சங்கர்
Comments
oh allu! ithi kooda neeku poyinthaa...
-
DREAMER
Allu Arjun Palathilirunthum Kothikum Munnadiye Theatrelu Irunthu Naan Kuthikirukkanum !
Vithi Valiyathu !
;-)
thala heath ledger......
:-(
enna performance athu, aarya eppdi pannaadum appdi irukaathu....
என்னது ரொம்ப நாள் கழிச்சா.. போன வெள்ளிக்கிழமை தான் அங்காடித்தெரு விமர்சனம் போட்டேன்
கேபிள் சங்கர்
எனக்கென்னா போய் பார்த்துட்டுத்தான் வாங்களேன்:)
நானும் அதை நினைச்சுத்தான் பார்த்தேன்
ம்ஹும்
இவ்வளவு கற்பனை வறட்சியாய் இருக்காது என்றுநம்புகிறேன்
அது சரி.. விதி வலியது..:)
நானும் சொல்லிட்டேன் முரளி
அப்புறம் ஹீத் லெட்ஜரின் பாத்திரப்படைப்பை என்று தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். :)
என்னை போல அவரும் நொந்துவிட்டாரோ..?
நன்றி சுகுமார்
பிடிச்ச மாதியும் இருந்துது.. பிடிக்காத மாதிரியும் இருந்துது..
hyderabad la iruntha pothu Aarya - 2 first day sattaiya kilichikitu poi paarthen :P
ipo villupuram la irupathaal dvd vaangi thaan paakanum pola ..
Review nalla irukku thala.
antha style dance vera yaarukum set aagaathu ..
Hyderabad la iruntha pothu Aarya- 2 padathai muthal naale sattaiya kilithu kondu poi paarthen..
ippo villupuram la irupathaal dvd vaangi thaan paarkanum ..
review nalla irukku