செனற வாரத்தில் ஒரு நாள் லஷ்மியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறேன் என்று மாத்தி, மாத்தி பேசி.. இப்போதே முடிவெடுங்கள், உடனே சொல்லு என்று ப்ரஷரை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இன்னும் ரெண்டு வருடஙகளீல் படிப்பை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன மனைவி. இவர் செய்த பிரஷரில் சேரவே முடியாது என்று சொல்லி விவாகரத்து கேட்டுவிட்டார். பேசாம அவங்க இங்க வராமயே இருந்திருக்கலாம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குஷ்புவின் பேச்சு தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. மிகவும் வரவேற்க்க வேண்டிய ஒரு விஷயம். ஆ..ஊ வென்றால் கற்பு, கலாச்சாரம் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் தான், ஒரு நாளைப் போல பேப்பரை திறந்தால், அடல்டரி பிரச்சனைகளுக்காக, கொலைகளும், கல்யாணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொண்டு கர்பமாகி தன்னை கல்யாணம் செய்யக் கோரி கையில் கைக்குழந்தையுடனோ, நிறைமாச கர்பிணியாகவோ, உண்ணாவிரதமோ, தர்ணாவோ செய்து கொண்டிருப்பதையும், திருமணத்திற்கு முன் பல பேருடன் உறவு என்ற காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு கொலை என்றெல்லாம் செய்திகள் வருகிறது. தமிழகம் எங்கும் தமிழ் கலாச்சாரம் உள்ள நாடென்றால் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமேயில்லை. லிவிங் டூகெதர், ப்ரீ மேரிட்டல் செக்ஸ் எல்லாம் சகஜமாகிப் போய் கொண்டிருக்கும் காலகட்டத்தில் பாதுகாப்பான உறவை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில் என்ன தவறு?.
அரசாங்கமே.. ஒரு காலத்தில் மனைவியிருக்க வேறொருத்தி ஏன்? என்று எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கான விளம்பரங்களில் பயன்படுத்தி வந்த வாசகங்களுக்கு பதிலாய் பாதுகாப்பான உறவுக்கு என்று காண்டம் விளம்பரங்களை போடுகின்ற காலத்தில். ஒரு பிரபலமான நடிகை பேசிவிட்டார் என்பதற்காக அதை தங்களுக்கான விளம்பரமாக உபயோகித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் என்ன ஒழுங்கு?. இதை எதிர்த்து கேஸ் போட்ட கட்சியினரில் எத்தனை பேர் தமிழ் கலாச்சாரத்தின்படி வாழ்கிறவர்கள் என்று தெரிவு படுத்த முடியுமா..?

டாப் 10
அகஸ்மாத்தாய் நேற்று ரொம்ப நாளுக்கு பிறகு சன் டிவியின் டாப்10 பார்த்தேன்.அவர்களின் தரவரிசையின் நேர்மையை பற்றி தெரிந்தாலும் இவ்வளவு கேவலமாய் இறங்கியிருக்கும் என்று நினைக்கவில்லை. நான்காவது இடம், மூன்றாவது இடம், இரண்டாவது இடம் பட வரிசைகளை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் அவைகள் எல்லாம் ரிலீஸான ரெண்டாவது நாளே பெட்டிக்குள் திரும்பிய படங்கள். இரண்டாவது இடம் படமோ ஓடி சக்கை போடு போட்டு விட்டு, அவர்களே அடுத்த படத்துக்கு ஷூட்டிங் போய்விட்டார்கள். அவர்கள் சொன்ன லிஸ்ட் இதோ.. 5.யாதுமாகி, 4மாத்தியோசி, 3. தமிழ்படம், 2.தம்பிக்கு இந்த ஊரு 1, விண்ணைத்தாண்டி வருவாயா..?. அடுத்த வாரத்திலிருந்து சுறா தான் சன்னின் அடுத்த படமான சூர்யாவின் சிங்கம் வரும் வரை முதலிடத்தில் இருக்கும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
நாண்டோஸ்’ சிக்கனின் விளம்பரம்.. ஹி..ஹி..ஹி...

இந்த வார தத்துவம்
பணத்தை பார்த்து ஒருவன் சொன்னான் “நீ வெறும் பேப்பர்தான்” என்று. அதற்கு பணம் சொன்னது “அதென்னவோ நிஜம் தான் ஆனால் நான் இதுவரை குப்பைத்தொட்டியை பார்த்ததில்லை” என்று.

இந்த வார குறும்படம்
கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தாலும் க்ளைமாக்ஸில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. குஷ்பு சொன்னது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றால். இது ஒரு தமிழ் குறும்படம்தான்.. குறும்படங்கள் பெரும்பாலும் நிஜத்தின் பிரதிபலிப்பாய்தான் எடுக்கப்படுகிறது என்று நம்புவீர்களானால். இதோ.. இப்படம் இரண்டு முறை சிறந்த குறும்படத்துக்கான விருது வாங்கியுள்ளதாம்.

ஏ ஜோக்
கணவன் தன் மனைவியிடம் கல்யாணத்தின் போது ஒரு டப்பாவை கொடுத்து அதை கட்டிலுக்கு அடியில் வைத்து இதை எக்காரணம் கொண்டும் பிரித்து பார்க்ககூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். நாற்பது வருடங்கள் பொறுமையாய் பார்க்காமல் இருந்த மனைவி ஒரு நாள் ரொம்பவும் டென்ஷனாகி டப்பாவை எடுத்து பார்க்க. அதில் மூன்று பியர் டின்களும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் இருப்பதை பார்த்தாள். ஆர்வம் தாங்காமல் தன் கணவனிடம் தான் பார்த்ததை சொல்லி என்னவென கேட்க கணவன்: அது ஒன்றுமில்லை நான் எப்போதெல்லாம் உன்க்கு துரோகமிழைக்கிறேனோ அப்போதெல்லாம் ஒரு பியர் குடித்துவிட்டு உள்ளே வைத்துவிடுவேன்” என்றான். மனைவி வருத்தப்பட்டாலும் “பரவாயில்லை.. நாற்பது வருடத்தில் மூன்று முறைதானே..? அது சரி. அந்த 10ஆயிரம் ரூபாய் பணம்?” என்று கேட்க, “பியர் டின் வைக்க இடமில்லாத போது காசாக வைத்துவிடுவேன்” என்றான் கணவன்.

கேபிள் சங்கர்

Post a Comment
28 comments:
உங்கள் ஏ ஜோக்குக்கு ஒரு எதிர் மரியாதை:
முதல் இரவு முடிந்தது கணவன் பழக்க தோஷத்தில் மனைவிக்கு ஐநூறு ரூபாய் தர, அவள் அவனுக்கு நூறு ரூபாய் இந்தாருங்கள் மீதி சில்லறை என திருப்பிக் கொடுத்தாளாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நடு ராத்திரியில முழிச்சிருந்து A ஜோக்குக்கு "டோண்டு" எதிர் ஜோக் போடுறதை பார்டா............!!
’ஏ’ ஜோக் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்க்குன்னா. மிச்ச படி இந்த வார கொத்துப்பரோட்டா நல்லா இருக்கு,
சன் டி.வி தொல்லைய தான் ரொம்ப வருஷமா தாங்க முடியலையே அண்ணா... :( :( அதையெல்லாம் பாக்காதீங்கண்ணா... டென்ஷன் தான் வரும்...
குஷ்பூ விஷயத்துல நம்ம ஆளுங்க ஆரம்பத்துல இருந்தே ஓவர் ரியக்ஷன் தான்... இனிமே சும்மா இருப்பாங்க...
விளம்பரம்... ஹி ஹி ஹி :) :)
சன் டிவி டாப் டென் எல்லாம் பார்த்துகிட்டு இருக்கீங்களா.. ரொம்ப பொறுமைதாங்க் உங்களுங்கு.
ஏ ஜோக் கொஞ்சம் புராதனமானது. ஓல்ட் இஸ் கோல்ட் என்பதால் போட்டுட்டீங்களோன்னு நினைக்கின்றேன்.
இந்த வாரத் தத்துவம் சூப்பரோ சூப்பர்..
விடியோ எதுவும் பார்க்க முடியலை.. நெட்ட் கனெக்ஷன் அவ்வளவு ஸ்லோ... அது பற்றி நாளை பின்னூட்டம் போடப் படும்.
குஷ்பு விவகாரம் - நத்திங் பட் அரசியல்.
கருவிழிக்கு கால் இஞ்ச் தூரத்தில் கத்தி வைத்து இமைக்காதிருக்க முடியாத
நடுக்கம் பகிர்ந்த குறும்படம் முடிந்தும்
நெடும் பொழுது இருந்தது இயக்குனரே
சரக் சரக்கென்று பென்சிலை சீவும் போது
தவறி கைகளில் வழியத்துவங்கும் குருதி முதல் முதல் பார்ப்பதாக இருக்கிறது பெரும்பாலும்...
கருக்கலைந்து பெருகிய சிவப்புத் திரவத்தின் அடர்த்தியில் பிண்டமாய் இருக்கும் உயிர்....
சொல்லித்தீராதது அந்த கொடுந்துயர்
பகிர்வுக்கு மிக்க நன்றி சங்கர் ஜீ !
Koththuprotta super
கொத்து நல்லாவே இருக்குங்க
குஷ்புவை நம்ம ஆளுங்க விடறாப்ல காணோம். என்னமோ சொல்லுவாங்கல்ல மாமியார் உடைச்சா மண் குடம்... மருமக உடைச்சா பொன் குடம்னு அப்படி கொடுமை பண்றாங்க
சன் டிவி டாப் டென் எல்லாம் பாக்கறீங்களா? நீங்க ரெம்ப நல்லவருங்க...
A ஜோக் ரொம்ப பழசு யூத்து, புதுசா புக்கு வாங்கி படிச்சு ஜோக் போடுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அழகான குறும்படம், படமாக்கியிருக்கும் விதம் அருமை...நன்றி
கொத்து புரோட்டா செம டேஸ்ட்
தத்துவம் சூப்பர்.
சூப்பர் பரோட்டா தல..தத்துவம் ஜீப்பரு...
குஷ்பு ஆண்டி வாழ்க..
உங்களுடைய ஏ ஜோக்குக்கு ஒரு பதில் ஜோக்கு.
ஒருவன் தனது பத்து குழந்தைகளையும் ட்ரெயினில் எற்றிவிட்டு தானும் ஏறி அமர்ந்தான். டிடிஆர் வந்து அவனை பார்த்து, "ஏம்பா, இதெல்லம் உன் குழந்தைகளா" என்று கேட்க, அவன் ,
"ஆமாம் சார், எல்லாம் கடவுள் கொடுத்தது" என்று கூற, கடுப்பான டிடிஆர் டிக்கெட் சரி பார்த்துவிட்டு சென்றார். அன்று இரவு எதேச்சையாக, அந்த கம்பர்த்மென்ட் வந்த டிடிஆர், இந்த ஆசாமி, வேட்டியல்லாம் பறக்க, தனது லுல்லாவை காண்பித்துக்கொண்டு படுத்துகிடந்தான். அவனை எழுப்பிய டிடிஆர், "ஏம்பா, உன் கடவுள் வந்திருக்காரு, அவருக்கு டிக்கெட் எடுக்கலியா?" என்று கேட்டுவிட்டு முறைத்துக்கொண்டே சென்றார்.
"பாதுகாப்பான உறவை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில் என்ன தவறு?."
அப்படி சொன்னதில் தவறு இல்லை... தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என சொன்னது தவறு..
அதெல்லாம் ஓகே... நான் விரும்பி படிக்கும் பகுதி இல்லாத கொத்து புரோட்டா , சுவையாக இல்லை
இந்த வாரம் முழுக்க வீட்டுச் சாப்பாடா ஜி? சாப்பாட்டுக்கடையைக் காணோம்!!!
ஏ ஜோக் - யூத்துக்கு வயசாகிட்டுப் போகுது ;-) கொடுத்த வாக்கெல்லாம் ஒரு வாரத்துக்கு மட்டும் தானா?
வழக்கம் போல.. நன்றாகயிருந்தது.
நல்ல புரோட்டா , குறிப்பாக விளம்பர படம்
டாப் 10 பாத்ததுக்கு..இன்னொரு தடவ சுறா படத்த பாத்திருக்கலாமே....
டாப் 10 எல்லாம் பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு தல. இந்த ரேட்டிங் சமாச்சாரமே சுத்த வேஸ்ட்டு.
cable brother... the short film is nice.... definitely , it will impress indian / tamil audience...
But I want u make films which touches heart of every one irrespecve of country, religion , language etc...
I kindly request you to maintain disatnce from tamil intelectuals ...
தனி மடல் அனுப்பி உள்ளேன்
ஜோக் "Z" ஜோக்.
விளம்பரம் ஏ கேட்டகரி.
அதிர்வை ஏற்’படுத்திய’ குறும்படம்!
ஒவ்வொரு வரையரையற்ற உறவுக்குள்ளும், ஒவ்வொரு உயிர் தன்னை மாய்த்துக்கொள்கிறது என்பதைதான் சொல்கிறதோ!
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
என்ன அருமையான குறும்படம் ஜி,..
படத்தையும், மிக முக்கியமாய் குழந்தையின் குரலையும் மறக்க ரொம்ப நாளாகும்.பகிர்விற்கு மிக நன்றி.
அப்புறம்,
விளம்பர படத்தில்,கடைசி வரையில் சிப்ஸ் வைக்கலை ஜி.
இது சீட்டிங். :-)
சன் தொலைக்காட்சியில் தம்பிக்கு எந்த ஊரு, யாதுமாகி, மாத்தியோசி ஆகியவை முதல் 5 இடங்களில் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அங்காடித்தெரு, பையா போன்ற படங்கள் முதல் 10 இடங்களிலும் சன் தொலைக்காட்சியில் இல்லை.
கொத்துப்பரோட்டா அருமை சார்..! அதுவும் குறும்படம்... சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!
-
DREAMER
தலைவா கலைஞர் டிவி பட வரிசை பத்து பாருங்க!
Post a Comment