கொத்து பரோட்டா-24/05/10
மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..?
******************************************************************
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நான், அப்துல்லா, மணிஜி, நர்சிம், வண்ணத்துபூச்சி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டோம். வழக்கம் போல ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லிவிட்டு 12.30 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். விடியற்காலை மூணு மணிக்கு முடிந்தது. அந்த அகால நேரத்திலும், கோவையிலிருந்து வந்திருந்த இண்ட்ர்ன்ஷிப்புக்காக வந்திருந்த மாணவிகள் ப்ரெஷ்ஷாக இருந்தது கொடுவாயில் கொட்டாவிடும் நேரத்திலும் சந்தோஷமாய் இருந்தது.
******************************************************************
இந்த வார ஹிட் மேக்கர்
******************************************************************
இந்த வார குறும்படம்
கார்த்திக் சுப்புராஜின் ஆங்கில குறும்படம்.. கொஞ்சம் நீளமாக இருந்தாலும், கருத்து சொல்லியிருக்கிறார்.
*******************************************************************
இந்த வார காமெடி
நேற்று சன் டிவியில் சிங்கம் ஆடியோ ரீலீஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொருவரும், கலாநிதி மாறனை பற்றியும், சன் டிவியை பற்றியும் சொம்படித்தார்கள். அவர்கள் அடித்த ஒவ்வொரு சொம்புக்கும் பால்கனியில் ஒரு கூட்டத்தை உற்சாகமாய் எழுந்து நின்று கத்த சொல்லி படமெடுத்து காட்டினார்கள். இதில் காமெடி என்னவென்றால் எல்லா சொம்புக்கும் கத்தி உற்சாகபடுத்தியவர்கள் ஒரே குழுவினர்தான். அதை வேறு வேறு ஆங்கிளில் ஒளிபரப்பி ஏதோ சன் டிவியென்றால் மக்களிடையே ஒரு ஆர்பரிப்பு இருக்கிற மாதிரி தோற்றத்தை உண்டு பண்ண இந்த ட்ரிக்.. கஷ்டம்டா.. சாமி.. மக்கள் தெளிவாகி ரொம்ப நாளாச்சு டோய்..
*******************************************************************
இந்த வார கேள்வி
ஒரு பொண்ணு கால்ல விழும் போது என்ன தெரியும்?
அந்த பொண்ணோட கலாச்சாரம் தெரியும். நீங்க வேற எதையாவது நினைச்சிருந்தீங்கன்னா.. அதிலேர்ந்து உங்க கலாச்சாரம் தெரியுது..:)
*******************************************************************
இந்த வார தத்துவம்
மனித வாழ்க்கையில் இரண்டு முக்கியமான தருணங்கள். ஒன்று மனிதனாய் பிறப்பது. இரண்டாவது தான் ஏன் பிறந்தோம் என்பதை நிருபிக்கும் போதும்.
******************************************************************
இந்த வார விளம்பரம்
இண்ட்ரஸ்டிங்கான விளம்பரங்கள்
ஜோக்
அம்மா: திப்புசுல்தான் யாரு..?
பையன் : எனக்கு தெரியாது.
அம்மா: ஒழுங்கா பாடத்தில கவனம் வை அப்போதான் தெரியும்
பையன்: பூஜா ஆண்டி யாருன்னு தெரியுமா?
அம்மா : தெரியாது.
பையன் : அப்பா கிட்ட கவனம் வை அப்போ தெரியும்.
*******************************************************************
ஏ ஜோக்
கடைக்காரரிடம் ப்ரா வாங்க சென்ற பெண்ணிடம் சைஸ் என்ன என்று கேட்க, இருக்கும் எல்லா சைசையும் பார்த்துவிட்டு “இன்னும் சின்னதா” என்று கேட்டாள் பெண்.
கடைக்காரன் : எதுக்கும் டாக்டர் கிட்ட பாரும்மா.. பிம்பிள்ஸா இருக்கப் போவுது..
*******************************************************************
Comments
ஏ ஜோக் அதர பழசு(இன்னும் இன்னும் உங்ககிட்டருந்து நிறைய எதிர்பாக்கிறோம்)
மற்றவையெல்லாம் வழக்கம் போல் மிக அருமை!!:-)
மொத்ததில் இந்த கொத்தும் சூப்பர்!!
என்ன தலைப்பு? இப்படி மொட்டையா சொன்னா எப்படி
ஒரு பொண்ணு கால்ல விழும் போது என்ன தெரியும்?
அந்த பொண்ணோட கலாச்சாரம் தெரியும். நீங்க வேற எதையாவது நினைச்சிருந்தீங்கன்னா.. அதிலேர்ந்து உங்க கலாச்சாரம் தெரியுது..:)//
இந்திய சேலம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் என் யாழ்பாண நண்பன் ஒருவன் மூன்று நாட்களுக்கும் முன்னர் அனுப்பிய ஜோக் இது... "ஒரு எஸ்.எம்.எஸ் உலகம் எல்லாம் எப்படி போகின்றது". நினைக்க சிரிப்பாங்க இருக்கின்றது.
நீயா நானா எப்போ ஒளிபரப்பு?
நீங்க எல்லாம் கலந்துகிட்டது செய்தியா?? அந்த பொண்ணுக அழகா கொட்டாவி விட்டது செய்தியா??? ;-))))
எனக்கு ரெண்டுமே சிறப்பு செய்தி தான் தலைவா!
இந்த விமர்சனம் பத்திரிகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்கிறீர்களா கேபிள்? :-)
கலக்கிடிங்க சங்கரு !!!
ஏ ஜோக்: மோசம் -காயம் படுத்தும ( பெண்களை )
ப்ரமோஷன் உத்திகளை புட்டு வைத்ததற்கு
பாராட்டுக்கள்
தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
கடைசி விளம்பரப்படத்தில் 'போஸ்' கொடுப்பது மணிஜிதானே? :-))
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
= ஒரு வேலை இந்த புண்ணியவானும் தொபுக்கடீர்னு சகதியில் (அதாங்க அரசியலில்) குதிக்க போறாரோ என்னமோ?
சொல்லுங்க மிஸ் பண்ணிட போறோம் :)
தனியாக கொஞ்சம் யோசித்து பார்த்தால்(!?) நீங்கள் பெண்கள் மனம் பாதிக்கும் படி எழுதுவதை குறைத்துக் கொள்ளலாம். (ஏ ஜோக்) உங்களது பதிவுகளை நிறைய பெண் வலைப் பதிவரும் படிக்க வாய்ப்பு உள்ளது!!! நீங்கள் எழுத்தாளரும் கூட....சற்று யோசிக்கவும்...தவறு இருந்தால் மன்னிக்கவும்....
நன்றி
மயிலாடுதுறை சிவா...
அன்புடன்,
www.narumugai.com
கருத்துக்களை பகிர, செய்திகளை படிக்க நமக்கான ஓரிடம் - நறுமுகை.காம்
சேம் பிளட். முடியலை அண்ணா.
//கடைக்காரன் : எதுக்கும் டாக்டர் கிட்ட பாரும்மா.. பிம்பிள்ஸா இருக்கப் போவுது..//
ரொம்ப பழைய ஜோக்
தாமதமான shooting இற்கு "நீயா நானா " குழுவினர் வருத்தம் தெரிவித்தார்களா ? அப்படியாவது காத்திருந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது ஏனோ ? உங்கள் யாருக்குமே கோபமே வரவில்லையா ?
Theeviramaaga thirai pada muyarchiyil eedupattu irukiraan ippo...!!!!
Joke sollanuingradhukaga.. edhvadhu solladhikingaa!!!
SMS also old
Try something new !!!
ரைட்டு கிடைச்சா போட மாட்டேனா..? நன்றி
@எறும்பு
இன்னும் தெரியலை.. தெரிஞ்சதும் சொல்றேன்.
@வரோ..
எஸ்.எம்.எஸ் உலகம் ரொம்ப சிரிசு..
@வெங்கட்
இன்னும் சரியா தெரியலை..
கேபிள் சங்கர்
நன்றி
தெரிந்தவுடன் சொல்கிறேன்
யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கங்க..
@யுவகிருஷ்ணா
டிவி மீடியாக்காரர்களையும் சேர்த்துத்தான் யுவகிருஷ்ணா..
@சூர்யா..
ஆமாம் உ.த.விற்கு நன்றி
நன்றி
@எம்.அப்துல்காதர்
நன்றி
@நந்தா
காலத்துக்கேற்ப மாத்திக்க வேண்டியதுதான்..
@அன்புடன்.அ.மு.ஞானேந்திரன்
ஜோக்கை ஜோக்கா எடுத்துக்கணும்
@ஷங்கர்
ஓகே
நன்றி
@ரோமியோ
அதைத்தான் சொன்னேன் தலைவரே
@நேசமித்ரன்
அஹா..
@அறிவிலி
நன்றி
@எல்.கே
டேட் சொல்லலை
@ஸ்ரீராம்
நிச்சயம் ரிலே ஆனதும்
@சந்துரு
தெரிந்ததும் சொல்கிறேன்
@இராமசாமி கண்ணன்
நன்றி
@ரியாஸ்
நன்றி
@பிரச
நிச்சயம் சொல்கிறேன்
@மயிலாடுதுறைசிவா
தலைவரே உங்கள் கருத்துக்கு நன்றி.. அது ஜோக்கு தலைவரே.. நிசசய்ம் என் பதிவை படிக்கும் பெண்களுக்கு ஜோக்கை, ஜோக்காக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருக்குமென நம்புகிறேன்.. வேற என்ன சொல்றது..
நன்றி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
தெரியும்..
@புலவன் புலிகேசி
நன்றி
@ஸ்ரீனிவாசன்
எனக்கும் சந்தோஷம் நண்பரே.. முடிந்தால் அவரின் தொலைபேசி எண்ணை கொடுக்கவும் நான் அவருடன் பேச ஆவலாய் உள்ளேன்
@சசிபானு
ஏ ஜோக்பழசானா என்ன.. ஜோக்கு ஜோக்குதானே..
அதுக்கு இதே பதில் தான் ஹி..ஹி..