Thottal Thodarum

May 31, 2010

கொத்து பரோட்டா-31/05/10

manarkeni manarkeni1
சென்ற வாரம் மணற்கேணி வெற்றியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன், பிரபாகர், தருமி, மருத்துவர் தேவன்மாயம் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இதனுடன் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் மணற்கேணி புத்தகம் சென்னையில் என் வீட்டருகில தான் பதிப்பித்திருந்தார்கள். அதை சிங்கைக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வேலையை என்னிடம் கொடுத்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.. சிங்கை பதிவர்கள் எல்லாரும் ஒருமித்து இனி ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான விருதுகளை வழக்க இருக்கிறார்கள். கடந்த 28ஆம் தேதி மணற்கேணி விருதுகள் வழங்கும் விழாவும், மணற்கேணி புத்தக வெளியிட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:) மேலும் விபரங்களுக்கு http://aammaappa.blogspot.com/2010/05/blog-post_29.html
manarkeni2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதிவுலகின் சென்ற வார பிரச்சனை மிகவும் வேதனைபட வைக்கிறது. அதை பற்றி  மீண்டும்  எழுத விரும்பமில்லை.. ஆனால் பகடியாய் உள்ளுக்குள் இருக்கும் வன்மமும், குரோதமும் நன்றாக வெளிபட்டிருக்கிறது இதன் மூலம். போகிற போக்கில் பல பதிவர்களையும், என்னையும், என்னுடன் சேர்ந்து புத்தகம் வெளியிட்ட இன்னொரு நண்பரையும்,  புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களையும் கூட சேர்த்து கலாய்த்திருக்கிறார்கள். எனக்கென்ன வருத்தமென்றால் அதை  தனி பதிவாக போட்டிருந்தால் இன்னும் வரவேற்றிருப்பேன். ”தூ ”வென துப்புவதெல்லாம் நடந்த  பிரச்சனையை தெரியாமல் ஓவராக ரியாக்‌ஷன் செய்யும்  விஷயம். துப்புறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது. 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
sidin3
ம்ம ஆட்கள் தான் ப்ளாக் உலகத்திலிருந்து ஒருவர் வளர்ந்து பத்திரிக்கையாளர் ஆனாலோ, புத்தகம் வெளியிட்டாலோ அதை பகடி செய்கிறார்கள் ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி ப்ளாகராய் இருந்து எழுத்தாளர் ஆகியவர்தான் சிடின் வடுகுட், www.whatay.com என்ற பெயரில் ப்ளாக் எழுதி வரும் இவர் Dork: the Incredible Adventures of Robin ‘Einstein’ varghese என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இன் ஜினியரான இவர் ப்ளாக் உலகிலிருந்து பத்திரிக்கையாளராகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ப்ளாகிங் என்கிறார் இவர். புத்தகத்திற்கு வாசகர்களிடமிருந்து மிக பெரிய வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அங்கும் இவரிடமிருந்தெல்லாம் மற்ற ப்ளாகர்கள் பேட்டி எடுத்து போடுகிறார்கள். இது ஒரு  பென்குவின் வெளியீடு. வெளியே வாங்கப்பா..


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$ 
இந்த வார தத்துவம்

உங்கள் இதயம் ஒரு குப்பைத்தொட்டி அல்ல உங்கள் எல்லா கவலைகளையும் போட்டு வைப்பதற்கு. அது  உங்களது சந்தோஷ தருணங்களை சேமித்து வைப்பதற்கான அட்சய பாத்திரம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
சமீபத்தில் இவ்வளவு இளமையான,குறும்பான, நகைச்சுவையான குறும்படத்தை பார்க்கவில்லை. நடித்தவர்களின் இயல்பான நடிப்பு, கேமரா கோணங்கள், பின்னணி இசை, டயலாக்குகள் என்று அட்டகாச படுத்தியிருக்கிறார்கள். நிச்சயம் இண்ட்ரஸ்டிங்கான படம். இயக்குனர் பாலாஜிக்கு பாராட்டுக்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வி
ஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிற்து என்று நான் முன்பு சொன்னதற்கு அங்கே கலைக்‌ஷனை பார், இங்கே ஹவுஸ்புல் என்று நிறைய நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஹவுஸ்புல்லாக ஓடிய தியேட்ட்ர் அதிபர்கள்தான் இப்போது மொத்தமாய் கடந்த ஆறு படங்களின் மூலமாய் சுமார் முப்பது கோடிக்கும் மேலாக நஷ்டமடைந்திருப்பதாய் சொல்லி பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஒரு படம் வெற்றிபடமா இல்லையா என்பதை பத்திரிகையில் வரும் விளம்பரமோ, முதல் ரெண்டு வாரம் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஹவுஸ்புல்லாக ஓடுவதிலோ, மற்ற பத்திரிக்கை நண்பர்கள் இவ்வளவு கலெக்‌ஷன், அவ்வளவு கலெக்‌ஷன் என்று தங்கள் பத்திரிக்கைக்கு ரிப்போர்ட் வ்ந்திருக்கிறது என்று சொல்வதை வைத்து நிர்ணையிக்க முடியாது. எங்களை போன்ற நிஜ விநியோகஸ்தர்களுக்குத்தான் தெரியும் கை சுட்டுக் கொண்ட வலி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார ஜோக்
டாக்டர் எனக்கு ஒரு வாரமாய் டயரியா.. என்ன செய்யறதுன்னுனே தெரியலை..
நீ லெமன் யூஸ் செஞ்சியா?
செஞ்சேன் டாக்டர் ஆனா எடுத்தவுடனே மீண்டும் ஸ்டாப் ஆக மாட்டேங்குது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏ ஜோக்

செக்ஸின் போது பெரும்பாலான பெண்கள் கூறுவது என்ன என்று ஆராய்ந்த போது, பத்து சதவிகித பெண்கள் “வலிக்கிறது சீக்கிரம்” என்றும், இன்னும் பத்து சதவிகித பெண்கள் “ம்.. இன்னும் வேகம்” என்றும் மீதியிருக்கும் என்பது சதவிகிதத்தினர் சொன்னது “சீக்கிரம் என் வீட்டுக்காரர் வந்திருவார்..” $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 
இந்த வார சந்தேகம்.
அமெரிக்கர்கள் பமீலா அண்டர்சன் படம் போட்ட ஸ்டாம்பை ஏன் வித்ட்ரா செய்திட்டாங்க தெரியுமா?

பின்ன ஸ்டாப் ஒட்டுறதுக்கு பின்பக்கம் நக்காம வேற பக்க நக்க ஆரம்பிச்சா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்
Post a Comment

36 comments:

ஜெய் said...

தத்துவம் சூப்பர்.. குறும்படம் பார்த்துட்டு சொல்லறேன்..

பாலா said...

///விஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிற்து என்று நான் முன்பு சொன்னதற்கு///

ஆத்தி.. என்ன இப்டி சொல்லிப்புட்டிய..??

உங்களுக்கு ஆஸ்த்ரேலியாவுல இருந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் வரலையாக்கும்?

Sanjai Gandhi said...

//போகிற போக்கில்//

நீங்க மட்டும் என்னவாம்? என் பெயரை போடாமல் என் ப்ளாக் பேரை மட்டும் போட்டிருக்கிங்க.. என் பெயர் போட்டால் நான் வளர்ந்துவிடுவேன் என்ற பொறாமை தானே.. வெளியே வாங்கய்யா..

தராசு said...

மணற்கேணி மகிழ்ச்சியளிக்கிறது. சிங்கை சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

தத்துவம் ஜூப்பர்.

shortfilmindia.com said...

நன்றி ஜெய்

shortfilmindia.com said...

//உங்களுக்கு ஆஸ்த்ரேலியாவுல இருந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் வரலையாக்கும்?
//

உடனடியா அனுப்பவும்

karishna said...

ஆனந்த விகடனில் உங்க blog பற்றி வந்ததற்கு வாழ்த்துகள்!! :-)

ஜோசப் பால்ராஜ் said...

மணற்கேணி 2009 நிகழ்வுகள் குறித்து எழுதியமைக்கு சிங்கைப் பதிவர்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Unknown said...

வெளியே வாங்கப்பா...!
இல்ல
வெளியே போங்கப்பா..?

கோவி.கண்ணன் said...

மணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி கேபிள்.

பிரபல பதிவர் said...

என்ன சண்ட... என்ன சண்ட‌

Unknown said...

காதலில் சொதப்பிய குறும்படம் ...

பிரமாதம் ...

வாழ்த்துக்கள் பாலாஜி

ரோஸ்விக் said...

மணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி

ரோஸ்விக் said...

மணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி

கார்க்கிபவா said...

//ஆறு படங்களின் மூலமாய் சுமார் முப்பது கோடிக்கும் மேலாக நஷ்டமடைந்திருப்பதாய் //

ஆறாவது படம் போக்கிரி. அதுவும் ஃப்ளாப்தான்..

குருவியின் PL ஷீட்டை உங்க, நம்ம நண்பரிடம் கேளுங்க சொல்வாரு.

வேட்டைக்காரன் வெற்றியை சக்சேனா சொன்னார்.

உஙக்ளுக்கு தெரியாதது அல்ல சினிமாவைப் பற்றி. வருகிற லாபம் யாருக்கோ செல்கிறது. திரையரங்கு உரிமையாளருக்கு வரவில்லையெனில் பிசினஸ் மாடலில் எங்கோ தவறு. கலெக்‌ஷனே இல்லையென எப்படி சொல்வீர்கள்?

நீங்களே வேட்டைக்காரன் ஆவெரெஜ் என்றுதான் போன வருட ரிப்போரிட்டில் சொன்னீங்க?

Cable சங்கர் said...

//ஆறாவது படம் போக்கிரி. அதுவும் ஃப்ளாப்தான்..

குருவியின் PL ஷீட்டை உங்க, நம்ம நண்பரிடம் கேளுங்க சொல்வாரு.

வேட்டைக்காரன் வெற்றியை சக்சேனா சொன்னார்.

உஙக்ளுக்கு தெரியாதது அல்ல சினிமாவைப் பற்றி. வருகிற லாபம் யாருக்கோ செல்கிறது. திரையரங்கு உரிமையாளருக்கு வரவில்லையெனில் பிசினஸ் மாடலில் எங்கோ தவறு. கலெக்‌ஷனே இல்லையென எப்படி சொல்வீர்கள்?

நீங்களே வேட்டைக்காரன் ஆவெரெஜ் என்றுதான் போன வருட ரிப்போரிட்டில் சொன்னீங்க?//

kaarki.. சாரி போக்கிரி தான் விஜய்யின் மிகப்பெரிய ஹிட்.

ரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்.

பிஸினெஸ் பத்தி சாக்ஸ் சொல்றதெல்லாம் சன் டிவி விளம்பரம் மாதிரிதான். வேட்டைக்காரன் ஆவரேஜ் என்று தான் சொன்னேன். எல்லோருக்கும் லாபம் என்று சொல்லவில்லை. எப்படி லாஸ் ஆகிறது என்பதை பற்றி பேசினால் உள்ளடியாக விஜயிலிருந்து, சன் போன்ற பெரிய டிஸ்ட்டிரிபியூட்டர்க்ள் பிரச்சனை இருக்கிறது. முடிவாக ஒன்றுதான். கடைசியாய யார் எண்ட் மார்க்கெட்டில் வாங்குகிறானோ அவன் லாபமடைந்தால்தான் படம் வெற்றி இல்லாவிட்டால் புஸ்தான். இரண்டாவது நட்ந்ததினால்தான் இவ்வளவு பிரச்சனை..

pichaikaaran said...

" கடைசியாய யார் எண்ட் மார்க்கெட்டில் வாங்குகிறானோ அவன் லாபமடைந்தால்தான் படம் வெற்றி இல்லாவிட்டால் புஸ்தான்"

super

Anonymous said...

கொத்துல காரம் கொஞ்சம் கம்மிதான்...

மங்களூர் சிவா said...

அப்ப 2011ல விஜய் சி.எம் இல்லியா?????
அவ்வ்வ்வ்

Unknown said...

ஏ ஜோக்குக்குப் பெண்ணியவியாதிகள் கும்மப் போறாங்க ஜி :-)

ஜெட்லி... said...

//அப்ப 2011ல விஜய் சி.எம் இல்லியா?????
//

கனவு காணுங்கள்....

Anandkrish said...

அந்த குறும்படம் supper

VISA said...

போட்டுத்தாக்கு

எம் அப்துல் காதர் said...

இந்த வாரம் கொஞ்சம் சுள்ளாப்பு கம்மி தான், டயரியா.. வந்ததாலோ?

Romeoboy said...

தல அந்த குறும்படம் செம சூப்பர் ....

க ரா said...

கொத்துப்ப்ரோடா நல்லாருக்குன்னா. ‘ஏ’ ஜோக் செம நாட்டி.

கரன் said...

சிவாஜி கூட சில திரையரங்ககாரர்களுக்கு நட்டம்தான்.
அஜித்தின் பில்லாவைத் தவிர சமீபத்தய அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பல (நடிகரது) படங்களால் நட்டம்(தொடர்ச்சியான) ஏற்பட்டிருக்கின்றவேளையில் விஜயின் படங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டதற்கு வேறு அரசியல் உள்ளது.

திரையுலகம்/சமகால நிலவரம் பற்றி அறிந்து வைத்துள்ள நீங்களே இந்த விடயத்தை பதிவாக எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

vinthaimanithan said...

//ஏ ஜோக்குக்குப் பெண்ணியவியாதிகள் கும்மப் போறாங்க ஜி :-)//

கண்டிப்பா.. ஆனா முழுசா ரெண்டுவாட்டி பிடிச்சிட்டு சிரிச்சிட்டு அப்பாலிக்கா கும்முவாங்க... கரீக்டா தல?

பாலா said...

அடடே.. ஆஸ்த்ரேலியா ரிப்போர்ட் ஏற்கனவே சப்மிட் ஆய்டுச்சி போலயிருக்கே.. சங்கர்? :) ;)

ரவி said...

--ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது.---

இது தான் ஆட்டமா ? அப்போ உங்கள் மனநிலையும் அந்த ஆபாசத்துக்கு உடந்தையா ?

எங்கே. ஒரு ஆணை வைத்து ஏ ஜோக்குங்கள் பார்ப்போம் !!!

தேவன் மாயம் said...

இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:)///

மணற்கேணி - கவனிக்கவும்!!

Anonymous said...

//இது தான் ஆட்டமா ? அப்போ உங்கள் மனநிலையும் அந்த ஆபாசத்துக்கு உடந்தையா ?//

ரவி அண்ணனின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குறும்படம் நச். தேங்க்ஸ்

vinthaimanithan said...

ரவியண்ணா.. அது எப்படி ஆணை பட்டும் வைத்து “ஏ” ஜோக்குவது? ஒண்ணும் புரியலையே?

kanagu said...

இந்த வாட்டி கொத்துல சுவை கொஞ்சம் கம்மி தான் அண்ணா...

/*ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது. */

நீங்களும் இதை ஆதரிக்கிறீர்களா அண்ணா????? ரொம்ப கஷ்டமா இருக்கு.... :(

கார்த்திக் said...

Hi Shankar,
I am Karthik, working in BLR, I am your fan, I used to read your blog everyday. In fact, I used to wait to see your post every day.
I like that short film. It was simply amazing.
When I went to chennai for one of my interview, i just went to one hotel what u have suggested, i was so good.

And the evening, I dined in a Hotel called Akan Bavan at Madipakkam (YuvaKrishana :-) ), and i liked it.

It was long back, I would recommend you to go there and enjoy your food (If the shot still there at that place.).

And one more small request, I liked that thodar kadai and the nitharsana kathaikal, I expect u will write more stories as such.

I amaze that you are glittering in blogspot in a short span of time. I wish all best things comes in to your life. Soon you will shine in Cinema Industry.


Regards,
Karthik,
yezkarthi@gmail.com
91 96 11 159 159