கொத்து பரோட்டா-31/05/10
சென்ற வாரம் மணற்கேணி வெற்றியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன், பிரபாகர், தருமி, மருத்துவர் தேவன்மாயம் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இதனுடன் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் மணற்கேணி புத்தகம் சென்னையில் என் வீட்டருகில தான் பதிப்பித்திருந்தார்கள். அதை சிங்கைக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வேலையை என்னிடம் கொடுத்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.. சிங்கை பதிவர்கள் எல்லாரும் ஒருமித்து இனி ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான விருதுகளை வழக்க இருக்கிறார்கள். கடந்த 28ஆம் தேதி மணற்கேணி விருதுகள் வழங்கும் விழாவும், மணற்கேணி புத்தக வெளியிட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:) மேலும் விபரங்களுக்கு http://aammaappa.blogspot.com/2010/05/blog-post_29.html $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ பதிவுலகின் சென்ற வார பிரச்சனை மிகவும் வேதனைபட வை...